‘மகத்தான சேவையாற்றிய பேராசிரியர்’


.

மெல்பன் இரங்கல் கூட்டத்தில் தமிழ்அறிஞர் சிவத்தம்பிக்கு புகழாரம்
“இலங்கையில் சமீபத்தில் மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் மொழிக்கும் திறனாய்விற்கும் மட்டுமல்லாது தமிழ் மக்கள் இன்னலுற்ற காலப்பகுதியிலும் சிறந்த தொண்டனாக வாழ்ந்தவர். அவரது மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு” – என்று கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் உரையாற்றியவர்கள் ஏகமனதாக குறிப்பிட்டனர்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் மெல்பனில் ஸ்பெக்ட்ரம் மண்டபத்தில் நடந்த இரங்கல் நிகழ்வுக்கு எழுத்தாளர் முருகபூபதி தலைமை தாங்கினார்.
பேராசிரியரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றி அஞ்சலி அனுட்டிக்கப்பட்டது.
பேராசிரியரின் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


பேராசிரியரின் நீண்டகால நண்பரும,; கொழும்பில் அவருடனும் பேராசிரியர் கைலாசபதியுடனும் ஒன்றாக தங்கியிருந்து பணிகளில் ஈடுபட்ட திரு. கு. கதிர்காமநாதன் உரையாற்றுகையில் பேராசிரியர் கடுமையான விமர்சனங்களையெல்லாம் தாங்கிக்கொண்டே தொடர்ந்து அயராமல் இயங்கினார் என்று குறிப்பிட்டார்.
பேராசிரியரின் மாணவர்கள் திருவாளர்கள் சசிதரன், நடராஜா மற்றும் சட்டத்தரணி செ. ரவீந்திரன், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா ஆகியோரும் பேராசிரியரின் தமிழ்ப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி, அரசியல் பணிகள் குறித்து விரிவாகப்பேசினர்.

No comments: