இலங்கைச் செய்திகள்

.
பாகிஸ்தானில் ஜனாதிபதி மஹிந்த... _
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலிப் சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி உட்பட அதிகாரிகள் பலரையும் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிவனொளிபாதமலையில் சடலம் மீட்பு 


சிவனொளி பாதமலையின் சீதகங்குல ஆற்றுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லதண்ணி பொலிஸார் மீட்டுள்ளனர்.

வட - கிழக்கில் இராணுவத்தில் பணிபுரிந்தோர் ஆளுநர்கள் ஏனைய மாகாணங்களில் ஆளுநர்களாக சிவிலியன்கள் _
கிழக்கில் கடும் மின்னல் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள் நொருங்கின பலருக்கு காயம்

பாகிஸ்தானில் ஜனாதிபதி மஹிந்த... _
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலிப் சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி உட்பட அதிகாரிகள் பலரையும் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவனொளிபாதமலையில் சடலம் மீட்பு 

சிவனொளி பாதமலையின் சீதகங்குல ஆற்றுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லதண்ணி பொலிஸார் மீட்டுள்ளனர்.சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டவரென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

3_
xx444
__வட - கிழக்கில் இராணுவத்தில் பணிபுரிந்தோர் ஆளுநர்கள் ஏனைய மாகாணங்களில் ஆளுநர்களாக சிவிலியன்கள் _


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படும் நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு சிவிலியன்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.

ஷெல்ரன் ரணராஜா போன்றவர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக நியமித்திருந்தால் இம் மாகாணங்கள் பாரிய வளர்ச்சியடைந்து இருப்பதுடன் சமாதான சூழல் எப்போதோ தோன்றியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷெல்ரன் ரணராஜா மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே சம்பந்தன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஷெல்ரன் ரணராஜா தமிழ் மக்கள் மீது கௌரவமும் நட்புறவும் கொண்டவர் எதிரானவரே கிடையாது. சிங்களத் தீவிரவாதம் உச்சம் பெற்றிருந்த கால கட்டத்தில் அரசியல்வாதிகள் எல்லாம் கட்டில்களுக்கு கீழே ஒளிந்திருந்த வேளையில் ஷெல்ரன் ரணராஜா நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீதியில் தனியாக சென்று வருவார்.

அந்தளவுக்கு தீவிரவாதிகள் கூட அவரை மதித்தனர். இன்று நாட்டில் ஏனைய மாகாணங்களுக்கு ஆளுநர்களாக சிவிலியன்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாகவே உள்ளனர்.

ஆனால் தமிழர் பிரதேசங்களான வடக்கு, கிழக்கில் இராணுவத்தை சார்ந்தோரே ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

எமது துரதிர்ஷ்டம் ஷெல்ரன் ரணராஜாவால் வடக்கு, கிழக்கு ஆளுநராக வரமுடியவில்லை . அவர் வந்திருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பாரிய அபிவிருத்தியைக் கண்டிருக்கும். சமாதான சூழல் எப்போதோ தோன்றியிருக்கும். 
___


கிழக்கில் கடும் மின்னல் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள் நொருங்கின பலருக்கு காயம்
ஆலையடிவேம்பு, அட்டாளைச் சேனை போன்ற பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய இடி, மின்னல் தாக்குதலினால் பலர் சிறுகாயங்களுக்குள்ளானதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி, கணினி மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை வேளையில் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று கிழக்கில் தற்போது சீரற்ற காலநிலையால் சில நாட்களாக இடி மின்னலுடன் கடும் மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் சம்பவதினமான புதன்கிழமை காலை 10 மணியளவில் இடிமின்னலுடன் கடும் மழை பெய்தது. இதுன் போது திடீரென பாரிய மின்னல் தாக்குதல் ஏற்பட்ட போது வீடுகளில் பல பெண்கள் சமயலறையில் கிரைண்டர், மிக்சி போன்றவற்றை பாவித்துக் கொண்டிருந்தனர். திடீரென அவற்றில் மின்னல் தாக்கியதால் பலர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளதுடன் பலவீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனபெட்டிகளும் சேதமடைந்துள்ளன. சிறிதுநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேவேளை பல அரச மற்றும் தனியார் காரியாலயங்களில் கணினி மற்றும் மின்சார உபகரணங்களை பாவித்துக் கொண்டிருந்த பலரும் மின்னல் தாக்குதலினால் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். சில வீடுகளில் மின்சார வயர்களும் எரிந்துள்ளன. மின்னலின் போது மின்சார உபகரணங்களை பாவித்துக் கொண்டிருந்தமையாலும் தடை ஆளிகள் இயங்காமையுமே பாதிப்புக்களுக்கும் சேதங்களுக்கும் காரணமென மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: