ஊடக அறிக்கை ஆகஸ்ட்டு 12, 2011

.
நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களும், விக்டோரியா மாநிலத்தில் ஒரு அங்கத்தவரும்; தெரிவு செய்வதற்கான உபதேர்தல்:

சுதந்திரத்தின் சகல அம்சங்களையும் முற்றாக இழந்து சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் அழிக்கப்பட்டுச் செயலற்று நின்ற ஈழத்தமிழரின் இன்றைய காலத்தின் தேவையாக உருவாக்கப்பட்டதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா. க. த. அ) என்பது எல்லோரும் அறிந்த விடயம். இந்தச் சிறு குழந்தை பிரசவித்து எழுந்து நடப்பதற்கு முன்னதாகவே அதனை அழித்து விடுவதற்கான முயற்சி பெருமளவில் எடுக்கப்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். நாடுகடந்த தமிழீழ அரசை உருக்குலைக்க உள்ளிருந்தும் புறமிருந்தும் பலவிதமான சக்திகளாலும் எடுக்கப்படும் பலவகையான முயற்சிகளுக்கும் முகம் கொடுப்பதிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சக்தி விரயமாக்கப்படுவதே யதார்த்தம்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வெற்றிடங்களை இட்டு நிரப்புவதற்கான உபதேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு நாடு கடந்த அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது. இப் பொறுப்பினைச் சரிவரச் செய்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தான் மேற்கொண்ட குறிக்கோளை முன் எடுத்துச் செல்வதற்குத் தமிழ் மக்கள் அனைவரும் தம் உதவிக்; கரம் நீட்டித் தமது வரலாற்றுக் கடமையைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ் உபதேர்தல் வரிசையில், அவுஸ்திரேலிய நாட்டில் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களும், விக்டோரியா மாநிலத்தில் ஒரு அங்கத்தவருமாக மூவரைத் தெரிவு செய்வதற்கான உபதேர்தலை நடாத்தும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது.

இத் தேர்தலைச் சிறந்த முறையில் நடாத்தக் கீழ்க் காணும், அறிவும் அனுபவமும் ஆர்வமும் மிக்க பிரமுகர்கள், தேர்தற் குழுவில் பணியாற்ற முன் வந்திருக்கிறார்கள். இவர்கள் இத் தேர்தலை நேர்மையாகவும் நடுநிலை தவறாமலும் நடாத்தி வைப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது. அவர்களுக்கு உறுதுணையாக மக்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

தமிழீழத்தைக் கட்டி எழுப்பும் முயற்சியில் தமது பங்கினைப் பாராளுமன்ற அங்கத்துவம் மூலம் நிறைவேற்ற விரும்பும் வேட்பாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி ஆகிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி நாள், ஆகஸ்ட்டு 28, 2011, பிற்பகல் 6.00 மணியாகும்.


தேர்தல் அலுவலர்:

நியு சவுத் வேல்ஸ்: தொலைபேசி இல:

1. வடிவேலு ஜேம்ஸ் சுகுமார் (உதவி ஆணையாளர்) 61 (0) 414 790 908

2. சுப்பையா. ஸ்கந்தகுமார் (பிரதி ஆணையாளர்) 61 (0) 432 762 377

3. வேலுப்பிள்ளை குகேந்திரன்; (உதவி ஆணையாளர்) 61 (0) 408 425 410


விக்டோரியா: தொலைபேசி இல:

1. நந்தகுமார் சிவகுரு (உதவி ஆணையாளர்) 62 (0) 3 9800 4932

2. கனகராஜா சந்திரகுமார் (உதவி ஆணையாளர்) 61 (0) 458 686 539



மின்னஞ்சல் முகவரி: teca@tgte.org

அஞ்சல் முகவரி: P O Box: A1307, Sydney South, NSW 1235

தேர்தல் ஆணையம்: தொலைபேசி இலக்கம்: 416-756-4607 (Canada)

மின்னஞ்சல் முகவரி: election.commission@tgte.org


திருமதி. செ. ஸ்ரீதாஸ்

தேர்தல் ஆணையாளர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம்.

ஆகஸ்ட்டு 12, 2011

No comments: