பரபரப்பான போட்டி: ஆஸி. வெற்றி, இலங்கைக்கு மீண்டும் தோல்வி

.


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒருநாள் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்ரேலிய அணியின் முதல் விக்கெட் 22 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே வீழ்த்தப்பட்டது. அவுஸ்ரேலிய அணி சார்பாக அதி கூடிய ஓட்டங்களாக 57 ஓட்டங்களை மைக்கல் கிளார்க் பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சில் மலிங்க, குலகசகர, மத்தியூஸ், சேனாநாயக்க, பிரசாத் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர். 



இப்போட்டியில் 232 ஓட்டங்கள் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 49.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்றது. 

இதில் மெத்தியூஸ் 64 ஓட்டங்களையும், டில்சான் 40 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 22 ஓட்டங்களையும் பெற்றனர். 


Nantri Veerakesary

No comments: