வசந்தத்தின் சுமையாய் ...... செ பாஸ்கரன்


.
வசந்தகாலம் வந்துபோனபோது
வரவு சொல்லாது வந்த
குயிலின் பாட்டு
இன்றும் இனிமையாய்
என் காதில் ஒலிக்கிறது.
வாசம் வீசி வரவேற்ற 
வண்ண மலர்த்தோட்டம்
என்னை மட்டுமல்ல
வண்டுகளையும் 
கவர்ந்து கொண்டது
பூவிற்கு நோகாத புணர்தலில்
வண்டுகளின் ரீங்காரம்
முற்றும் இசையறிந்த
வீணை வித்துவானை விஞ்சிநிற்கும்
தேனுண்ட கழிப்பில் மதிமயங்கி
காதல் சுகமென்று
தன்காதலின் அனுபவத்தை
என் காதில் பகிர்ந்து கொள்ளும்
வசந்தத்தின் வருகையோடு
அவள் வருவாள் என
காத்திருந்த எனக்கு
வசந்தம் வந்துபோன 
நினைவுகள் மட்டுமே 
நெஞ்சின் சுமையாய் இருக்கிறது. 


1 comment:

kirrukan said...

[quote]
நெஞ்சின் சுமையாய் இருக்கிறது[/quote]


நெஞ்சின் சுமை அகல
நாமும் வண்டுகள் போல
வாழ்வோமா