மறந்து போனதோ -கவிதை --ஆவூரான்

.
மறந்து போகுமோ
மண்ணின் ஞாபகம்
புலம்பெயர்ந்து, பெயர்ந்து
பெயர்ந்து,போனதால்

பாடித்திரியும்
பச்சைக்கிளியே-உன்
கூடு இன்னும்
இருக்கிறதா-உன்
குஞ்சுகள் இன்னும்
வாழ்கிறதா
முற்றத்து பனைமரமே-நீ


முழுதாய் நிற்கிறாயா
ஊஞ்சல் ஆடிய
வேப்பமரமே
உன்னையும்-அவர்கள்
விட்டு வைத்தார்களா
போருக்கு போன பிள்ளை-இன்னும்
ஊருக்குத் திரும்பவில்லை
யாருக்கு சொல்லி
அழுவதென்று எனக்கும்
புரியவில்லை

கோவிலில்லை குளமுமில்லை
குந்தி எழ வீடுமில்லை
பாவிகளாய் நாமிங்கு
பாதையோரம் வாழுகின்றோம்.

மறந்து போகுமோ
மண்ணின் ஞாபகம்
புலம்பெயர்ந்து
பெயர்ந்து, போனதால்.

கவிஞர் ஆவூரான்

1 comment:

Ramesh said...

"கோவிலில்லை குளமுமில்லைகுந்தி எழ வீடுமில்லைபாவிகளாய் நாமிங்குபாதையோரம் வாழுகின்றோம்."

புதுவையின் வரிகள் போல் தெரிகிறதே? அல்லது புதுவையில் வைத்த பிரியமாக இருக்குமோ?