விரைவில் குணமடைவேன்: யுவராஜ்சிங்

.

நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள கட்டிக்காக யுவராஜ்சிங் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் புற்றுநோய் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுமார் 9 வார காலத்திற்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே யுவராஜ்சிங் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் யுவராஜ் சிங் கூறுகையில், மருத்துவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். கடவுளின் அருளால் விரைவில் குணமடைந்து திரும்புவேன். மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அது நல்ல பலனை கொடுத்து வருகிறது. விரைவில் களத்திற்கு திரும்புவேன். நான் போராடும் குணம் கொண்டவன். வலிமையுடன் திரும்பி வருவேன்.

ஆரம்பத்தில் கோபமும், குழப்பமும் அடைந்தேன். அதன்பின்னர் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு அது எல்லாம் மறைந்துவிட்டது. எனது அம்மாவிடமும், நண்பர்களிடமும் மீடியாக்களிடம் அதிகம் பேச வேண்டாம் என கூறியுள்ளேன். இதனால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாவது தடுக்கப்படும் என்றார்.


No comments: