பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

.
பாகம் 6

வளர்ச்சி:

ஒருவனது ஆன்மிக வளர்ச்சிக்கு அவனது ஒழுக்கம் மேம்பட்டதாக இருக்கவேண்டும். கண்வமகரிஷி, தனது ஆசிரமத்தில் தங்கியிருப்பவாகளுக்குக் கல்வியளிக்க ஒரு குருகுலத்தை நிறுவினார். சகுந்தலையைச் சந்தித்து மனைவியாக ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு பரதன் என ஒரு மகன் பிறந்தான். கணவரின் ஆசிரமத்தில் பிறந்து வளர்க்கப்பட்டதால் அவன் அனைத்து நற்குணங்களும் நிரம்பபெற்றவனாக இருந்தான். தனது சின்னஞ்சிறு வயதிலிருந்தே நல்ல முறையில் கல்வி பெற்று ஆன்மீகமான, நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்த குணநலன்கள் வாய்த்தவனாகத் திகழ்வான். ஆனால் தந்தை துஷ்யந்தனோ உலகியல் சுகங்களையே பெரிதாக எண்ணினான். ஆசிரம வாழ்க்கையும், கல்வி முறையும் பரதனை அனைத்து நற்குணங்களுக்கும் சிகரமாக உயர்த்திற்று. ஆனால் துஷ்யந்தனிடம் உலகியல் செல்வங்கள் அனைத்தும் ஒரு சேரக் குவிந்திருந்தது. அவன் வலிமைமிக்க அரசன். இத்தனையிருந்தும் நற்குணம் இல்லையெனில் என்ன பயன்? இதனை ஆசிரமக் கல்வி முறைக்கும், நகரத்துக் கல்வி முறைக்கும் எடுத்துக்காட்டாய் வைத்துக் கொள்ளலாம். நகரக்கல்வி முறை சிரமத்துடன் (கஷ்டங்கள்) கூடியது. ஆசிரமக்கல்வி முறை ஆசிரமத்துடன் (கஷ்டங்கள் அற்ற) கூடியது. நகரத்தின் கல்லு}ரிகளில் மாணவாகளாகச் சேர்ந்து படிப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் மாணவன் கல்வியின் நோக்கத்தைச் சரியான முறையில் கொள்ள வேண்டும். தேவையற்ற உறவுகளை ஏற்படுத்தி கொண்டு பாதைமாறிச் செல்லக் கூடாது. உன்னை சுற்றியிருக்கும் சுற்றுச் சூழலை வைத்தே உங்களது குணமும் அமைகிறது. முந்தைய நாட்களில் மக்கள்:


“செல்வம் போனால் எதுவும் போகவில்லை,
உடல்நலம் போனால் சிறிதளவு நஷ்டம்,
ஒழுக்கம் போனால் எல்லாமே போயிற்று”

எனக் கருதி வந்தனர்.

ஆனால் நவீனயுகத்தின் இளைஞாகளோ செல்வத்திற்கே மதிப்பளிக்கின்றனர். செல்வம் போனால் எல்லாம் போய்விட்டதாக எண்ணுகிறார்கள். அவர்களைப் பொருத்த வரையில் ஒழுக்கம் போனால் எதுவும் போகவில்லை.
முன்னோடி:

நான் (ஸ்வாமி) உங்களிடம் அதிகம் பேசி தொந்தரவு செய்கிறேன் என நினைக்கிறேன். உங்களிடம் என்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால் நான் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடுத்திக் கொள்ளவதில்லை. நீங்கள் தான் ஸ்ரீ சத்யசாயி நிறுவனங்களின் முன்னோடியாகத் திகழ இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெரியவர்கள் எல்லாம் வயதில் மூத்தவர்கள், அதனால் அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள், வரையறைகள் இருக்கலாம். இளைய தலை முறையினர் தான் இந்த நிறுவனங்களை முன்னின்று நடத்திச் செல்லவேண்டும். ஒவ்வொரு மாநில நிறுவனமும், அதற்கென்று ஒரு இளைய மலைமுறைத் தலைவரை உருவாக்கி பொறுப்புகளை ஏற்கச் செய்யவேண்டும். நீங்கள் அரசியலிருந்து விலகி இருங்கள். சமுதாயத்தின் நன்மைக்கும், மேன்மைக்கும் பணியாற்றுங்கள். அதுதான் மிகச் சிறந்த சாதனை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது நடத்தை மிகத்து}ய்மையானதாக, மற்றவருக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழட்டும். பிரசாந்தி நிலையத்தில் இருக்கும்வரை நீங்கள் மிகுந்த கட்டுப்பாடான வாழ்க்கை நடத்துகிறீர்கள். இந்த இடத்தை விட்டுச் சென்ற பிறகும் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். எப்போதும் னுiஎiநெ-ல் ஆழந்து இருங்கள். னுநநி றiநெ-ல் அல்ல. எவரெல்லாம் தெய்வீகத்தில் ஆழ்ந்து இருக்கின்றனரோ அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள், இனிமையானவர்கள், எனது இனிய நண்பர்கள்.

அவ்வாறு நடந்து கொண்டால், நீங்கள் இங்கு வர அவசியமேயில்லை. நானே உங்களைத் தேடி வருவேன்! நீங்கள் எங்கு தங்கியிருந்தாலும், நானே உங்களைத் தேடிவருவேன். நான் உங்களுடன், உங்களைச் சுற்றி, உங்கள் பின்னாலும் இருக்கிறேன். நான் உங்களைவிட்டு வேறானவன் அல்ல. நானும் நீங்களும் ஒன்றே!குரு:

வாஹேகுரு என்றால், ஒரே ஒரு குருதான் இருக்கிறார். அவர்தான் கடவுள் எனப்பொருள். அவரே லட்சியம். இந்த குருவிலிருந்து அந்த குரு என்று அங்கும் இங்கும் அலைய வேண்டாம். எந்த நிலையிலும் இறைவனை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

குரு பிரம்மா

குரு விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வரஹ

கடவுள்தான் உங்களது உண்மையான குரு. நீங்கள் அவரை எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம். குரு என்ற வார்த்தையில் ‘கு’ என்பது குணாதீதன் (குணங்களற்றவன்) என்பது ருபரஹிதன் (உருவமற்றவன்) எனவும் குறிப்பிடுகின்றன. ஆகவே குரு என்பவர், குணங்களைக் கடந்த உருவமற்றவர் என ஆகிறது. ஆகவே, இறைவனே உங்களது உண்மையான குரு. எவ்வளவோ செலவழித்து, இத்தனை து}ரம் வந்திருக்கிறீர்கள். இங்கு கற்றவற்றை உங்களது வாழ்க்கையில் நடை முறைபடுத்துங்கள். உங்களது சொந்த ஊருக்கு திரும்பியதும், இங்கு கற்றவற்றை, பெற்ற அனுபவத்தை சக இஞைர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் இம்மாநாட்டில் பங்கேற்றதன் பலன் கிடைக்கும். உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்குச் சேவை புரிந்து, உங்களது வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள்.பிறவிப் பெருங்கடல்:

தவத்தாலோ, புண்ணிய சேஷத்திரங்களுக்குச் செல்வதாலோ, அல்லது புனித நு}ல்களைப் படிப்பதாலோ சம்சார சாகரமாக பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவது என்பது இயலாத காரியம். சேவையின் மூலமாகத்தான் ஒருவன் தனது வாழ்க்கையினைப் புனிதப்படுத்திக் கொள்ள முடியும். பிறவிப் பயன் எய்ய முடியும். (ஸ்லோகம்) எந்த ஒரு பிரதிபலனும் எதிர் பார்க்காமல் சேவை செய். இதுதான் நிஷ்காம யோகம். புல கிராமங்களில் சேவை புரிந்துவிட்டு, அதற்குப்பலன் எதிர் பார்த்தீர்களானால், அதனால் எந்தப் பயனும் சேருவதில்லை. இத்தனை கிராமங்களில் பணி புரிந்தேன் என வீண்பெருமை கொள்ளாதீர்கள். அமைதியாகப் பணிபுரியுங்கள். நிச்சயம் இறைவன் உங்கள் மீது கருணை மழை பொழிவார். நீண்ட பிராயணமும், பற்பல சௌகரியக் குறைவுகளையும் நீங்கள் பொறுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள், அதைக்கண்டு எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. உங்களது விருப்பத்கிற்கேற்ற உணவு இங்கே கிடைக்காமலும் இருந்திருக்கலாம். பரவாயில்லை. தேவையானதெல்லாம், முக்கியமானதெல்லாம் தலை முழுவதும் நல்ல சிந்தனைகள் தான். அவைதான் உங்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும். வுhழ உணவருந்த வேண்டுமே தவிர, உணவருந்தவே வாழக்கூடாது!

அன்பின் வடிவங்களே!

நீங்களெல்லாம், மகிழ்ச்சியான,ஆதர்சமான வாழ்க்கை வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் ஆசி கூறி நான் எனது உரையை முடிக்கிறேன்.

பாபா

21-11-1999

முற்றும்.

1 comment:

Sivamjothi said...

குரு சாட்சாத் பரப்பிரம்மா
புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி
நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த
நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html