.
தனது முதல் 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை அறிமுகப்படுத்திய ரஷ்யா
18/8/2011
ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது.
சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும்.
ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் சுமார் 1000 சுகோயி விமானங்களை உருவாக்கவுள்ளதுடன் அவற்றில் 200 ஐ இந்தியா வாங்கவுள்ளது.
இவ்விமானங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தபோதிலும் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக அது பிற்போடப்பட்டது.
இவ்விமானத்தினை உருவாக்கவென ரஷ்ச்ச்யா சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ___
நன்றி வீரகேசரி இணையம்
கராச்சி வன்முறையில் 33 பேர் பலி: உடல்கள் பைகளில் கட்டப்பட்டு வீதிகளில் வீசப்பட்டுள்ள அவல நிலை
18/8/2011
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 33 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அங்கு கொல்லப்பட்டவர்களில் அநேகமானோர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சுடப்பட்டு, உடல்கள் பைகளில் கட்டப்பட்டு வீதிகளில் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் கடந்த இரு வாரங்களாக அரசியல் கட்சிகளிடையே வன்முறைகள் இடம்பெற்று வருகின்றது.
நேற்று துறைமுக நகரான கராச்சி அருகே உள்ள பெரம்பூரா, கிராதர் பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர்.
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 1000 இற்கும் அதிகமானோர் அங்கு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி இணையம்
No comments:
Post a Comment