.
ஈழத்தமிழர் கழகத்தின் உணவுடன் ஒன்றுகூடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிதொடக்கம் றைட் சிவிக் சென்ரர் மண்டபத்தில் இடம் பெற்றது. யதுகிரி லோகதாசன் தமிழ்வாழ்த்துப்பாடி ஆரம்பித்து வைக்க தொடர்ந்து தென்துருவ தமிழ்சங்கங்களின் செயலாளர் விக்டர் ராஜகுலேந்திரன் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி எடுத்துரைத்த பின்யயோதரபாரதி சிங்கராஜரின் மாணவிகளின் கண்கவர் நடனங்களும் ராஜயோகனின் கீதசாகரா இசைக்குழுவினரின் கரயோக்கி பாடல்களும் இடம் பெற்றதோடு மிக சுவையான உணவும் பரிமாறப்பட்டது.
நிகழ்வில் சேகரிக்கப்படும் பணம் இலங்கையில் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.
உணவுடன் ஒன்றுகூடல் நிகழ்வில் இடம்பெற்ற சில காட்சிகளின் படங்களை கீழே காணலாம்.
5 comments:
முரசு ஏனுங்கோ பல விடயங்களை சொல்லாமல் விட்டுவிட்டது. யாழ்ப்பாண சாப்பாடு சாப்பிட்ட ஒரு திருப்தி பாருங்கோ.Hats off மோகன்குமார். ஆட்டுக்கறிக்கும் அரசியலுக்கும் என்னய்யா சம்பந்தம் ஏன் அரசியல் ஆய்வாளர் சாப்பாட்டு மண்டபத்தையும் விடமாட்டேன் என்கிறார். யசோ பாரதியின் நடனமும் யதுகிரியின் பாடல்களும் நாம் வந்ததற்கு கிடைத்த போனஸ்தான். பாடல் திரு ராஜயோகன் வழமைபோல் வாத்தியாராகவே காட்சிஅளித்தாருங்க.சின்ன குட்டி பெண்பிள்ளை அற்புதமா பாடினார். போல் சகோதரிகள் நன்றாக இருந்தாலும் ஒரு பாட்டு புட்டுகிடுச்சு.இன்னோரு பெண்னும் நன்றாக பாடினார் தங்கச்சியின்ர பேர மறந்திட்டனாக்கும். மற்றவர்கள் பாடியத ஒருமுறை திரும்ப கேளுங்கோ நீங்களே முடிவு பண்ணிருங்கோ. இலங்க ஒலிபரப்பை திருச்சியில இருந்து கேட்டதுபோல இருந்திச்சுங்கோ.ஆக்சன் நம்ம பணத்த புடுங்கிடுச்சு அதான் வருத்தம் ஈரிஏ நல்லதை பண்ணுதுங்கோ அதுக்கு நாமளும் சப்போட்டுதானுங்கோ.
ஏனுங்கோ வசி ஞானா பாடியது நல்லாதானே இருந்துதுங்கோ. திருச்சியில கேட்ட இலங்கை வானொலிபோல என்று ஒப்பிட்டது அற்புதமுங்கோ. அது சவுண்ட் சரியில்லையுங்கோ. அடுத்தமுறை பப்பு அண்ணாவ கூப்பட்டால் சரியாப்போடுமுங்கோ
இரமேசுங்கோ
எங்கடை எடிட்டர் அவசரத்திலை விரிவா எழுத முடியாமல் இருந்திருக்கும். அவருக்கென்ன ETA மேலை கோவமே
மற்றவை சொன்ன மாதிரி சாப்பாடும் திறம் சனமும் நிறைய. ஒருவர் சொன்னார் கனபேர் ரிக்கெற்றை வாங்கிப் போட்டு வரேல்லையாம்.
வேறை நிகழ்ச்சியும் இருந்தது தானே. இது என்ன ETA வீட்டுக் கலியாணமே? எங்கடை சனத்துக்கு செய்யிற உதவி பாருங்கோ நீங்களாகவே வந்து உதவி செய்ய வேண்டாமோ?
ரமேசு அது ஞானா இல்லைங்கோ சோனா பாருங்கோ. சோனா வுக்கு மைக் சரியா செட் பண்ணேல்லை அந்த தம்பி பப்பு அண்ணாவிடம் இன்னும் ட்ரைனிங் எடுக்கவேணும் பாருங்கோ
பெயர் சொல்லேல்லை எண்டு கோவிக்காதையுங்கோ
ஈழத் தமிழர் கழகத்தினரால் நடாத்தப்பட்ட இரவுணவு நிகழ்ச்சி நன்றாகவே நடைபெற்றது . ஒலியமைப்பு கொஞ்சம் பிழைத்தாலும் நீங்கள் இதில் குறிப்பிட்டது போல் அப்படி ஒண்ணும
அசிங்கம் இல்லை . இந்தியாவில் இருந்து வருகை தரும் மிகப் பெரும் பாடகர்கள் விடும் தவறுகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு பணத்தையும் பெருமளவில் கொட்டிக்கொண்டு
மௌனமாக பார்த்து பேசாமடந்தையாக இருப்பவர்கள் . சிறு பிள்ளைகள் என்றும் பாராமல் , அவர்களது பாடல்களை பற்றி இவ்வாறு எழுதுவது நல்லதல்ல . எத்தனை பிள்ளைகள்
தங்கள் படிப்பையும் விட்டுவிட்டு . இவ்வாறான நிகழ்வுகளுக்கு தங்கள் நேரத்தை செலவு செய்கின்றார்கள்? . ஏன் பார்ப்பதற்கு கூட வருவதில்லையே . அவர்கள் தங்கள் நண்பர்களுடன்
உல்லாசமாக திரியும் போது எமது தமிழர்களுக்காக என்று செயற்படும் இவர்கள் போன்ற இளம் பிள்ளைகளை ஊக்கப் படுத்துங்கள் . பாடல்களில் இலகுவாகப் பாடக் கூடிய பாடல் ,
கடினமான பாடல் . என்று பலவகை உண்டு . விமர்சிக்கும் போது இவற்றையும் உள்வாங்கி விமர்சித்தால் நல்லது . இந்த இசைக் குழுவினர் பல்வேறு பாடசாலைகளுக்காக .தங்கள்
நேரத்தையும் ,பணத்தையும் , செலவு செய்து உதவி செய்து வருகின்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் . ஆகவே அவர்களது பாடல்களை அனைவரும் விரும்பியே அவர்களை
அழைக்கின்றார்கள் .நன்றாக நடைபெற்ற அவர்களது நிகழ்ச்சியை இதுவரை ஏன் எழுதமுடியவில்லை ?
கடைசியாக போடப்பட்ட கருத்துப்பதிவு அகற்றப்பட்டுள்ளது. நேரடியாக ஒருவரை பற்றி போடப்பட்டதால் அகற்றியுள்ளோம். வாசகர்களே கருத்துச்சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொண்டு கருத்துக்களைப்பதியுங்கள்.
நன்றி
ஆசிரியர் குழு
Post a Comment