காலில் விழுந்த எம்.ஜி.ஆர்..!

.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..?

தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).

தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.1977-ல் தமிழ அரசின் ஆட்சிக் கட்டிலைப் பிடித்த எம்.ஜி.,அவர் இறந்த ஆண்டான 1987 வரை மன்னாதி மன்னனாக விளங்கினார். அப்போது அவர் காலில் விழாதவர்களே யாரும் இல்லை. (அதன் நீட்சிதான் இன்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் இன்றைய ரத்தத்தின் ரத்தங்கள் விழுவது என்பது வேறு விடயம்...) அதற்கு அவரது வயதும் ஒரு காரணம் என்றாலும், விசுவாசம் என்பது அதிகம் பொருத்தமாக இருக்கும்.

அச்சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆர், பிரபல நடிகராக, அரசியல் தலைவராக இருந்தபோது, அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், மக்கள்கள் திரண்டிருந்த திடலில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா...

நம்புங்கள்... வரலாறு காட்டும் உண்மை இது.
எம்.கே.ராதா காலில் விழுந்து வணங்கும் எம்.ஜி.ஆர்

1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். இப்படத்தில் நடித்த எம்.கே.ராதா என்பவர்தான், எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.

1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார். மற்றொருவார், சினிமா உலகிற்கு அடியெடுத்து வைக்க காரணமாயிருந்த இயக்குனர் சாந்தாராம் அவர்கள்.

(இப்புகைப்படத்தை எடுத்தவர் பிரபல புகைப்பட நிபுணர். 'சுபா' சுந்தரம் அவர்கள். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரை நான் ஜூலை, 2003-ல் நான் பணியாற்றிய பத்திரிகைக்காக நேர்காணல் கண்டேன். அப்போது அவர் சொன்ன தகவல் இது. அவர் எனக்களித்த புகைப்படம்தான் இது.)No comments: