உன்னையே மயல் கொண்டு- பாகம் 7

 .

ய்வுக்குத் தேவையான புத்தகம் ஒன்றைப் பேராசிரியர் பாமரின் அறையில்இருந்து எடுத்துவரச்சென்ற சந்திரன் போராசிரியர் சிண்டியிடம்பேசிக்கொண்டிருப்பதை கண்டு திருப்ப எத்தனித்ததும்சந்திரனை “கம் இன்என்ற வழக்கமான பாணியில் கேட்டு சுகம் விசாரித்தார் பேராசிரியர் பாமர். “சந்திரன் இவ்வளவு காலமும் நீ பெற்ற தரவுகளை கட்டுரையாக்கிக்கொண்டுவாஅதை நான் மைக்கிரோ பாயலாஜி மகசினுக்கு அனுப்பவேண்டும்அடுத்த ஆய்வுக்கு பணம் பெற இது உதவும்உனக்கு இரண்டுமாதம் தருகிறேன் என்றார்.” நன்றி கூறிவிட்டு வெளியேறிய சந்திரனை சிண்டிபின்தொடர்ந்து “ஏன் சந்திரன் முகம் நல்லாவில்லையே நீ டல்லாகஇருக்கிறாய்” எனத் துருவினாள்.

அப்படி ஒன்றுமில்லை.” “உனக்கு பேச விருப்பமில்லை போல இருக்கிறது.”
 “அப்படியில்லைஎனது மனைவி சோபாவை பற்றியது அவளை என்னால்சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லைபெரும்பாலான நேரங்களில்நன்றாக இருப்பாள்சிலநேரங்களில் உலகமே அழியப்போகிறது என்கிறமாதிரி மனம் சோர்வடைந்து சுருங்கிவிடுவாள்சிலநேரம் கேவிக்கேவிஅழுகிறாள்”. 
வைத்தியர் என்ன கூறுகிறார்.” “குழந்தை பிறந்ததால் ஏற்படும் போஸ்ட்நேற்றல் டிப்பிரசன் என்கிறார்நான் அதை நம்பவில்லை.” 

ஏன் சைக்காற்றிடிடம் கடிதம் தரும்படி உனது வைத்தியரிடம் கேட்டால்என்ன.? “ 
இதுதான் எனக்கும் பிரச்சனையாக இருக்கிறதுசோபா மனோவியாதியைஎப்படி ஒத்துக்கொள்வாள் என்பதும் அவளது பெற்றோர் எப்படிஓத்துக்கொள்வார்கள் என்பதும் தற்போது எனக்கு முன் உள்ள பிரச்சனை.”
இது பெரிய விடயமில்லைஉனது குடும்ப வைத்தியடம்பேசிப்பார்ப்பதுதானே? “
. “சிண்டி உனக்குச் சில விடயங்கள் தெரியாது எங்கள் சமூகத்தில்மனேவியாதிக்காரருக்கு மட்டும் அல்ல . மனநல மருத்துவர்களுக்கும் நல்லபெயர் கிடையாதுமனநோயாளர்களை சமூகம் வேண்டாதவர்களாகபார்க்கிறதுதாய்தந்தைகயரால் பராமரிக்கபடாவிட்டால் பிச்சைக்காரர்களாகதான் எம்மூரில் வாழ்வார்கள்மனநோயாளர் மேல் கல்லெறிந்துவிளையாடும் ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள்இதனால்மனநோய் என்பதை மறைத்து வைப்பதே எமது நடைமுறைஅந்தமனப்பான்மை இங்கேயும் தொடர்கிறது இவர்களுக்கு மத்தியில் சோபாவால்எப்படி வாழமுடியும்.?”
நீங்கள் சொல்லும் இந்த விடயங்கள் மேற்குநாடுகளிலும் இருந்தது.ஐரொப்பாவில் மூளைக்கோளாறான பெண்களைச் சூனியக்காரிகள் எனநெருப்பில் எரித்தார்கள்ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் சாத்தானால்ஆட்கொள்ளப்பட்டவர்கள் என சவுக்கால் அடித்து துன்புறுத்தினார்க்ள்.சிலுவையில் வைத்து எரித்தார்கள்.. வைத்திய சாத்திரத்தில் கடைசியாக வந்தபகுதியே மனநோய்வைத்தியம்மற்றவர்களுக்காக நீ வாழவில்லை.மற்றவர்களைப் புறக்கணித்து விடு.”
உன்பேச்சு நன்றாக இருக்கிறதுபார்ப்போம்” எனக் கூறிவிட்டு தனதுமேசைக்குச் சென்றான்.
சரியானதைச் செய்” என கூறிவிட்டு செல்லமாக அவன் தலையைத் தட்டிச்சென்றாள் சிண்டி.
இவளுக்கு எப்படி புரியும்சிட்னியில் தற்போது ஒரு குட்டி யாழ்ப்பாணம்உருவாகியுள்ளதுபிறந்தநாட்டில் இருந்து கொண்டு வந்த அலங்கோலமானவிடயங்கள் இங்கும் வேகமாக பரவுகிறது மற்றவர்கள் விடயங்களில்போலியான அக்கறையை வெளிக்காட்டினாலும்ஒவ்வொருவருக்கும்இனம்புரியாத காழ்ப்புணர்வுடன் வாழ்கிறார்கள்.அன்று ஒரு நாள் ரெயில்வேஸ்ரேசனில் ஒருவர் என்னைக் கண்டதும் யாழ்ப்பாணத்தில் எந்தப்பகுதி என்றுவிசாரித்தார்எனக்கு புரிந்ததுதிருமணத்துக்கு யாரோ இருக்கிறார்கள் போல்என நினைத்துக் கொண்டு எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னதும்மனிதரின் முகமே மாறிவிட்டதுமனிதர் ஏமாற்றத்தைக் காட்டாமல் தன்னைசமாளித்துக்கொண்டு மீண்டும் கேட்டார். “தம்பிஇ நாங்கள் பெடியளால்தான்வரமுடிந்தது” “உங்கள் பிள்ளைகளோ உங்களை கூப்பிட்டது” என்றேன்.மனிதருக்கு ஆதரவாக. “பிள்ளைகள் கூப்பிட்டது சரி ஆனால்புலிப்பெடியளைக் காரணம் காட்டித்தான் நான் அகதி அந்தஸ்து கேட்டேன்.அரசாங்கமும் தந்துவிட்டது.” “ஊரில் பிரச்சனை சில விடயங்களுக்குவசதியாக இருக்கு” என்கிற வார்த்தைகள் ஏளனமாக வந்தனமனிதனின்வக்கிரதன்மையைக் கண்டு கொண்டதால். “தம்பிஉங்களைப்போல்இளம்பொடியள் படிக்க வரலாம் எங்களைப் போல் வயதானவர்கள் மருத்துவவசதியில்லாமல் சாக வேண்டியதா? “
நீங்கள் சொல்வதிலும் உண்மை உண்டு.” எனக் கூறி தப்பினேன்இப்படியானபொய் பித்தலாட்டங்கள் உள்ளவர்கள் மத்தியில் மனோவியாதியுள்ளமனைவியுடன் எப்படி வாழ முடியும?;. இதைவிட எப்படி சோபாவைமருத்துவரிடம் கொண்டு செல்வதுபின்பு எப்படி மருந்து எடுக்க பண்ணுவது?இவை பெரிய பிரச்சனைகளாகச் சந்திரனுக்கு தெரிந்தன.
சந்திரனோடு பேராதனையில் படித்த மகிந்த நியூசவுத்வேல்பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறான்பழைய நினைவுகளை அவனுடன்இரைமீட்பதில் சந்திரனுக்கு சந்தோசமான விடயம்மதியம் சென்றுமகிந்தவுடன் பேசிவிட்டு மாணவர் சங்க கன்ரீனில் சிற்றுண்டி சாப்பிட்டுத்திரும்புவான்சந்திரனது அந்தரங்கம் தெரிந்தவன் மகிந்தாமஞ்சுளாவைகைவிட்டதையிட்டு பலமுறை “நீ ஒரு கோழை சரியான யாழ்ப்பாணத்தான்என பலமுறை கூறுவான்மகிந்த மாத்தறைப் பகுதியை சேர்ந்தவன்அன்றும்மகிந்தவிடம் விடைபெற்று ரன்விக் சந்திக்கு வந்தவனுக்கு ஜீலியாவின்எண்ணம் மேலெழுந்தது. ‘இவ்வளவு துரம் வந்துவிட்டேன் பக்கத்தில் தானேஇவள்வீடு இருக்கிறதுஎந்தநேரமும் கதவு திறந்திருக்கும் என்றாளே.தொலைபேசியில் அழைக்காமல் திடுதிடு;;ப்பென போவது நாகரிகமில்லை.தொலைபேசியில் கூறவில்லை பிறந்தநாளுக்கு அழைத்தாள்என்பதைசாட்டாக வைத்துக்கொண்டு போவது நல்லதாஏதாவது பிரச்சனையில்மாட்டிவிடுமோ?” என பலமுறை கவலைப்பட்டாலும் காரை அவளுடைய வீடுஇருந்த உள்ள திசையில் செலுத்தினான். ‘தற்செயலாக வந்ததாக கூறுவோம்.ஜீலியா வீட்டில் இல்லை என்றாலும நல்லதுதான்’ என்று மனதில்எண்ணங்கள் மாறிமாறி வந்தனமாலைநேரத்து வாகன நெரிசல்வழமைபோல் இருந்ததுகூஜி கடற்கரைக்கு போகும் வழியில் ஜீலியாவின்வீடு இருந்ததுசந்திரனின் கார் நெரிசலில் நத்தையாக ஊர்ந்ததுமுன்செல்லும் கார்களில் தனது கண்களை பதித்துக் கொண்டு காரைசெலுத்தியவனுக்கு நடைபாதையில் அதிர்ச்சி காத்திருந்ததுவெள்ளைநிறமான கவுனுடன் உச்சியில் கொண்டை போட்டுக் கொண்டு ரைகரைஅழைத்துக்n;காண்டு ஜீலியா சென்று கொண்டிருந்தாள்சந்திரன் காரின்கோனை அடித்து சைகை காட்டினான்அவளுக்கு புரிந்து கொள்; நேரம்எடுத்ததுசுந்திரனின் கார் மெதுவாகியதால் பின்னுக்கு வந்தவர்கள் கார்கோனை பலமான அடித்தனர்சந்திரன் காரை நடைபாதையில் நிறுத்தினான்.காரை விட்டு இறங்கிய சந்திரனைப் பார்த்துஇ “வாகனப் போக்குவரத்துநின்றுவிட்டதே” என்றாள் சிரித்தபடி. “எல்லாம் உங்களால் தான்”. “நான் என்னசெய்தேன்? “
உங்களைக் கண்டதும் கார் என்னை அறியாமல் வேகத்தை குறைத்துக்கொண்டதுநான் பொறுப்பேற்க முடியாது. “
ரோட்டில் ரைகருடன் என் பாட்டில் போன என்னைகுற்றவாளியாக்குகிறீர்களேஎங்கே போகிறீர்கள்?;.”
நியூசவுத்வேல்ஸ் யூனிவசிட்டியில் வேலை செய்யும் நண்பனிடம்வந்துவிட்டு சிறிதுநேரம் கடற்கரையில் இருந்துவிட்டு போகலாம் எனவந்தேன்” என்று பாதி உண்மையும் மறுபாதி பொய்யுமாக கூறினான்.
என் வீட்டுக்கு வாங்கோ” “நீங்கள் முன்னே போங்கோ நான் வருகிறேன்.”
ஜீலியாவின் வீட்டுக்கு முன் காரை நிறுத்திவிட்டு அவளுக்காககாத்திருந்தான்கடற்கரைப் பகுதியானதால் காற்று உப்பு கலந்து வீசியது.வீட்டு வாசலில் ரைகரின் சங்கிலியை கழற்றியபின் கதவை திறந்ததும் ரைகர்இருவரையும் தள்ளிக்கொண்டு முன்பாக வீட்டுக்குள் சென்றதுதயக்கத்துடன்ஜீலியாவை பின்தொடர்ந்தான் சந்திரன்திரும்பிப் பார்த்து “தயக்கமில்லாமல்வரலாம்எவரும் இல்லை” என்று கூறிகொண்டு கதவருகே இருந்த லைட்சுவிச்சை தட்டினாள்லைட் வெளிச்சம் அந்த ஓடைபோன்ற பிரதேசத்தைஒளிவெள்ளத்தால் நனைத்தது.
கொஞ்சம் இருங்கள்ரைகருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு வருகிறேன்”.என்று கூறி உள்ளே சென்றாள்இந்த சந்தர்ப்பம் சந்திரனின் மனத்தவிப்பைகுறைக்கப் பயன்பட்டதுபக்கத்தில் இருந்த கதிரையில் ஏராளமான நாய்மயிர்கள் இருந்தன. ‘இதுதான் ரைகரின் படுக்கை போல் இருக்கிறது எப்படிஇவர்கள் நாய்களையும் பூனைகளையும் தங்களது அருகில்அனுமதிக்கிறார்கள்ஏதோ ஒருபத்திரிகையில் இருந்து.அவுஸ்த்திரேலியாவில் பலர் படுக்கையில் செல்லப் பிராணிகளைஅனுமதிக்கிறார்கள்இவர்களுக்கு தோழமையும் துணையுமாக இவைவிளங்குகின்றன.
எப்படி உங்கள் குடும்பம் “?; எனக்கேட்டுக் கொண்டு பக்கத்தில் அமர்ந்தாள்.சந்திரனும் அருகில் அமர்ந்தான்.
எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.” அவுஸ்திரேலியாவின் வழமையானகேள்வி கேட்பவர்கள் எதிர்மறையான பதில் கேட்பதற்கு தயாரில்லைமற்றவர்கள் பிரச்சனைகளை கேட்பதற்கும் அதற்கான உதவிகளைசெய்வதற்கும் வழக்கறிஞர்கள்வைத்தியர்கள்மனநலவியலாளர்கள்இருக்கிறார்கள்அவர்கள் பணம்பெற்றுக் கொண்டு அந்த சேவையில்ஈடுபடுகிறார்கள்சாதாரணமாக உங்களை சந்தித்து நலம் விசாரிப்பவர்கள்உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள தயாரில்லைஜீலியாவிடவில்லை.
உங்கள் கவலை முகத்தில் தெரிகிறதுஆராட்சியாளரை ஆராய்ச்சிசெய்யவில்லைஎனக்கு பட்டதை சொல்கிறேன்.”
உண்மைதான்எனது குடும்ப பிரச்சனைகளை எப்படி சொல்வதுசிண்டி,மகிந்தவினுடன் பகிர்ந்து கொள்ளலாம்இவளிடம் இதையெல்லாம்சொல்லாவிட்டாலும் ஒரு இடைவெளி ஏற்படும்இவளிடம் நட்புநாடிவந்தேனாபாலியல் கவர்ச்சியால் வந்தேனா?
முகத்தில் சிந்தனைகளை பார்த்ததும் “எனக்கு சொல்ல விருப்பமில்லைஎன்றால் விடவும்என்ன குடிக்கிறீர்கள்?.” என முகபாவத்தைமாற்றிக்கொண்டு உபசரித்தாள்.
எதுவும் பரவாயில்லை.” உள்ளே இருந்து இரண்டு கிளாசில் தண்ணீர்கொண்டு வந்தாள்கிளாசுகளின் விளிம்புகளில் எலுமிச்சம் பாதிகள்செருகப்பட்டு இருந்தன.
எனது கதையை கூறி உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை.”
அப்படியா? “ என கூறியபடி சந்திரனின் தோளில் கை வைத்தாள்.
சந்திரனுக்கு அச்சமும் கூச்சமும் சேர்ந்து உடல் விறைத்தது.
சந்திரன் ரிலாக்ஸ் எனக்கூறி தோள்பட்டையை ஜீலியா அழுத்தியபோதுவிறைப்பு தளர்ந்தது.
மெதுவாக திரும்பு “ எனக் கூறிவிட்டு இரண்டு கைகளாலும் அழுத்தினாள்.சந்திரனின் உடம்பில் மாற்றம் ஏற்பட்டு ஒருவித சுகமான உணர்வு ஏற்பட்டது.
இந்தக்கலையை எப்போது கற்றீர்கள்.? “
அது தொழில் ரகசியம்பிடித்தால் நான் செய்துவிடுகிறேன்.”
சரியென்று உடன் பதில் சொன்னாலும் மனம் குறுகுறுத்தது.
கட்டிலில் வந்து படுத்தால் தான் செய்யமுடியும் ; என கூறியபடி அறையைநோக்கி நடந்தாள்
குறிப்பு: டாக்டர் நடேசனின் உனையே மையல் கொண்டு என்ற நாவலை படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள அவரின் இணயத் தளத்தில் படிக்கலாம்
http://noelnadesan.wordpress.com/

No comments: