இரு பறவைகள் - கவிதை -ஜெயமோகன்


.

வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு
சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகளின்மீது எம்பித் தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிக்கடல்
இரு பறவைகள்
இரண்டிலிருந்தும் வானம்
சமதூரத்தில் இருக்கிறது
Nantri: Jeyamohan.in

1 comment:

Anonymous said...

ஜெயமோகனின் சின்னக் கவிதை அருமை. அடிக்கடி இவரின் கவிதைகளை தாருங்கள். புதிய மாதவி தமிழிச்சி ஆகியவர்களின் கவிதைகளையும் கொண்டுவந்தால் நல்ல கவிதைகளை சுவைக்க முடியும்

செல்வி