தவறவிட்ட தருணங்கள்..!! - கவிதை

.

அவளுக்கு நான் சேவகம் செய்ததில்லை., 
மார்கழி இரவில் என் நெஞ்சி கதகதப்பில் அவளை நான் உறங்க வைத்ததுமில்லை., 
அவள் செய்த மழலை குறும்பை நான் ரசித்ததுமில்லை., 
சோறுட்டும் வேலையில் "எனக்கு வேண்டா" என்று உதறி விட்டு அவள் பிஞ்சி கால்கள் ஓடிய அழகை பார்த்ததுமில்லை.,
என்ன நடந்த போதிலும்., 
நான் இத்தனையும் இழந்த பொழுதிலும்., 
இன்று என் அழகு மகள் "அப்பா" என்று அழைக்கும் வார்த்தையின் சுகம் ஒன்றே போதும் இந்த பிறப்பும் இடேரும்..!!!!


சிந்திக்க ஒரு நிமிடம் கவிஞர் இரா .இரவி  

சிந்திக்க ஒரு நிமிடம் கவிஞர் இரா .இரவி 


கோடிகள் ஊதியம் வாங்கும் 
கோடம்பாக்கத்து நடிகர் நலம் பெற 
ரசிகர்களும் ரசிகைகளும் 
பூக்குழி இறங்கினார்கள் 
விளக்குப் பூஜை நடத்தினார்கள் 
மண் சோறு கூட உண்டார்கள் 
யாகமும் நடத்தி விட்டார்கள் 
கூ ட்டுப் பிராத்தனைப் பிராத்தித்தார்கள் 
எல்லாம் சரி 
நாட்டுக்காக என்ன ?தியாகம் செய்தார் 
உங்கள் வீட்டில் நலமின்றி வாடும் 
உங்கள் பெற்றோரைப் பற்றி 
ஒரு நிமிடம் நினைத்தீர்களா ?

No comments: