இம்மாதம் எழுத்தாளர், பத்திரிகையாளர் லெ. முருகபூபதியின் மணிவிழா


பிறந்த திகதி: 13-07-1951 . பிறப்பிடம்: இலங்கையில் நீர்கொழும்பு

தற்போழுது வாழும் நாடு: அவுஸ்திரேலியா

இலங்கையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெளியாகும் மல்லிகை மாத இதழில் கனவுகள் ஆயிரம் என்ற முதலாவது சிறுகதையை 1972 ஆம் ஆண்டு எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார்.


1972 ஆம் ஆண்டு இலங்கையின் பிரபல தமிழ் தேசியப்பத்திரிகையான வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அறிமுகமாகி தன்னை ஒரு பத்திரிகையாளராகவும் அறிமுகப்படுத்திக்கொண்டவர்.

1977-1987 காலப்பகுதியில் வீரகேசரியில் முதலில் ஒப்புநோக்காளராகவும் பின்னர் ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடர்ந்து இலக்கிய – பத்திரிகைத்துறையில் ஈடுபடுகிறார்

சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்து, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், கடித இலக்கியம் ஆகிய துறைகளில் பல நூல்களை எழுதியிருப்பவர்.


வெளியான நூல்கள்:

1. சுமையின் பங்காளிகள் ( சிறுகதை ) --- 1975

2. சமாந்தரங்கள் ( ’’ ’’ ) --- 1988

3. சமதர்மப்பூங்காவில் (சோவியத் பயணக்கதை) --- 1989

4. நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ( கட்டுரை ) --- 1995

5. பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம்) --- 1997

6. சந்திப்பு (நேர்காணல்) --- 1998

7. வெளிச்சம் (சிறுகதை) --- 1998

8. எங்கள் தேசம் ( ‘’ ‘’ ) --- 2000

9. இலக்கிய மடல் ( கட்டுரை ) --- 2001

10. கடிதங்கள் ( கடித இலக்கியம்) --- 2001

11. மல்லிகை ஜீவா நினைவுகள் ( கட்டுரை ) --- 2001

12. பறவைகள் ( நாவல் ) --- 2001

13. எம்மவர் ( கட்டுரை ) --- 2003

14. அம்பி வாழ்வும் பணியும் ( ஆய்வு ) --- 2003

15. ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் ( கட்டுரை) --- 2005

16. கங்கை மகள் ( சிறுகதை ) --- 2005

17. நினைவுக்கோலங்கள் ( ‘’ ‘’ ) --- 2006

வெளிவரவுள்ள நூல்கள்

1. உள்ளும் புறமும்.

2. காலமும் கணங்களும்

3. சொல்ல மறந்த கதைகள்.

தொகுப்பு ஆசிரியராகவிருந்து பதிப்பித்த மலர்-நூல்கள்:

1. நம்மவர் (மலர்)

2. உயிர்ப்பு ( அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கதைத்தொகுப்பு)

3. வானவில் ( அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கவிதைத்தொகுப்பு)

4. Being Alive ( அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு தொகுப்பு)

5. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பு மலர்

6. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு கட்டுரைக்கோவை.

பெற்ற விருதுகள்:

1. சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுதிக்காக 1976 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.

2. பறவைகள் நாவலுக்காக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.

3. அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில ஈழத்தமிழ்ச்சங்கம் 1998 இல் வழங்கிய மகத்தான இலக்கியப்பணிக்கான விருது.

4. அவுஸ்திரேலியா தினமன்று (Australia Day) விக்ரோரியா மாநில டெரபின் மாநகர சபை வழங்கிய 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த பிரஜைக்கான விருது.

5. அவுஸ்திரேலியா மெல்பன் தமிழ்ச்சங்கம் 2004 இல் வழங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விருது.

6. இலங்கை நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு 2004 இல் வழங்கப்பட்ட முதல் மாணவனுக்கான விருது.

(குறிப்பு : குறிப்பிட்ட பாடசாலை விவேகானந்த வித்தியாலயம் என்றபெயரில் 1954 இல் தோன்றியபோது முதலாவது மாணவனாகச்சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1963 வரையில் அங்கு கற்றபின்பு புலமைப்பரிசில் சித்தியடைந்து யாழ்ப்பாணம் சென்று யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி) கற்றார்.

இலங்கையில் முருகபூபதி அங்கம் வகித்த அமைப்புகள்:

1. நீர்கொழும்பு இலக்கிய வட்டம் ( ஸ்தாபகர் - முன்னாள் செயலாளர் )

2. நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம்

(ஸ்தாபகர்- முன்னாள் செயலாளர் )

3. நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ( ஆயுள்கால உறுப்பினர்- முன்னாள் செயலாளர்)

4. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ( தேசிய சபை உறுப்பினர் கொழும்புக்கிளையின் முன்னாள் செயலாளர்)

5. பிரதம அமைப்பாளர் சர்வதேச தமிழ் எழுத்தாளர்; மாநாடு 2011 (கொழும்பு, இலங்கை)

அவுஸ்திரேலியாவில் முருகபூபதி அங்கம் வகித்த அமைப்புகள்.

1. ஸ்தாபக உறுப்பினர் அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம்.

2. ஸ்தாபக உறுப்பினர் அவுஸ்திரேலியாவில் 24 வருடகாலமாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம். (இதன் தற்போதைய துணை நிதிச்செயலாளர்.)

3. ஸ்தாபக உறுப்பினர் அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம்.

4. ஸ்தாபக உறுப்பினர் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ( இச்சங்கம் அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாவை வருடந்தோறும் நடத்திவருகிறது).

5. ஸ்தாபக உறுப்பினர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்.


அவுஸ்திரேலியாவில் முருகபூபதி அங்கம் வகித்த தமிழ் இதழ்கள்.

1. மக்கள் குரல்

2. அவுஸ்திரேலிய முரசு

3. உதயம்

தமிழ்நாட்டில்:

முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்) தமிழ்நாட்டில் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்காக சிறுவர் இலக்கிய வரிசையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

பறவைகள் நாவலை தஞ்சை பல்கலைக்கழக மாணவி ஒருவர் தமது M.Phil பட்டத்திற்காக ஆய்வுசெய்தார்.

இதுவரையில் பயணித்து தமது பயண இலக்கிய படைப்புகளில் முருகபூபதி பதிவு செய்த நாடுகள்:

இந்தியா (தமிழ்நாடு), சோவியத்நாடு (மாஸ்கோ), அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, கனடா, கியூபா, இங்கிலாந்து, துபாய்.





No comments: