.
தொகுப்பு -கவிஞர் இரா.இரவி
புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்து விட்டுப் போகாதே
நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்
உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்து விட்டுப் போகாதே
நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்
உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே
நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்
காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே
ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்
உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்
இன்னும் சொன்னால் நம்பிக்கையில் மரணத்தை
ஜெயிக்க முடியும் ஏது உயிர்த்தெழுந்தது இப்படித்தான்
சிறந்த வியாபாரிகளை உருவாக்குவது அவர்கள் அடைந்த
நம்பிக்கைத் துரோக நஷ்டங்கள்
சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய
அசுரத்தமான தோல்விகள்
நம்பிக்கையே இல்லாமல் யார்? வாழக் கூடும்
நம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்
சந்தேகம்தான் தீயை வைக்கும்
நம்பிக்கைதான் தீபம் வைக்கும்
ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்
ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ
மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது
ஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்
கடல் போல் நம்பிக்கை இருந்தால்
நீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை
நீ உன் மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை
நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று அதில்
புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று
காந்தத்திலிருந்து மின்சக்தி வருவது மாதிரி
நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும்
போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி
நம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி
காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்
இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையும் காலியாகவிடாதே
ஒரு நாளும் சோர்ந்து விடாதே கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் பூக்கிறது
இழப்பு என்பது எதுவுமேயில்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை
கர்வம் வை கிராம் கணக்கில் நம்பிக்கை வை கிலோ கணக்கில்
நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை
தண்ணீருக்கு அடியில் சென்று
ஓவியம் வரைய முடியாது
தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்
உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது
நம்பிக்கை ஒன்று போதுமே
எதிர்காலம் ஒன்றைப் பூக்கச் செய்யலாம்
நம்பிக்கை இருக்கும் போதிலே
எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்
என்னமுடியும் எதைச் செய்ய முடியும்
என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை
எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்
என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை
ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்
மல்லிகைப்பூ மணம் மாறாது
நீ எங்கே பணி புரிந்தாலும்
உன் சுயம் கெடாது.
ஓவியம் வரைய முடியாது
தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்
உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது
நம்பிக்கை ஒன்று போதுமே
எதிர்காலம் ஒன்றைப் பூக்கச் செய்யலாம்
நம்பிக்கை இருக்கும் போதிலே
எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்
என்னமுடியும் எதைச் செய்ய முடியும்
என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை
எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்
என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை
ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்
மல்லிகைப்பூ மணம் மாறாது
நீ எங்கே பணி புரிந்தாலும்
உன் சுயம் கெடாது.
213 comments:
1 – 200 of 213 Newer› Newest»என்னமுடியும் எதைச் செய்ய முடியும்
என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை
எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்
என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை
நல்ல கவிதை கவிஞர் இரா ரவி தொடர்ந்து எழுதுங்கள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
பதவி ஊசலாடுகிறது
சிதம்பர ரகசியம்
பொதுஉடைமை
உணர்த்தியது
செம்பருதி பூ
தங்கக்கூண்டு வேண்டாம்
தங்க கூண்டு போதும்
காதலர்களுக்கு
இயற்கையின்
இனிய கொடைகள்
வண்ணங்கள்
மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள்
இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை
ஈடு இணை இல்லை
இன்பத்தின் எல்லை
காதல் உணர்வு
அளவிற்கு அதிகமானால்
ஆபத்து
பணமும் காற்றும்
யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
சந்திக்கும்போது
பிரிந்த காதலர்கள்
அன்று பாசத்தால்
இன்று பணத்தால்
உறவுகள்
புலியைக்கண்ட மானாக
வேட்பாளரைக் கண்ட
வாக்காளர்
அணு உலை உயிர்களுக்கு உலை கவிஞர் இரா .இரவி
நமக்கு நாமே
வைக்கும் அணுகுண்டு
அணு உலை
வராது பூகம்பம் சரி
வந்தால்
அணு உலை
கணிக்க முடியாதது
இயற்கையின் சீற்றம்
அணு உலை
கொலைக்களம் ஆக வேண்டாம்
கூடங்குளம்
அணு உலை
மின்சாரம் காற்றிலும் கிடைக்கும்
உயிர்கள் போனால் கிடைக்குமா ?
அணு உலை
பண நட்டம் பெற்றிடலாம்
உயிர்கள் நட்டம் ?
அணு உலை
மின்சாரம் பெறப் பல வழி
உயிர்கள் போக வழி
அணு உலை
உயிர்கள் அவசியம்
மின்சாரம் அனாவசியம்
அணு உலை
வாழலாம் மின்சாரமின்றி
வாழமுடியுமா?உயிரின்றி
அணு உலை
உயிரா ? மின்சாரமா?
உயிரே முதன்மை
அணு உலை
வராது சுனாமி என்றவர்களே
வராமலா இருந்தது சுனாமி
அணு உலை
உத்திரவாதம் உண்டா ?
பூகம்பம் வரதா ?
அணு உலை
விரும்பவில்லை வெறுக்கின்றனர்
மனிதாபிமானிகள்
அணு உலை
வேண்டும் என்போர்
வசித்திட வாருங்கள்
அணு உலை அருகில்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கேலிக்கூத்தானது
அகிம்சையின் ஆயுதம்
உண்ணாவிரதம்
எடுபடவில்லை
மோடியின்
மோடிமஸ்தான் வேலை
காந்தியடிகளை
அவமானப்படுத்தும்
மத வெறியர்
பிறக்கும் போது இல்லை
இறக்கும் போது உண்டு
ஆடை
யானையின் வாய்
அரசியல்வாதியின் கை
சென்றால் திரும்பாது
இதயம் அல்ல
மூளைதான்
காதலியின் இருப்பிடம்
உலக அழகி ஐஸ்வர்யா ராயை
எனக்கு ரெம்பப் பிடிக்கும் கவிஞர் இரா .இரவி
உலக அழகி என்பதற்காக அல்ல
உன்னத விழிகளைத்
தானம் தரச் சமதித்ததற்காக
விழிகள் தானம் பற்றி
விழிப்புணர்வு விதைத்ததற்காக
உடல் அழகி மட்டுமல்ல
கருத்து அழகி என மெய்பித்தற்காக
உலக அழகி ஐஸ்வர்யா ராயின்ரசிகர்களே
விழிகளைக் கட்டிக் கொண்டு ஒருமுறை
சாலையின் வழியில் நடந்துப் பாருங்கள்
பார்வையற்றோரின் துன்பம் புரியும்
பார்வையற்றோரின் துன்பம்போக்குவோம்
விழிகளைத் தானம் செய்யுங்கள்
இறந்த பின்னும் இயற்கையை ரசிக்கலாம்
மண்ணிற்கும் தீயுக்கும் இரையாகும் விழிகளை
மனம் உவந்து மனிதர்களுக்கு வழங்குங்கள்
பிறந்ததன் பயனை பயனற்றோர்
இறந்த பின்னாவது நிறைவேற்றுவோம்
பார்வையற்ற இருவருக்குப் பார்வையாவோம்
பாரினில் பார்வையற்றோர் இல்லை என்றாக்குவோம்
மறக்க முடியாத உண்மை கவிஞர் இரா .இரவி
மறுக்கமுடியாத உண்மை .
மறக்க முடியாத உண்மை
காதலில் வென்றவர்கள்
வென்றதும் காதலை
மறந்து விடுகின்றனர் .
காதலில் தோற்றவர்கள்தான்
இருவருமே இறுதி வரை
காதலை நினைக்கின்றனர் .
மறுக்கமுடியாத உண்மை
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கோடுகளின்
கவிதை
ஓவியம்
சொற்களின்
ஓவியம்
கவிதை
மதிக்கப்படுவதில்லை
திறமைகள் இருந்தும்
குடிகாரர்கள்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
அரசு ஊழியருக்கு
வணிகராக ஆசை
ஊழல் மறைக்க
ஊழல் செய்யும்
அரசியல்வாதிகள்
பழமையானாலும்
விறகாவதில்லை
வீணை
ஜடப் பொருள்தான்
மீட்டத் தெரியாதவர்களுக்கு
வீணை
அம்புகள் படாத வில்
விழி அம்புகள் அட்ட வில்
வானவில்
புகழ் அடையவில்லை
பிறந்த பூமியில்
புத்தன்
ஒருபோதும் மறப்பதில்லை
உணவு இட்டவர்களை '
நாய்கள்
வெடி வெடிப்பதில்லை
சில கிராமங்களில்
பறவைப்பாசம்
மனிதனை விட
அறிவாளிகள் விலங்குகள்
சுனாமியில் தப்பித்தன
அறிவுறுத்த வேண்டி உள்ளது
மனிதனாக வாழ
மனிதனை
அடிக்கரும்பு
அதிக இனிப்பு
மண்ணுக்கு அருகில்
மேய்ப்பன் இன்றியே
இல்லம் வந்தன
ஆடுகள்
நிலத்தில் பிறந்து நீரில் வாழ்ந்து
நிலத்தில் முடியும்
படகு
மனிதனின் கால் பட்டதால்
களங்கமான
நிலவு
இலங்கைக் கொடூரன்
கவிஞர் இரா .இரவி
கொலைகாரப் பாவி கொடூரன்
கூசாமல் பொய்ச் சொல்கிறான்
இலங்கையில் மனித உரிமைகள்
இனிதே பேண ப் படுகிறதாம்
எல்லோருக்கும் சம உரிமைகள்
இவர் வழங்கி இருக்கிறாராம்
தேசிய கீதத்தைக் கூட இலங்கையில்
தமிழில்ப் பாடத் தடை விதித்தவன்
தமிழ் இனத்தை ஈவு இரக்கம் இன்றி
கொன்றுக் குவித்தக் கொடூரன்
முழுப் பூசணிக்காய் சோற்றில்
மறைப்பது கேள்விப் பட்டு இருக்கிறோம்
பூசணித் தோட்டத்தையே சோற்றில்
மறைக்கும் புரட்டன் இவன்
கேழ்வரகில் நெய் கேள்விப் பட்டு இருக்கிறோம்
நெய்யிலிருந்து கேழ்வரகு வரும் என்பான்
வில்லன் கதாநாயகனாக நடித்தால்
திரைபடத்தில் ஜெயிக்கலாம்
வில்லன் கதாநாயகனாக நிஜத்தில்
நடித்தால் தோற்பது உறுதி
அய்.நா மன்றம் தரவேண்டும்
உனக்கு உடன் தண்டனை
அய்.நா மன்றம் தர மறுத்தால்
மக்கள் மன்றம்தரும் உனக்கு இறுதி
முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு உனக்கு
கொள்ளி வைக்காமல் அடங்காது
செங்கொடி கவிஞர் இரா .இரவி
மறைந்தும் மறையாத
துருவ நட்சத்திரம்
செங்கொடி
இனமானத் தீயை
மூட்டிய தீ
செங்கொடி
செங்கொடிகளையும்
வாய் திறக்க வைத்தவள்
செங்கொடி
மூன்று உயிர்கள் காக்க
தன்னுயிர் தந்த தியாகி
செங்கொடி
மனிதாபிமான மற்றவர்களுக்கு
மனிதாபிமானம் போதித்தவள்
செங்கொடி
தன்னை எரித்து
தமிழ்ப் பகை எரித்தவள்
செங்கொடி
உடலால் எரிந்து
உணர்வால் வாழ்பவள்
செங்கொடி
அய் நாவில் ஈழக்கொடி
பறக்க வழிவகுத்தவள்
செங்கொடி
முத்துக்குமாரின் வழியில்
முத்திரைப் பதித்தவள்
செங்கொடி
தூங்கியத் தமிழினத்தை
தன்னை எரித்து எழுப்பியவள்
செங்கொடி
இன எதிரிகளின்
முகத்திரைக் கிழித்தவள்
செங்கொடி
ஈழத்துத் தீலிபனை
நினைவூட்டிச் சென்றவள்
செங்கொடி
இயந்திர உலகில்
இளகிய இதயம் பெற்றவள்
செங்கொடி
சுயநல உலகில்
பொதுநல இமயம்
செங்கொடி
உயிர் ஆயுதம் ஏந்தி
எதிரிகளை வீழ்த்தியவள்
செங்கொடி
ஒரே நாளில்
உலகப் புகழ்ப் பெற்றவள்
செங்கொடி
புலம் பெயர்ந்த தமிழர்களின்
புலம் உணர்த்தியவள்
செங்கொடி
அய்ம்புலனை அழித்து
அறிவுப் புகட்டியவள்
செங்கொடி
தமிழ் இனத்தின் தியாகத்தை
தரணிக்குக் கற்பித்தவள்
செங்கொடி
ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி
ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம்
காப்போம் காப்போம்
மனிதநேயம் காப்போம்
தகர்ப்போம் தகர்ப்போம்
தூக்குத்தண்டனைத் தகர்ப்போம்
காந்தியின் தேசத்தில் தூக்குத்தண்டனை
காந்தியடிகளுக்கு அவமானம்
மகாத்மாவின் தேசத்தில் மரணதண்டனை
மகாத்மாவிற்கு அவமானம்
மக்களாட்சியில் மக்கள் விரும்பாத
மரணதண்டனையை நீக்கிடுவோம்
நிரபராதிகளைக் கொன்றுவிட்டால்
நீதியைக் கொன்று விடுகின்றோம்
நீதிக்காக உயிரை விட்ட
நல்ல மன்னர்கள் வாழ்ந்த நாடு
கொன்ற உயிர்களை உலகில் எந்தக்
கொம்பனாலும் திருப்பித் தர முடியாது
கொலைத்தண்டனைக் கொடுப்பதனால்
குறையவில்லைக் குற்றங்கள்
குற்றத்திற்கானக் காரணங்கள்
களையப்பட வேண்டும்
அடிப்படை உரிமைகள்
அனைவருக்கும் வேண்டும்
சக மனிதனை மனிதன்
சரிசமமாக நடத்திடவேண்டும்
ஆதிக்கம் அடக்குமுறை உலகில்
அழித்துவிட வேண்டும்
அடிப்படைத் தேவைகள்
அனைவருக்கும் பூர்த்தியாக வேண்டும்
ஏற்றத் தாழ்வுகள் தகர்க்க வேண்டும்
பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும்
துளிப்பா கவிஞர் இரா .இரவி
· விபச்சாரம்
மனிதவிலங்கு இனம்காணல்
· கல்வி
விற்பனைக்கு மட்டும்
· பூக்கள்
நிரந்தரமன்று அழகு
· மழை
பூமிக்கானப் பாராட்டு
· இலவசங்கள்
தன்வசமாக்கும் யுத்தி
· சாதி
உயர்சாதியின் சதி
மின்மினி
பறக்கும் விளக்கு
மின்மினி
நகரும் நட்சத்திரம்
மின்மினி
இரவின் ஒளி
அனுமதியோம் அனுமதியோம் கவிஞர் இரா .இரவி
காந்தி தேசம் பெயரிடச் சொன்னார் பெரியார்
காட்டுமிராண்டித் தேசமாகிட அனுமதியோம்
லட்சியம் செய்யாததால் ஈழத்தில்
லட்சம் தமிழர்களின் உயிர்களை இழந்தோம்
அலட்சியம் வேண்டாம் இனி ஒரு
தமிழரையும் இழக்க வேண்டாம்
தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
தூக்கிப் போடும் பந்தா ?
தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
விளையாடும் பொம்மையா ?
கொடிய சிங்களன் உனக்குப் பங்காளியா ?
நல்லத் தமிழன் உனக்குப் பகையாளியா ?
தூக்கைத் தூக்கிலிடாமல் ஓயமாட்டோம்
மரணத் தண்டனைக்கு மரணம் தருவோம்
உயிரைப் பறிக்க எவனுக்கும் உரிமை இல்லை
உரைத்தவர் அண்ணல் காந்தியடிகள் உணர்ந்திடு
தூக்கை ஆதரிக்கும் அறிவிலிகளிடம் சில கேள்விகள்
தூக்கு உன் தந்தைக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் தாயுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரனுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரிக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உனக்கு என்றால் ஆதரிப்பாயா ?
நேற்று தூக்கு யாருக்கோ என்று இருந்தாய்
இன்று தூக்கு தமிழருக்குத்தானே என்று இருந்தால்
நாளை தூக்கு உனக்கும் வரலாம் உணர்ந்திடு
உலகின் முதல் மொழி தமிழ்
உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகின் முதலினம் அழிந்திட
ஒருபோதும் இனி அனுமதியோம்
உலகிற்கு மனிதநேயம் கற்பித்தவன் தமிழன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உலகிற்கு உரைத்தவன் தமிழன்
உலகப் பொதுமறை தந்தவன் தமிழன்
ஒருவனுக்கு ஒருத்தி என்று உலகிற்கு
ஒழுக்கம் கற்பித்தவன் தமிழன்
மிருகவதையைக் கண்டிக்கும்
மிருக ஆர்வலர்களே மனித வதை தடுக்க
மனிதாபிமானத்தோடு வாருங்கள்
சராசரி மனிதனாக வாழ்ந்தது போதும்
சாதனை மனிதனாகிச் சரித்திரம் படைப்போம்
முள்ளை முள்ளால் எடுப்பது போல
தீர்ப்பைத் தீர்ப்பால் வெல்வது உறுதி
இனி யாருக்கும் மரணதண்டனை இல்லை
என்று ஆக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்
பிரச்சனை கவிஞர் இரா .இரவி
பிரச்சனை நாள்தோறும்
வருகின்றது .
பழையப் பிரச்சனையை
மறக்கடிக்கவே
புதியப் பிரச்சனை
உருவாக்கப்படுகின்றது .
எந்தப் பிரச்சனைகள்
வந்தாலும்
எந்தவிதப் பிரச்சனையுமின்றி
தான் உண்டு தன் குடும்பம் உண்டு
என்று வாழும் பிரஜைகள்
பெருகிவிட்டனர்
வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி
சுண்டைக்காய் இலங்கை ராணுவத்தான் கண்ணில்
சுண்டு விரலை விட்டு ஆட்டுகின்றான்
தமிழ்நாட்டு மீனவர்களைச் சுடுகின்றான்
மீன் வலைகளை அறுத்து எரிகின்றான்
நிர்வாணப் படுத்தி அவமதிக்கின்றான்
கருவிகளைக் களவாடிச் செல்கின்றான்
மீனவர்களைக் கடத்திச் செல்கின்றான்
இலங்கைச் சிறையில் வதைக்கின்றான்
கடல் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின்
கைகளில் இருப்பது துப்பாக்கியா ?பூச்சென்டா
பாகிஸ்தானிடம் வீரம் காட்டும் இந்தியா
பக்கத்துஇலங்கையிடம் வீரம் காட்டாதது ஏன்?
தமிழருக்காக என்றாவது இந்திய ராணுவம்
தட்டிக் கேட்டதுண்டா ?இலங்கை ராணுவத்தை
ஏன்?என்று கேட்க நாதி இல்லை
இந்தியனாகத் தெரியவில்லை தமிழன்
தமிழனின் உயிரை மதிக்காத இந்தியாவை
தமிழன் மதிக்க மனம் வருமா ?
விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களைவிட
விவேகமானது தமிழ் மக்களின் உயிர் காப்பது
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
இனிக்கவில்லை
விடுதலைத் திருநாள்
நினைவில் ஈழத்தமிழர்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
பாமரர்கள் மட்டுமல்ல
படித்தவர்களிடமும் பெருகியது
மூடநம்பிக்கை
இரண்டும் ஒழிந்தால்
வல்லரசாகும் இந்தியா
சாமியார் சாமி
கணினி யுகத்தில்
கற்கால நம்பிக்கை
பிரசன்னம் பார்த்தல்
முட்டாளை அறிவாளியாக்கும்
அறிவாளியை மேதையாக்கும்
சுற்றுலா
வாழ்க்கை முரண்பாடு
பணக்காரர்களுக்கு பசி இல்லை
ஏழைகளுக்கு பசி தொல்லை
அறிந்திடுங்கள்
சோம்பேறிகளின் உளறல்
முடியாது நடக்காது தெரியாது
சாதிக்கின்றனர்
கைகள் இல்லாமலும்
கைகள் உள்ள நீ ?
வாழ்க்கை இனிக்கும்
கொடுத்ததை மறந்திடு
பெற்றதை மறக்காதிரு
கவனம் தேவை
சிக்கல் இல்லை
சிந்தித்துப் பேசினால்
விரல்களால் தெரிந்தது
விழிகளில் உலகம்
இணையம்
கையில் வெண்ணை
நெய்யுக்கு அலைகின்றனர்
கோவில்களில் தங்கம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
இயற்கை எழுதிய கவிதையில்
எழுத்துப்பிழைகள்
திருநங்கைகள்
உணர்த்தியது
பசியின் கொடுமை
நோன்பு
வக்கிரம் வளர்க்கும்
வஞ்சனைத் தொடர்கள்
தொலைக்காட்சிகளில்
அன்று இலங்கை கொடூரனுக்கு
இன்று இந்திய வில்லிக்கு
புற்றுநோய்
ஆணி அடித்து
ரணப்படுத்தி விளம்பரம்
சாலையோர மரங்களில்
படமே இல்லை
உதவியது விளம்பரம்
முன்னாள் நடிகைக்கு
புகைப் பிடிக்கின்றதோ ?
மலை
வான் மேகம்
கண்ணால்
காண்பதும் பொய்
மலையை முத்தமிடும் வானம்
ஒழித்து விடு
பொன்னாசை பட்டாசை
நிரந்தரம் நிம்மதி
விரயமாவதைப் பயன்படுத்திடு
விவேகமாக வளரந்திடு
சூரிய சக்தி
இனி சேர்ந்து வாழவே முடியாது கவிஞர் இரா .இரவி
கீரியும் பாம்பும் சேர்ந்து வாழ முடியாது .
ஆடும் புலியும் சேர்ந்து வாழ முடியாது
எலியும் பூனையும் சேர்ந்து வாழ முடியாது
கன்றும் பன்றியும் சேர்ந்து வாழ முடியாது
மானும் சிங்கமும் சேர்ந்து வாழ முடியாது
பூச்சியும் பல்லியும் சேர்ந்து வாழ முடியாது
சேனல் 4 பார்த்த பின் இனி சேர்ந்து வாழவே முடியாது
சேர்ந்து வாழச் சொல்வது மடத் தனமானது
தமிழரும் சிங்களரும் இனி சேர்ந்து வாழவே முடியாது
தனித் தனியே வாழ்வதுதான் இருவருக்கும் நல்லது
காட்டுமிராண்டிகளை விட மோசமான சிங்கள ராணுவம்
விலங்குகளைவிட கொடூரமான இலங்கை ராணுவம்
அன்பை போதித்த புத்தரை வணங்கும் சிங்களருக்கு
அன்பு என்றால் என்னவென்று தெரியவில்லை
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் புத்தர் அன்று '
சிங்களரின் பேராசையே இலங்கையின் அழிவுக்குக் காரணமானது
சிங்களரில் நல்லவர்கள் மிக மிகக் குறைவு
தமிழர்களில் கெட்டவர்கள் மிக மிகக் குறைவு
சந்திரிகாவின் மகன் போன்ற ஒரு சில சிங்களரே
சக மனிதன் துன்பம் புரிந்து அழுகின்றனர்
இம் என்றால் சிறை ஏன்? என்றால் கொலை
எப்படி ?இனி இணைந்து வாழ முடியும்
சேனல் 4 பார்த்த பின் இனி சேர்ந்து வாழவே முடியாது
சேர்ந்து வாழச் சொல்வது மடத் தனமானது
--
மரம் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
திருமணத்திற்கு வாழை
மரணத்திற்கு மூங்கில்
தொடரும் மரத்தின் உறவு
தொட்டில் முதல்
சுடுகாடு வரை
மரம்
வாழ்ந்தால் நிழல்
வீழ்ந்தால் விறகு
மரம்
வெட்டும் வில்லனுக்கும்
நிழல் தந்தது
மரம்
இயற்கையின் விசித்திரம்
சிறிய விதை
பெரிய விருட்சமானது '
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மெய்ப்பித்தனர்
பேராசை பெருநஷ்டம்
அரசியல்வாதிகள்
கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்
அசைவம் அணியலாமா ?
சைவம் என்றாயே
பட்டுச்சேலை
பட்டுச்சேலையைவிட
பருத்திச்சேலையே
அவளுக்கு அழகு
காந்தியடிகளுக்கு அவமரியாதை
இன்றும் தொடர்கின்றது
கிராமங்களில் தீண்டாமை
கணினி யுகத்தில் களங்கம்
கிராமங்களில்
தீண்டாமை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
கவிஞர் இரா .இரவி
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ
பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல வாசன் உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ
நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ
கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ
அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ
ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ
தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ
போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ
முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ
வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல் ஒட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ
பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ
உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிப்போரின் திறனை
உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று
இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை
செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அரசியல்வாதிகளின்
கால் பந்தானது
கல்வி
வேதனையில்
தமிழ் அன்னை
தமிங்கிலம்
பறவையின் எச்சத்தால்
வளர்ந்தது உச்சம்
மரம்
உழவனுக்கு
உதவமுடியா மண்புழு
பாலித்தீன் பைகள்
மரத்தை வெட்டி
எரித்த விறகு
அழவைத்தது
அவமானச்சின்னங்கள்
இந்தியாவிற்கு
முதியோர் இல்லங்கள்
காண முடியவில்லை
குருவிக்கூடு
குருவி
என்னவளே கவிஞனுக்கு கற்பனையே அழகு
கவிஞர் இரா .இரவி
உனக்காக எழுதிய கவிதைகளை
நூலாக்கினேன் .
கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம்
கொடுத்து மகிழ்கின்றேன் .
படித்த பலரும் பாராட்டினார்கள் .
தொலைக்காட்சிகளிலும்
வலம் வந்தது என் கவிதைகள்
விமர்சனம் செய்தார்கள்
பாராட்ட வேண்டிய நீயோ
அருகில் இல்லை
படிக்க வேண்டிய நீயோ
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கடைகளிலும் என் நூல்கள்
கிடைக்கும்
கண்ணில் பட்டால்
வாங்கிப் படிப்பாய்
நம்பிக்கை உண்டு
படித்துவிட்டுக்
கருத்துச் சொல்லமாட்டாய்
நிருபர்களின் சிக்கலான
கேள்விக்கு பதில் சொல்லாத
அரசியல்வாதிபோல
இருந்துவிடுவாய்
உன் மனம் நான் அறிவேன்
சொல்லாவிட்டாலும்
சொன்னதாக நினைத்துக் கொள்வேன்
கவிஞனுக்குக் கற்பனையே அழகு
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் கவிஞர்
இரா .இரவி
கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர்
கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர்
நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர்
நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர்
புகழை வெறுத்த முதல்க் கவிஞர் தாகூர்
போரை வெறுத்த இரண்டாம் புத்தர் தாகூர்
தாடியைக் கண்டதும் அனைவரின் நினைவுக்குத் தாகூர்
தந்தை பெரியார் அடுத்து நினைவிற்கு வருவார்
டயர் என்ற ராணுவ அதிகாரியின் காட்டு மிராண்டித் தனத்திற்காக
சர் பட்டத்தையும் சர் என்று தூக்கி எறிந்துக் கண்டித்தவர் தாகூர்
காந்தியடிகளுடன் மாணவர்கள் ஒத்துழையாமையில் வேறுபட்டாலும்
காந்தியடிகளின் நெறிக் கண்டு மகாத்மா பட்டம் தந்தவர் தாகூர்
தேவேந்திரநாத் தாகூரின் மகனாகப் பிறந்தார் தாகூர்
பதினான்காம் குழந்தையாகக் கடைசியாகப் பிறந்தார் தாகூர்
குழந்தையில் கதைகள் பலக் கேட்டு அறிவு வளர்த்து
குவளயத்தில் நாவலும் நாடகமும் கவிதையும் வடித்தவர்
கவிஞர் ஓவியர் நடிகர் எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றலோடு
கவிதைகளில் மட்டும் தனிப்பெரும் முத்திரைப் பதித்தவர்
இயற்கையை நேசிப்பதில் இயற்கையோடு ஒன்றானவர்
இந்தியாவின் பெருமைகளில் ஒன்றானவர் தாகூர்
குழந்தைப் பருவத்தில் பள்ளியைச் சிறையாக நினைத்தவர்
குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் குரல் தந்தவர்
மாலைப் பாடல்கள் எனும் முதல் நூலின் மூலம்
மலை என கவிதை மாமலை என உயர்ந்த கவிஞர் தாகூர்
வங்கத்து நாவல் எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியிடம்
வாழ்த்தும் பாராட்டு மழையும் மலர் மாலையும் பெற்றவர்
ஆடம்பரத்தை என்றும் விரும்பாத எளிமையின் சின்னம்
அன்பு நெறியை அகிலத்திற்கு உணர்த்திய நல் அன்னம்
தாய்மொழிப் பற்று மிக்கவராகத் திகழ்ந்தவர் தாகூர்
ஆங்கில மோகம் அகற்றுக அன்றே உரைத்தவர் தாகூர்
சிலை வழிபாடு வேண்டாம் என்று சொன்னவர் தாகூர்
சக மதங்களைச் சாடுவது தவறு கூறியவர் தாகூர்
விலங்குகள் பறவைகள் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காதீர்
வனங்களையும் மரங்களையும் ரசிக்க வைத்தவர் தாகூர்
பிற நாட்டின் மீது பகை வளர்க்கும் தேசபக்தி
பிற்போக்குத்தனமானது என்று சாடியவர் தாகூர்
மூடப் பழக்கங்களை வெறுத்துப் பகுத்தறிவை நாடியவர்
மூச்சாகத் தாய் மொழியை நேசிக்கச் செய்தவர்
ஆங்கிலம் இத்தாலி எனப் பன்னாட்டு மொழிகளில்
அகிலம் முழுவதும் பரவியது தாகூரின் படைப்பு
அயல்நாடுகளில் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால்
அற்புதக் கவிஞர் தாகூர் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்றனர்
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் தாகூர்
--
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மூளைச்சலவையால்
மூளை இழந்தவர்கள்
தீவிரவாதிகள்
விலங்குகளை விடக்
கீழானவர்கள்
தீவிரவாதிகள்
உயிர்களை அழிக்கும்
கொடூரன்களே
உருவாக்க முடியுமா ?
மதி இழந்ததால்
மதச் சார்பற்ற நாட்டில்
மதக்கொலைகள்
அறிவிழந்த
மத வெறியால்
அப்பாவி மக்கள் பலி
வாழ்ந்தவர்களை விட
வீழ்ந்தவர்களே அதிகம்
மதத்தால்
மதம் அபீன் என்றார் லெனின்
மதம் புரட்டு என்றார் பெரியார்
மெய்யானது இன்று
இலக்கிய இமயம் கவிஞர் இரா .இரவி [Edit Kavithai]
அம்மாக்கண்ணு பெற்றெடுத்த செல்லக்கண்ணு மு. வ
முனுசாமியின் பெயர் சொல்லும் பிள்ளை மு. வ
திருவேங்கடம் என்பது இயற்பெயர்
தாத்தாவின் பெயரான வரதராசன் நிலைத்த் பெயர்
எழுத்தராகப் பணித் தொடங்கி உயர்ந்த
துணைவேந்தராகப் பணி முடித்த முதல்வர்
எழுத்தர் ஆசிரியர் விரிவுரையாளர் துணைப் பேராசிரியர்
துறைத் தலைவர் துணைவேந்தர் படிப்படியாக உயர்ந்தவர்
இழப்பைக் கண்டு என்றுமே வருந்தாதவர்
உழைப்பின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அன்றே
செந்தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்
அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் நன்றே
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்
உலக நாடுகள் பல கண்ட தமிழ் அறிஞர்
இந்திய மொழிகள் பல அறிந்த பண்டிதர்
இந்தியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில்
இனிய நட்பும் தொடர்பும் கொண்டவல்லவர்
பன்னாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில்
பண்பான உதவிகள் புரிந்த நல்லவர்
சிறுகதை நாவல் கட்டுரை என இவர்
செதுக்கியதில் ஈடு இணையற்ற இலக்கிய சிற்பி
மனதில் பூத்த கருத்துக்களைத் தொகுத்து
முதல் நாவலாக செந்தாமரை தந்த எழுத்தாளர்
கள்ளோ காவியமோ இரண்டாம் நாவல் மூலம்
கள்வரென அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர்
புன்னகை அணிந்திருக்கும் பூ முகம் பெற்றவர்
புத்திக் கூர்மையால் சுடர் முகம் கொண்டவர்
அறுபத்தி இரண்டு வயதில் காலத்தால் அழியாத
எண்பத்தி அய்ந்து நூல்கள் எழுதிய சகலகலா வல்லவர்
மாநிலத்தில் முதல் மாணவனாகப் புலவர் பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் நூற்றாண்டு கடந்தும் நின்றவர்
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் கவிஞர் இரா .இரவி
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்
குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்
பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்
இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே
குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்
இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்
போதையால் உன் வாழ்க்கைப்பாதைத் தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்
குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு
மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்
பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்
குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்
மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்
சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர்
நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய்
சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி
காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால்
ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு
நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம்
வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம்
கோடிகளும் லட்சங்களும்
கோயிலின் உள்
வெளியே பிச்சைக்காரர்கள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
தமிழர்களின் நெஞ்சில்
நீரு பூத்த நெருப்பு
முள்ளிவாய்க்கால் படுகொலைகள்
அன்று கர்மவீரர் காமராசருக்கு
இன்று சாராய வியாபாரிகளுக்கு
கல்வி வள்ளல் பட்டம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கடை மூடியதால்
குடி மகன்கள் வருத்தம்
காந்தி ஜெயந்தி
அசைவப் பிரியர்களுக்கு வருத்தம்
ஞாயிறன்று வந்ததால்
காந்தி ஜெயந்தி
தேர்வு எழுதியதில்
ஆள் மாறாட்டம்
கல்வி அமைச்சர் ?
காயம் இல்லை
மரத்தில் இருந்து விழுந்தும்
இலை
அரசியல்வாதிகளின்
கேலிக் கூத்தானது
உண்ணாவிரதம்
மரமானதற்கு
வருந்தியது
சிலுவை மரம்
தந்திடுவீர்
தானத்தில் சிறந்தது
உடல் தானம்
அசலை வென்றது
நகல்
செயற்கைச் செடி
உடை வெள்ளை
உள்ளம் கொள்ளை
அரசியல்வாதிகள்
கண்டுபிடியுங்கள்
வேண்டுகோள்
விழிகளில் மின்சாரம்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கடை மூடியதால்
குடி மகன்கள் வருத்தம்
காந்தி ஜெயந்தி
அசைவப் பிரியர்களுக்கு வருத்தம்
ஞாயிறன்று வந்ததால்
காந்தி ஜெயந்தி
தேர்வு எழுதியதில்
ஆள் மாறாட்டம்
கல்வி அமைச்சர் ?
காயம் இல்லை
மரத்தில் இருந்து விழுந்தும்
இலை
அரசியல்வாதிகளின்
கேலிக் கூத்தானது
உண்ணாவிரதம்
மரமானதற்கு
வருந்தியது
சிலுவை மரம்
தந்திடுவீர்
தானத்தில் சிறந்தது
உடல் தானம்
அசலை வென்றது
நகல்
செயற்கைச் செடி
உடை வெள்ளை
உள்ளம் கொள்ளை
அரசியல்வாதிகள்
கண்டுபிடியுங்கள்
வேண்டுகோள்
விழிகளில் மின்சாரம்
இனிமை மொழி! என் தமிழ்மொழி!!
கவிஞர்.இரா.இரவி
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்கு புதுமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல், இசை, நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி
முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை பாடிய தமிழ்மொழி
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி!
மதுரை மாநகரம்
கவிஞர்.இரா.இரவி
உலகப்பொது மறையாம் ஒப்பற்ற திருக்குறள்
உலகிற்கு அளித்த பெருமை பெற்ற மதுரை
செம்மொழி தமிழ்மொழி அழியாமல் இருக்க
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை
சதுரம் சதுரமாக வடிவமைத்த வடிவான நகரம்
சிறப்புகள் பல தன்னகத்தே கொண்ட மதுரை
மல்லிகை மலரை மலையென தினமும் இன்றும்
மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும் மதுரை
தாயுக்கு அடுத்தபடியாக மதுரை மக்கள் மதிப்பது
தாய்மண்ணான அழகிய நகரம் மதுரை
'சிலப்பதிகாரம் முதல் கணிப்பொறி' காலம் வரை
சிங்கார மதுரைக்கு 'தூங்காநகரம் ' என்று பெயர்
சூடான இட்லியும் சுவையான சட்னிகளும்
சூரியன் உறங்கும் நேரத்திலும் கிடைக்கும்
உலகில் மதுரைக்கு இணை எதுவுமில்லை
உலகம் உள்ளவரை மதுரைக்கு அழிவில்லை
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் - கவிஞர் இரா .இரவி
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்
குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்
பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்
இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே
குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்
இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்
போதையால் உன் வாழ்க்கைப்பாதைத் தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்
குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு
மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்
பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்
குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்
மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்
சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய்
தொ(ல்)லைக்காட்சி ! கவிஞர் இரா .இரவி
துண்டித்தது
உறவுகளின் உரையாடலை
தொ(ல்)லைக்காட்சி !
வளர்ச்சியை விட
வீழ்ச்சியே அதிகம்
தொ(ல்)லைக்காட்சி !
வன்மம் வளர்த்து
தொன்மம் அழித்தது
தொ(ல்)லைக்காட்சி !
பாலில் கலந்த
பாழும் நஞ்சு
தொ(ல்)லைக்காட்சி !
இல்லத்தரசிகளின்
போதைப்போருளானது
தொ(ல்)லைக்காட்சி !
வளர்த்துவிடும்
மாமியார் மருமகள் சண்டை
தொ(ல்)லைக்காட்சி !
கைவினைப் பொருட்களின்
உற்பத்தி அழித்தது
தொ(ல்)லைக்காட்சி !
நன்மையை விட
தீமையே அதிகம்
தொ(ல்)லைக்காட்சி !
பணம் பறித்து
மனம் சிதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி !
பழிக்குப் பழி வாங்கும்
உணர்ச்சிப் போதிக்கும்
தொ(ல்)லைக்காட்சி !
இரண்டு மனைவிகள்
தொடர் நாயகர்களுக்கு
தொ(ல்)லைக்காட்சி !
பண்பாட்டைச் சிதைத்து
குற்றம் வளர்க்கும்
தொ(ல்)லைக்காட்சி !
பிஞ்சு நெஞ்சங்களில்
நஞ்சு விதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி !
மழலை மொட்டுகள்
மனத்தைக் காயப்படுத்தும்
தொ(ல்)லைக்காட்சி !
நேரம் விழுங்கும்
சுறா மீன்
தொ(ல்)லைக்காட்சி !
விளம்பர இடைவேளைகளில்
பரிமாறப்படும் உணவுகள்
தொ(ல்)லைக்காட்சி !
ஆபாசம் காண்பித்து
புத்தியைச் சிதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி !
தமிழ்ப் பண்பாட்டை
தரை மட்டமாக்கும்
தொ(ல்)லைக்காட்சி !
குறுந்தகவல் வழி
பணம் பறிக்கும் திருடன்
தொ(ல்)லைக்காட்சி !
மூடி விடுங்கள்
நாடு உருப்படும்
தொ(ல்)லைக்காட்சி !
--
மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அதனை நீ குடிக்க
அது உன் உயிர் குடிக்கும்
மது !
இலவசமென்றாலும் வேண்டாம்
உனைக் கொல்லும் நஞ்சு
மது !
என்றைக்காவது என்றுத் தொடங்கி
என்றும் வேண்டும் என்றாகும்
மது !
நண்பனுக்காகக் குடிக்காதே
நண்பனைத் திருத்திடு
மது !
சிந்தனையைச் சிதைக்கும்
செயலினைத் தடுக்கும்
மது !
மதித்திட வாழ்ந்திடு
அவமதித்திட வாழாதே
மது !
இன்பத்தைக் கொண்டாட
துன்பம் எதற்கடா
மது !
சோகத்தை மறந்திட
மருந்தன்று
மது !
நன்மை ஏதுமில்லை
தீமை ஏராளம்
மது !
இழப்பு பணம் மட்டுமல்ல
மானமும்தான்
மது !
இல்லத்தரசிகளின்
முதல் எதிரி
மது !
திறமைகளை மறக்கடிக்கும்
ஆற்றலை அழித்துவிடும்
மது !
உடலுக்குக் கேடு மட்டுமல்ல
ஒழுக்கக் கேடு
மது !
வீழ்ந்தவர்கள் கோடி
வீழ்வது தெருக்கோடி
மது !
அடிமை ஆக்கும்
அடி மடியில் கை வைக்கும்
மது !
மனிதனை மிருகமாக்கும்
பகுத்தறிவை மழுங்கடிக்கும்
மது !
குற்றவாளியாக்கும்
கொலைகாரனாக்கும்
மது !
நிதானம் இழந்து
நிலத்தில் வீழ்த்தும்
மது !
வாய் மட்டுமல்ல
வாழ்க்கையும் நாறும்
மது !
உழைத்தப் பணத்தை
ஊதாரியாக்கும்
மது !
குடி குடியை மட்டுமல்ல
சமுதாயத்தையும் கெடுக்கும்
மது !
கேடியாக மாறுவாய்
ஜோடிஇன்றி வாடுவாய்
மது !
தொடவே தொடதே
தொட்டால் பற்றிக்கொள்ளும்
மது !
மட்டமாக்கும் உன்னை
மடையனாக்கும் உன்னை
மது !
கேளீக்கை என்று தொடங்கி
வாடிக்கையாகிவிடும்
மது !
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
இழுக்க இழுக்க இன்பமன்று
இழுக்க இழுக்கத் துன்பம்
சிகரெட் !
புண்பட்ட மனதைப் புகை விட்டு
புண்ணாக்காதே மேலும்
சிகரெட் !
விரைவில் சாம்பலாவாய்
உணர்த்தும் சாம்பல்
சிகரெட் !
புகையில் வளையம்
உனக்கான மலர்வளையம்
சிகரெட் !
நடிகரைப் பார்த்துப் புகைக்காதே
உன்னை நீயே புதைக்காதே
சிகரெட் !
உனக்கு மட்டுமல்ல
சுற்றி இருப்பவருக்கும் நோய்
சிகரெட் !
வெள்ளையன் கற்பித்த
வெள்ளை உயிர்க்கொல்லி
சிகரெட் !
எந்தப் பெண்ணும்
என்றும் விரும்பவில்லை
சிகரெட் !
தூக்கம் வர விழிக்க
தயாரிக்கவில்லை
சிகரெட் !
ஆதியில் இல்லை
பாதியில் வந்த தொல்லை
சிகரெட் !
தீங்குத் தரும் கங்கு
தீண்டாது ஒதுங்கு
சிகரெட் !
உடல் நலத்திற்குக் கேடு
உடனே சிந்தித்து விட்டுவிடு
சிகரெட் !
முயன்றால் முடியும்
முடிவெடு வேண்டாம் என்று
சிகரெட் !
--
என்ன கொடுமை - இது கவிஞர் இரா .இரவி
கிரிக்கெட் காண அனுமதிச் சீட்டு தாருங்கள்
கிட்னி தருகிறேன் என்கிறார் ரசிகர்
உயிர் காக்கும் உன்னதத்தை
கேளிக்கைக்காக தருகிறேன் எனும் அவலம்
கிட்னியைத் தேவைப்படும் நண்பனுக்கு
குடும்ப உறுப்பினர்க்குக் கொடுக்கலாம்
கிட்டினியை இட்லிக்கு வைக்கும்
சட்னியைப் போல தருகிறேன் என்கிறார்
ஊடகங்கள் போட்டிப் போட்டு
ஊதி ஊதிபெருசாக்கி விட்டனர் கிரிக்கெட்டை
கால்ப்பந்துக்கு ஈடாகுமா ? கிரிக்கெட்
கபடிக்கு ஈடாகுமா ? கிரிக்கெட்
குளிர்ப் பிரதேசத்து ஆடையை
வெப்பப்பூமியில் அணியும் மடமை
ஆவலுடன் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்
அனைவரையும் முட்டாள் ஆக்குகின்றனர்
முந்தைய விளையாட்டுகளில் நடந்த
சூதாட்டங்கள் அம்பலமாகி விட்டது
ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாத
ஒழுக்கம் கெட்ட கிரிக்கெட் வீரர்கள்
விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்
விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டை
இந்தியா பாகிஸ்தான் போராகப் பார்க்காதீர்கள்
பிரதமர்களும் முதல்வர்களும் கிரிக்கெட்டைப்
பார்க்க நேரில் செல்வதை நிறுத்துங்கள்
விளையாட்டை வெறியாக மாற்றாதீர்கள்
விரயம் செய்யாதீர்கள் பொன்னான நேரத்தை
–
--
ஹைக்கூ இரா .இரவி
ஆபாசம் இல்லாதது
அறிவு வளர்ப்பது
சீர்மிகு சிற்றிதழ்கள்
நடுப்பக்கம் நடிகை இல்லை
நல்ல தகவல்கள் உண்டு
சீர்மிகு சிற்றிதழ்கள்
வளரும்படைப்பாளிகளின்
வட்ட மேஜை
சீர்மிகு சிற்றிதழ்கள்
எண்ணிக்கை குறைவு
எண்ணங்கள் நிறைவு
சீர்மிகு சிற்றிதழ்கள்
பக்கங்கள் குறைவு
தாக்கங்கள் நிறைவு
சீர்மிகு சிற்றிதழ்கள்
இல்லத்திற்கே வரும்
கடைகளுக்கு வராது
சீர்மிகு சிற்றிதழ்கள்
புதியப் படைப்பாளிகளின்
அறிமுக மேடை
சீர்மிகு சிற்றிதழ்கள்
ஆயிரங்களை இழந்து
இலக்கியம் வளர்க்கும்
சீர்மிகு சிற்றிதழ்கள்
லட்சியம் உண்டு
லட்சங்கள் இல்லை
சீர்மிகு சிற்றிதழ்கள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஏட்டில் எழுத்தில் சரி
வீட்டில் நடைமுறையில் எப்போது ?
பெண் விடுதலை !
விபத்து
விழிப்புணர்வு விதைத்தது
குருதிக் கொடை !
கட்டைவிரல் கேட்ட
நாக்கை வெட்டினான்
இன்றைய ஏகலைவன் !
கைகளை விட
உயர்ந்தது
தன்னம்பிக்கை !
இன்றைய அமைச்சர்
நாளைய கைதி
நாட்டு நடப்பு !
பாசப் போராட்டம்
அழாத தந்தை அழுதார்
மகளுக்குத் திருமணம் !
பசி எடுக்க
மருந்துக் கேட்டார்
பணக்காரர் !
தூக்கம் வர
மாத்திரைக் கேட்டார்
பணக்காரர் !
உச்சரிப்புத் தவறினாலும்
கேட்க இனிமை
மழலை !
மக்கள் விருப்பம்
அனைத்து தொகுதியிலும்
இடைத் தேர்தல் !
விதைப்புமின்றி
அறுவடையுமின்றி
விலை நிலங்கள் !
உள்ளே சென்றனர்
மூக்கைப் பிடித்து
நவீன கழிப்பறை ?
குசியில் குடிமகன்கள்
கூடுதல் நேரம்
மதுக்கடை !
யாரும் விற்கவில்லை
தரமான
தங்கம் !
விளம்பர விரயம்
சேர்ந்துக் கொண்டது
பொருளின் விலையில் !
காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகின் முதல் மொழி தமிழ்
உலகின் முதல் ஊர் மதுரை
உலகப் புகழ் மகாத்மா ஆக்கிய மதுரை !
மதுரைக்கு வந்த காந்தியடிகளின் மனம்
ஏழைகளின் இன்னல் கண்டு இரங்கியது
ஆடைக்கு வழியின்றி வாடும் ஏழைகள் இருக்க
ஆடம்பர ஆடைகள் எனக்கு இனி எதற்கு ?
விலை உயர்ந்த ஆடைகளைக் களைந்து
கதராலான அறையாடைக்கு மாறினார்
காந்தியடிகளுக்கு மனமாற்றத்தை விதைத்தது மதுரை
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வரை
என்னுடைய ஆடை இதுதான் என்றார்
எவ்வளவோ பலர் சொல்லியும் ஏற்க மறுத்தார்
எடுத்த முடிவில் இறுதிவரை தீர்க்கமாக இருந்தார்
எங்கு சென்றபோதும் அரை ஆடையிலேயே சென்றார்
என்னைப் பற்றி எவர் என்ன ? நினைத்தாலும்
எனக்கு கவலை என்றும் இல்லை என்றார்
பொதுஉடைமை சிந்தனையை ஆடையால் விதைத்து
பூமிக்கு புரிய வைத்த புனிதர் காந்தியடிகள்
ஏழைகளின் துன்பம் கண்டு காந்தியடிகளின்
இரக்கத்தின் வெளிப்பாடே அரையாடை
மன்னரைப் பார்க்கச் சென்றபோதும் கூட
மதுரை அரையாடையிலேயே சென்றார்
கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்
கண்டவர் பேச்சுக்கு செவி மடுக்காமல் இருந்தார்
அரையாடை அணிந்த பக்கிரி என்று சிலர்
அறியாமல் பேசியதையும் பொருட்படுத்தாதிருந்தார்
குழந்தை ஒன்று தாத்தா சட்டை தரட்டுமா ? என்றது
கோடிச் சட்டைகள் தர முடியுமா ? உன்னால் என்றார்
இந்தியாவின் ஏழ்மையை மறந்துவிட்ட சுயநல
அரசியல்வாதிகளுக்கு ஏழ்மையை உணர்த்திட்டார்
ஏழ்மையின் குறியீடாகத் திகழ்ந்தார் காந்தியடிகள்
வறுமையின் ப்டிமமாகத் திகழ்ந்தார் காந்தியடிகள்
கதராடை அரையாடை ஆடை மட்டுமல்ல
சமத்துவ சமதர்ம சமுதாயத்தின் விதை அவை
உலகளாவிய அஞ்சல் தலைகளிலும் சிலைகளிலும்
உன்னத அரையாடைக் கோலத்திலேயே உள்ளார்
உலகம் உள்ளவரை ஒப்பற்ற மதுரை இருக்கும்
மதுரை உள்ளவரை மகாத்மா புகழ் நிலைக்கும் !
வண்ணத்துப் பூச்சி கவிஞர் இரா .இரவி
வானவில்
நகர்வலம்
வண்ணத்துப் பூச்சி !
உற்று நோக்கினால்
சுறுசுறுப்பைப் போதிக்கும்
வண்ணத்துப் பூச்சி !
கண்டால்
கவலைகள் பறந்தோடும்
வண்ணத்துப் பூச்சி !
பார்க்கப் பார்க்கப்
பரவசம் தரும்
வண்ணத்துப் பூச்சி !
மலரில் தேன் எடுத்து
மகரந்தச் சேர்க்கை
வண்ணத்துப் பூச்சி !
சிந்தனைச் சிறகடிக்க
உதவிடும் உன்னதம்
வண்ணத்துப் பூச்சி !
பறந்தாலும் அழகு
அமர்ந்தாலும் அழகு
வண்ணத்துப் பூச்சி !
காதலியை நினைவூட்டும்
காதல் பட்சி
வண்ணத்துப் பூச்சி !
ரசிப்பது தவறில்லை
பிடிப்பது தவறு
வண்ணத்துப் பூச்சி !
இயற்கையிலும் அழகு
செயற்கையிலும் அழகு
வண்ணத்துப் பூச்சி !
பட்டு மேனி
உணரலாம் தொடாமலே
வண்ணத்துப் பூச்சி !
ஆறு முதல் அறுபதும்
அனைவரும் விரும்பும்
வண்ணத்துப் பூச்சி !
காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி
உனைப்பார்க்கும்
நான் மட்டுமல்ல
எல்லா ஆண்கள் மட்டுமல்ல
எல்லாப் பெண்களும்
வியந்துப் போகிறார்கள்
இவ்வளவு அழகா ? என்று !
-----------------------------------------------
உனக்கானக் காத்திருப்பு சுகம்தான்
வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல
வழி மேல் மனதையும் வைத்துக் காத்திருக்கிறேன் !
தாமதமாகும் நிமிடங்களில்
உன் மீது கோபம் வந்தாலும்
வந்த கோபம் நீ வந்ததும்
பறந்து விடுகின்றன !
-----------------------------------------------
ஒற்றை ரோஜா தந்தேன்
திரும்பி விட்டாய் !
வாங்க மறுக்கிறாயோ ?
என்று நினைத்தேன்
வைத்து விடுங்க !
என்றாய் !
வைத்து விட்ட பின் ரோஜா
என்னைப்பார்த்து விரல் ஆட்டியது !
-----------------------------------------------
விழிகள் சந்தித்து
இதயங்கள் இடம் மாறி
பரிசுப் பொருட்கள்
பரிமாறியது காதலின் தொடக்கம் !
இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !
மாலை மாற்றத்திற்குப் பின்
உடல்கள் பரிமாற்றம் காதலின் உச்சம் !
-----------------------------------------------
ஓரக் கண்ணால்
ஒரே ஒரு பார்வைதான் பாவை பார்த்தால் !
என்னுள் பரவசம்
எண்ணிலடங்கா இன்பம் !
பார்வையின் சக்தி
பார்த்தவர்களுக்குதான் புரியும் !
கூர்ந்து பார்த்து
நங்கூரம் இட்டுச் சென்றாள் !
கப்பல் என நின்று விட்டேன்
நான் அதே இடத்தில !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
முயன்றால் முடியாதது ஏதுமில்லை கவிஞர் இரா .இரவி
முயன்றால் முடியாதது ஏதுமில்லை
சூரியன் கூட உன் கரங்களுக்குக் கீழே
மனதில் உறுதி இருந்தால் நாம்
மாமலைகளையும் தாண்டலாம்
அச்சத்தை அப்புறப்படுத்து !
அறிவை அகலப்படுத்து !
வெற்றியை உறுதிப்படுத்து !
தோல்வியை தூரத் துரத்து !
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
பிறந்ததும் கற்றது
நீச்சல்
மீன் !
இன்பம் துன்பம்
உணர்த்தியது
சாலை !
குடை விரித்து
மழை நின்றதும்
காளான் !
குறைந்தது
இறப்பு விகிதம்
ஆன்மா கதை உப்புமா !
பயன்பட்டது மனிதனுக்கு
பறவையின் சிறகு
காது குடைய !
நேர்மறையாளனுக்கு
இரண்டும் ஒன்று
வெற்றி தோல்வி !
வருந்தியது
வெள்ளியன்று வீதியில்
உடைந்த தேங்காய் !
மூடநம்பிக்கை
சக்கரத்தில்
வீணடிக்கும் எலுமிச்சை !
யாருக்கும்
சுடவில்லை
தீச்சட்டி !
கண்டுபிடிக்காமல்
இருந்திருக்கலாமோ ?
மின்சாரம் !
உலகின் முதன்மை
உச்சரிக்க இனிமை
தமிழ் !
அர்த்தமற்றது
உருவ பலம்
யானையின் காதில் எறும்பு !
பறவைகளின் எச்சம்
மரங்கலானது மிச்சம்
இயற்கையின் உச்சம் !
அமர்வதும் அழகு
பறப்பதும் அழகு
பட்டாம் பூச்சி !
உணரந்தவர்கள் மட்டும்
உணரும் உன்னது உணர்வு
காதல் !
பொன்முட்டை வாத்து
அறுத்த கதையாக
மரம் வெட்டி விறகு !
விலங்கை முறி
சிறகை விரி
இளம் விதவை !
அழுவதில்லை
சிறைபடுத்தப்பட்டும்
தொட்டி மீன்கள் !
பயமுறுத்தியது
கர்ஜனை
சிங்கம் !
தேவையில்லை
தண்ணீர்
செயற்கைச் செடிகள் !
ஏமாளித் தொண்டன்
கோமாளித் தலைவன்
அரசியல் !
சுதந்திர இந்தியாவில்
சுதந்திரக் கொள்ளை
அரசியல் !
ரணமானது மனசு
புயல் நிவாரணத்திலும்
கையூட்டு !
அப்போது எப்போது என்பது தெரிந்து
இப்போது எப்போது என்பது தெரியாது
தொடரும் மின் தடை !
விழித்த
விதை
விருட்சம்
தூங்கிய
விதை
குப்பை
மிகவும் ஒல்லி
பெயர்
குண்டுமலை
பார்த்தீனியமாகப்
பெருகியது
ஊழல்
விலைவாசி குறையுமா ?
விடியல் விளையுமா ?
ஏக்கத்தில் ஏழைகள்
இங்கிலாந்துக்காரனின்
இனிய சுவடுகள்
கல் கட்டிடங்கள்
அங்கிகரிக்கப்பட்ட
சூதாட்டம்
பங்குச்சந்தை
துன்ப இருள்
அகற்றும் விளக்கு
திருக்குறள்
அறநெறிப்படுத்தி
அன்பைப் போதிக்கும்
ஆத்திச்சூடி
பெண்ணுரிமையின்
முதல் குரல்
கண்ணகி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஏட்டில் எழுத்தில் சரி
வீட்டில் நடைமுறையில் எப்போது ?
பெண் விடுதலை !
விபத்து
விழிப்புணர்வு விதைத்தது
குருதிக் கொடை !
கட்டைவிரல் கேட்ட
நாக்கை வெட்டினான்
இன்றைய ஏகலைவன் !
கைகளை விட
உயர்ந்தது
தன்னம்பிக்கை !
இன்றைய அமைச்சர்
நாளைய கைதி
நாட்டு நடப்பு !
பாசப் போராட்டம்
அழாத தந்தை அழுதார்
மகளுக்குத் திருமணம் !
பசி எடுக்க
மருந்துக் கேட்டார்
பணக்காரர் !
தூக்கம் வர
மாத்திரைக் கேட்டார்
பணக்காரர் !
உச்சரிப்புத் தவறினாலும்
கேட்க இனிமை
மழலை !
மக்கள் விருப்பம்
அனைத்து தொகுதியிலும்
இடைத் தேர்தல் !
விதைப்புமின்றி
அறுவடையுமின்றி
விலை நிலங்கள் !
உள்ளே சென்றனர்
மூக்கைப் பிடித்து
நவீன கழிப்பறை ?
குசியில் குடிமகன்கள்
கூடுதல் நேரம்
மதுக்கடை !
யாரும் விற்கவில்லை
தரமான
தங்கம் !
விளம்பர விரயம்
சேர்ந்துக் கொண்டது
பொருளின் விலையில் !
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மரணம் இல்லை
மக்களுக்காகப் போராடிய
போராளிகளுக்கு !
செலவற்ற
வரவு
புன்னகை !
வலிமை வாய்ந்தது
சிறந்த ஆயுதம்
அன்பு !
கண்டுபிடிக்கவில்லை
மருந்து
காதல் நோய் !
எங்கும் இல்லை
தமிழகம் தவிர
பச்சைக் குத்தும் தொண்டர்கள் !
ஓய்விலும் ஓய்வின்றி
உழைத்திடும் பெண்கள்
மாத விலக்கு !
வென்றவர்களுக்குப் புரியவில்லை
தோற்றவர்களுக்குப் புரிந்தது
காதலின் அருமை !
ஏற்றத்தாழ்வு
உழைப்பதில்
கடிகார முட்கள்
நேரம் பார்த்து தோல்வி
நேரம் பார்க்காது வெற்றி
மூடநம்பிக்கை !
ஒரே மாதிரி
ஒருவரும் இல்லை
மனிதர்கள் !
அதிசயம்
ஆனால் உண்மை
உடலின் இயக்கம் !
தேவை சிக்கனம்
பயன்பாட்டில் இக்கணம்
மின்சாரம் !
அழகுதான்
கழுதை
குட்டியில் !
ஊழல்
உடன் பிறந்த நோய்
அரசியல்வாதிகள் !
இக்கரைக்கு
அக்கரைப் பச்சை
அரசியல்வாதிகள் !
மூலதனம்
பொய் வாய்
அரசியல் !
ஊழல் ஒழிக்க வந்தவருக்கு
பண விருது
ஊழல் ?
மக்கள் மறக்கவில்லை
இருவரையும்
காந்தி !கோட்சே !
பெரிய மனிதர்களின்
சின்னப் புத்தி
ஊழல் !
தன்னலம் மறந்து அன்று
தன்னலம் ஒன்றே இன்று
அரசியல் !
இறங்காதோ ?
ஏக்கத்தில் ஏழைகள்
விலைவாசி !
காதல் - ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அன்றும் இன்றும்
என்றும் இனிக்கும்
காதல்
உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்
கற்காலம் முதல்
கணிப்பொறி காலம் வரை
காதல்
செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்
கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்
காவியத்திலும்
கணினியுகத்திலும்
இனிக்கும் காதல்
விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்
இரசாயண மாற்றம்
ரசனைக்குரிய மாற்றம்
காதல்
விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்
சிந்தையில் ஒரு மின்னல்
உருவாக்கும் ஒரு மின்சாரம்
காதல்
வானில் மிதக்கலாம்
உலகை மறக்கலாம்
காதல்
பெற்றோரை விட
பெரிதாகத் தோன்றும்
காதல்
தமிழா தமிழா சொல் கவிஞர் இரா .இரவி
தமிழா தமிழா சொல் தினமும் நீ
தரணியில் பேசுவது தமிழா சொல்
உலகின் முதல் மொழி தமிழ் உணர்
உலக மொழிகளின் தாய் தமிழ்
ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை
உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை
நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும்
நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை
அழகு தமிழில் அம்மா இருக்கையில்
ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை
அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில்
ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை
தமிழோடு பிற மொழி கலந்துப் பேசுவது பிழை
தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு
ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து
ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை
தமிழன்தான் தமிழ் பேசும்போது
தமிங்கிலம் பேசி உளறுகின்றான்
இரு கரம் குவித்து வணக்கம் சொல்
ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து
–
யாரும் தடுக்காதீர்கள் – கவிஞர் இரா .இரவி
கொள்ளையடித்தப் பணம்
கொடுத்துவிட்டுப் போகட்டும்
மலையளவு அடித்தக் கொள்ளையில்
மடுவளவுதான் தருகிறார்கள்
நெற்றி வியர்வைத் தன்னை
நிலத்தில் சிந்தி சம்பாதிதத்தன்று
குடிமக்களிடமிருந்து அடித்தப் பணம்
குடிமக்களுக்கேப் போகட்டும்
தேர்தல் நிதி என்று நியமனங்களில்
திரட்டியப் பணம் செலவாகட்டும்
தேர்தல் செலவிற்கு என்று இடமாற்றங்களில்
திரட்டியப் பணம் செலவாகட்டும்
தேர்தல் அறிவித்ததும் ஏழைகள் மகிழ்ந்தனர்
ஒரு வாரமாவது பசிப் போக்கலாம் என்று
யார் கொடுத்தாலும் வாங்கட்டும்
யாரும் தடுக்காதீர்கள் தயவுசெய்து
வறுமையில் பலர் வாடுவது உண்மை
வயிற்றுப் பசிப் போக்கட்டும்
வாழ்வாதாரங்களைச் சிதைத்துப் பெற்ற
வளமான செல்வங்களை செலவழிக்கட்டும்
கொடுப்பதை வாங்கிக் கொண்டு
கொடுத்தவர்களுக்குப் போடாதீர்கள்
மனதிற்கு நல்லவர் என்று தெரிந்தால்
மனதார வாக்களியுங்கள்
யாருமே நல்லவர் இல்லை என்றால்
யாருக்கும் இல்லை என்பதைப் பதியுங்கள்
ஹைக்கூ – கவிஞர் இரா .இரவி
பூகம்பம் வரும் முன்
அறியும் தவளை
மனிதன் ?
சேமிக்கும் எறும்பு
மழைக் காலத்திற்கு
மனிதன் ?
நன்றி மறக்காது
வாலாட்டும் நாய்
மனிதன் ?
பசிக்காமல் உண்பதில்லை
விலங்குகள்
மனிதன் ?
பிறந்ததும் உடன்
நீந்திடும் மீன்
மனிதன் ?
அடைகாக்கும் காகம்
குயிலின் முட்டையையும்
மனிதன் ?
காடுகள் வளரக்
காரணம் பறவைகள்
மனிதன் ?
சீண்டாமல் எவரையும்
கொத்தாது பாம்பு
மனிதன் ?
ஓடிடச் சலிப்பதில்லை
மான்
மனிதன் ?
அசைவம் உண்ணாது
அசைவம் ஆகின்றது
ஆடு
கொள்ளையர்களின்
கூடாரமானது
கல்வி நிறுவனங்கள்
–
காந்தியடிகள் ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி
அகிம்சையை உணர்த்திய
அறிவு ஜீவி
காந்தியடிகள்
ரகசியம் இல்லாத
அதிசய மாமனிதர்
காந்தியடிகள்
கொண்ட கொள்கையில்
குன்றென நின்றவர்
காந்தியடிகள்
திருக்குறள் வழி
வாழ்ந்த நல்லவர்
காந்தியடிகள்
சுட்ட கொடியவனையும்
மன்னித்த மாமனிதர்
காந்தியடிகள்
உலகம் வியக்கும்
ஒப்பில்லாத் தலைவர்
காந்தியடிகள்
வன்முறை தீர்வன்று
வையகத்திற்கு உணர்த்தியவர்
காந்தியடிகள்
நெஞ்சுரத்தின் சிகரம்
நேர்மையின் அகரம்
காந்தியடிகள்
அரை ஆடை அணிந்த
பொதுஉடைமைவாதி
காந்தியடிகள்
வெள்ளையரின்
சிம்ம சொப்பனம்
காந்தியடிகள்
மனித உரிமைகளின்
முதல் குரல்
காந்தியடிகள்
அமைதியின் சின்னம்
அடக்கத்தின் திரு உருவம்
காந்தியடிகள்
அன்றே உரைத்தவர்
உலக மயத்தின் தீமையை
காந்தியடிகள்
மனிதருள் மாணிக்கம்
மாமனிதருக்கு இலக்கணம்
காந்தியடிகள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
பார்க்காதவர்கள் பாருங்கள்
தேவதை
என்னவள்
நடந்து சென்றாள்
கடந்து சென்றாள்
கடத்திச்சென்றாள்
சக்தியில்
மின்சாரத்தை வென்றது
அவள் கண்சாரம்
வேண்டாம் வண்ணம்
இயற்கையாகவே சிகப்பு
அவள் இதழ்கள்
உச்சரிப்பை விட
அசைவே அழகு
அவள் இதழ்கள்
செவிகளை விட
விழிகளுக்கு இன்பம்
அவள்
ஆயிரம்
அர்த்தம் உண்டு
மவுனத்திற்கு
வருகிறது
பெரு மூச்சு
அவளை நினைத்தாலே
இன்று நினைத்தாலும்
மனதில் மகிழ்ச்சி
அவள் புன்னகை
கால்தடம் அழித்தது
கடல் அலை
உள்ளத்தின் தடம் ?
முகம் சிரித்தாலும்
அகம் அழுகின்றது
காதல் தோல்வி
சோகமான முடிவுகள்
சுகமான சுமைகள்
காதல் தோல்வி
அருமை அறியாதவனிடம்
அகப்பட்டால்
வீணையும் விறகுதான்
நடிகர்களின் ஆசை
நடிகைகளையும் தொற்றியது
வாரிசு அறிமுகம்
ஒரே வரிசையில்
தமிழ் அறிஞர்களும், ஆபாச நடிகைகளும்
கலைமாமணி பட்டமளிப்பில்
வில் அம்பு
விளம்பரமோ ?
அவள் விழிகள்
இன்றும் காணலாம்
டைனோசர்கள்
அரசியல்வாதிகள்
சுருங்கச்சொல்லி
விளங்கவைத்தல்
ஹைக்கூ
வாடிக்கையானது
காக்காக் குளியல்
பெரு நகரங்களில்
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
ஒழியவில்லை வறுமை
உலகெலாம் பரவியது
தேமதுரத் தமிழோசை அல்ல
ஊழல் ஓசை
பெருகப் பெருக
பெருகுது வன்முறை
மக்கள்தொகை
பலதாரம் முடித்தவர்
பண்பாட்டுப் பேச்சு
ஒருவனுக்கு ஒருத்தி
சிலைகளில் தெரிந்தது
ஆடை அணிகலனும்
சிற்பியின் சிறப்பும்
கூட்டம் கூடுவதில்லை
இலக்கிய விழாக்களுக்கு
தொலைகாட்சிகளால்
நிஜத்தை வென்றது நிழல்
நாடகத்தை வென்றது
திரைப்படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஆட்சியில் ஆள்பவர்களை விட
மனதை ஆண்டவர்கள்
மரித்த பின்னும் வாழ்கின்றனர்
சிற்பி வீட்டு
படிக்கல்லானாலும்
சிலையாவதில்லை
கோடிகள் கொள்ளை
அடித்தாலும் முடிவு
தற்கொலை கொலை
பொம்மை உடைந்த போது
மனசும் உடைந்தது
குழந்தைக்கு
தடியால் அடித்து
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான்
அனைவரும் விரும்புவது
அதிகாரம் அல்ல
அன்பு
நிலம் விற்றுப்
பெற்றப் பணத்தில்
அப்பாவின் முகம்
கால்களைத் தொட்டு
வணங்கிச் சென்றன
அலைகள்
சிற்பி இல்லை
சிற்பம் உண்டு
நிலையானது எது ?
போட்டியில் வென்றது
புற அழகை
அக அழகு
நான் கடவுள் என்பவன்
மனிதன் அல்ல
விலங்கு
அவளுக்கும் உண்டு
மனசு மதித்திடு
மனைவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
வானிலிருந்து வரும்
திரவத்தங்கம்
மழை
இரண்டும் சமம்
மலை மண்
மழைக்கு
கழுவும் நீரே
அழுக்கு
சுத்தம் ?
ஓய்வுக்கு ஒய்வு
தந்தால்
சாதிக்கலாம்
சாதனைக்கு
முதல் எதிரி
சோம்பேறித்தனம்
தண்ணீரைப் பெட்ரோலாக்கி
வித்தைக் காட்டியவரிடம்
வித்தைக் காட்டியது இயற்கை
எலி மீது யானை
எப்படிச் சாத்தியம்
பிள்ளையார்
உருண்டது
உலோகக் குண்டென
தாமரையிலைத் தண்ணீர்
கருவறை உள்ள
நடமாடும் கடவுள்
தாய்
பல் பிடுங்கிய
பாம்பாக
தோற்ற அரசியல்வாதி
இன்றும் சொல்கின்றது
மன்னனின் பெயரை
அரண்மனை
பெருமூச்சு விட்டாள்
தங்கக்கோபுரம் பார்த்து
முதிர்கன்னி
கல்லுக்குள் தேரை
பாறைக்கு மேல் செடி
மனிதனுக்குள் மனிதநேயம் ?
–
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மன்னராட்சியையும் வென்றார்கள்
அரசியல்வாதிகள்
குடும்ப அரசியிலில்
மனிதனால் படைக்கப்பட்டு
மனிதனையே படுத்துகின்றது
பணம்
எங்கு ?முறையிடுவது
ஆண் காவலர்களால்
பெண் காவலர்களுக்குத் தொல்லை
அவள் தந்த
சங்கு பயன்பட்டது
இறுதி ஊர்வலத்திற்கு
சவுக்குமரம்
பார்க்கையில்
அவள் நினைவு
தமிழைக் காத்ததில்
பெரும்பங்குப் பெற்றன
பனை மரங்கள்
தமிழை அழிப்பதில்
பெரும்பங்குப் பெற்றன
தொலைக்காட்சிகள்
மூடநம்பிக்கையால்
முற்றுப் பெற்றது
சேதுகால்வாய்த் திட்டம்
இடித்ததால்
இடிந்தது மனிதநேயம்
பாபர் மசூதி
எட்டாவது அதிசயம்
ஊழலற்ற
அரசியல்வாதி
மூச்சுக்காற்று வெப்பமானது
ஏழை முதிர்கன்னிக்கு
தங்கத்தின் விலையால்
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
கருவறையில் உயிர்ப்பு
கல்லறையில் துயில்வு
இடைப்பட்டதே வாழ்க்கை
எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்தது
குழந்தை
எல்லோரும் அழ
அமைதியாக இருந்தது
பிணம்
நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்
பெயருக்கு காதலிக்கவில்லை
பெயரையே காதலித்தேன்
மலரும் நினைவுகள்
அதிக வெளிச்சமும்
ஒருவகையில் இருட்டுத்தான்
எதுவும் தெரியாது
கூந்தல் மட்டுமல்ல
வாயும் நீளம்தான்
அவளுக்கு
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மூன்று சீட்டு சண்டை
முச்சந்திலும்
அரசியலிலும்
ஆடிய ஆட்டம்
நொடியில் முடிந்தது
அரசியல்
நேற்று இருந்தார்
இன்று இருப்பதில்லை
அரசியல்
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்துவிடும்
அரசியல்
எண்ணங்களால் அன்று
எண்ணிக்கைகளால் இன்று
கூட்டணி
விரைவில் காதல்
விரைவில் திருமணம்
விரைவில் மணவிலக்கு
வேண்டாம் இனி
கொலைகாரனாக்கியது
பேருந்து தினம்
கிடைக்கவில்லை
எங்கு தேடியும்
போதிமரம்
நல்ல கூட்டம்
பித்தலாட்டப் பயிற்சி
சோதிடப் பயிற்சி
புரட்டு அங்கிகாரம்
பல்கலைக்கழகப்பாடத்தில்
சோதிடம்
வேடந்தாங்கல் செல்லாத
இரும்புப்பறவை
விமானம்
நேசித்தால் இனிக்கும்
யோசித்தால் கசக்கும்
வாழ்க்கை
சுறுசுறுப்பின் சின்னம்
பறக்கச் சலிப்பதில்லை
தேனீ
ஹைக்கூ இரா .இரவி
வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி
விமர்சனங்களுக்கு
செவி மடுக்கவில்லை
தவளை
இராமாயண மாற்றம்
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்
மலர்களோடு பேசினேன்
அவளின் தாமதத்திற்கு
நன்றி
பாராட்டினார்கள்
சிலையையும் சிற்பியையும்
சோகத்தில் உளி
ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி
பொருத்தமாக இல்லை
எயிட்ஸ் விளம்பரத்தில்
நடிகர்
கூவலின் இனிமை
இனப்பெருக்கத்தில் இல்லை
குயில்
திருந்தாத மக்கள்( மாக்கள் )
அமோக வசூல்
சாமியார் ? தரிசனம்
முக்காலமும் எக்காலமும்
அழியாத ஒன்று
காதல்
வேகமாக விற்கின்றது
நோய் பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்
உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மாக்
விதைத்த நிலத்தில்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கூடுதலாக உண்டு
தாய்மண் பாசம்
புலம் பெயர்ந்தவர்களுக்கு
வெந்நீர் ஊற்றியபோதும்
வளரும் செடிகள்
புலம் பெயர்ந்தவர்கள்
பயன்பட்டது
சாக்கடைநீரும்
தீ அணைக்க
கூடலின் அருமை
உணர்த்தியது
ஊடல்
ஈடில்லா வேகம்
பின்னோக்கிப் பார்ப்பதில்
மலரும் நினைவுகள்
உடலின் மச்சமென
நீங்காத நினைவு
காதல்
இனிமை இனிமை
சின்னத் தீண்டல்
சிந்தையில் கிளர்ச்சி
கோலமிட்டுச் சென்றது
சாலையில்
தண்ணீர் லாரி
பிணமானபின்னும்
காசு ஆசை
நெற்றியில் காசு
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா
வந்துவிட்டது
சேலையிலும் சைவம்
சைவப்பட்டு
கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்
அயல்நாட்டில் ஊறுகாய்
நம்நாட்டில் சாப்பாடு
தொலைக்காட்சி
மழை வந்ததும்
உடன் வந்தது
மண்வாசைனை
ஹைக்கூ கவிதை
பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி
பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்
வானத்திலும் வறுமை
கிழிசல்கள்
நட்சத்திரங்கள்
புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்
உயரத்தில்
பஞ்சுமிட்டாய்
வான் மேகம்
டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி
ஆயத்தம்
பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி
சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்
கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…
அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு
வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்
கோடை மழை
குதூகலப்பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்
வானம்.
கட்சி தாவியது
அந்திவானம்.
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி
மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ
என்னவளே உன்
முகத்தைக் காட்டு…
முகம் பார்க்கவேண்டும்
ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்
கிருமி தாக்கியது
உயிரற்ற பொருளையும்
கணினியில் வைரஸ்
மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்…
நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்
கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு
நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்
இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்
பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி
உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி
நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி
தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி
தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி
நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?
மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி
கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு
அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்
சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்
ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை
சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு
அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்
மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்
ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்
காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி
உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்
பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை
கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி
இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்
உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை
இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்
ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி
தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை
ஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் தோல்வி
இந்தியா
அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு
தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்
இலஞ்சம் ஒழிப்பவரே
இலஞ்சம் வாங்கி கைது
காவல்துறை
ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்
அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்
நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்
பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்
வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்
போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்
குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்
வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்
கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா
சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்
ஹைக்கூ இரா .இரவி
வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது மரம்
பூ உதிர்த்து
மழை நின்ற பின்னும்
மழை
மரத்திலிருந்து
இயற்கையில் செயற்கை
சிகைத் திருத்தமென
செடித் திருத்தம்
பொறாமை கொள்ளவில்லை
மரத்தைப் பார்த்து
புற்கள்
வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மஹால்
பார்ப்பதில்லை
காதல் காட்சி
அவளையே ஞாபகப்படுத்துவதால்
நீளமான கூந்தல்
எங்கு பார்த்தாலும்
அவள் நினைவு
பெரிய சோகத்தையும்
நொடியில் அழிக்கும்
அவள் புன்னகை
மறக்க நினைத்தாலும்
முடிவதே இல்லை
அவள் முகம்
நல்ல கவிதைகள்
நூலாகுமுன் இரையானது
கரையானுக்கு
புவி ஈர்ப்பு விசை நியூட்டன்
விழி ஈர்ப்பு விசை
காதலர்கள்
மதங்களை விட
மிகவும் உயர்வானது
மனிதம்
பிரிவால் துடி துடித்தது
அறுபட்ட
பல்லியின் வால்
சிந்தைகளை
சிதைத்து
கேளிக்கைகள்
ஹைக்கூ இரா .இரவி
பொய் மட்டுமே மூலதனம்
அமோக வருமானம்
அரசியல்
தொட்டில் முதல் சுடுகாடு வரை
தொடரும் கொடிய நோய்
லஞ்சம்
வறுமை ஒழியவில்லை
வளங்கள் இருந்தும்
கருப்புப்பணம்
ஏழை மேலும்ஏழையானது போதும்
விரைவில் வேண்டும்
மாற்றம்
பிரதமரால் அன்று
கோடீஸ்வரர்களால் இன்று
மந்திரி பதவி
அளவு சுவை
இரண்டும் பெரிது
அவள் இதழ்கள்
இதழ்கள் பேசவில்லை
விழிகள் பேசின
மொழி பெயர்தது மனசு
ஏமாளிகள் உள்ளவரை
எமாற்றுவோருக்குப் பஞ்சமில்லை
சாமியார்கள்
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
அனைத்தும் அறிவோம் என்றவர்
அறியவில்லை கேமிரா
சாமியார்
உபதேசம்
பிரம்மச்சரியம்
சல்லாபத்துடன்
கோடிகள் குவிந்தும்
பட்டினியாகவே
கடவுள்
தங்கத்தின் ஆசை
விதிவிலக்கல்ல
கடவுள்களும்
வயது கூடக் கூட
அழகும் கூடியது
அவளுக்கு
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கடை மூடியதால்
குடி மகன்கள் வருத்தம்
காந்தி ஜெயந்தி
அசைவப் பிரியர்களுக்கு வருத்தம்
ஞாயிறன்று வந்ததால்
காந்தி ஜெயந்தி
தேர்வு எழுதியதில்
ஆள் மாறாட்டம்
கல்வி அமைச்சர் ?
காயம் இல்லை
மரத்தில் இருந்து விழுந்தும்
இலை
அரசியல்வாதிகளின்
கேலிக் கூத்தானது
உண்ணாவிரதம்
மரமானதற்கு
வருந்தியது
சிலுவை மரம்
தந்திடுவீர்
தானத்தில் சிறந்தது
உடல் தானம்
அசலை வென்றது
நகல்
செயற்கைச் செடி
உடை வெள்ளை
உள்ளம் கொள்ளை
அரசியல்வாதிகள்
கண்டுபிடியுங்கள்
வேண்டுகோள்
விழிகளில் மின்சாரம்
–
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கண்களுக்கு விருந்து
காட்சிப் பெட்டகம்
இயற்கை
உழைக்காத மலருக்கு
வியர்வையா ?
பனித்துளி
பூமியிலிருந்து வானம்
வானத்திலிருந்து பூமி
தண்ணீர் சுற்றுலா மழை
உச்சரிப்பைவிட
உயரந்தது
மௌனம்
ஒழியவேண்டும்
வரங்களுக்கான
தவம்
விரல்களின்றித்
தீண்டியது
தென்றல்
உற்றுக்கேளுங்கள்
பேசும்
மலர்
மரமும் கெட்டது
மனிதனைப் பார்த்து
கல்லானது
ஒரு வீட்டில் ஒரு நாளில்
இத்தனை பாலித்தீன்
நாட்டில் ?
யாருக்கு வாக்களிக்க
தேர்ந்து எடுக்க முடியவில்லை
குழப்பத்தில் மக்கள்
ருசிப்பதில் திகட்டலாம்
ரசிப்பதில் திகட்டுவதில்லை
அழகு
கிடைக்காததற்காக ஏங்குவது
கிடைத்ததை உணராதது
பலரின் வாழ்க்கை
கற்பனைதான்
கல்வெட்டானது
தேவதை
ஏழு வண்ணங்களில்
எண்ணம் கவரும் வில்
வானவில்
பிரிந்து
பின் சந்தித்தால்
சுவை அதிகம்
நேற்றைய நவீனம்
இன்றைய நவீனமன்று
நாட்டு நடப்பு
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
பெயர் பொறிப்பவர்கள்
உணருவதில்லை
மரத்தின் வலி
அடிபடும்போது வலிக்கவில்லை
கொலை நடந்த போது வலித்தது
கத்திக்கு
உச்சரித்தாலே
உதடுகள் முத்தமிடும்
முத்தம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
பதவி ஊசலாடுகிறது
சிதம்பர ரகசியம்
பொதுஉடைமை
உணர்த்தியது
செம்பருதி பூ
தங்கக்கூண்டு வேண்டாம்
தங்க கூண்டு போதும்
காதலர்களுக்கு
இயற்கையின்
இனிய கொடைகள்
வண்ணங்கள்
மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள்
இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை
ஈடு இணை இல்லை
இன்பத்தின் எல்லை
காதல் உணர்வு
அளவிற்கு அதிகமானால்
ஆபத்து
பணமும் காற்றும்
யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
சந்திக்கும்போது
பிரிந்த காதலர்கள்
அன்று பாசத்தால்
இன்று பணத்தால்
உறவுகள்
புலியைக்கண்ட மானாக
வேட்பாளரைக் கண்ட
வாக்காளர்
எய்ட்ஸ் ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி
பண்பாடுப் பயிற்றுவிக்கும்
பயமுறுத்தல் நோய்
எய்ட்ஸ்
ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
இருபாலருக்கும்
வராது எய்ட்ஸ்
மருந்து இல்லை
மரணம் உறுதி
எய்ட்ஸ்
உயிரை உருக்கும்
உடலைக் கெடுக்கும்
எய்ட்ஸ்
கவனம் தேவை
குருதி பெறுகையில்
எய்ட்ஸ்
எச்சரிக்கை
ஊசி போடுகையில்
எய்ட்ஸ்
வரும் முன் காப்போம்
உயிர்க் கொல்லிநோய்
உணர்ந்திடுவோம்
சபலத்தின் சம்பளம்
சலனத்தின் தண்டனை
எய்ட்ஸ்
சில நிமிட மகிழ்வால்
பல வருடங்கள் இழப்பு
எய்ட்ஸ்
வெறுக்க வேண்டாம்
நேசிப்போம் நண்பராக
எய்ட்ஸ் நோயாளிகளை
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கோடுகளின்
கவிதை
ஓவியம்
சொற்களின்
ஓவியம்
கவிதை
மதிக்கப்படுவதில்லை
திறமைகள் இருந்தும்
குடிகாரர்கள்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
அரசு ஊழியருக்கு
வணிகராக ஆசை
ஊழல் மறைக்க
ஊழல் செய்யும்
அரசியல்வாதிகள்
பழமையானாலும்
விறகாவதில்லை
வீணை
ஜடப் பொருள்தான்
மீட்டத் தெரியாதவர்களுக்கு
வீணை
அம்புகள் படாத வில்
விழி அம்புகள் அட்ட வில்
வானவில்
புகழ் அடையவில்லை
பிறந்த பூமியில்
புத்தன்
ஒருபோதும் மறப்பதில்லை
உணவு இட்டவர்களை ‘
நாய்கள்
வெடி வெடிப்பதில்லை
சில கிராமங்களில்
பறவைப்பாசம்
மனிதனை விட
அறிவாளிகள் விலங்குகள்
சுனாமியில் தப்பித்தன
அறிவுறுத்த வேண்டி உள்ளது
மனிதனாக வாழ
மனிதனை
அடிக்கரும்பு
அதிக இனிப்பு
மண்ணுக்கு அருகில்
மேய்ப்பன் இன்றியே
இல்லம் வந்தன
ஆடுகள்
நிலத்தில் பிறந்து நீரில் வாழ்ந்து
நிலத்தில் முடியும்
படகு
மனிதனின் கால் பட்டதால்
களங்கமான
நிலவு
இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி
முள்ளிவாய்க்காலில் படுகொலைகள் புரிந்து
முள் என தைத்தான் தமிழர் உள்ளங்களில் !
அனாதைஇல்லம் ஆலயம் பள்ளி மருத்துவமனை
அனைத்தின் மீதும் வானிலிருந்து குண்டு பொழிந்தான !
முதியவர் பண்கள் குழந்தைகள் அனைவரையும்
மூர்க்கத்தனமாக கொன்று குவித்தான் !
பாதுக்காப்பு வளையம் என்று சொல்லி மக்களைக் குவித்து
பாதுகாப்பாக ராணுவம் நின்று கொன்றுக் குவித்தான் !
மனித உரிமை மீறல்கள் அத்து மீறல்கள் நடந்தது
மனிதாபிமானமற்ற படு கொலைகள் நடத்தினான் !
கொத்துக் குண்டுகளை அப்பாவி மக்கள் மீது
கொத்துக் கொத்தாக வீசிக் கொன்றான் !
தடை செய்யப்பட்ட ரசாயணக் குண்டுகளை
தடையின்றிப் பயன்படுத்தி சாகடித்தான் !
கத்தியால் குத்திக் கிழித்து சித்திரவதைச் செய்து
கடைசியில் உயிர் பறித்தான் கொடூரன் !
பச்சிளம் பாலகன் கண் முன்னே அவனது
பாதுகாவலர்களைக் கொன்று பாலகனையும் கொன்றான் !
செத்தப் பிணங்கள் மீதும் எத்தி மிதித்து
சாவை உறுதி செய்து சந்தோசப் பட்டான் !
விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று
வீதியில் சுட்டு வீழ்த்திச் சென்றான் !
அப்பாவி மக்களை அழித்துக் கொன்றான்
அடப் பாவி அவன் இதயம் இல்லாதவன் !
கவிதை எழுதினோம் கட்டுரை எழுதினோம்
கண்டனம் செய்தோம் கண்டுகொள்ள வில்லை அன்று !
சேனல் நான்கு தொலைக்காட்சி உலகின்
செவிட்டை நீக்கி கேட்க, பார்க்க வைத்தது !
தமிழ் இனத்தை அழித்த கொலைபாதகன் ராஜபட்சே
தரணியில் இன்னும் வாழ்வது தமிழருக்கு இழுக்கு !
பாவத்தின் பரிசாகப் புற்று நோய் வந்துவிட்டது
பாவி அவன் நோயால் சாகக் கூடாது !
அய் .நா. மன்றமே முன் நின்று உடன்
அவனை சாகும் வரை தூக்கிலிடுங்கள் !
எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் கூட்டாக
எம்மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றவன் !
ஜெயித்து விட்டதாக கொக்கரித்தக் கொடியவனுக்கு
ஜெனிவா தீர்மானத்தில் தொடங்கியது தோல்வி !
இங்கு தமிழன் கறி கிடைக்கும் என்ற சிங்களனோடு
இனி தமிழன் இணைந்து வாழ முடியாது !
பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது
சேர்ந்து வாழ்வது இனி சாத்தியமற்றது !
இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள்
ஈழத்தமிழரையும் சிங்களரையும் தனித்தனியே வாழ விடுங்கள் !
--
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி
இமயம் தொட முடியாது என்றார்கள்
இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் !
நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள்
நிலவிற்கு சென்று வந்தான் சாதனையாளன் !
ஆழ்கடலில் நீந்த முடியாது என்றார்கள்
ஆழ்கடலில் நீந்தி வந்தான் சாதனையாளன் !
மனிதன் பறக்க முடியாது என்றார்கள்
மனிதன் பறந்தான் விமானத்தில் !
முடியாது என்பது மூடத்தனம்
முடியும் என்பதே மூலதனம் !
முடியாது என்பதை முடித்துக் காட்டு
மண்ணில் நீயே எடுத்துக்காட்டு !
நடக்காது என்பது அவ நம்பிக்கை
நடக்கும் என்பதே தன்னம்பிக்கை !
கிடைக்காது என்பது கோழைத்தனம்
கிடைக்கும் என்பதே நல்ல குணம் !
காலம் பொன் போன்றது அல்ல அல்ல
காலம் பொன்னை விட மேலானது !
பொன்னை வாங்கலாம் பணத்தால்
காலத்தை வாங்க இயலாது பணத்தால் !
ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்து
ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதே !
வாய்ப்பு வருமென்று காத்திருக்காதே
வாய்ப்பை உடன் நீயே உருவாக்கு !
உந்தன் முதல் எதிரி சோம்பேறித்தனம்
உன்னிடமிருந்து விரட்டிவிடு அவனை !
உந்தன் நல்ல நண்பன் சுறுசுறுப்பு
உன்னிடமே வைத்திடு அவனை !
நாளை என்று நாளைக் கடத்தாதே
இன்றே என்றே இனிதே முடித்திடு !
முயற்சி மூச்சென எப்போதும் இருக்கட்டும்
தளர்ச்சி தள்ளியே எப்போதும் இருக்கட்டும்
வெற்றியை நீ தேடிச் செல்ல வேண்டாம்
வெற்றி உனைத் தேடி வாசல் சேரும்
மண்ணில் பிறந்தது வாழ்வதற்கு மட்டுமல்ல
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ஒத்துழைப்பு !
ஒத்துழைப்பு ! கவிஞர் இரா .இரவி
தொழிலாளிகள் ஒத்துழைப்பு
இல்லை என்றால்
முதலாளிகள் இல்லை !
----------------------------------
சக பணியாளர்களின்
சக பங்களிப்பு
ஒத்துழைப்பு
---------------------------------
வெற்றிக்கான வித்து
சாதனைக்கான உரம்
எல்லோருக்குமான வரம்
ஒத்துழைப்பு !
--------------------------------------
போட்டி குணம் விடுத்து
இசைந்து இசைக்கும் இனிய இன்னிசை
ஒத்துழைப்பு !
------------------------------------------
இரு கைகள் இணைந்தாலே
ஓசை வரும்
கூ ட்டாக உழைத்தாலே
வெற்றி வரும்
ஒத்துழைப்பு !
ஒரு விதையின் வினா கவிஞர் இரா .இரவி
பறவை ஒன்று பழத்தைத் தின்று
கொட்டையை விட்டுச் சென்றது !
மண்ணில் விழுந்த நான்
மழை நீரால் துளிர்த்து வளர்ந்தேன் !
நான் வளரக் காரணமான மழை
வரக் காரணமானேன் நான் !
உனக்கு நிற்க நிழல் தந்தேன்
நீ புசிக்க நல்ல பழங்கள் தந்தேன் !
நீ சுவாசிக்கத் தூயக் காற்றுத் தந்தேன்
உந்தன் நோய் தீர்க்கும் மருந்து தந்தேன் !
பறவைகளும் வந்து அமர்ந்து
பழம் தின்று பறந்து சென்றன !
நன்றி மறந்து என்னை பணத்திற்காக
நீ விலைப் பேசி விற்று விட்டாய் !
என்னை வாங்கியவன் வருகிறான்
இரக்கமின்றி வெட்டக் கோடாரியோடு !
என்னை விற்ற உன்னிடம் ஒரு கேள்வி
என்னை விட்டுச் சென்றது ஒரு பறவை !
என்னை நட்டவன் நீ இல்லை
என்னை விற்க உனக்கேது உரிமை !
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
தமிழர்களை விட
சிங்களர் மீதே பாசம்
இந்தியா !
காற்றில் பறந்தது
இந்தியாவின் மானம்
இராணுவத்தில் ஊழல் !
ஒழிக்க முடியவில்லை ஊழல்
ஒழிக்கலாமா ?
ஊழல்வாதிகளை !
காமராஜ் கக்கன்
காலத்தோடு முடிந்தது
அரசியலில் தூய்மை !
வாரிசு அரசியல்
ஒழிக்க வழி
வாரிசில்லாத் தலைவர் !
தோழி ஆதிக்கம்
ஒழிக்க வழி
தோழி இல்லாத் தலைவி !
மாற்றினர்
தலைநகரை துக்ளக்
புத்தாண்டை அரசியல்வாதிகள் !
போதித்து
அமைதி
புத்தரின் சிலை !
புத்தரை வணங்கியும்
புத்திக் கெட்ட
இலங்கை !
இலைகள் உதிர்ந்தும்
நம்பிக்கையோடு மரம்
மழை வரும் !
நீர் உயர
தானும் உயந்தது
தாமரை !
வழக்கொழிந்தது
கிராமங்களில்
குலவைச் சத்தம் !
நிலத்தையும்
மலடாக்கியது
மலட்டு விதை !
தனியாக செல்கையில்
துணைக்கு வந்தது
நிலா !
மரத்தை வாங்கியவன்
பிய்த்து எறிந்தான்
பார்வையின் கூட்டை !
பதட்டம் இல்லை
பற்றி எரிந்தும்
உள்ளது காப்பீடு !
மாதவம் செய்து
மங்கையாகப் பிறந்து
குப்பைத் தொட்டியில் !
பணக்காரகளுக்கு அருகில்
ஏழைகளுக்கு தூரத்தில்
கடவுள் தரிசனம் !
இன்றும் வாழும்
கொடிய அரக்கன்
தீண்டாமை !
அத்திப் பூத்தாற்ப் போல
நல்லவர்கள்
காவல் துறையில் !
சும்மா இருப்பதாகஅறிமுகப் படுத்தினார்கள்
அனைத்து வேலை செய்யும்
அம்மாவை !
இல்லம் அலுவலகம்
இரண்டிலும் வேலை
பெண்கள் !
கேட்டுப் பாருங்கள்
கவலை மறக்கலாம்
இசை !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கோலம் ! கவிஞர் இரா .இரவி
கோலம் போடும் உந்தன்
கோலம் காண !
அதிக நேரம் தூங்கும் நான்
அதிகாலை எழுந்தேன் !
உதய சூரியனை
உன்னால் பார்த்தேன் !
பனி மலரையும்
பார்த்து ரசித்தேன் !
நீயும் வந்தாய் !
கதவு திறந்தாய் !
கூட்டித் தள்ளினாய் !
வாசல் தெளித்தாய் !
புள்ளி வைத்தாய் !
கோலம் போட்டாய் !
கோலம் பார்த்தேன் !
கல்வெட்டாய்ப் பதிந்தது !
கன்னி உன் நினைவு !
அவள் ! கவிஞர் இரா .இரவி
வெள்ளையும் இல்லை
கருப்பும் இல்லை
உயரமும் இல்லை
குள்ளமும் இல்லை
பேரழகியும் இல்லை
அசிங்கமும் இல்லை
அறிவாளியும் இல்லை
முட்டாளும் இல்லை
ஆர்ப்பட்டமும் இல்லை
அமைதியும் இல்லை
அவளுக்கு உவமை
அவனியில் இல்லை
புன்னகை செய்தால்
பூரிக்கும் உள்ளம்
மூளையில் நுழைந்து
மூலையில் அமர்ந்தாள் !
காதலர்கள் கவிஞர் இரா .இரவி
ஊடல் காரணமாக
இருவரும் இனி
சந்திக்க மாட்டோம்
என முடிவு எடுத்து விட்டு
இனி எப்போது சந்திப்போம்
என்று சந்திப்பைப் பற்றியே
சிந்தித்து ஏங்குபவர்கள் !
நினைவுச் சிலுவை கவிஞர் இரா .இரவி
பசுமரத்து ஆணியாக
பாவையின் நினைவுகள்
கிறித்தவர்கள் வணங்கும்
ஏசுவிற்கு ஒரே ஒரு முறைதான் சிலுவை
எனக்கு உன்னை நினைக்கும்
ஒவ்வொரு முறையும் நினைவுச் சிலுவை
ஏசு உயிர்த்து எழுந்ததாகச் சொல்வார்கள்
எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை !
தொடர்கதையானது ! கவிஞர் இரா .இரவி
அவளைப் பார்த்தால்
போதும் என்று நினைத்தேன்
பார்த்தேன் !
அவளிடம் பேசினால்
போதும் என்று நினைத்தேன்
பேசினேன் !
அவளைத் தீண்டினால்
போதும் என்று நினைத்தேன்
தீண்டினேன் !
பார்த்தல் பேசல்
தீண்டல்
தொடர்கதையானது !
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ஒத்துழைப்பு !
ஒத்துழைப்பு ! கவிஞர் இரா .இரவி
தொழிலாளிகள் ஒத்துழைப்பு
இல்லை என்றால்
முதலாளிகள் இல்லை !
----------------------------------
சக பணியாளர்களின்
சக பங்களிப்பு
ஒத்துழைப்பு
---------------------------------
வெற்றிக்கான வித்து
சாதனைக்கான உரம்
எல்லோருக்குமான வரம்
ஒத்துழைப்பு !
--------------------------------------
போட்டி குணம் விடுத்து
இசைந்து இசைக்கும் இனிய இன்னிசை
ஒத்துழைப்பு !
------------------------------------------
இரு கைகள் இணைந்தாலே
ஓசை வரும்
கூ ட்டாக உழைத்தாலே
வெற்றி வரும்
ஒத்துழைப்பு !
நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி
கோடிப் பணத்தை விட
உயர்ந்தவர்கள்
நண்பர்கள் !
சொத்துக்களை விட
சிறந்தவர்கள்
நண்பர்கள் !
துன்பம் என்றால்
திரண்டு விடுவார்கள்
நண்பர்கள் !
துயரத்தின் போது
தோள் கொடுப்பவர்கள்
நண்பர்கள் !
எதுவும் செய்வார்கள்
எதையும் இழப்பார்கள்
நண்பர்கள் !
குடத்து விளக்கான நம்மை
குன்றத்தில் வைப்பார்கள்
நண்பர்கள் !
கூட்டமாகக் கூடி
கூத்துக் கட்டுவார்கள்
நண்பர்கள் !
நேரம் செல்வதை
மறக்கடிப்பவர்கள்
நண்பர்கள் !
புண்பட்ட மனதிற்கு
மருந்தாவர்கள்
நண்பர்கள் !
வாழ்வின் இருள் நீங்க
வழிகாட்டி ஒளி தருவார்கள்
நண்பர்கள் !
தவறான பாதை சென்றால்
தட்டிக் கேட்பவர்கள்
நண்பர்கள் !
எதிரிகளை அடக்குவார்கள்
பகைவர்களை பயப்படுத்துவார்கள்
நண்பர்கள் !
ஏணியாக இருப்பார்கள்
தோணியாக வருவார்கள்
நண்பர்கள் !
காதலுக்கு துணை நிற்பார்கள்
காதலி கரம் பிடிக்க உதவுவார்கள்
நண்பர்கள் !
உயிருக்கு உயிரானவர்கள்
என்றும் மறக்கமுடியாதவர்கள்
நண்பர்கள் !
--
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
சூரியனால் எடுத்ததை
சுத்தமாக்கி பொழிந்தது
வானம் !
எங்கு விழுவோம்
என்பது தெரியாது
மழைத்துளி !
நினைவூட்டியது
சூரியனை
சூரியகாந்தி !
கரிசல் காட்டில்
வெண்மை மலர்ச்சி
பருத்திப்பூ !
ரசிக்க
சுவாசிக்க
மரம் !
மொழிக்கு முந்தியது
ஓசை
இசை !
இசைகளின்
தாய்
தமிழிசை !
மெய்பிக்கப்பட்ட உண்மை
சேய்கள் மற்ற மொழிகள்
மொழிகளின் தாய் தமிழ் !
இலக்கண இலக்கியங்களின்
இனிய சுரங்கம்
தமிழ் !
லட்சங்களைத் தாண்டும்
சொற்களின் மொத்தம்
தமிழ் !
தமிழருக்குப் புரியவில்லை
அன்னியருக்குப் புரிந்தது
முதல் மொழி தமிழ் !
அழகு எல்லாம் அழகு அன்று ! கவிஞர் இரா .இரவி .
அழகு எல்லாம் அழகு அன்று
அழகற்றது எல்லாம் அழகற்றது அன்று !
அழகு அழகற்றது என்பது எல்லாம்
அனைவரும் கற்பித்த கற்பிதங்களே !
அழகை ஆராய்ந்து நோக்கினால்
அழகில் உள்ள குறை தெரியும் !
அழகற்றதை ஆராய்ந்து நோக்கினால்
அழகற்றதில் உள்ள அழகு தெரியும் !
வெள்ளைதான் அழகு என்று அன்றே
வெள்ளை அறிக்கை வாசித்ததின் விளைவு !
கருப்பு அழகற்றது என்று அன்றே
கருப்பசாமியும் சொன்னதன் விளைவு !
அவனுக்கு அழகானது எனக்கு அழகற்றது
எனக்கு அழகானது அவனக்கு அழகற்றது !
அழகினால் ஆபத்தும் உண்டு
அழகற்றதால் ஆபத்து இல்லை !
கிடைக்காத அழகிற்கு ஏங்காதே
கிடைத்ததில் அழகை காண் !
அழகு ஆளுக்கு ஆள் வேறுபடும்
அழகு என்றும் நிரந்தரம் அன்று !
அழகு என்பது நிறத்தில் இல்லை
அழகு என்பது குணத்தில் உள்ளது
மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி
எழுதியபடி வாழ்ந்தவன்
வாழ்ந்தபடி எழுதியவன்
மகாகவி பாரதி !
புதுமைக்கும் மரபுக்கும்
பாலம் அமைத்தவன்
மகாகவி பாரதி !
விடுதலை விதையை
விருட்சமாக வளர்த்தவன்
மகாகவி பாரதி !
மற்றவரை மதித்தவன்
சுயமரியாதை மிக்கவன்
மகாகவி பாரதி !
வறுமையிலும் செம்மை
ஏழ்மையிலும் நேர்மை
மகாகவி பாரதி !
பா ரதம் செலுத்திய
பாக்களின் சாரதி
மகாகவி பாரதி !
பெண் விடுதலைக்கு
போர்முரசு கொட்டியவன்
மகாகவி பாரதி !
வாழ்வில் ஆசைப்பட்டவன்
பேராசைப்படாதவன்
மகாகவி பாரதி !
மூடப் பழக்கங்களுக்கு
மூடு விழா நடத்தியவன்
மகாகவி பாரதி !
பகுத்தறிவைப் பயன்படுத்தி
பாடல்கள் புனைந்தவன்
மகாகவி பாரதி !
அழியாத பாடல்கள்
அகிலத்திற்கு வழங்கியவன்
மகாகவி பாரதி !
வெள்ளையர்களை விரட்டிய
காரணிகளில் ஒன்றானவன்
மகாகவி பாரதி !
வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது
பாடல்களின் காலம் பல நூற்றாண்டு
மகாகவி பாரதி !
மொழிகள் பல பயின்றவன்
தமிழே சிறப்பு அறிவித்தவன்
மகாகவி பாரதி !
வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி
வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை !
வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு விடுதலை !
பன்னாட்டு ராணுவத்தால் படை தொடுத்தவனோடு
பகை மறந்து வாழ்வது இனி சாத்தியமில்லை !
நாட்டு மக்களையே காட்டுமிராண்டித்தனமாக அழித்த
நயவஞ்சகனோடு இணக்கம் இனி சாத்தியமில்லை !
மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற கொடியவனை
மகாத்துமா இருந்தால் கூட மன்னிக்க மாட்டார் !
கொன்றது போக எஞ்சியோரை சிறைப்பிடித்து
முள்வேலியில் இட்டவனோடு வாழ்வது சாத்தியமில்லை !
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடியது
சிங்களப்படை ஈழத்தில் நடத்திய படுகொலைகள் !
நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிந்தவனை
நாட்டின் அதிபராக மதிக்க மனம் வருமா ?
வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும்
வஞ்சகமாகக் சுட்டவனை மன்னிக்க முடியுமா ?
மூப்பென்றும் பிஞ்சென்றும் பெண்னென்றும் பாராமல்
மூர்க்கமாக அழித்தவனை மதிக்க முடியுமா ?
தமிழ் இனத்தையே அழித்தது இலங்கைப் படை
தன் மக்களையே ஒழித்தது இலங்கை அரசுப்படை !
கொலை பாதகம் புரிந்த கொடியவர்களுடன்
கூடிவாழுங்கள் என்று போதிக்கும் மூடர்கள் !
இனவெறி பிடித்த சிங்களப்படை மிருகங்களோடு
இணைந்து வாழ்வது இனி இயலவே இயலாது !
இறையாண்மை என்ற பூச்சாண்டி காட்டி
இலங்கை இரண்டாகாது என்கின்றனர் !
அய் .நா. மன்றமே மவுனம் போதும் !
அநியாயம் புரிந்தவனுக்கு தண்டனை கொடு !
தெற்கு சூடான் உதயமானது தனி நாடாக !
தமிழ் ஈழமும் உதயமாகட்டும் தனி நாடாக !
ஈழக்கொடி பறக்க வேண்டும் அய் .நா. மன்றத்தில்
ஈழத்தூதுவர் அலுவலகம் திறக்க வேண்டும் இந்தியாவில் !
இலங்கையை உடன் இரண்டாக்கு ஈழத் தமிழர்களை ஒன்றாக்கு !
இனியும் சிங்களரோடு ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை !
சிங்களரும் தமிழரும் இனி இணைந்து வாழவே முடியாது !
சிந்தித்துப் பார்த்து பிரித்து வைப்பதே இருவருக்கும் நன்மை
ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லுவது வெட்டிப்பேச்சு
ஒருபோதும் இனி ஒத்துவராது உணருங்கள் !
ஈழத்தில் குடி புகுந்த சிங்களரை வெளியேற்றுங்கள்
ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களை குடி அமர்த்துங்கள் !
இரண்டுபட்ட இலங்கை என்று ஆக்குவதே
இரண்டு இனத்திற்கும் பாதுகாப்பு அறிந்திடுங்கள் !
ஈழம் ஈழத் தமிழருக்கு உடன் கிடைத்தாக வேண்டும்
ஈழத்தில் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் !
உலகத் தமிழர்களே உரக்கக் குரல் கொடுங்கள்
உதயமாகட்டும் ஈழத்தில் தமிழரின் தனி நாடு !
--
அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய் மணி ! கவிஞர் இரா .இரவி !
நல்லவாடு கிராமத்தில் பிறந்த நல்லவன் நீ !
நல்ல குடும்பத்தைத் தவிக்க விட்டு சென்றாய் நீ !
ஈழத் தமிழருக்காக இன்னுயிரை ஈந்தாய் !
ஈழத்தில் விடியல் உறுதியாய் விடியும் !
தனித்தமிழ் ஈழம் விரைவில் மலரும் !
தமிழ்ஈழத் தெருவில் உன் பெயர் இடம்பெறும் !
அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா !
இனி ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை !
ஆதரிக்காமல் எதிர்க்க நினைத்தால் !
ஆட்சியை உடன் இழக்க நேரிடும் !
ஆட்சியைக் காப்பாற்ற எதுவும் செய்வார்கள் !
ஆட்சிக்காக இதுவும் செய்வார்கள் !
ஆட்சியால்தான் கோடிகள் சுருட்ட முடியும் !
ஆட்சியில் இறுதிவரை நீடிக்க நினைப்பார்கள் !
ஒப்பற்ற உயிரை நீத்தாய் இனிய மணி !
உலகத்தமிழர்களின் உள்ளங்களில் நீ !
மெய்க்காப்பாளர்களைக் கொன்று விட்டு !
மெய்யாகவே பச்சிளம் பாலகனைக் கொன்றான் !
கொடியவனுக்கு அடித்தாய் சாவு மணி !
கொடியோன் தப்பிக்க வழி இல்லை இனி !
புத்தமதத்திற்கு களங்கம் கற்பிக்கிறான் !
புத்தப்பிட்சுகளும் ஊமையாகி விட்டனர் !
நீதி கேட்ட கண்ணகியால் பாண்டியன் உயிர் நீத்தான் !
நீதிமன்றத்தின் தண்டனையால் கயவன் உயிர் நீப்பான் !
கொலை பாதகன் உயிரை எடுக்க நாள் குறிப்போம் !
குற்றவாளிக்கூண்டில் ஏற்றி கதை முடிப்போம் !
அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய் மணி !
அன்பான வேண்டுகோள் யாரும் இறக்க வேண்டாம் இனி !
நிலா ! கவிஞர் இரா .இரவி !
மீன் கடித்தும்
சிதையவில்லை
குளத்து நிலா !
சிறுவனின் கல்
உடைந்தது சில நொடி
குளத்து நிலா !
குளத்தில்
முகம் பார்த்தது
நிலா !
தமிழரின்
கண்டுபிடிப்பு
ஈரமுள்ள நிலா !
பார்க்கப் பரவசம்
பார்த்தால் பிரமாண்டம்
நிலா !
கிராமத்தின் தெரு விளக்கு
மாதத்தின் நாள் கணக்கு
நிலா !
ஆம்ஷ்ட்ராங் கால் பட்டது
அனைவரின் கண் பட்டது
நிலா !
தேய்ந்து வளர்ந்து மாயம் காட்டி
துன்பம் இன்பம் கற்பித்தது
நிலா !
தொலை தூரத்தில் இருந்தாலும்
நெஞ்சத்தின் அருகில்
நிலா !
கவிஞர்களின் கருப்பொருள்
கவிதைகளின் அட்சயப்பாத்திரம்
நிலா !
கண்டு ரசிக்க
கவலை நீக்கும்
நிலா !
சூரிய ஒளியை
உண்டு உமிழும்
நிலா !
உலகில் உவமை
இல்லா உயர்வு
நிலா !
வன்முறை போதிப்பு ! கவிஞர் இரா .இரவி !
நீதி போதனை வகுப்புகள் இப்போது !
நிறுத்தப்பட்டன நமது பள்ளிகளில் !
வீட்டின் அறைக்குள் தொலைக்காட்சியில் !
வன்முறை போதனை வரைமுறையின்றி !
வீட்டிற்குள் சத்தம் வந்தது ! கவனித்தேன் !
அந்தக் காரைத் திருடு அவனைச் சுடு !
நகைக்கடைக்குள் போ ! நகையைத் திருடு !
நங்கையை அடி ! பணத்தை எடு !
கணினியில் விளையாடிய சிறுவர்கள் !
கண் இமைக்க மறந்து கத்திய கத்தல் !
பிஞ்சு உள்ளங்களில் !வன்முறை நஞ்சு !
பிள்ளைகளின் புத்தியைச் சிதைத்தது !
விளையாட்டில் விளையாட்டாகப் பழகும் !
வன்முறை வினையாகி விடுகின்றது !
ஆசிரியரின் பாதம் பணிந்த மாணவன் அன்று !
ஆசிரியரைக் கொலை புரியும் மாணவன் இன்று !
.
சாதிக்கப் பிறந்தவள் பெண் ! கவிஞர் .இரா இரவி
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு
ஆற்றல் அதிகம் ஆய்வின் முடிவு !
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து !
தன்னம்பிக்கையை மனதில் நிறுத்து !
பெண் பலவீனமானவள் அல்ல !
பெண் பலமானவள் உணர்ந்திடு !
வாய்ப்புகள் வழங்கினால் பெண்
வானத்திலும் வலம் வருவாள் !
கல்பனா சாவ்லா சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் நிகழ்த்தினார்கள் சாதனை !
இன்னிசையிலும் சாதிப்பாள் பெண் !
எட்டுத்திசையிலும் சாதிப்பாள் பெண் !
அடக்க நினைத்தால் அடங்க மறு !
ஆதிக்கம் செய்தால் ஆதிக்கம் அழி !
போகப் பொருள் அல்ல பெண் ! பொங்கி எழு !
போற்ற வேண்டியவள் பெண் ! உணர்த்திடு !
அடுப்படியில் முடங்கி விடாதே பெண்ணே !
அளப்பரிய திறமைகள் உன் முன்னே !
சாதம் சமைக்கத்தான் பெண் என்பது மடமை !
சாதிக்க முயன்றிடு பெண்ணே உன் கடமை !
தொடர்களுக்கு அடிமையாகி காலம் கழிக்காதே !
தொடர் செயலால் உயர்ந்த சிகரம் தொட்டிடு !
ஆண்களால்முடியாததும் முடியும் பெண்களால்!
ஆணைவிடப் பெண்ணே உயர்வு செயல்களால்!
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை !
முயன்றிடு பெண்ணே முடியும் உன்னால் !
அகிலம் போற்றும் அன்னை தெரசா !
அன்பு செலுத்திய இமயம் தெரசா !
அனைத்துத்துறையிலும் சாதிக்க முடியும் !
அன்பை மதித்தால் எதுவும் முடியும் !
வாழ்வில் போராடியது போதும் !
வாழ்வை வசந்தமாக்கு ! வெளுக்கும் கிழக்கு !
இன்னல் அடைந்தது போதும் !
இனி இன்பம் நிரந்தரமாகட்டும் !
சோதனைக்கு அஞ்சாதே சோகம் வேண்டாம் !
சாதிக்கப்பிறந்தவள் என்ற எண்ணம் வேண்டும் !
சராசரியாக வாழ்ந்தது போதும் பெண்ணே !
சரிநிகர் சமமாக வாழ வேண்டும் பெண்ணே !
மரப்பாச்சி ! கவிஞர் இரா .இரவி
.தரணிக்கு உணர்த்தியது
தச்சனின் திறமையை
மரப்பாச்சி !
பெரியவர்களுக்கும் பயன்பட்டது
விற்றுப் பிழைக்க
மரப்பாச்சி !
வெட்டியதற்கு வருந்தாமல்
மகிழ்ந்தது மரம்
மரப்பாச்சி !
பெண் இனத்தின்
பிரதிநிதியாக
மரப்பாச்சி !
உடையவே இல்லை
பலமுறை விழுந்தும்
மரப்பாச்சி !
உண்ணாவிட்டாலும் சோறு
ஊட்டி மகிழ்ந்தது குழந்தை
மரப்பாச்சி !
பொம்மை அல்ல
உயிர்த்தோழி குழந்தைக்கு
மரப்பாச்சி !
அம்மணம் பிடிக்காமல்
ஆடை அணிவித்தது குழந்தை
மரப்பாச்சி !
பேசாவிட்டாலும் பேசி
மகிழ்ந்தது குழந்தை
மரப்பாச்சி !
கோபம் வந்தால்
ஆயுதமானது குழந்தைக்கு
மரப்பாச்சி !
தாயுக்கு உதவியது
குழந்தைக்கு சோறு ஊட்ட
மரப்பாச்சி !
உரசிப் போட
நீக்கியது தலைவலி
மரப்பாச்சி !
உற்று நோக்கினால்
உயிருள்ளதாகத் தெரியும்
மரப்பாச்சி !
அக்றிணை அல்ல
உயர்திணை
மரப்பாச்சி !
இயற்கை ஹைக்கூ . கவிஞர் இரா .இரவி !
நடந்தேன் நடந்தது
நின்றேன் நின்றது
நிலவு !
உழைக்காமலே வியர்வை
மலர்களின் மீது
பனித்துளி !
பூமியில் இருந்து வானம்
வானில் இருந்து பூமி
மழையின் சுற்றுலா !
ஓய்வு அறியாதவன்
சோம்பல் முறிக்காதவன்
ஆதவன் !
கண்டதும் மலர்ந்தன
சென்றதும் வாடின
மலர்கள் !
மணக்கும்
தொட்ட கை
மதுரை மல்லிகை !
முற்றிலும் உண்மை
மலர்களின் ராஜா
ரோஜா !
வெட்ட வெட்ட
பொய்த்து மழை
மரம் !
ஒன்று இசைக்கு
மற்றொன்று பாடைக்கு
மூங்கில் !
ஒன்று சிலை
மற்றொன்று படிக்கல்
மலைக்கல் !
கழிவு நீர் குடித்து
இளநீர் தந்தது
தென்னை !
ஈழம் ! கவிஞர் இரா இரவி !
பாலகனைக் கொன்றான்
பாவங்கள் புரிந்தான்
தண்டனை உறுதி !
சிறுவனிடம் வீரம் காட்டிய
சின்னப் புத்திக்காரன்
சிங்களப்பகைவன் !
தமிழினம் அழித்தான்
அழிவைத் தேடினான்
இலங்கைக் கொடூரன் !
இறந்த உயிர்கள் எத்தனை ?
கணக்கு இல்லை
அவன் கணக்கு முடியும் !
முள்வேலி தந்தவனுக்கு
சிறைவேலி தரும் நாள்
தமிழர் திருநாள் !
பலநாள் கொலைகாரன்
ஒரு நாள் அகப்பட்டான்
இலங்கை அரக்கன் !
எல்லா நேரமும் எல்லோரையும்
ஏமாற்ற முடியாது
மாட்டி விட்டான் !
அப்பாவிகளைக் கொன்ற
அடப் பாவி அவன்
ஹிட்லரிலும் கொடியவன் !
நாட்டு மக்கள் மீதே
போர் தொடுத்த
போர் குற்றவாளி !
முதியவர்கள் பெண்கள் குழந்தைகள்
மூர்க்கமாகக் கொன்றக் கொடியவன்
எண்ணுகிறான் நாளை !
விடுதலை கேட்டவர்களின்
வாழ்க்கையை முடித்தான்
சிங்கள வெறியன் !
கோயில்களைத் தகர்த்தவன்
திருப்பதி கோயில் வந்தான்
மனித மிருகம் !
இன்றும் உண்டு காட்டுமிராண்டி
எடுத்துக்காட்டு
இலங்கை வெறியன் !
பகையை முடிப்பான்
தமிழ் ஈழம் ஆள்வான்
எம் தமிழன் !
.
தூக்குத்தண்டனை ! கவிஞர் இரா .இரவி !
ஒழிக்காமல் வளர்த்தது
தீவிரவாதம்
தூக்குத்தண்டனை
கொலை செய்தவனை
கொலை செய்தது அரசு
தூக்குத்தண்டனை
கணினி யுகத்தில்
காட்டுமிராண்டித்தனம்
தூக்குத்தண்டனை
வல்லரசின் ஆசைக்கு
இணங்கி
தூக்குத்தண்டனை
இரகசியத்தை அழிக்க
விரைவாக நிறைவேற்றம்
தூக்குத்தண்டனை!
ஒழித்து விட்டன
வளர்ந்த நாடுகள்
தூக்குத்தண்டனை !
விரும்புவதில்லை
மனிதாபிமானிகள்
தூக்குத்தண்டனை !
மனிதாபிமானமற்ற
மடச்செயல்
தூக்குத்தண்டனை !
நடைமுறையுள்ள நாட்டில்
பெருகியது வன்முறை
தூக்குத்தண்டனை !
பகுத்தறிவைப் பயன்படுத்தினால்
நீக்கிடலாம்
தூக்குத்தண்டனை !
அரசியல் லாபம்
அடைந்திட வழங்குவது
தூக்குத்தண்டனை !
.பழிக்குப்பழி வாங்கும்
விலங்கு குணம்
தூக்குத்தண்டனை !
நாகரீக உலகில்
நாகரீகமற்ற செயல்
தூக்குத்தண்டனை !
அடுத்தவருக்கு என்றால் வேடிக்கை
தனக்கு என்றால் வேதனை
தூக்குத்தண்டனை !
நிரபரதிக்கும் வழங்கிய
வரலாறு உண்டு
தூக்குத்தண்டனை !
வாருங்கள் மனிதர்களே
தூக்கிலிடுவோம்
தூக்குத்தண்டனை !
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !
வராதே ! வராதே ! மானம் இருந்தால் வராதே !
கொலைகாரனுக்கு கோயிலில் என்ன வேலை ?
எத்தனை கோயில் சென்றாலும் மன்னிப்பு இல்லை !
இனத்தையே அழித்த கொடூரனே ! கொடியவனே !
இந்தியாவிற்கு எதற்கடா வருகிறாய் !
இளித்தவாயன் அல்ல எம் தமிழன் !
ரோசம் , மானம், சூடு சொரணை இருந்தால் !
மோசக்காரனே வராதே இங்கு !
பயணத்தை ரத்து செய் ! ரத்து செய் !
பயத்தோடு இலங்கையிலேயே இரு !
எத்தனை முறை அவமானப் பட்டும்
இன்னும் திருந்த மறுப்பதேன் ?
மனிதனாய் பிறந்தால் ரோசம் வேண்டும் .நீ
மனிதனாக இருந்தால்தானே ரோசம் இருக்கும் !
உன்னைப் போல ஈனப் பிறவி
உலகில் யாரும் இல்லை !
இலங்கையில் உள்ள கோயிலைஎல்லாம்
இடித்து விட்டு இந்திய கோயிலுக்கு ஏன் வருகிறாய் ?
புத்தர் உன்முகத்தில் காரி உமிழ்ந்த காரணத்தால்
பித்தம் தெளிய உலக பயணமாடா ?
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் !
மரியாதை இழந்து அவமானப்பட வேண்டாம் !
ரத்து செய் ! ரத்து செய் ! இந்திய வருகையை
ரத்து செய் !
மாமதுரை போற்றுவோம் ! மாமதுரை போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !
கோயில்நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை !
குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை !
சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !
சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு மதுரை !
உலகின் முதல் ஊர் கடம்பவன மதுரை !
உலகின் முதல் மனிதன் வாழ்ந்த மதுரை !
தமிழ்மாதப் பெயர் வீதிகள் கொண்ட மதுரை !
தமிழ் வளர்க்க சங்கம் அமைத்த மதுரை !
வானுயர்ந்த கோபுரங்கள் வரவேற்கும் மதுரை !
வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் மதுரை !
திருக்குறள் அரங்கேற்றம் நடந்திட்ட மதுரை !
திருவள்ளுவருக்கு வான்புகழ் தந்திட்ட மதுரை !
திருமலை நாயக்கர் மகால் உள்ள மதுரை !
திரும்பிய இடமெல்லாம் கலை நயம் மிக்க மதுரை !
மங்கம்மா ராணியின் அரண்மனை உள்ள மதுரை !
மகாத்மாகாந்தியின் அருங்காட்சியகம் உள்ள மதுரை !
பிரமாண்ட வண்டியூர் தெப்பம் உள்ள மதுரை !
பிரமிக்க வைக்கும் திருவிழாக்கள் நடக்கும் மதுரை !
கலைகளின் தாயகமாக விளங்கிடும் மதுரை !
காளைகளின் ஜல்லிக்கட்டு நடக்கும் மதுரை !
சமணர்களின் சிற்பங்கள் உள்ள மதுரை !
சைவர்களின் மடங்கள் உள்ள மதுரை !
சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் மதுரை !
சுந்தரம் மிக்க இயற்கைகள் நிறைந்த மதுரை !
மல்லிகையை ஏற்றுமதி செய்திடும் மதுரை !
மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் மதுரை !
அன்றும் இன்றும் என்றும் தூங்காத மதுரை !
அன்பைப் பொழிவதில் நிகரற்ற மதுரை !
புகழ் மிக்க பள்ளிவாசல்கள் உள்ள மதுரை !
புகழ் மிக்க தேவாலயங்கள் உள்ள மதுரை !
மதுரத்தமிழ் பேசும் மாசற்ற மக்களின் மதுரை !
மங்காத புகழ் பரப்பும் மாண்புமிக்க மதுரை !
வீரத்தின் விளைநிலமாகத் திகழும் மதுரை !
விவேகத்தின் முத்திரைப் பதிக்கும் மதுரை !
கடலைச் சேராத வைகை ஆறு ஓடும் மதுரை !
கட்டிடக் கலையை பறை சாற்றிடும் மதுரை !
கரகம் காவடி கூத்துக் கட்டும் மதுரை !
சிகரம் வைதாற்ப் போல சிறப்புப் பெற்ற மதுரை !
ஜில் ஜில் ஜெகர்தண்டா கிடைத்திடும் மதுரை !
ஜல் ஜல் நாட்டிய ஒலி ஒலிக்கும் மதுரை !
பல்லாயிரம் வயதாகியும் இளமையான மதுரை !
பாண்டியர்கள் வரலாறு இயம்பும் மதுரை !
ஈடு இணையற்ற புகழ் மிக்க மதுரை !
இனியவர்கள் என்றும் விரும்பிடும் மதுரை !
மரத்தின் கேள்விகள் ! கவிஞர் இரா .இரவி !
பூ தந்தேன் !
காய் தந்தேன் !
கனி தந்தேன் !
நிழல் தந்தேன் !
காற்று தந்தேன் !
பரிசாக கோடாரி தந்து !
என்னை வெட்டுவது முறையோ ?
என்னுயிர் பறிப்பது சரியோ ?
நாயுக்குக் கூட நன்றி உண்டு !
மனிதனுக்கு நன்றி இல்லை !
நாயுக்கும் கீழாய்
மனித மாறியதேனோ ?
நன்றி மறப்பது நன்றன்று
நல்ல திருக்குறள் படிப்பது நன்று !
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் !
கவிஞர் இரா .இரவி
சாகாமல் காக்கும் மருந்து
அமுதம் என்றார்கள் !
அமுதம் நாங்கள் பார்தது இல்லை !
அமுதம் நாங்கள் பருகியது இல்லை !
அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக
அன்று புராணக்கதை கதைத்தது !
இன்பமாக வாழ வேண்டுமா ?
இனிய தமிழ் படியு்ங்கள் !
துன்பம் தொலைய வேண்டுமா ?
தீ்ந்தமிழ் படியு்ங்கள் !
சோகங்கள் ஒழிய வேண்டுமா?
சந்தத்தமிழ் படியு்ங்கள் !
கவலைகள் போக வேண்டுமா?
கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் !
விரக்தி நீங்க வேண்டுமா ?
வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் !
ஒழுக்கமாக வாழ வேண்டுமா ?
ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் !
பண்பாடாக வாழ வேண்டுமா ?
பைந்தமிழ் படியு்ங்கள் !
நெறிகளை அறிந்திட வேண்டுமா ?
நிதமும் தமிழ் படியு்ங்கள் !
வீரம் அறிந்திட வேண்டுமா ?
விவேகத்தமிழ் படியு்ங்கள் !
சாதி மத வெறி அகற்ற வேண்டுமா?
சீர்மிகு தமிழ் படியு்ங்கள் !
மனிதம் மலர்ந்திட வேண்டுமா ?
மயக்கும் தமிழ் படியு்ங்கள் !
முத்திரை பதிக்க வேண்டுமா ?
முதல்மொழி தமிழ் படியு்ங்கள் !
கற்பனைத்திறன் வேண்டுமா ?
கனித்தமிழ் படியுங்கள் !
சுயமாகச் சிந்திக்க வேண்டுமா ?
சுந்தரத்தமிழ் படியுங்கள் !
வாழ்வியலை உணர வேண்டுமா ?
வற்றாதத் தமிழ் படியுங்கள் !
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ?
முத்தமிழ் படியு்ங்கள் !
மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ?
மாண்புமிகு தமிழ் படியு்ங்கள் !
இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ?
இனிமையான தமிழ் படியு்ங்கள் !
சாகாமல் வாழ வேண்டுமா ?
சங்கத்தமிழ் படியு்ங்கள் !
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் !
சாதாரணம் தமிழ் முன் அமுதம் !
செல்பேசி ! கவிஞர் இரா .இரவி !
அவள் அழைக்கட்டும் என்று நானும்
நான் அழைக்கட்டும் என்று அவளும்
எதிர்ப்பார்த்தே காலம் கழிந்தது !
இருவருமே அழைக்கவில்லை !
விட்டுக் கொடுத்தவர்கள்
கெட்டுப் போனதில்லை !
கேள்விப்பட்டு இருக்கிறோம் !
விட்டுக் கொடுக்க மனம்
விடுவதே இல்லை !
அடுத்தவருக்கு அறிவுரை
சொல்வது எளிது !
சொன்ன அறிவுரை
சொன்னவர் கடைபிடிப்பது அரிது !
ஊடலை உடைக்க ஒரு நொடி போதும் !
ஒரு போதும் அனுமதிக்கவில்லை
தன் முனைப்பு !
நம்பிக்கையில் நான் ! கவிஞர் இரா .இரவி !
என்னுடைய அலைபேசி எண்
அவளுக்கு தந்து வந்தேன் !
அந்த நிமிடம் முதல்
இந்த நிமிடம் வரை
அழைப்பது அவளோ ? என்று
அழைப்பு வரும்
ஒவ்வொரு முறையும் ஏமாறுகின்றேன் !
என்றாவது அழைப்பாள்
என்ற நம்பிக்கையில்
எண் மாற்றவில்லை !
மூச்சு நிற்கும் முன் அவள்
பேச்சு கேட்கும் என்ற
நம்பிக்கையில் நான் !
விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !
கவிஞர் இரா .இரவி !
முடியாது என்று முடங்காதே !
முடியும் என்றே முயன்றிடு !
தெரியாது என்று தயங்காதே !
தெரிந்திடு நன்றே அறிந்திடு !
வருமென்று காத்திருக்காதே !
வாய்ப்பைத் தேடி சென்றிடு !
பிறந்தோம் என்பதற்காக வாழாதே !
பிறந்தது சாதிப்பதற்கு உணர்ந்திடு !
சராசரியாக காலம் கழிக்காதே !
சாதனை நிகழ்த்தி சாதித்திடு !
காலத்தை வீணாய் கழிக்காதே !
காலம் மேலானது தெரிந்திடு !
அறிவுரை ஏற்காமல் இருக்காதே !
அறிவுரை ஏற்று நடந்திடு !
பெரியவர்களை மதிக்காமல் இருக்காதே !
பெரியவர்களை மதித்து நடந்திடு !
எதிர்காலத்தை திட்டமிடாமல் இருக்காதே !
எதிர்காலத்தை திட்டமிட்டு வகுத்திடு !
மனதில் கவலை கொள்ளாதே !
மனதில் கவலையை அகற்றிடு !
அவநம்பிக்கையோடு இருக்காதே !
அகத்தில் நம்பிக்கை பெற்றிடு !
தோல்வி கிடைத்தால் வருந்தாதே !
தோல்விக்குத் தோல்வி கொடுத்திடு !
வெற்றி தூரமென்று நினைக்காதே !
வெற்றி உன்னருகில் அறிந்திடு !
என்றும் சோம்பேறியாக இருக்காதே !
என்றும் சுறுசுறுப்பாக இருந்திடு !
ஓய்வு எடுக்க நினைக்காதே !
ஓய்வுக்கு ஓய்வு அளித்திடு !
நாளையென்று நாட்களைத் தள்ளாதே !
நாளை என்ன ? இன்றே முடித்திடு !
பேசிடக் கூச்சம் கொள்ளாதே !
பேசி நன்மைகளைப் பெற்றிடு !
உன் வாழ்க்கை உந்தன் கையில் உள்ளது !
விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !
மரம் ! கவிஞர் இரா .இரவி .
சுவாசிக்க உதவும்
ரசிக்க உதவும்
மரம் !
பூ காய் கனி நல்கும்
பொதுவுடமைவாதி
மரம் !
அசைவது இல்லை
தென்றல் தீண்டாமல்
மரம் !
வெளியில் தெரியாது
வேர்களின் பயணம்
செழித்திடும் மரம் !
குறிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
மரம் !
சிறிய விதையின்
பெரிய பிரமாண்டம்
மரம் !
நீர் குடித்து
மழைநீர் வரவழைக்கும்
மரம் !
சொல்லில் அடங்காது
நல்கிடும் நன்மை
மரம் !
ஆதாம் தொடங்கி அப்துல்
கலாம் வரை நேசிக்கும்
மரம் !
தோகை மயில் ! கவிஞர் இரா .இரவி !
மண்ணில் தெரியும் வானவில் !
ஆண்களே அழகு பறை சாற்றும் மயில் !
தோகை விரித்து ஆடினால் பார்க்க
மேகமும் மழையாய் வரும் !
விழி இரண்டு போதாது ஆடும்
வனப்பை ரசிக்க !
வண்ண இறகை
புத்தகத்தின் நடுவே வைத்து
குட்டிப் போடும் என்று
காத்திருக்கும் சிறுவர்கள் !
சொல்லில் அடங்காது
வண்ணத்தின் அழகு !
பார்த்தல் பரவசம் !
கண்டால் கவலைகள்
காணாமல் போகும் !
அழகா ? காதலா ? கவிஞர் இரா .இரவி !
அழகு என்பது புறம் சார்ந்தது !
காதல் என்பது அகம் சார்ந்தது !
அழகை ரசிப்பது இயல்பு !
அழகு மீது வருவது காதலன்று !
வானவில் அழகுதான் !
புற அழகு நிரந்தரமன்று !
அன்பே காதல் ஆகும் !
அக அழகே அழகு !
மீன் அழகு முள் உண்டு !
அழகில் ஆபத்தும் உண்டு !
புரிந்து வருவது காதல் !
புத்துணர்வு தருவது காதல் !
அழகு காமம் சார்ந்தது !
அறிவும் அன்பும் காதல் சார்ந்தது !
உடலின் மீது வருவது காமம் !
உள்ளத்தின் மீது வருவது காதல் !
காமம் இன்றியும் காதல் உண்டு !
கற்கண்டு முதுமையிலும் காதல் உண்டு !
எங்கும் எதிலும் ஆபாச நஞ்சு !கவிஞர் இரா .இரவி
கெட்டதை பார்க்காதே !கேட்காதே ! பேசாதே ! என்றன
காந்தியடிகளின் குரங்குகள் .
தவறாகப் புரிந்து கொண்ட பலர் .
கெட்டதை பார்த்து ! கேட்டு !பேசுகின்றனர் !
ஆபாச நஞ்சு ஆறாக ஓடுகின்றது
திரைப்படங்களில் !
ஆபாச நஞ்சு நதியாக ஓடுகின்றது
தொலைக்காட்சிகளில் !
ஆபாச நஞ்சு கடலாக ஓடுகின்றது
வாரப் பத்திரிகைகளில் !
தடுக்கி விழுந்தால் மதுக்கடை
மதுவும் ஆறாக ஓடுகின்றது !
எங்கும் எதிலும் ஆபாச நஞ்சு !
தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !
திறந்தே இருக்கும் ! கவிஞர் இரா .இரவி !
வாய்ப்பு உன் வாசல் வந்து
கதவைத் தட்டுமென்று காத்திருந்து
பொன்னான பொழுதை வீணாக்காதே !
வாய்ப்பு எனும் வாசல் தேடி
நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம் !
திறந்தே இருக்கும் !
---------------------------------------------------------------------
மன நிலையைப் பெற்றிடு ! கவிஞர் இரா .இரவி !
ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு
தோற்றதும் துவண்டிடும் மன நிலை விடு !
வெற்றி கிட்டும்வரை முயற்சி செய்யும்
மன நிலையைப் பெற்றிடு !
-----------------------------------------------------------------------
வாழ்க்கை வசந்தமாகும் ! கவிஞர் இரா .இரவி !
வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட
வாழ்க்கை திரைப்படம் அன்று !
பயிற்சி செய் ! முயற்சி செய் !
தோல்வி கிடைத்தால்
காரணத்தை ஆராய்ந்தால்
அடுத்தப் போட்டியில்
அதனைத் தவிர்த்திடு !
வெற்றி வசமாகும் !
வாழ்க்கை வசந்தமாகும் !
நினைத்தது கிட்டும் ! கவிஞர் இரா .இரவி !
என்னால் முடியும் !
என்றே முயன்றால் !
முயன்றது முடியும் !
என்னால் முடியாது !
என்றே நினைத்தால் !
முயன்றது முடியாது !
யாரை நீ நம்பாவிட்டாலும் !
உன்னை நீ நம்பு !
நினைத்தது கிட்டும் !
இனிதே பயன்படுத்து ! கவிஞர் இரா .இரவி !
பொழுதைப் போக்குவதல்ல
பொன்னான வாழ்க்கை !
பொழுதைத் திட்டமிடு !
பழுது நீங்கும் !
ஒவ்வொரு வினாடியும்
ஒவ்வொரு வைரம் !
போன பொழுது
திரும்ப வராது !
இருக்கும் பொழுதை
இனிதே பயன்படுத்து !
நெஞ்சில் நிறுத்து ! கவிஞர் இரா .இரவி !
வென்றவர்களின் வரலாறு படித்திடு !
வென்று நீயும் வரலாறு படைத்திடு !
சாதித்தவர்களின் சாதனை அறிந்திடு !
சாதித்து சாதனை புரிந்திடு !
உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்க்கை !
கண்டு இறங்கி சாதித்து வாழ்ந்திடு !
எதிர்மறை சிந்தனைகளை
அகராதியிலிருந்து அகற்று !
நேர் மறை சிந்தனைகளை
நெஞ்சில் நிறுத்து !
வெற்றி வசமாகும் ! கவிஞர் இரா .இரவி !
வெந்த சோறு தின்று !
விதி வந்தால் சாவேன் !
என்று சொல்வதை நிறுத்து !
மதியால் சாதித்து வாழ் !
மண்ணுலகம் போற்றிட வாழ் !
சராசரியாக காலம் கழிக்காதே !
சாதிக்கப் பிறந்தவன் நீ !
வித்தியாசமாக சிந்தித்து !
விவேகமாக செயல்படு !
வெற்றி வசமாகும் !
உலகம் வரவேற்கும் ! கவிஞர் இரா .இரவி !
தாழ்வு மனப்பான்மை உன்னை
தாழ்த்தி விடும் !
உயர்வாக எண்ணு ! உன்னை நீ
உயர்வாக எண்ணு !
உன்னுள் திறமைகள்
ஓராயிரம் உண்டு !
இருக்கும் திறமைகளை
இனிதே பயன்படுத்து !
உன்னை என்றும்
உலகம் வரவேற்கும் !
ஹைக்கூ ! ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி !
ஏழைகளின் மலர்
பணக்காரர்கள் மலரானது
மல்லிகை !
இன்றைய மனிதர்கள்
சத்து இன்றி
இல்லை பழைய கஞ்சி !
தனியாகப் பேசுகின்றனர்
இல்லத்தரசிகள்
தொடர்களின் பாதிப்பு !
சேதாரத்தால்
சேதரமானார்கள்
வாடிக்கையாளர்கள் !
செய் கூலி இல்லை என்று
சேர்த்தார்கள்
செம்பொன் !
தள்ளுபடி என்று
தள்ளுபடியானது
நாணயம் !
நாங்கள்தான் தங்கம்
எல்லோரும் சொல்கிறார்கள்
தங்க வியாபாரிகள் !
வாங்கினால் அதிகம்
விற்றால் குறைவு
தங்கம் !
காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !
பார்த்துப் போமா ! கவிஞர் இரா .இரவி !
உன்னை வழியனுப்பும்
உன் அம்மா பார்த்துப் போமா !
என்கிறார்கள் !
சாலையில் கடந்தும் செல்லும் நீ
என்னை பார்த்துவிட்டுத்தான்
செல்கிறாய் !
பார்த்து விட்டனர் ! கவிஞர் இரா .இரவி !
யாரும் பார்க்காதபோது
இருவரும் பார்த்துக் கொள்கிறோம் !
நாம் பார்த்துக் கொள்வதை
எல்லோரும் பார்த்து விட்டனர் !
அழகோ அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ பேசுவது அழகுதான்
நான் பேசாமலே
அதனை ரசிப்பது வழக்கம் !
ஆனாலும்
நீ பேசாமல்
இருக்கும்போதோ
அழகோ அழகு !
கொள்ளை அழகு !
.
அழித்த கோட்டை ! கவிஞர் இரா .இரவி !
உச்சி எடுத்து சீவ வேண்டாம் என்று
அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய் !
இன்று வரை உச்சி எடுப்பதில்லை !
கிழித்த கோட்டை தாண்டுவதில்லை
என்பதை போல
நீ அழித்த கோட்டை
நான் போடுவதே இல்லை !
தொட்டு விட்டது ! கவிஞர் இரா .இரவி !
நெற்றியில் நீ வைத்த
முத்தம் !
முத்தமே அல்ல !
என்னுள் யுத்தம் செய்தது !
ஊடுருவி உயிர் வரை சென்று
தொட்டு விட்டது !
சத்து ! கவிஞர் இரா .இரவி !
இதழ்களில் நடந்த முத்தம்
நதி கடலில் கலந்த
நல்ல சங்கமமாய் !
கடலில் கிடைப்பது முத்து !
முத்தத்தில் கிடைப்பது சத்து !
எனக்கு வலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம் !
மின் அஞ்சலில் அனுப்பு போதும் !
அஞ்சலில் அனுப்பினால்
அஞ்சல்காரர் உரை மீது
பதிக்கும் முத்திரைகள்
உனக்கு வலிக்காவிட்டாலும்
எனக்கு வலிக்கும் !
அது எப்படி ? கவிஞர் இரா .இரவி !
ரோஜா அழகுதான் !
உலகம் அறிந்த உண்மைதான் !
நீ தலையில் சூடியதும்
ரோஜாவின் அழகு
குறைந்து விடுகிறது !
உன் அழகோ
கூடி விடுகிறது !
அது எப்படி ?
என் சுவாசமே நீதானே ! கவிஞர் இரா .இரவி !
மல்லிகை வாசம்தான் !
ஆனால்
உன் வாசத்தின் முன்னே
மல்லிகை வாசம்
தோற்று விடுகின்றது !
உன் வாசத்திற்கு இணையான
வாசம் உலகில் இல்லை
என் சுவாசம் சொல்லியது !
என் சுவாசமே நீதானே !
எல்லாமே அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ நின்றால் அழகு !
நீ நடந்தால் பேரழகு !
நீ பார்த்தால் அழகு !
நீ முறைத்தால் பேரழகு !
நீ சிரித்தால் அழகு !
நீ சிகை கோதினால் பேரழகு !
எல்லாமே அழகு !
அழகு கூடி விடும் ! கவிஞர் இரா .இரவி !
ஆடைகளில் சுடிதார்
அழகுதான் !
அனைவரும் அறிந்ததுதான் !
ஆனாலும்
அவள் அணிந்ததும் சுடிதார்
அழகு கூடி விடும்
அற்புதம் நிகழ்த்துவது
அவளின் அழகு !
காண வந்தேன் ! கவிஞர் இரா .இரவி !
கடவுள் நம்பிக்கை
எனக்கு
இல்லாவிட்டாலும்
திருவிழாவிற்கு வந்தேன்
கடவுளை வணங்க அல்ல !
கன்னி உன்னைக் காண
வந்தேன் !
கடவுளுக்காக வந்தவர்கள்
கடவுளை தரிசிக்க
உனக்காக வந்த நான்
உன்னை தரிசித்தேன் !
.நினைத்தாலே இனிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
சுவைத்தால்தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும்
இனிய காதல் !
பாட்டு ! கவிஞர் இரா .இரவி !
என் செல்லிடப் பேசியில்
எந்தப் பாட்டையும்
வைக்கவில்லை நான் !
ஏன் தெரியுமா ?
பாட்டுப் பிடித்த ஆர்வத்தில் நீ
பேசாமல் இருந்து விடக்
கூடாது !
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சிற்பி இல்லை
சிலை உண்டு
அழியாத கலை !
வீழ்ந்த பின்னும்
நடந்தது நதியாக
நீர் வீழ்ச்சி !
வளர்ந்துகொண்டே செல்கிறது
புவி வெப்பமயம்
கொளுத்தும் கோடை !
நடந்தது கொலை
சகஜம் என்றனர்
அரசியல் !
விரித்தது தோகை
மேகம் பார்த்து
ஆண் மயில் !
ஆடி அடங்கியவர்
இறுதி ஊர்வலத்தில்
ஆட்டம் போட்டனர் !
இறந்தும் விடவில்லை
காசு ஆசை
நெற்றியில் நாணயம் !
கோடீஷ்வரருக்கு
இறுதில் எஞ்சியது
ஒரு ரூபாய் நாணயம் !
.
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பெயரை மாற்றுங்கள்
கருணை இன்றி நிராகரிப்பு
கருணை மனுக்கள் ?
பசுமை இலை
வழங்கியது சிகப்பு
மருதாணி !
விழுங்கியது
கோடை விடுமுறையை
இன்றைய கல்வி !
கறிக்கோழியாக
மதிப்பெண்ணுக்காக
மாணவன் !
தேர்வில் வெற்றி
வாழ்வில் தோல்வி
மாணவர்கள் !
உணர்த்தியது
மழையின் வருகை
இடி மின்னல் !
மரங்களை வெட்டி
கட்டிய கட்டிடங்களில்
செயற்கைச் செடிகள் !
இன்பம் துன்பம்
உணர்த்தியது
பிறை நிலவு !
வலைக்கட்டிக் காத்திருந்தது
பூச்சிக்காக
சிலந்தி !
புத்தரை வணங்குவது
புத்தருக்கு அவமானம்
சிங்களர் !
விஞ்சியது
ஜாலியன் வாலாபாக் கொடுமையை
இலங்கைப் படுகொலைகள் !
தாமதமாகவே விழித்தது
தூங்கிய தமிழினம்
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !
ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
பெயரை மாற்றுங்கள்
கருணை இன்றி நிராகரிப்பு
கருணை மனுக்கள் ?
பசுமை இலை
வழங்கியது சிகப்பு
மருதாணி !
விழுங்கியது
கோடை விடுமுறையை
இன்றைய கல்வி !
கறிக்கோழியாக
மதிப்பெண்ணுக்காக
மாணவன் !
தேர்வில் வெற்றி
வாழ்வில் தோல்வி
மாணவர்கள் !
உணர்த்தியது
மழையின் வருகை
இடி மின்னல் !
மரங்களை வெட்டி
கட்டிய கட்டிடங்களில்
செயற்கைச் செடிகள் !
இன்பம் துன்பம்
உணர்த்தியது
பிறை நிலவு !
வலைக்கட்டிக் காத்திருந்தது
பூச்சிக்காக
சிலந்தி !
புத்தரை வணங்குவது
புத்தருக்கு அவமானம்
சிங்களர் !
விஞ்சியது
ஜாலியன் வாலாபாக் கொடுமையை
இலங்கைப் படுகொலைகள் !
தாமதமாகவே விழித்தது
தூங்கிய தமிழினம்
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !
வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !
வரிகள் வரிகள் எங்கும் எதிலும் வரிகள் !
வரிசையாக வாங்கும் வரிகள் !
உப்புக்கு வரியா ? என்று தேசப்பிதா அன்று
உணர்ச்சிப் பொங்கிட எதிர்த்தார் !
திருப்பிய பக்கமெல்லாம் வரிகள் !
தவிக்கும் மக்கள் வரிக் கட்டியே !
முகத்தில் வரிகள் விழுந்தது !
மூழ்கி தவித்து மூச்சு திணருகின்றது !
ஜனவரி பிப்ரவரி மார்ச்சுவரி ஆனது
ஜனங்களுக்கு மார்ச்சு வந்தால் மாரடைப்பு !
மத்திய மாநில அரசு ஊழியர் பலருக்கு !
மார்ச் மாதம் ஊதியம் இல்லாமல் போனது !
நின்றால் வரி நடந்தால் வரிகள் !
சென்றால் வரி கடந்தால் வரிகள் !
உண்ண வரி விடுதியில் உறங்க வரிகள் !
உடைக்கு வரி கேளிக்கை வரிகள் !
பெட்ரோலுக்கு வரிகள் ! டீசலுக்கு வரிகள் !
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் வரிகள் !
எங்கும் எதிலும் வரிகள் !வரிகள்! வரிகள் !
இங்கு வரிகள் இன்றி எதுவுமில்லை !
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே !
ஆனந்த சுந்திரம் அடைந்தோம் என்று !
--
மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
கவிஞர் இரா .இரவி !
சிறுமியின் கால் சிதைந்தது !
சின்னப் புத்திக்காரன் உன் வெடிகுண்டால் !
வெள்ளைக் கோடி ஏந்தி வந்தவர்களையும்
வெட்ட வெளியில் சுட்டவனே !
மருத்துவமனைகள் மீதும் வானூர்தி வழி
குண்டு மழை பொழிந்தவனே !
நேருக்கு நேர் மோதிட முடியாமல்
குறுக்கு வழியில் சதி செய்தவனே !
சிறுவனிடம் வீரம் காட்டிய
சிங்கள ஓநாய்களின் செயல் கொடூரம் !
பன்னாட்டு ராணுவத் துணையுடன்
உள் நாட்டு மக்களைக் கொன்ற கொடியவனே !
காட்டிக் கொடுத்த கயவன் துணையுடன் !
கண்ணான தமிழினத்தை அழித்த வெறியனே !
புத்தப் பிட்சுகளுக்கு இனி என்றும்
புத்தரை வணங்கும் தகுதி இல்லை !
வாய் மூடி மவுனமாக வேடிக்கைப் பார்த்தனர் !
நாங்கள் மன்னித்தாலும் புத்தர் மன்னிக்க மாட்டார் !
கொலைகள் கண்டிக்காமல் இருந்துவிட்டு
கலைநயமிக்க புத்தரை வணங்குவதில் பயனில்லை !
கோயில்களை குண்டுகளால் தகர்த்து விட்டு
கோயில் வந்து திருப்பதி வணங்கும் நீசனே !
அய் நா .விடம் நீ தப்பிக்கலாம் !
அமெரிக்காவிடம் தப்பிக்கலாம் !
உன் மனசாட்சியிடம் தப்பிக்க முடியுமா ?
உனக்கு மனசாட்சி இருக்காது !
மனிதருக்குதானே மனசாட்சி இருக்கும் !
மனிதவிலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
பயத்தால் தினம் நீ செத்து செத்துப் பிழைக்கிறாய் !
பாதியில் முடியும் உன் பயணம் இது உறுதி !
எண்ணிக் கொள் நாட்களை வெகு விரைவில் !
எவரும் காக்க முடியாது உனக்கு வரும் இறுதி !
உன் கதை முடிக்காமல் எமக்கு வராது இறுதி !
உன் கதை முடியும் நாள் எமக்கு தீபாவளி !
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை !
ஆதிக்கம் ஒழியும் !அடிமை விலங்கு உடையும் !
விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும் !
விண் முட்ட தமிழரின் கொடி பறக்கும் !
.
காடு அதை நாடு ! இரா .இரவி !
காடு அதை நாடு அங்குள்ள
விலங்குகளை வதைக்காமல் நாடு !
மரங்களை வெட்டாமல் நாடு !
நோய் நீங்க வனம் செல் !
சுடுகாடு செல்வதைத் தள்ளிப்போட வனம் செல் !
தூய காற்றை சுவாசிக்க வனம் செல் !
தன்னம்பிக்கை வளர்த்திட வனம் செல் !
விலங்குகளின் பெருமை அறிய வனம் செல் !
வேதனைகளை மறந்திட வனம் செல் !
பச்சைப் பசுமை ரசிக்க வனம் செல் !
பறவைகள் வகை தெரிந்திட வனம் செல் !
அருவிகளின் வாசம் நுகர்ந்திட வனம் செல் !
மலைகளின் வனப்பு ரசித்திட வனம் செல் !
மன அழுத்தம் குறைய வனம் செல் !
மகிழ்ச்சி மனதில் பெருக வனம் செல் !
கோபம் தணித்து சாந்தி பெற வனம் செல் !
கள்ளம் கபடம் ஒழிய வனம் செல் !
இயற்கை ரசிக்க வனம் செல் !
செயற்கை மறந்து களிப்புற வனம் செல் !
உடலுக்கு சுகம் பெற வனம் செல் !
உள்ளத்திற்கு வளம் பெற வனம் செல் !
அரிய விலங்குகளை அறிய வனம் செல் !
அற்புத உயிரினங்களைத் தெரிய வனம் செல் !
துன்பங்களை மறந்து மகிழ்வுற வனம் செல் !
துயரங்களைத் துறந்து துணிவு பெற வனம் செல் !
மரங்களின் மகத்துவம் அறிய வனம் செல் !
அறங்களின் மேன்மை புரிய வனம் செல் !
விழி இரண்டு போதாது வனம் ரசிக்க !
கை இரண்டு போதாது மரம் தழுவ !
மனிதா அழித்த காடுகள் போதும் !
மனிதா அழித்த விலங்குகளும் போதும் !
காடுகளை அழியாமல் காப்போம் !
காற்றுகளை மாசின்றி காப்போம் !
வனம் சென்றால் ரசித்து வா !
மனம் செம்மையாகும் சிந்தித்து வா !
குருவிகள் !கவிஞர் இரா .இரவி !
வீடு இடிக்கப்பட்டு கூடு சிதைந்தது
மனம் தளராமல் மறுபடியும்
குருவிகள் !
கைகள் இன்றி கட்டின கூடுகள்
மிக அழகாக
குருவிகள் !
வான் பறப்பதில் சிறியன
மக்கள் மனதில் பெரியன
குருவிகள் !
பார்ப்பதற்கு அலகோ
அழகோ அழகு
குருவிகள் !
உருவத்தால் சிறிது
உணர்வால் பெரிது
குருவிகள் !
அன்று குடும்ப உறுப்பினர்கள்
இன்று குடும்பங்களே தனித்தனி
குருவிகள் !
பறந்தால் பரவசம்
பார்த்தால் குதூகலம்
குருவிகள் !
வைக்கோல் மாட்டுக்கு உணவு
வைக்கோல் வீட்டுச் செங்கல்
குருவிகள் !
.நவீனம் மனிதனை மாற்றியது
பறவை இனத்தை அழித்தது
குருவிகள் !
காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி
உனைப்பார்க்கும்
நான் மட்டுமல்ல
எல்லா ஆண்கள் மட்டுமல்ல
எல்லாப் பெண்களும்
வியந்துப் போகிறார்கள்
இவ்வளவு அழகா ? என்று !
-----------------------------------------------
உனக்கானக் காத்திருப்பு சுகம்தான்
வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல
வழி மேல் மனதையும் வைத்துக் காத்திருக்கிறேன் !
தாமதமாகும் நிமிடங்களில்
உன் மீது கோபம் வந்தாலும்
வந்த கோபம் நீ வந்ததும்
பறந்து விடுகின்றன !
-----------------------------------------------
ஒற்றை ரோஜா தந்தேன்
திரும்பி விட்டாய் !
வாங்க மறுக்கிறாயோ ?
என்று நினைத்தேன்
வைத்து விடுங்க !
என்றாய் !
வைத்து விட்ட பின் ரோஜா
என்னைப்பார்த்து விரல் ஆட்டியது !
-----------------------------------------------
விழிகள் சந்தித்து
இதயங்கள் இடம் மாறி
பரிசுப் பொருட்கள்
பரிமாறியது காதலின் தொடக்கம் !
இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !
மாலை மாற்றத்திற்குப் பின்
உடல்கள் பரிமாற்றம் காதலின் உச்சம் !
-----------------------------------------------
ஓரக் கண்ணால்
ஒரே ஒரு பார்வைதான் பாவை பார்த்தால் !
என்னுள் பரவசம்
எண்ணிலடங்கா இன்பம் !
பார்வையின் சக்தி
பார்த்தவர்களுக்குதான் புரியும் !
கூர்ந்து பார்த்து
நங்கூரம் இட்டுச் சென்றாள் !
கப்பல் என நின்று விட்டேன்
நான் அதே இடத்தில !
ஹைக்கூ கவிதை கவிஞர் இரா .இரவி
பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி
பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்
வானத்திலும் வறுமை
கிழிசல்கள்
நட்சத்திரங்கள்
புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்
உயரத்தில்
பஞ்சுமிட்டாய்
வான் மேகம்
டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி
ஆயத்தம்
பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி
சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்
கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்...
அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு
வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்
கோடை மழை
குதூகலப்பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்
வானம்.
கட்சி தாவியது
அந்திவானம்.
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி
மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ
என்னவளே உன்
முகத்தைக் காட்டு...
முகம் பார்க்கவேண்டும்
ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்
கிருமி தாக்கியது
உயிரற்ற பொருளையும்
கணினியில் வைரஸ்
மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்...
நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்
கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு
நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்
இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்
பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி
உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி
நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி
தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி
தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி
நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?
மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி
கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு
அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்
சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்
ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை
சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு
அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்
மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்
ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்
காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி
உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்
பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை
கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி
இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்
உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை
இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்
தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
வழி மேல் விழி வைத்து
முதியோர் இல்லத்தில்
முதியோர்கள் !
நேரம் கிடைத்தால்
ரசித்து மகிழுங்கள்
வானம் !
உதட்டில் புன்னகை
உள்ளத்தில் ரணம்
திருநங்கைகள் !
வாசிக்க சுகம்
ரசிக்கும் மனம்
கவிதை !
வாக்குப்பிச்சை எடுத்தவர்களிடம்
வாக்குப்பிச்சை
மேல்சபை தேர்தல் !
மரங்களை வெட்டி
யாகம் நடந்தது
மழைக்காக !
வேண்டாம் வன்சொல்
வாடிடும் பிஞ்சு
அன்போடு கொஞ்சு !
வெள்ளத்தில் பக்தர்கள்
காக்கவில்லை
கடவுள் !
மின்தடையிலும்
ஒளிர்ந்தது
மின்மினி !
அன்று சேவைக்காக
இன்று தேவைக்காக
அரசியல் !
அன்று மக்களுக்காக
இன்று தன் மக்களுக்காக
அரசியல் !
கற்பித்தன ஒழுக்கம்
காந்தியடிகளின்
மூன்று குரங்குகள் !
திறந்திடுவார்கள்
உடையுமோ பயத்தில்
அணை !
பைத்திமாகியும்
காரியமாக
அரசியல்வாதி !
விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !
எங்கள் வாழ்வில் இரவும் பகலும்
இரண்டும் ஒன்று !
விளக்கு அணைந்த வினாடிகளில்
நீங்கள் அடையும் தவிப்பு !
வாழ்நாள் முழுவதும் வாடிக்கையானது !
விழிகளில் பார்வை இழந்த எங்களுக்கு !
கண்ணாமூச்சு விளையாடி
கால் தவறி விழுவீர்கள் !
காலமெல்லாம் எங்களுக்குக்
கண்ணாமூச்சு விளையாட்டானது !
கண்ணில் தூசி விழுந்தால்
கணப் பொழுதில் துடிப்பீர்கள் !
கண்களே தூசியானதால்
தூசி விழுந்து துடிப்பதில்லை !
பின்புறமாய வந்து விழிகளை மூடி
யார் என்று வினவுவர் !
பதில் கூற இயலாது
பறி தவிப்பீர் கண்ணுடையோர் !
காதுகளே எங்களுக்குக் கண்களானதால்
குரலை வைத்தே கூறிடுவோம் !
எங்களின் விரல்களே விழிகள் !
விரல்களால் தானே வாசிக்கின்றோம் !
விழியிருந்தும் அறிவுப் பார்வையற்றோர் உண்டு
விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு !
ஆதலினால் காதல் செய்வீர் ! கவிஞர் இரா .இரவி !
காதலால் கவலை போகும் !
கல்யாணம் சிறக்கும் !
காதல் சொன்னால் புரியாது !
காதல் காதலித்தாலே புரியும் !
தென்றலால் இலைகள் அசைவது !
மொட்டுகள் மலர்களாக மலர்வது !
பூமியில் மழை பெய்வது !
விதைகள் மரமாக வளர்வது !
அருவியில் நீர் கொட்டுவது 1
எப்படி வந்தது தெரியாது !
இயற்கையாக வருவது !
அப்படித்தான் காதலும் !
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அவசியம் காதல் வரும் !
ஒருதலைக் காதலாவது
ஒரு முறையேனும் வந்திருக்கும் !
அரும்பிய காதல் மலராமல்
கருகி இருக்கும் !
பிறப்பும் இறப்பும் நிச்சயம் !
காதல் அனுபவுமும் நிச்சயம் !
காதல் பலவகை உண்டு !
மனதிற்குள் மறைந்த காதல் !
உதடுகள் உச்சரிக்காத காதல் !
உச்சரித்து ஏற்காத காதல் !
காதல் இல்லை என்றால்
இந்த உலகம் இல்லை !
காதலை உணர்ந்த பெற்றோர்கள்
ஊருக்குப் பயந்து எதிர்ப்பார்கள் !
காதல் திருமணத்தை அங்கீகரியுங்கள் !
கட்டாயம் வரதட்சணை ஒழியும் !
பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
பெண் பிறந்தால்
பேதலிக்கும் மனிதர்களே!
ம்ருமகள் கிடைக்காமல்
மண்டியிடும் நாள் வரும் !
ஆட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
மாட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
கோழிக்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ?
பெண்ணிற்கு முன்னுரிமை
பேருந்தில் தந்தோம் !
திரையரங்கில் தந்தோம் !
இல்லத்தில் தந்தோமா ?
இதயத்தில் தந்தோமா ?
இல்லதரசிக்குத் தந்தோமா ?
உணவு உண்பது உடை உடுப்பது
உறக்கம் கொள்வது
இருபாலருக்கும் பொது !
ஒழுக்கம் மட்டும் பெண்ணிற்கு மட்டும்தானா ?
ஆணிற்கு வேண்டாமா ?
பெண்ணுரிமை பற்றிப்
பேசிவிட்டு வந்து
எதிர்த்துப் பேசிய
இல்லதரசியை எட்டி உதைக்கும் அவலம் .!
பெண்ணுரிமை ஏட்டில் எழுத்தில்
தந்தால் போதாது !
பெண்ணுரிமை நாட்டில் நடைமுறையில்
வீட்டில் தர வேண்டும் !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
மிருகத்தையும்
மனிதனாக்கியது
மழலையின் சிரிப்பு !
களத்துமேட்டில் குவித்த நெல்
குறையவில்லை அப்படியே
கிராமங்களில் !
தேவைப்பட்டது பணம்
நடத்தினார்
காதணி விழா !
ஒய்வுக்குமுன்
மகள் திருமணம்
அரசு ஊழியர் !
விமானம் ஓட்டினாலும்
வீட்டில் சமையல்
பெண்கள் !
சோழியன் குடுமி
சும்மா ஆடியது
காற்று !
வைகுண்டத்திற்கு வழி சொன்னவர்
மறந்தார்
தன் வீட்டிற்கு வழி !
இன்றும் தொடர்கின்றது
மன்னனின் சந்தேகம்
கூந்தலின் மணம் இயற்கையா ?
மரம் இழந்த இலை
சருகானது
பெற்றோர் இழந்த குழந்தை ?
ஒன்றும் ஒன்றும் இரண்டு
குடும்பம் ஒன்றாய் இருப்பது நன்று
பிரிவினை பெரிய வினை !
வயதைக் குறைக்கும்
வாழ்நாளை நீடிக்கும்
இலக்கிய ஈடுபாடு !
அளவிற்கு மிஞ்சினால்
அமுதமும் திகட்டும்
திகட்டாத தமிழ் !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
இனிய வரவேற்பு
இரடிப்பு மகிழ்ச்சி
கோடை மழை !
சக்தி உள்ளவ்ரை
நகர்ந்துகொண்டே
நிமிட முள் !
இன்றும் வாழ்கின்றனர்
மலை முழுங்கி
மகாதேவன்கள் !
நாய் விற்ற காசு
குரைத்தது
மனதில் !
அன்று " நானே கள்வன் "
மாண்டான் மன்னன்
இன்று ?
ஆராய்ச்சி மணி
அடித்த பசு
அரண்மனை பிரியாணியில் !
முரசுக் கட்டிலில்
தூங்கிய புலவன்
முதுகை முறித்தனர் !
மக்களின் மறதி
அரசியல்வாதிகளுக்கு வசதி
புதுப்புது ஊழல் !
நாட்டு நடப்பு
வறுமையிலும் செம்மை ஏழைகள்
செழுமையிலும் சீரின்றி பணக்காரர்கள் !
காந்தியோடு முடிந்தது
அரசியிலில் நேர்மை
நேர்மையின்மை முதல் தகுதி !
வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !
வீட்டில் ஆணி அடித்தால் உடன் !
வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் !
வீட்டுக்காரர் அருகில் வசித்தால் !
வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம்தான் !
சொந்த வீட்டை விற்று விட்டு !
வாடகை வீடு வந்தால் வலி அதிகம் !
நம் குழந்தை அவர் குழந்தை சண்டையிட்டால் !
நம் குழந்தை அடங்கிப் போக வேண்டும் !
நாய் வளர்க்க நம் மகள் ஆசைப்பட்டால் !
நாயை விட அதிகம் குரைப்பார் வீட்டுக்காரர் !
வருடா வருடம் வாடகை ஏற்றுவார் !
வாய் பேசாமல் தந்தாக வேண்டும் !
வாடகை வீட்டில் குறை இருந்தால் !
வீட்டுக்காரரிடம் பயந்து சொன்னால் !
இஷ்டம் என்றால் இரு !கஷ்டம் என்றால் போ!
இஞ்சி தின்ன குரங்குப் போல கத்துவார் !
பிடிக்காத புதிதாக வந்த வீடு !
பிடிக்கத் துவங்கி மனம் ஒப்பும் !
வீட்டைக் காலி செய்யச சொல்லி !
வீட்டுக்காரர் உத்தரவு போடுவார் !
மறுபடியும் வீடு பார்க்கும் படலம் !
மொத்தமாக முன்தொகை கேட்பார்கள் !
சொந்த வீடு கட்டும் ஆசையில் !
சொந்தமாக மனை வாங்கி ஏமாந்தோம் !
வாடகை வீடு மாறி மாறி குடும்பத்திற்கு !
வலிக்கிறது நெஞ்சம் துக்கமே மிச்சம் !
படிவங்கள் பூர்த்தி செய்யும் போது !
பார்த்தால் நிரந்தர முகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும் !
இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு !
என்று சொல்லி வைத்தனர் வீடு மாறியே நொந்தோம் !
குறைந்த பட்சம் ஆதார் அட்டை கூட !
கொடுப்பதில்லை வீடு மாறியவர்களுக்கு !
ஒருவனுக்கு பத்து வீடுகள் உண்டு !
பலருக்கு ஒரு வீடு கூட இல்லை !
எட்டு அடுக்கு மாளிகையில் ஒரே ஒரு குடும்பம் !
எட்டிப் பார்க்கும் குழாயில் பல குடும்பம் !
அனைத்து வீடுகளையும் அரசுடமையாக்கி !
ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு மட்டும் தாருங்கள் !
என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !
சௌந்தரராஜன் என்பது பெயர் மட்டுமல்ல !
சௌந்தரமான குரலின் ராஜன் நீ !
உனது தாய் மொழி தமிழ் இல்லை !
உச்சரிப்பில் உச்சமே உன் எல்லை !
உனது தாய் மொழி சௌராஷ்டிரம் மொழி !
உனது வாய் மொழி செம்மொழி தமிழ் மொழி !
கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை !
காதுகளில் தேனாகப் பாய்ச்சியவன் நீ !
கவியரசு கண்ணதாசனின் கருத்துக் கல்லை !
கண் கவரும் சிலையாக வடித்த சிற்பி நீ !
மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களிடமும்
முத்திரைப் பதித்த சகலகலா வல்லவன் நீ !
எம் .ஜி .ஆர் . சிவாஜி இரு துருவத்திற்கும் !
இரண்டு குரலில் இனிமையாகப் பாடிய ஒருவன் நீ !
பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை
பாடலுக்கு பட்டுக் கட்டியவன் நீ !
மக்கள் திலகம் எம் .ஜி .ஆருக்கு நூறு சதவிகிதம் !
முற்றிலும் என்றும் பொருந்தியது உந்தன் குரலே !
வேறு பலர் அவருக்குப் பாடி ப் பார்த்தார்கள் !
விரும்பவில்லை ரசிகர்கள் கூட்டம் !
செவாலியர் சிவாஜியின் சிறப்பான நடிப்பை !
சிம்மக்குரலில் கர்ஜித்துப் பாடியவன் நீ !
யாரை நம்பி நான் பிறந்தேன் பாடலின் மூலம் !
யாருக்கும் பிடித்தவன் ஆனாய் நீ !
மலர்ந்து மலராத பாடல் மூலம் !
மக்கள் மனதை கொள்ளை அடித்தவன் நீ !
பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி !
கோடிகளுக்கு மேல் ரசிகர்களை உனக்கு !
தற்கொலைக்கு முயன்றாய் முன்பு ஒருமுறை !
துடித்துப் போனோம் கேள்விப் பட்டு !
தானாகவே மரணம் வந்தது உன் உடலுக்கு !
தனி இடம் உண்டு என்றும் உன் குரலுக்கு !
மதுரையில் மாநாடுப் போல நடந்தது !
மண்ணின் மைந்தன் உந்தன் பாராட்டு விழா !
ஒலிநாடாவிற்கும் உனது இசை நிகழ்ச்சிக்கும் !
ஒரு வேறுபாடு கூட என்றும் இருந்ததில்லை !
படிக்காத பாமர்கள் பலருக்கும் தமிழ்
படிப்பித்த பாடல் ஆசான் நீ !
உழைப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !
படிப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !
ஒரு காலத்தில் நேயர்களின் சொர்க்கமாக இருந்த !
இலங்கை வானொலியில் எப்பவும் ஒலித்தது உன் பாடலே !
.ஒப்பற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடி !
உலகத் தமிழர்களை எழுந்து நிற்க வைப்பவன் நீ !
உயிர் உன் உடலை விட்டு பிரிந்திட்டப் போதும் !
உயிராய் வாழும் ரசிகர்கள் உள்ளத்தில் உன் பாடல் !
உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும் !
பாடலால் என்றும் வாழ்வாய் எங்களிடம் !
கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
யாருடைய தீவில்
யாரடா விரட்டுவது
கச்சத்தீவு !
ஒண்ட வந்த பிடாரி
ஊர்க்காரனை விரடியதாம்
கச்சத்தீவு !
தானம் தந்த இடத்தில
தந்தவனைச் சுடுவானாம்
கச்சத்தீவு !
விடுவானாம் சீனாக்காரனை
விடமாட்டானாம் தமிழனை
கச்சத்தீவு !
பிச்சைப் பெற்றவன்
பீத்திக் கொள்கிறான்
கச்சத்தீவு !
உதவலாம் நண்பனுக்கு
பகைவனுக்கு உதவுவது மடமை
கச்சத்தீவு !
கடைத்தேங்காய் எடுத்து
வழிப் பிள்ளையாருக்கு
கச்சத்தீவு !
தமிழனைக் காக்க முடியாதவர்களுக்கு
தமிழன் நிலம் தானம் தர உரிமை உண்டா ?
கச்சத்தீவு !
விடவில்லை வணங்கிடவும்
விடவில்லை வலை உலர்த்த
கச்சத்தீவு !
ஒப்பந்தம் மீறுகிறான்
கையொப்பம் இனி செல்லாது
கச்சத்தீவு !
அப்பாவி மீனவனுக்கு விட்டு
அடப்பாவியே வெளியேறு
கச்சத்தீவு !
தமிழர் வளத்தைச் சுரண்டி
சிங்களன் வளம் கொழிக்கிறான்
கச்சத்தீவு !
எங்கள் தீவில்
எங்களை விரட்ட யாரடா நீ
கச்சத்தீவு !
எம் இனம் அழித்த
ஈனனுக்கு இனி இடமில்லை
கச்சத்தீவு !
சீரழித்த சிங்களனுக்கு
இடமில்லை வெளியேறு
கச்சத்தீவு !
தானம் தந்த கை முறிக்கும்
தரமற்றவனே வெளியேறு
கச்சத்தீவு !
.
மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
வெப்ப பூமியில் குளிராடை அணிந்து !
விளையாடும் முட்டாள் விளையாட்டு !
சதி செய்து போலியாக ஆடும் ஆட்டம் பார்த்து !
சகோதரர்களிடையே குடும்பத்தில் சண்டை !
முடிவில்தான் தெரியும் விளையாட்டின் முடிவு
முடிவை முடிவு செய்து ஆடுகின்றனர் !
விளையாடும் முன் யார் தோற்பது முடிவெடுத்து
விளையாட்டுக்கு விளையாடுகிறார்கள் !
பிடிக்க வேண்டிய நல்ல பந்தை !
பிடிக்காமல் கீழே விட்டு நடிக்கின்றனர் !
வேண்டுமென்றே ஓங்கி தூக்கி அடித்து
விளையாடி பிடிக்க விட்டு விடுகின்றனர் !
தடுக்க வேண்டிய பந்தை வேண்டுமென்றே
தடுக்காமல் விட்டு நான்கு ஆக்கி விடுகின்றனர் !
ஆறு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
ஒரு ஓட்டம் எடுத்து முடிகின்றனர் !
நான்கு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
நன்றாக விலகி குச்சியில் விழ வைக்கின்றனர் !
எதிரணி வெளியேற்றும் முன்பே திட்டமிட்டு !
இவர்களாகவே வெளியேறி விடுகின்றனர் !
கேப்பையில் நெய் வடியுது என்றால்
கேப்போரின் மதி எங்கே போனது ?
வாட்டும் வருமையிலும் ஏழைகள் !
நாட்டில் செம்மையாக வாழ்கிறார்கள் !
வளமையில் வாழும் பணக்கார்கள் !
விளையாட்டில் சூதாடி கொள்ளை அடிக்கிறார்கள் !
வென்றாலும் தொற்றாலும் பரிசுப்பணம் !
விளம்பரத்தில் நடித்து கோடிப்பணம் !
சூதாட்டிகளிடமிருந்து மறைமுகமாக
சூதுப் பணம் இவர்களா வீரர்கள் ?
விளையாட்டு வீரர்கள் என்ற சொல் வேண்டாம்
விளையாட்டுத் திருடர்கள் என்பதே சரி !
பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றி
பார்வையாளர்களை ஏமாற்றும் சூதை அறிந்திடு !
நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து !
நேர்மையான விளையாட்டென நம்பி !
ஏமாறும் தமிழா இனியாவது விழி !
ஏமாந்தது போதும் !விழித்திடு !
.மகா மட்டமானது மட்டை விளையாட்டு !
ஹைக்கூ (சென்றியு ) கவிஞர் இரா .இரவி
நூற்றால்
நூல் வராத பருத்தி
செம்பருத்தி !
பேசிக்கொண்டன
புரியவில்லை நமக்கு
எறும்புகள் !
நினைவூட்டியது
அவளை
வானவில் !
காயம்பட்ட
சோகம் இசைத்தது
புல்லாங்குழல் !
மீனவரின்
அட்சயப்பாத்திரம்
கடல் !
நம்ப முடியவில்லை
கண்ணால் கண்டும்
ஆட்டை விழுங்கும் பாம்பு !
அரசியல்வாதிகளின் பொய்
நூலாடையை
பொன்னாடை !
சுடுகாட்டிலும்
சிரித்தன
மலர்கள் !
கிளைகளை விட
நெடியது
வேரின் பயணம் !
உருவம் மட்டுமல்ல
சுவையும் பெரிது
பலா !
வருத்தத்தில் குழந்தை
குட்டிபோடவில்லை
மயிலிறகு !
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மெய்ப்பித்தன
அயல் நாட்டுப் பறவைகள் !
புதிய பொருளாதாரம்
மலட்டு விதைகள்
மலடாக்கியது நிலத்தை !
சிறுவனின்
வண்டிச்சக்கரம்
நுங்கு மட்டை !
பறித்த போதும்
சிரித்தன
மலர்கள் !
காணவில்லை கண்மாய்
ஊரில் இல்லை ஊரணி
உலகமயம் !
வருங்கால சந்ததிகளின்
வளம் அழிக்கும் பகைவன்
நெகிழி !
மரத்தை வெட்ட வெட்ட
பொய்த்தது
மழை !
ஆக்கிரமித்தது
உலகனேரி
மதுரை உயர்நீதிமன்றம் !
--
அன்னையர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
அன்னையர் தினம் மட்டுமல்ல தினமும் !
அன்னையை நினைப்போம் போற்றுவோம் !
பத்து மாதங்கள் சுமந்துப் பெற்றவள் அன்னை !
பத்துப் போட்டு வளர்த்து எடுத்தவள் உன்னை !
'அ ' வில் தொடங்கும் அற்புதம் அன்னை !
அம்மா அப்பா சொல்லி வளர்த்தாள் உன்னை !
உறவுகளிகளில் ஒப்பற்ற சிகரம் அன்னை !
உலகம் போற்றிட வளர்த்தாள் உன்னை !
உலகை அறிமுகம் செய்தவள் அன்னை !
உணர்வை ஊட்டி வளர்த்தாள் உன்னை !
வேதனை சோதனை ஏற்றாள் அன்னை !
வேண்டி விரும்பி பெற்றாள் உன்னை !
முப்பொழுதும் போற்றும் உறவு அன்னை !
எப்பொழுதும் உயிராய் காப்பாள் உன்னை !
மாதர் குலத்தின் மாணிக்கம் அன்னை !
மாண்பு மிக்க மனிதனாக்கினாள் உன்னை !
கருவறையில் சுமந்த கடவுள் அன்னை !
கருத்தாக வளர்த்து எடுத்தாள் உன்னை !
பாசத்தை மழையெனப் பொழிந்தாள் அன்னை !
பண்போடு வளர்த்து மகிழ்ந்தாள் உன்னை !
உயிர் தந்துப் பெற்றாள் அன்னை !
உயிராகப் போற்றி வளர்த்தாள் உன்னை !
மனைவி வந்ததும் மறக்காதே அன்னை !
மடியில் வைத்து வளர்த்தாள் உன்னை !
குழந்தை மறந்தாலும் மறக்காதவள் அன்னை !
குழந்தையை என்றுமே வெறுக்காதவள் அன்னை !
அகில உலகம் போற்றும் அன்னை !
அகல் விளக்காய் ஒளிர்ந்தாள் அன்னை !
தன்னலம் கருதாத உறவு அன்னை !
தன்குழந்தை நலம் கருதும் அன்னை !
அன்னையின்றி நீயுமில்லை நானுமில்லை !
அகிலம் இல்லை அன்பு இல்லை !
அன்னைக்கு இணையான உறவு உலகில் இல்லை
அன்னைக்கு இணை அன்னை மட்டுமே !
.
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
தோரண மாவிலை
தோராயமாக பார்த்தது
மாங்காய் !
குளத்தில்
படகானது
உதிர்ந்த இலை !
உழுது உதவியது
உழவனுக்கு
மண் புழு !
மலர் மீது
வண்ண மலரா ?
ஓ வண்ணத்துப் பூச்சி !
ஆயிரம் தேனீக்களின்
வாழ்க்கையை முடித்து
ஒரு தீக்குச்சி !
சேற்றில் நட்ட நாற்று
கதிர்களாய் விளைந்து சிரித்தது
உவகையில் உழவன் !
அறுவடைக்குப் பின்னும்
தந்து உணவு பசுவுக்கு
பூமி !
புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !
கவிஞர் இரா .இரவி !
புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் !
புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் !
புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு !
புகைத்துத் திரிவது உயிருக்குக் கேடு !
பகை உடல் நலத்திற்கு உணர்ந்திடு !
புகை பிடிக்கும் பழக்கம் உயிர்க்கொல்லி !
தனக்குத்தானே வைக்கும் சுய கொள்ளி !
தானாக முடிவெடுத்து வைத்திடு தள்ளி !
தீமை என்று தெரிந்திருந்து போதும் !
தீய புகையிலை புகைப்பது முறையோ !
பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்தால் !
பயன்படுத்த மாட்டார்கள் புகையிலை !
வாழை இலையில் உணவு உண்பது நல்லது !
புகையிலைப் புகைப்பது மிகவும் கெட்டது !
உடலை உருக்கும் கொடிய புகையிலை !
உயிரைக் குடிக்கும் கொடிய புகையிலை !
நுரையீரலை புண்ணாக்கும் நச்சு புகையிலை !
நூதனமாய் உயிர் பறிக்கும் புகையிலை !
நடிகரைப் பார்த்து புகைப்பதை நிறுத்து !
நல்லதை மட்டும் நெஞ்சில் நிறுத்து !
உடல் நலத்திற்குக் கேடு புகையிலை !
உயிருக்குப் பகை கொடிய புகையிலை !
நண்பனைப் பார்த்து நல்லத்தைப் பழகு !
நண்பனைப் பார்த்து கெட்டதை விலக்கு !
புகையாய் உள் நுழையும் புகையிலை !
புற்றுநோயைப் பரிசாகத் தரும் புகையிலை !
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் !
என்பது அன்று சொன்ன பழமொழி !
புகையிலைப் பழக்கம் விரைவில் உன்னை
சுடுகாட்டுக்கு அனுப்பும் இது புது மொழி !
கையால் தொடாதே புகையிலை !
உதட்டில் வைக்காதே புகையிலை !
முயன்றால் முடியாதது எதுவுமில்லை !
முயன்று வைத்திடு முற்றுப்புள்ளி !
.
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
மழையில் நனைந்தும்
வண்ணம் போகவில்லை
வண்ணத்துப்பூச்சி !
வானவில் பறந்தது
மண்ணில்
வண்ணத்துப்பூச்சி !
அம்புகள் இன்றி
வானில் தனியாக
வானவில் !
ஓட்டுனர் இன்றி
பயணமானது
ரயில்பூச்சி !
கட்டியது வீடு
சிறு துரும்பில்
குருவி !
பறவையின் எச்சம்
விழுந்த மிச்சம்
விருட்சம் !
தடம் மாறவில்லை
சென்றன வரிசையாக
எறும்புகள் !
வரும் முன்னே
வந்தது வாசம்
என்னவள் !
கவனிக்கவில்லை உச்சரிப்பை
கவனித்தான் உதட்டசவை
காதலன் !
உதட்டு முத்தத்தை விட
வலிமையானது
நெற்றியில் முத்தம் !
அழகான சேலை
குறைந்தது அழகு
அவள் அணிந்ததும் !
உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி !
தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி !
தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும்
உன்னத தினம் உழைப்பாளர் தினம் !
வியர்வையை மதிக்கும் விவேக்மான தினம் !
உழைப்பைப் போற்றும் ஒப்பற்ற தினம் !
ஆண்டு முழுவதும் தினங்கள் வந்தாலும்
ஆண்டாண்டாக மதிக்கும் தினம் உழைப்பாளர் தினம் !
இவ்வுலகின் வளர்ச்சி உழைப்பாளியின் முயற்சி !
இப்பூவுலகின் மலர்ச்சி உழைப்பாளியின் முயற்சி !
உலகில் உழைப்பவன் மட்டுமே மனிதன் !
உலகில் உழைக்காதவன் மனிதன் அன்று !
உழைக்காமல் உண்பவன் திருடன் என்று அன்றே !
உரைத்தார் உயர்ந்த தேசப்பிதா காந்தியடிகள் !
மரத்திற்கு அழகு பூக்கள் பூப்பது !
மனிதனுக்கு அழகு உழைத்து வாழ்வது !
உலகில் மேன்மையானது உடல் உழைப்பு !
உலகில் மென்மையானது மூளை உழைப்பு !
உடையில் இருக்கும் ! உள்ளத்தில் இருக்காது கறை !
உடல் நிறம் கருப்பு உள்ளமோ வெள்ளை !
கள்ளம் கபடம் அறியாதவர்கள் உழைப்பாளிகள் !
கற்கா விட்டாலும் பண்பாளர்கள் உழைப்பாளிகள் !
பிறந்ததன் பயன் உழைப்பில் உள்ளது !
பிறந்தோம் இறந்தோம் என்பதில் என்ன உள்ளது !
உண்ண உணவு தந்தவன் உழைப்பாளி !
உடுக்க உடை தந்தவன் உழைப்பாளி !
வசிக்க வீடு தந்தவன் உழைப்பாளி !
ரசிக்க மலர் தந்தவன் உழைப்பாளி !
மண்ணை சிலையாக்கியவன் உழைப்பாளி !
பொன்னை சிலையாக்கியவன் உழைப்பாளி !
கல்லை சிலையாக்கியவன் உழைப்பாளி !
மரத்தை சிலையாக்கியவன் உழைப்பாளி !
வண்ணத்தை ஓவியம் ஆக்கியவன் உழைப்பாளி !
எண்ணத்தை விதையாக்கிவன் உழைப்பாளி !
உழைப்பாளி இன்றி உலகம் இல்லை !
உழைப்பாளி இன்றி உயர்வு இல்லை !
உழைப்பாளி இன்றி வாழ்க்கை இல்லை !
உழைப்பாளி இன்றி வசந்தம் இல்லை !
வெயில் மழை பாராது உழைப்பவன் !
வெந்தசோற்றைத் தின்று வாழ்பவன் !
தொழுவதை விடச் சிறந்தது உழைப்பு !
பூசாரியை விடச் சிறந்தவன் உழைப்பாளி !
வியர்வை காயும் முன் கூலியைக் கொடு !
வேதனை வராமல் உழைப்பாளியை காத்திடு !
வியாபாரியிடம் பேரம் பேசினால் தவறு அன்று !
உழைப்பாளியிடம் பேரம் பேசினால் தவறு !
போற்றுவோம் !. உழைப்பைப் போற்றுவோம் !
போற்றுவோம் ! உழைப்பாளிகளைப் போற்றுவோம் !
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
தோன்றின் புகழோடு தோன்றுக ! என்ற
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டானவ்ரே !
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற
பொன்மொழிக்கு இலக்கனமானவரே !
தமிழகத்தின் நிலைத்த பெருமைகளில் ஒன்றானவ்ரே !
தமிழன் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவரே !
பெரிய அய்யா பாதையில் பீடு நடை இட்டவரே !
சின்னையா என்று செல்லமாக அழைக்கப் பட்டவரே !
சிவந்தி மலர் போன்ற முகமுடையவரே !
சிரித்த முகத்திற்கும் சிறந்த அகத்திற்கும் சொந்தக்காரரே !
செய்தி ஒளிபரப்பில் குறுகிய காலத்தில்
செம்மையான செயல் புரிந்து சிகரம் தொட்டவரே !
கட்சி சார்பு இன்றி அனைத்துக் கட்சி செய்திகளுக்கும்
கட்டாயம் இடம் தந்து பிரசுரம் செய்தவரே !
வருடா வருடம் ஆதித்தனார் விருது வழங்கி
வல்லமை மிக்க எழுத்தாளர் கவிஞர்களை வளர்த்தவரே !
"தினத்தந்தி " என்ற பெயருக்கு ஏற்றபடி
தினமும் தந்தி போல செய்திகளை முந்தித் தந்தவரே !
தந்தி தொலைக்காட்சியில் ஈழ எழுச்சியை
முந்தி வழங்கி முத்திரைப் பதித்தவரே !
சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டானவரே !
சிறந்த மனிதராக வாழ்ந்து சிறந்தவரே !
உங்களால் பத்ம ஸ்ரீ பட்டம் பெருமைப் பெற்றது !
உங்களால் இந்தியா விளையாட்டில் பதக்கங்கள் பெற்றது !
ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரே !
ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரரே !
எழுபத்தி நான்கு வயது வரையிலும்
இருபத்தி நான்கு வயது இளைஞனைப போல இயங்கியவரே !
விளையாட்டு வீரராக மட்டுமன்றி தமிழக
விளையாட்டுத் துறையின் துணைத் தலைவரானவரே !
பத்திரிக்கைத் துறையில் தனி முத்திரைப் பதித்தவரே !
பாமரர்களும் செய்தி படித்திட பார்த்திட வழி வகுத்தவரே !
கோடிக் கணக்கான வாசகர்களைக் கவர்ந்தவரே !
கோடிகளுக்கு அதிபதியானபோதும் எளிமையானவரே !
பணக்காரர் என்ற செருக்கு எல்லாத பண்பாளரே !
பார்த்தவர்கள் மீது அன்பு செலுத்திய அன்பாளரே !
தேனீர் கடைகளில் தமிழ் கற்பித்தா ஆசன ஆனவரே !
தேனினும் இனிய இலக்கியங்களுக்கு இடம் தந்தவரே !
மக்களாட்சியின் தூணான பத்திரிக்கையில்
மக்கள் மனங்களில் நின்ற நிலைத்ததூண் ஆனவரே !
செல்லாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு
சகல நாடுகளுக்கும் சென்று வென்று வந்தவரே !
விஞ்ஞானம் வளர வளர பத்திரிக்கையின்
வளர்ச்சியில் விஞ்ஞானம் புகுத்தி வென்றவரே !
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழ்க்கவி நாமக்கல் வரிகளுக்கு உதாரணமானவரே !
தமிழர் தந்தை ஆதித்தனார் செல்லப்பிள்ளையானவரே !
தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் செல்லப்பிள்ளையானவரே !
கல்லூரியை பல்கலைக்கழகமாக வளர்த்தவரே !
கல்லூரிகள் பல நிறுவிகல்விப்புரட்சிப் புரிந்தவரே !
அன்பான உங்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
அனைத்து பலகலைக்கழகங்கள் வழங்கி பெருமைப்பட்டன !
கூடத்து விளக்காக இருந்த எழுத்தாளர் பலரை
குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவரே !
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் !
ஆதித்தனார் காலம் 3 ஊர்கள் சிவந்தியார் காலம் 15 ஊர்கள் !
நீங்கள் பதினாறு அடி பாய்ந்தீர்கள் !
தங்கள் புதல்வர் பாலசுப்பிரமணி 32 அடி பாய்வார்கள் !
ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற போதும்
ஈடு செய்வார் தங்கள் புதல்வர் சந்தேகமில்லை !
தங்களின் தடத்தில் தங்களின் தவப்புதல்வர்
தரணிப் போற்றிட வெற்றி வாகை சூடுவார் !
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்தபோதும்
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்பவரே !
புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !
அகம் புதிதாக உதவுவது புத்தகம் !
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் !
அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !
அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் !
ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் !
அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் !
இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் !
உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் !
எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் !
ஏணியென உயர்த்துவது புத்தகம் !
மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் !
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் !
மனதில் மாற்றம் தருவது புத்தகம் !
மனங்களைக் கொள்ளையடிப்பது புத்தகம் !
கொடிய கோபம் தணிக்க உதவும் புத்தகம் !
கொள்கைகள் அறிந்திட உதவும் புத்தகம் !
இலக்கிய ஈடுபாடு வளர்க்கும் புத்தகம் !
இலக்கியதாகம் தணிக்கும் புத்தகம் !
விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !
விஞ்ஞானிகள் வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !
நேர்முகத்தேர்வில் தேர்வாகக் காரணம் புத்தகம் !
நேரில் பார்க்காதவரையும் நேசிக்க வைக்கும் புத்தகம் !
.
மனக்கவலை நீக்கும் மருந்து புத்தகம் !
மனக்குறைப் போக்கும் காரணி புத்தகம் !
மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் !
மனிதனைக் கண்டுபிடித்துத் தந்தது புத்தகம் !
குற்றவாளியையும் திருத்தி விடும் புத்தகம் !
குற்றங்களைக் களைந்து விடும் புத்தகம் !
நேரத்தை பயனுள்ளதாக்கும் புத்தகம் !
நேர நிர்வாகம் கற்பிக்கும் புத்தகம் !
புத்தரைப் புரிய வைக்கும் புத்தகம் !
சித்தரைச் சிந்திக்க வைக்கும் புத்தகம் !
பெரியாரின் சிந்தனை உணர்த்தும் புத்தகம் !
பெரியோரை மதிக்க வைக்கும் புத்தகம் !
அண்ணாவை அறிய வைக்கும் புத்தகம் !
அறிவைத் தெளிய வைக்கும் புத்தகம் !
திருக்குறளை தெரிய வைக்கும் புத்தகம் !
திருவை வாழ்வில் வழங்கும் புத்தகம் !
வாழ்வியல் உணர்த்துவது புத்தகம் !
வசந்தம் வர வைக்கும் புத்தகம் !
சோதனைகளைச் சாதனைகளாக்கும் புத்தகம் !
வேதனைகளை நீக்கி விவேகம் தரும் புத்தகம் !
வெற்றிகளை நமது வசமாக்கும் புத்தகம் !
தோல்விகளைத் தவிர்த்திட உதவிடும் புத்தகம் !
பலர் புகழ் பெற்றிடக் காரண்ம் புத்தகம் !
பாமரனையும் பாருக்குக் காட்டுவது புத்தகம் !
படித்திட சுகம் தரும் புத்தகம் !
படித்திட சோகம் நீக்கும் புத்தகம் !
படிக்கப் படிக்க உயர்த்திடும் புத்தகம் !
படிக்கல்லாக இருந்து உயர்த்திடும் புத்தகம் !
இரண்டு கால் மிருகத்தை மனிதனாக்கியது புத்தகம் !
இன்னல் நீக்கி இன்பம் தரும் புத்தகம் !
காட்டு மிரண்டிகளை மனிதனாக்கியது புத்தகம் !
காட்டுவாசியையும் அறிஞனாக்கியது புத்தகம் !
கரக்கக் கரக்க பால் தருமாம் காமதேனு !
படிக்கப் படிக்க பரவசம் தரும் புத்தகம் !
இரைக்க இரைக்க தண்ணீர் சுரக்கும் கிணறு !
படிக்கப் படிக்க அறிவு சுரக்கும் புத்தகம் !
உணருங்கள் மிகவும் உன்னதமானது புத்தகம் !
உடலையும் உள்ளத்தையும் செம்மையாக்கும் புத்தகம் !
தினமும் சில மணி நேரம் படியுங்கள் புத்தகம் !
தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம் !
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சிற்பி இல்லை
சிலை உண்டு
அழியாத கலை !
வீழ்ந்த பின்னும்
நடந்தது நதியாக
நீர் வீழ்ச்சி !
வளர்ந்துகொண்டே செல்கிறது
புவி வெப்பமயம்
கொளுத்தும் கோடை !
நடந்தது கொலை
சகஜம் என்றனர்
அரசியல் !
விரித்தது தோகை
மேகம் பார்த்து
ஆண் மயில் !
ஆடி அடங்கியவர்
இறுதி ஊர்வலத்தில்
ஆட்டம் போட்டனர் !
இறந்தும் விடவில்லை
காசு ஆசை
நெற்றியில் நாணயம் !
கோடீஷ்வரருக்கு
இறுதில் எஞ்சியது
ஒரு ரூபாய் நாணயம் !
.
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பெயரை மாற்றுங்கள்
கருணை இன்றி நிராகரிப்பு
கருணை மனுக்கள் ?
பசுமை இலை
வழங்கியது சிகப்பு
மருதாணி !
விழுங்கியது
கோடை விடுமுறையை
இன்றைய கல்வி !
கறிக்கோழியாக
மதிப்பெண்ணுக்காக
மாணவன் !
தேர்வில் வெற்றி
வாழ்வில் தோல்வி
மாணவர்கள் !
உணர்த்தியது
மழையின் வருகை
இடி மின்னல் !
மரங்களை வெட்டி
கட்டிய கட்டிடங்களில்
செயற்கைச் செடிகள் !
இன்பம் துன்பம்
உணர்த்தியது
பிறை நிலவு !
வலைக்கட்டிக் காத்திருந்தது
பூச்சிக்காக
சிலந்தி !
புத்தரை வணங்குவது
புத்தருக்கு அவமானம்
சிங்களர் !
விஞ்சியது
ஜாலியன் வாலாபாக் கொடுமையை
இலங்கைப் படுகொலைகள் !
தாமதமாகவே விழித்தது
தூங்கிய தமிழினம்
லட்சக்கணக்கில் தமிழரை இழந்து !
காடு அதை நாடு ! இரா .இரவி !
காடு அதை நாடு அங்குள்ள
விலங்குகளை வதைக்காமல் நாடு !
மரங்களை வெட்டாமல் நாடு !
நோய் நீங்க வனம் செல் !
சுடுகாடு செல்வதைத் தள்ளிப்போட வனம் செல் !
தூய காற்றை சுவாசிக்க வனம் செல் !
தன்னம்பிக்கை வளர்த்திட வனம் செல் !
விலங்குகளின் பெருமை அறிய வனம் செல் !
வேதனைகளை மறந்திட வனம் செல் !
பச்சைப் பசுமை ரசிக்க வனம் செல் !
பறவைகள் வகை தெரிந்திட வனம் செல் !
அருவிகளின் வாசம் நுகர்ந்திட வனம் செல் !
மலைகளின் வனப்பு ரசித்திட வனம் செல் !
மன அழுத்தம் குறைய வனம் செல் !
மகிழ்ச்சி மனதில் பெருக வனம் செல் !
கோபம் தணித்து சாந்தி பெற வனம் செல் !
கள்ளம் கபடம் ஒழிய வனம் செல் !
இயற்கை ரசிக்க வனம் செல் !
செயற்கை மறந்து களிப்புற வனம் செல் !
உடலுக்கு சுகம் பெற வனம் செல் !
உள்ளத்திற்கு வளம் பெற வனம் செல் !
அரிய விலங்குகளை அறிய வனம் செல் !
அற்புத உயிரினங்களைத் தெரிய வனம் செல் !
துன்பங்களை மறந்து மகிழ்வுற வனம் செல் !
துயரங்களைத் துறந்து துணிவு பெற வனம் செல் !
மரங்களின் மகத்துவம் அறிய வனம் செல் !
அறங்களின் மேன்மை புரிய வனம் செல் !
விழி இரண்டு போதாது வனம் ரசிக்க !
கை இரண்டு போதாது மரம் தழுவ !
மனிதா அழித்த காடுகள் போதும் !
மனிதா அழித்த விலங்குகளும் போதும் !
காடுகளை அழியாமல் காப்போம் !
காற்றுகளை மாசின்றி காப்போம் !
வனம் சென்றால் ரசித்து வா !
மனம் செம்மையாகும் சிந்தித்து வா !
.
வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !
வரிகள் வரிகள் எங்கும் எதிலும் வரிகள் !
வரிசையாக வாங்கும் வரிகள் !
உப்புக்கு வரியா ? என்று தேசப்பிதா அன்று
உணர்ச்சிப் பொங்கிட எதிர்த்தார் !
திருப்பிய பக்கமெல்லாம் வரிகள் !
தவிக்கும் மக்கள் வரிக் கட்டியே !
முகத்தில் வரிகள் விழுந்தது !
மூழ்கி தவித்து மூச்சு திணருகின்றது !
ஜனவரி பிப்ரவரி மார்ச்சுவரி ஆனது
ஜனங்களுக்கு மார்ச்சு வந்தால் மாரடைப்பு !
மத்திய மாநில அரசு ஊழியர் பலருக்கு !
மார்ச் மாதம் ஊதியம் இல்லாமல் போனது !
நின்றால் வரி நடந்தால் வரிகள் !
சென்றால் வரி கடந்தால் வரிகள் !
உண்ண வரி விடுதியில் உறங்க வரிகள் !
உடைக்கு வரி கேளிக்கை வரிகள் !
பெட்ரோலுக்கு வரிகள் ! டீசலுக்கு வரிகள் !
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் வரிகள் !
எங்கும் எதிலும் வரிகள் !வரிகள்! வரிகள் !
இங்கு வரிகள் இன்றி எதுவுமில்லை !
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே !
ஆனந்த சுந்திரம் அடைந்தோம் என்று !
மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
கவிஞர் இரா .இரவி !
சிறுமியின் கால் சிதைந்தது !
சின்னப் புத்திக்காரன் உன் வெடிகுண்டால் !
வெள்ளைக் கோடி ஏந்தி வந்தவர்களையும்
வெட்ட வெளியில் சுட்டவனே !
மருத்துவமனைகள் மீதும் வானூர்தி வழி
குண்டு மழை பொழிந்தவனே !
நேருக்கு நேர் மோதிட முடியாமல்
குறுக்கு வழியில் சதி செய்தவனே !
சிறுவனிடம் வீரம் காட்டிய
சிங்கள ஓநாய்களின் செயல் கொடூரம் !
பன்னாட்டு ராணுவத் துணையுடன்
உள் நாட்டு மக்களைக் கொன்ற கொடியவனே !
காட்டிக் கொடுத்த கயவன் துணையுடன் !
கண்ணான தமிழினத்தை அழித்த வெறியனே !
புத்தப் பிட்சுகளுக்கு இனி என்றும்
புத்தரை வணங்கும் தகுதி இல்லை !
வாய் மூடி மவுனமாக வேடிக்கைப் பார்த்தனர் !
நாங்கள் மன்னித்தாலும் புத்தர் மன்னிக்க மாட்டார் !
கொலைகள் கண்டிக்காமல் இருந்துவிட்டு
கலைநயமிக்க புத்தரை வணங்குவதில் பயனில்லை !
கோயில்களை குண்டுகளால் தகர்த்து விட்டு
கோயில் வந்து திருப்பதி வணங்கும் நீசனே !
அய் நா .விடம் நீ தப்பிக்கலாம் !
அமெரிக்காவிடம் தப்பிக்கலாம் !
உன் மனசாட்சியிடம் தப்பிக்க முடியுமா ?
உனக்கு மனசாட்சி இருக்காது !
மனிதருக்குதானே மனசாட்சி இருக்கும் !
மனிதவிலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
பயத்தால் தினம் நீ செத்து செத்துப் பிழைக்கிறாய் !
பாதியில் முடியும் உன் பயணம் இது உறுதி !
எண்ணிக் கொள் நாட்களை வெகு விரைவில் !
எவரும் காக்க முடியாது உனக்கு வரும் இறுதி !
உன் கதை முடிக்காமல் எமக்கு வராது இறுதி !
உன் கதை முடியும் நாள் எமக்கு தீபாவளி !
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை !
ஆதிக்கம் ஒழியும் !அடிமை விலங்கு உடையும் !
விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும் !
விண் முட்ட தமிழரின் கொடி பறக்கும் !
.
குருவிகள் !கவிஞர் இரா .இரவி !
வீடு இடிக்கப்பட்டு கூடு சிதைந்தது
மனம் தளராமல் மறுபடியும்
குருவிகள் !
கைகள் இன்றி கட்டின கூடுகள்
மிக அழகாக
குருவிகள் !
வான் பறப்பதில் சிறியன
மக்கள் மனதில் பெரியன
குருவிகள் !
பார்ப்பதற்கு அலகோ
அழகோ அழகு
குருவிகள் !
உருவத்தால் சிறிது
உணர்வால் பெரிது
குருவிகள் !
அன்று குடும்ப உறுப்பினர்கள்
இன்று குடும்பங்களே தனித்தனி
குருவிகள் !
பறந்தால் பரவசம்
பார்த்தால் குதூகலம்
குருவிகள் !
வைக்கோல் மாட்டுக்கு உணவு
வைக்கோல் வீட்டுச் செங்கல்
குருவிகள் !
.நவீனம் மனிதனை மாற்றியது
பறவை இனத்தை அழித்தது
குருவிகள் !
ஹைக்கூ ! ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி !
ஏழைகளின் மலர்
பணக்காரர்கள் மலரானது
மல்லிகை !
இன்றைய மனிதர்கள்
சத்து இன்றி
இல்லை பழைய கஞ்சி !
தனியாகப் பேசுகின்றனர்
இல்லத்தரசிகள்
தொடர்களின் பாதிப்பு !
சேதாரத்தால்
சேதரமானார்கள்
வாடிக்கையாளர்கள் !
செய் கூலி இல்லை என்று
சேர்த்தார்கள்
செம்பொன் !
தள்ளுபடி என்று
தள்ளுபடியானது
நாணயம் !
நாங்கள்தான் தங்கம்
எல்லோரும் சொல்கிறார்கள்
தங்க வியாபாரிகள் !
வாங்கினால் அதிகம்
விற்றால் குறைவு
தங்கம் !
.
அவள் ! கவிஞர் இரா .இரவி
வெள்ளையும் இல்லை
கருப்பும் இல்லை
உயரமும் இல்லை
குள்ளமும் இல்லை
பேரழகியும் இல்லை
அசிங்கமும் இல்லை
அறிவாளியும் இல்லை
முட்டாளும் இல்லை
ஆர்ப்பட்டமும் இல்லை
அமைதியும் இல்லை
அவளுக்கு உவமை
அவனியில் இல்லை
புன்னகை செய்தால்
பூரிக்கும் உள்ளம்
மூளையில் நுழைந்து
மூலையில் அமர்ந்தாள் !
காதலர்கள் கவிஞர் இரா .இரவி
ஊடல் காரணமாக
இருவரும் இனி
சந்திக்க மாட்டோம்
என முடிவு எடுத்து விட்டு
இனி எப்போது சந்திப்போம்
என்று சந்திப்பைப் பற்றியே
சிந்தித்து ஏங்குபவர்கள் !
நினைவுச் சிலுவை கவிஞர் இரா .இரவி
பசுமரத்து ஆணியாக
பாவையின் நினைவுகள்
கிறித்தவர்கள் வணங்கும்
ஏசுவிற்கு ஒரே ஒரு முறைதான் சிலுவை
எனக்கு உன்னை நினைக்கும்
ஒவ்வொரு முறையும் நினைவுச் சிலுவை
ஏசு உயிர்த்து எழுந்ததாகச் சொல்வார்கள்
எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை !
தொடர்கதையானது ! கவிஞர் இரா .இரவி
அவளைப் பார்த்தால்
போதும் என்று நினைத்தேன்
பார்த்தேன் !
அவளிடம் பேசினால்
போதும் என்று நினைத்தேன்
பேசினேன் !
அவளைத் தீண்டினால்
போதும் என்று நினைத்தேன்
தீண்டினேன் !
பார்த்தல் பேசல்
தீண்டல்
தொடர்கதையானது !
கோலம் ! கவிஞர் இரா .இரவி
கோலம் போடும் உந்தன்
கோலம் காண !
அதிக நேரம் தூங்கும் நான்
அதிகாலை எழுந்தேன் !
உதய சூரியனை
உன்னால் பார்த்தேன் !
பனி மலரையும்
பார்த்து ரசித்தேன் !
நீயும் வந்தாய் !
கதவு திறந்தாய் !
கூட்டித் தள்ளினாய் !
வாசல் தெளித்தாய் !
புள்ளி வைத்தாய் !
கோலம் போட்டாய் !
கோலம் பார்த்தேன் !
கல்வெட்டாய்ப் பதிந்தது !
கன்னி உன் நினைவு !
பார்த்துப் போமா ! கவிஞர் இரா .இரவி !
உன்னை வழியனுப்பும்
உன் அம்மா பார்த்துப் போமா !
என்கிறார்கள் !
சாலையில் கடந்தும் செல்லும் நீ
என்னை பார்த்துவிட்டுத்தான்
செல்கிறாய் !
பார்த்து விட்டனர் ! கவிஞர் இரா .இரவி !
யாரும் பார்க்காதபோது
இருவரும் பார்த்துக் கொள்கிறோம் !
நாம் பார்த்துக் கொள்வதை
எல்லோரும் பார்த்து விட்டனர் !
அழகோ அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ பேசுவது அழகுதான்
நான் பேசாமலே
அதனை ரசிப்பது வழக்கம் !
ஆனாலும்
நீ பேசாமல்
இருக்கும்போதோ
அழகோ அழகு !
கொள்ளை அழகு !
.
அழித்த கோட்டை ! கவிஞர் இரா .இரவி !
உச்சி எடுத்து சீவ வேண்டாம் என்று
அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய் !
இன்று வரை உச்சி எடுப்பதில்லை !
கிழித்த கோட்டை தாண்டுவதில்லை
என்பதை போல
நீ அழித்த கோட்டை
நான் போடுவதே இல்லை !
தொட்டு விட்டது ! கவிஞர் இரா .இரவி !
நெற்றியில் நீ வைத்த
முத்தம் !
முத்தமே அல்ல !
என்னுள் யுத்தம் செய்தது !
ஊடுருவி உயிர் வரை சென்று
தொட்டு விட்டது !
சத்து ! கவிஞர் இரா .இரவி !
இதழ்களில் நடந்த முத்தம்
நதி கடலில் கலந்த
நல்ல சங்கமமாய் !
கடலில் கிடைப்பது முத்து !
முத்தத்தில் கிடைப்பது சத்து !
எனக்கு வலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம் !
மின் அஞ்சலில் அனுப்பு போதும் !
அஞ்சலில் அனுப்பினால்
அஞ்சல்காரர் உரை மீது
பதிக்கும் முத்திரைகள்
உனக்கு வலிக்காவிட்டாலும்
எனக்கு வலிக்கும் !
அது எப்படி ? கவிஞர் இரா .இரவி !
ரோஜா அழகுதான் !
உலகம் அறிந்த உண்மைதான் !
நீ தலையில் சூடியதும்
ரோஜாவின் அழகு
குறைந்து விடுகிறது !
உன் அழகோ
கூடி விடுகிறது !
அது எப்படி ?
என் சுவாசமே நீதானே ! கவிஞர் இரா .இரவி !
மல்லிகை வாசம்தான் !
ஆனால்
உன் வாசத்தின் முன்னே
மல்லிகை வாசம்
தோற்று விடுகின்றது !
உன் வாசத்திற்கு இணையான
வாசம் உலகில் இல்லை
என் சுவாசம் சொல்லியது !
என் சுவாசமே நீதானே !
எல்லாமே அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ நின்றால் அழகு !
நீ நடந்தால் பேரழகு !
நீ பார்த்தால் அழகு !
நீ முறைத்தால் பேரழகு !
நீ சிரித்தால் அழகு !
நீ சிகை கோதினால் பேரழகு !
எல்லாமே அழகு !
அழகு கூடி விடும் ! கவிஞர் இரா .இரவி !
ஆடைகளில் சுடிதார்
அழகுதான் !
அனைவரும் அறிந்ததுதான் !
ஆனாலும்
அவள் அணிந்ததும் சுடிதார்
அழகு கூடி விடும்
அற்புதம் நிகழ்த்துவது
அவளின் அழகு !
காண வந்தேன் ! கவிஞர் இரா .இரவி !
கடவுள் நம்பிக்கை
எனக்கு
இல்லாவிட்டாலும்
திருவிழாவிற்கு வந்தேன்
கடவுளை வணங்க அல்ல !
கன்னி உன்னைக் காண
வந்தேன் !
கடவுளுக்காக வந்தவர்கள்
கடவுளை தரிசிக்க
உனக்காக வந்த நான்
உன்னை தரிசித்தேன் !
.நினைத்தாலே இனிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
சுவைத்தால்தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும்
இனிய காதல் !
பாட்டு ! கவிஞர் இரா .இரவி !
என் செல்லிடப் பேசியில்
எந்தப் பாட்டையும்
வைக்கவில்லை நான் !
ஏன் தெரியுமா ?
பாட்டுப் பிடித்த ஆர்வத்தில் நீ
பேசாமல் இருந்து விடக்
கூடாது !
காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி
உனைப்பார்க்கும்
நான் மட்டுமல்ல
எல்லா ஆண்கள் மட்டுமல்ல
எல்லாப் பெண்களும்
வியந்துப் போகிறார்கள்
இவ்வளவு அழகா ? என்று !
-----------------------------------------------
உனக்கானக் காத்திருப்பு சுகம்தான்
வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல
வழி மேல் மனதையும் வைத்துக் காத்திருக்கிறேன் !
தாமதமாகும் நிமிடங்களில்
உன் மீது கோபம் வந்தாலும்
வந்த கோபம் நீ வந்ததும்
பறந்து விடுகின்றன !
-----------------------------------------------
ஒற்றை ரோஜா தந்தேன்
திரும்பி விட்டாய் !
வாங்க மறுக்கிறாயோ ?
என்று நினைத்தேன்
வைத்து விடுங்க !
என்றாய் !
வைத்து விட்ட பின் ரோஜா
என்னைப்பார்த்து விரல் ஆட்டியது !
-----------------------------------------------
விழிகள் சந்தித்து
இதயங்கள் இடம் மாறி
பரிசுப் பொருட்கள்
பரிமாறியது காதலின் தொடக்கம் !
இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !
மாலை மாற்றத்திற்குப் பின்
உடல்கள் பரிமாற்றம் காதலின் உச்சம் !
-----------------------------------------------
ஓரக் கண்ணால்
ஒரே ஒரு பார்வைதான் பாவை பார்த்தால் !
என்னுள் பரவசம்
எண்ணிலடங்கா இன்பம் !
பார்வையின் சக்தி
பார்த்தவர்களுக்குதான் புரியும் !
கூர்ந்து பார்த்து
நங்கூரம் இட்டுச் சென்றாள் !
கப்பல் என நின்று விட்டேன்
நான் அதே இடத்தில !
ஹைக்கூ ( சென்ரியூ )கவிஞர் இரா .இரவி !
பசித்தாலும் புல் உண்ணாது
பசிக்காமல் மானை உண்ணாது
புலி !
உண்பது பச்சைப்புல்
தருவது வெள்ளைப்பால்
பசு !
நன்றிக்கு இலக்கணம்
திருடனின் சிம்மசொப்பனம்
நாய் !
நிறம் கருமை
குரல் இனிமை
குயில் !
மேகம் கண்டதும்
தேகம் சிலர்க்கும்
மயில் !
சமாதானச் சின்னம்
சந்தோசப்படும் வானம்
புறா !
இழுத்துச் சென்றது
பன்மடங்கு எடை
எறும்பு !
தண்டவாளமின்றி
பயணமானது ரயில்
ரயில் பூச்சி !
கண்டதும் காணமல்
போனது கவலை
வண்ணத்துப்பூச்சி !
கற்பித்தது
விடாமுயற்சி
எட்டுக்கால் பூச்சி !
ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
காட்சிப் பொருளானது
கிராமத்தில்
ஏர் கலப்பை !
காற்று உள்ளபோதே
தூற்றலாம்
தூற்ற நெல் ?
விளைச்சல் குறையும்
விலைகள் ஏறும்
உலகமயம் !
ஈரமில்லா இலை உதிரும்
ஈரமில்லா மனிதன்
வீழ்வான் !
காற்றால் உயர்ந்தது
காற்றால் வீழ்ந்தது
சருகு !
பணம் வாங்கி
பாகனிடம் தந்தது
யானை !
விமானம் தொடர் வண்டி இயக்கியும்
வீட்டில் கையில் கரண்டி
புதுமைப்பெண் !
முள்ளிலிருந்து விடுதலை
தலைவி தலையில் சிறை
ரோஜா !
சலிப்பதில்லை
பார்த்திடவும் பேசிடவும்
காதலி !
ஏற்றத்தாழ்வுகள் தகர்க்கும்
சமநிலை கற்பிக்கும்
காதல் !
முக்காலமும் வாழும்
முப்பால் விருந்து
திருக்குறள் !
அழகாக இல்லை
ஆரோக்கியம் உண்டு
கீரை !
வானிலிருந்து பயணம்
பூமியில் சங்கமம்
மழை !
.
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி !
அன்பு என்ற விதை
விருட்சமானது
காதல் !
தேவதை சாத்தான்
இரண்டும் உண்டு
மனதில் !
ஓராயிரம் அதிர்வுகள்
கண்டதும் உள்ளத்தில்
அவள் புன்னகை !
தங்கக்கூண்டும்
சிறைதான்
கிளிக்கு !
வெல்வேன் என்ற
நினைப்பே
முதல் வெற்றி !
ஆடிப்பட்டம்
தேடி விதைத்தனர்
வீட்டடி மனை கற்கள் !
படியில் பயணம்
நொடியில் மரணம்
படித்துவிட்டு படியில் !
கரம் சிரம் புறம்
நீட்டாதீர்கள்
படித்துவிட்டு நீட்டினர் !
மாற்றுத்திறனாளி நிற்கையில்
மாற்றுத்திறனாளி இருக்கையில்
மற்றவர்கள் !
அன்று தொண்டு
இன்று கொள்ளை
கல்வி நிறுவனங்கள் !
உருவமின்றியும் தாலாட்டியது
கிளைகளை
தென்றல் !
.
என்னவள் ! கவிஞர் இரா .இரவி !
நடந்து வரும் நந்தவனம் !
நடமாடும் நயாகரா !
வலம் வரும் வானவில் !
வஞ்சி வற்றாத ஜீவநதி !
பசிப் போக்கும் அட்சயப்பாத்திரம் !
பார்ப்பதற்கு அஜந்தா ஓவியம் !
சிரித்தால் ஜொலிக்கும் நட்சத்திரம் !
சிங்காரி அவள் சித்தன்னவாசல் !
கண்களால் பேசும் சிலை !
கண்டால் பேரின்ப நிலை !
மண்ணில் உள்ள சொர்க்கம் !
மாறாத நிரந்தர மார்கழி !
கர்வம் இல்லாக் கண்ணழகி !
காந்தப் பேச்சுக் குரலழகி !
வாசம் வீ சும் வனப்பழகி !
நேசம் காட்டும் பாச அழகி !
உலக அழகுகள் வியக்கும் அழகி !
உணர்வில் கலந்த உயிரழகி !
பெண்களே ரசிக்கும் பேரழகி !
நான் ருசிக்கும் கனியழகி !
அறிவில் அவள் அறிவாளி !
அவள் முன் நான் கோமாளி !
அத்தனை உவமைகளும் !
அற்புதமாய்ப் பொருந்தும் !
படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
ஓவியம் வரையும் ரங்கராஜன் என்ற பெயரை !
ஓவியர் மாலிபோல வர வாலி என்று வைத்தார் பாபு !
ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிடடாலும் !
கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி !
திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்தவாலி!
திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி !
மயக்கமா! கலக்கமா ! கவியரசு பாடல் கேட்டு வாலி!
மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி !
சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி !
சொக்க வைக்கும் பாடல்களின் ஆசிரியர் வாலி !
பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி !
பல்லாண்டுகளாய் திரையில் நிலைத்த நின்ற வாலி !
வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி !
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம் .ஜி .ஆர் !
உன் பெயர் பெயர் இடம் பெறாது என்றதும் வாலி !
உலகம் சுற்றும் பன் என்று பெயர் மாற்றவேண்டும் !
உங்களுக்குச் சம்மதமா என்று கேட்ட வாலி !
உடன் சிரித்து ரசித்த உயர்ந்த மனிதர் எம் .ஜி .ஆர் .!
எம் .ஜி .ஆருக்கு நான் ஆணையிட்டால் என்று எழுதி!
எம் .ஜி.ஆரை ஆணையிடும் பதவிக்கு வர வைத்த வாலி!
மல்லிகை என் மன்னன மயங்கும் என்று எழுதி !
மதுரை மல்லிக்கு மங்காப் புகழ் சேர்த்த வாலி !
தனி ஈழத்திற்காகவும் கவிதைகள் வடித்த வாலி !
தனிக் கவிதைகளிலும் முத்திரைப் பதித்த வாலி !
பாடல் கவிதை கதை கட்டுரை வடித்த கவிஞர் வாலி !
படைப்புகளில் என்றும் வாழ்வார் மரணம் இல்லை !
ஓய்வறியா உழைப்பாளி உரத்த சிந்தனையாளர் வாலி !
ஒப்பற்ற கவிதைளை வடித்துத் தந்தவர் வாலி !
கவியரங்கங்களில் தலைமை வகித்தவர் வாலி !
கை தட்டல்களைப் பரிசாகப் பெற்றவர் வாலி !
கண்ணதாசனை தாடி இல்லா தாகூர் என்றார் வாலி !
கற்பனைக் கவியால் தாடி உள்ள தாகூர் ஆனார் வாலி !
கண்ணதாசனை மீசை இல்லா பாரதி என்றார் வாலி !
கற்க்கண்டுக் கவியால் மீசை உள்ள பாரதியானார்வாலி!
படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! மரணம் இல்லை ! மரணம் இல்லை !
தானத்தில் சிறந்தது ரத்த தானம் ! கவிஞர் இரா .இரவி
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !
குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !
விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !
பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !
நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !
ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !
ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல !
பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !
அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனருடன் !
அனைவரும் ஆண்டுதோறும் தருகின்றனர் !
நானும் அவர்களோடு சேர்ந்து தருகின்றேன் !
நன்மை செய்தால் நன்மை கிட்டும் நமக்கு !
பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !
இறைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் !
உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !
உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி !
இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !
தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் தலை காக்கும் உண்மை !
மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !
கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !
தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !
தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !
காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
காவியக் கவிஞர் வாலியே !
உந்தன் மரணம் எங்களுக்கு வலியே !
மாலுமி இழந்த கப்பல் போல நாங்கள்
மட்டற்ற கவிஞரை இழந்து தவிக்கிறோம் !
வாலிப வாலி என்பது உண்மை !
வாலிபக்கவியை எண்பது கடந்தும் எழுதியவர் !
புதியவானம் புதிய பூமி என்று எழுதி !
புத்துணர்வை விதைத்தவர் வாலி !
'ஏமாற்றாதே ! ஏமாறாதே !என்று எழுதி !
எமக்கு மனிதநேயம் கற்பித்த வாலி !
கண் போன போக்கிலே கால் போகலாமா ?
காளையரை நெறிப் படுத்திய வாலி !
தரை மேல் பிறக்க வைத்தான் என்று எழுதி !
துயரில் வாடும் மீனவர்களின் கண்ணீர் பாடிய வாலி !
காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன் !
காற்றில் பாட்டில் கலந்து என்றும் நின்ற வாலி !
அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் வாலி !
அய்யா பெரியார் பற்றியும் கவி வடித்த வாலி !
--
.
ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
காட்சிப் பொருளானது
கிராமத்தில்
ஏர் கலப்பை !
காற்று உள்ளபோதே
தூற்றலாம்
தூற்ற நெல் ?
விளைச்சல் குறையும்
விலைகள் ஏறும்
உலகமயம் !
ஈரமில்லா இலை உதிரும்
ஈரமில்லா மனிதன்
வீழ்வான் !
காற்றால் உயர்ந்தது
காற்றால் வீழ்ந்தது
சருகு !
பணம் வாங்கி
பாகனிடம் தந்தது
யானை !
விமானம் தொடர் வண்டி இயக்கியும்
வீட்டில் கையில் கரண்டி
புதுமைப்பெண் !
முள்ளிலிருந்து விடுதலை
தலைவி தலையில் சிறை
ரோஜா !
சலிப்பதில்லை
பார்த்திடவும் பேசிடவும்
காதலி !
ஏற்றத்தாழ்வுகள் தகர்க்கும்
சமநிலை கற்பிக்கும்
காதல் !
முக்காலமும் வாழும்
முப்பால் விருந்து
திருக்குறள் !
அழகாக இல்லை
ஆரோக்கியம் உண்டு
கீரை !
வானிலிருந்து பயணம்
பூமியில் சங்கமம்
மழை !
.
ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி .
முறிந்தது
முதுகெலும்பு
விவசாயம் !
வாடியப் பயிரைக் கண்டால்
வாடும் வள்ளலார்
விவசாயி !
நீர் உயர
தானும் உயரும்
தாமரை !
வெட்கும்
அக்றிணை
நாணல் !
இயந்திரமனிதன் விஞ்ஞானம்
மனிதன் இயந்திரமானான்
உலகமயம் !
ஆரம்பத்தில் கிட்டும்
அப்புறம் கிட்டாது
நல்லபெயர் மனைவியிடம் !
தானம் தர முடியாதது
தானே பயன்படுத்துவது சிறப்பு
மூளை !
அயல்நாட்டில் இல்லை
நம்நாட்டில் தொல்லை
சாதி !
யானையின் மதமானது
மனிதனின்
மதம் !
பறிபோனது
பகுத்தறிவு
சாதி மத வெறி !
வரவேண்டும் இயற்கையாக
வரக்கூடாது செயற்கையாக
மரணம் !
மகத்தானது
மதிக்க வேண்டியது
மனிதநேயம் !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இர .இரவி !
பாலைவன வெயிலில்
நடந்தும் வியர்ப்பதில்லை
ஒட்டகம் !
கணினியுகத்தில்
காட்டுமிராண்டித்தனம்
கெள்ரவக் கொலை !
விற்றப்பின்னும்
மனம் வீசியது
பூக்கூடை !
திறக்கவரவில்லை
அவசரத்திற்கு அவசரமாக
அவசர வழி !
நிறமோ வெள்ளை
பெயரோ
வெள்ளாடு !
வந்து சேர்ந்தது
அணைந்து முடிந்ததும்
தீ அணைப்பு வண்டி !
முட்டாளாக்கி
முடிந்தளவுக்குச் சுருட்டு
சாமியார்கள் மூளை !
மலர்ந்த மலர்
மழலையின் சிரிப்பு
மனதிற்கு மகிழ்வு !
அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த
அருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
வயலில் மாடு மேய்த்த சிறுவர்களிடம்
வரவில்லையா ? பள்ளிக்கு என்று வினவினார் !
மாடு மேய்த்தால் சோறு கிடைக்கும்
பள்ளிக்கு வந்தால் சோறு கிடைக்குமா ?
சோறு போட்டால் பள்ளிக்கு வருவாயா ?
சோறு போடுகிறேன் பள்ளிக்கு வா !
மதியஉணவு பள்ளிகளில் வழங்கிய வள்ளலார் !
மாணவர்களின் பசிப் போக்கிய தாயுமானவர் !
மாட்டுக்குச்சிப் பிடித்த கரங்களில் எல்லாம் !
ஏட்டுப் புத்தகங்களை ஏந்திட வைத்தவர் !
படிக்காத பாமரர்களையும் படிக்க வைத்தார் !
பட்டங்கள் பதவிகள் பெறக் காரணமானார் !
எல்லோருக்கும் கல்வி கிடைத்திடச் செய்தார் !
ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் நீக்கினார் !
சீருடை வழங்கி மாணவர்களை ஓருடையாக்கினார் !
சின்னக்குழந்தைகளின் மன வாட்டம் போக்கினார் !
மூடநம்பிக்கைகளை முற்றிலும் தகர்த்தார் !
முன்னேற்றப் பாதைகள் பல வகுத்தார் !
அழியாத செல்வம் அறிவுச்செல்வம் !
அற்புதக்கல்வியை வழங்கிய கல்விவள்ளல் !
மருத்துவர் பொறியாளர் பெருகிடச் செய்தார் !
மக்களின் நலனை உயிர்மூச்சாகக் கொண்டார் !
அனைவரின் நெஞ்சத்தில் வாழ்கிறார் காமராசர் !
அகிலத்தில் காமராசருக்கு இணை காமராசரே !
அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த
அருந்தமிழர் காமராசர் !
.
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
நிரந்தரமானது
தூக்கம்
மரணம் !
சிரிக்கும் பிச்சைக்காரன்
சாலையோர வியாபாரியிடம்
கையேந்தும் காவலர் !
மதித்து
மிதித்தார்கள்
யானை லத்தி !
பாரபட்சம் கடவுளிடமும்
வெளியே மதுரைவீரன் முனியாண்டி
மீனாட்சி கோயில் !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
வழி மேல் விழி வைத்து
முதியோர் இல்லத்தில்
முதியோர்கள் !
நேரம் கிடைத்தால்
ரசித்து மகிழுங்கள்
வானம் !
உதட்டில் புன்னகை
உள்ளத்தில் ரணம்
திருநங்கைகள் !
வாசிக்க சுகம்
ரசிக்கும் மனம்
கவிதை !
வாக்குப்பிச்சை எடுத்தவர்களிடம்
வாக்குப்பிச்சை
மேல்சபை தேர்தல் !
மரங்களை வெட்டி
யாகம் நடந்தது
மழைக்காக !
வேண்டாம் வன்சொல்
வாடிடும் பிஞ்சு
அன்போடு கொஞ்சு !
வெள்ளத்தில் பக்தர்கள்
காக்கவில்லை
கடவுள் !
மின்தடையிலும்
ஒளிர்ந்தது
மின்மினி !
அன்று சேவைக்காக
இன்று தேவைக்காக
அரசியல் !
அன்று மக்களுக்காக
இன்று தன் மக்களுக்காக
அரசியல் !
கற்பித்தன ஒழுக்கம்
காந்தியடிகளின்
மூன்று குரங்குகள் !
திறந்திடுவார்கள்
உடையுமோ பயத்தில்
அணை !
பைத்திமாகியும்
காரியமாக
அரசியல்வாதி !
ஆதலினால் காதல் செய்வீர் ! கவிஞர் இரா .இரவி !
காதலால் கவலை போகும் !
கல்யாணம் சிறக்கும் !
காதல் சொன்னால் புரியாது !
காதல் காதலித்தாலே புரியும் !
தென்றலால் இலைகள் அசைவது !
மொட்டுகள் மலர்களாக மலர்வது !
பூமியில் மழை பெய்வது !
விதைகள் மரமாக வளர்வது !
அருவியில் நீர் கொட்டுவது 1
எப்படி வந்தது தெரியாது !
இயற்கையாக வருவது !
அப்படித்தான் காதலும் !
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அவசியம் காதல் வரும் !
ஒருதலைக் காதலாவது
ஒரு முறையேனும் வந்திருக்கும் !
அரும்பிய காதல் மலராமல்
கருகி இருக்கும் !
பிறப்பும் இறப்பும் நிச்சயம் !
காதல் அனுபவுமும் நிச்சயம் !
காதல் பலவகை உண்டு !
மனதிற்குள் மறைந்த காதல் !
உதடுகள் உச்சரிக்காத காதல் !
உச்சரித்து ஏற்காத காதல் !
காதல் இல்லை என்றால்
இந்த உலகம் இல்லை !
காதலை உணர்ந்த பெற்றோர்கள்
ஊருக்குப் பயந்து எதிர்ப்பார்கள் !
காதல் திருமணத்தை அங்கீகரியுங்கள் !
கட்டாயம் வரதட்சணை ஒழியும் !
பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
பெண் பிறந்தால்
பேதலிக்கும் மனிதர்களே!
ம்ருமகள் கிடைக்காமல்
மண்டியிடும் நாள் வரும் !
ஆட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
மாட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
கோழிக்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ?
பெண்ணிற்கு முன்னுரிமை
பேருந்தில் தந்தோம் !
திரையரங்கில் தந்தோம் !
இல்லத்தில் தந்தோமா ?
இதயத்தில் தந்தோமா ?
இல்லதரசிக்குத் தந்தோமா ?
உணவு உண்பது உடை உடுப்பது
உறக்கம் கொள்வது
இருபாலருக்கும் பொது !
ஒழுக்கம் மட்டும் பெண்ணிற்கு மட்டும்தானா ?
ஆணிற்கு வேண்டாமா ?
பெண்ணுரிமை பற்றிப்
பேசிவிட்டு வந்து
எதிர்த்துப் பேசிய
இல்லதரசியை எட்டி உதைக்கும் அவலம் .!
பெண்ணுரிமை ஏட்டில் எழுத்தில்
தந்தால் போதாது !
பெண்ணுரிமை நாட்டில் நடைமுறையில்
வீட்டில் தர வேண்டும் !
விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !
எங்கள் வாழ்வில் இரவும் பகலும்
இரண்டும் ஒன்று !
விளக்கு அணைந்த வினாடிகளில்
நீங்கள் அடையும் தவிப்பு !
வாழ்நாள் முழுவதும் வாடிக்கையானது !
விழிகளில் பார்வை இழந்த எங்களுக்கு !
கண்ணாமூச்சு விளையாடி
கால் தவறி விழுவீர்கள் !
காலமெல்லாம் எங்களுக்குக்
கண்ணாமூச்சு விளையாட்டானது !
கண்ணில் தூசி விழுந்தால்
கணப் பொழுதில் துடிப்பீர்கள் !
கண்களே தூசியானதால்
தூசி விழுந்து துடிப்பதில்லை !
பின்புறமாய வந்து விழிகளை மூடி
யார் என்று வினவுவர் !
பதில் கூற இயலாது
பறி தவிப்பீர் கண்ணுடையோர் !
காதுகளே எங்களுக்குக் கண்களானதால்
குரலை வைத்தே கூறிடுவோம் !
எங்களின் விரல்களே விழிகள் !
விரல்களால் தானே வாசிக்கின்றோம் !
விழியிருந்தும் அறிவுப் பார்வையற்றோர் உண்டு
விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
மிருகத்தையும்
மனிதனாக்கியது
மழலையின் சிரிப்பு !
களத்துமேட்டில் குவித்த நெல்
குறையவில்லை அப்படியே
கிராமங்களில் !
தேவைப்பட்டது பணம்
நடத்தினார்
காதணி விழா !
ஒய்வுக்குமுன்
மகள் திருமணம்
அரசு ஊழியர் !
விமானம் ஓட்டினாலும்
வீட்டில் சமையல்
பெண்கள் !
சோழியன் குடுமி
சும்மா ஆடியது
காற்று !
வைகுண்டத்திற்கு வழி சொன்னவர்
மறந்தார்
தன் வீட்டிற்கு வழி !
இன்றும் தொடர்கின்றது
மன்னனின் சந்தேகம்
கூந்தலின் மணம் இயற்கையா ?
மரம் இழந்த இலை
சருகானது
பெற்றோர் இழந்த குழந்தை ?
ஒன்றும் ஒன்றும் இரண்டு
குடும்பம் ஒன்றாய் இருப்பது நன்று
பிரிவினை பெரிய வினை !
வயதைக் குறைக்கும்
வாழ்நாளை நீடிக்கும்
இலக்கிய ஈடுபாடு !
அளவிற்கு மிஞ்சினால்
அமுதமும் திகட்டும்
திகட்டாத தமிழ் !
.
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
இனிய வரவேற்பு
இரடிப்பு மகிழ்ச்சி
கோடை மழை !
சக்தி உள்ளவ்ரை
நகர்ந்துகொண்டே
நிமிட முள் !
இன்றும் வாழ்கின்றனர்
மலை முழுங்கி
மகாதேவன்கள் !
நாய் விற்ற காசு
குரைத்தது
மனதில் !
அன்று " நானே கள்வன் "
மாண்டான் மன்னன்
இன்று ?
ஆராய்ச்சி மணி
அடித்த பசு
அரண்மனை பிரியாணியில் !
முரசுக் கட்டிலில்
தூங்கிய புலவன்
முதுகை முறித்தனர் !
மக்களின் மறதி
அரசியல்வாதிகளுக்கு வசதி
புதுப்புது ஊழல் !
நாட்டு நடப்பு
வறுமையிலும் செம்மை ஏழைகள்
செழுமையிலும் சீரின்றி பணக்காரர்கள் !
காந்தியோடு முடிந்தது
அரசியிலில் நேர்மை
நேர்மையின்மை முதல் தகுதி !
வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !
வீட்டில் ஆணி அடித்தால் உடன் !
வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் !
வீட்டுக்காரர் அருகில் வசித்தால் !
வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம்தான் !
சொந்த வீட்டை விற்று விட்டு !
வாடகை வீடு வந்தால் வலி அதிகம் !
நம் குழந்தை அவர் குழந்தை சண்டையிட்டால் !
நம் குழந்தை அடங்கிப் போக வேண்டும் !
நாய் வளர்க்க நம் மகள் ஆசைப்பட்டால் !
நாயை விட அதிகம் குரைப்பார் வீட்டுக்காரர் !
வருடா வருடம் வாடகை ஏற்றுவார் !
வாய் பேசாமல் தந்தாக வேண்டும் !
வாடகை வீட்டில் குறை இருந்தால் !
வீட்டுக்காரரிடம் பயந்து சொன்னால் !
இஷ்டம் என்றால் இரு !கஷ்டம் என்றால் போ!
இஞ்சி தின்ன குரங்குப் போல கத்துவார் !
பிடிக்காத புதிதாக வந்த வீடு !
பிடிக்கத் துவங்கி மனம் ஒப்பும் !
வீட்டைக் காலி செய்யச சொல்லி !
வீட்டுக்காரர் உத்தரவு போடுவார் !
மறுபடியும் வீடு பார்க்கும் படலம் !
மொத்தமாக முன்தொகை கேட்பார்கள் !
சொந்த வீடு கட்டும் ஆசையில் !
சொந்தமாக மனை வாங்கி ஏமாந்தோம் !
வாடகை வீடு மாறி மாறி குடும்பத்திற்கு !
வலிக்கிறது நெஞ்சம் துக்கமே மிச்சம் !
படிவங்கள் பூர்த்தி செய்யும் போது !
பார்த்தால் நிரந்தர முகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும் !
இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு !
என்று சொல்லி வைத்தனர் வீடு மாறியே நொந்தோம் !
குறைந்த பட்சம் ஆதார் அட்டை கூட !
கொடுப்பதில்லை வீடு மாறியவர்களுக்கு !
ஒருவனுக்கு பத்து வீடுகள் உண்டு !
பலருக்கு ஒரு வீடு கூட இல்லை !
எட்டு அடுக்கு மாளிகையில் ஒரே ஒரு குடும்பம் !
எட்டிப் பார்க்கும் குழாயில் பல குடும்பம் !
அனைத்து வீடுகளையும் அரசுடமையாக்கி !
ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு மட்டும் தாருங்கள் !
என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !
சௌந்தரராஜன் என்பது பெயர் மட்டுமல்ல !
சௌந்தரமான குரலின் ராஜன் நீ !
உனது தாய் மொழி தமிழ் இல்லை !
உச்சரிப்பில் உச்சமே உன் எல்லை !
உனது தாய் மொழி சௌராஷ்டிரம் மொழி !
உனது வாய் மொழி செம்மொழி தமிழ் மொழி !
கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை !
காதுகளில் தேனாகப் பாய்ச்சியவன் நீ !
கவியரசு கண்ணதாசனின் கருத்துக் கல்லை !
கண் கவரும் சிலையாக வடித்த சிற்பி நீ !
மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களிடமும்
முத்திரைப் பதித்த சகலகலா வல்லவன் நீ !
எம் .ஜி .ஆர் . சிவாஜி இரு துருவத்திற்கும் !
இரண்டு குரலில் இனிமையாகப் பாடிய ஒருவன் நீ !
பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை
பாடலுக்கு பட்டுக் கட்டியவன் நீ !
மக்கள் திலகம் எம் .ஜி .ஆருக்கு நூறு சதவிகிதம் !
முற்றிலும் என்றும் பொருந்தியது உந்தன் குரலே !
வேறு பலர் அவருக்குப் பாடி ப் பார்த்தார்கள் !
விரும்பவில்லை ரசிகர்கள் கூட்டம் !
செவாலியர் சிவாஜியின் சிறப்பான நடிப்பை !
சிம்மக்குரலில் கர்ஜித்துப் பாடியவன் நீ !
யாரை நம்பி நான் பிறந்தேன் பாடலின் மூலம் !
யாருக்கும் பிடித்தவன் ஆனாய் நீ !
மலர்ந்து மலராத பாடல் மூலம் !
மக்கள் மனதை கொள்ளை அடித்தவன் நீ !
பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி !
கோடிகளுக்கு மேல் ரசிகர்களை உனக்கு !
தற்கொலைக்கு முயன்றாய் முன்பு ஒருமுறை !
துடித்துப் போனோம் கேள்விப் பட்டு !
தானாகவே மரணம் வந்தது உன் உடலுக்கு !
தனி இடம் உண்டு என்றும் உன் குரலுக்கு !
மதுரையில் மாநாடுப் போல நடந்தது !
மண்ணின் மைந்தன் உந்தன் பாராட்டு விழா !
ஒலிநாடாவிற்கும் உனது இசை நிகழ்ச்சிக்கும் !
ஒரு வேறுபாடு கூட என்றும் இருந்ததில்லை !
படிக்காத பாமர்கள் பலருக்கும் தமிழ்
படிப்பித்த பாடல் ஆசான் நீ !
உழைப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !
படிப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !
ஒரு காலத்தில் நேயர்களின் சொர்க்கமாக இருந்த !
இலங்கை வானொலியில் எப்பவும் ஒலித்தது உன் பாடலே !
.ஒப்பற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடி !
உலகத் தமிழர்களை எழுந்து நிற்க வைப்பவன் நீ !
உயிர் உன் உடலை விட்டு பிரிந்திட்டப் போதும் !
உயிராய் வாழும் ரசிகர்கள் உள்ளத்தில் உன் பாடல் !
உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும் !
பாடலால் என்றும் வாழ்வாய் எங்களிடம் !
மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
வெப்ப பூமியில் குளிராடை அணிந்து !
விளையாடும் முட்டாள் விளையாட்டு !
சதி செய்து போலியாக ஆடும் ஆட்டம் பார்த்து !
சகோதரர்களிடையே குடும்பத்தில் சண்டை !
முடிவில்தான் தெரியும் விளையாட்டின் முடிவு
முடிவை முடிவு செய்து ஆடுகின்றனர் !
விளையாடும் முன் யார் தோற்பது முடிவெடுத்து
விளையாட்டுக்கு விளையாடுகிறார்கள் !
பிடிக்க வேண்டிய நல்ல பந்தை !
பிடிக்காமல் கீழே விட்டு நடிக்கின்றனர் !
வேண்டுமென்றே ஓங்கி தூக்கி அடித்து
விளையாடி பிடிக்க விட்டு விடுகின்றனர் !
தடுக்க வேண்டிய பந்தை வேண்டுமென்றே
தடுக்காமல் விட்டு நான்கு ஆக்கி விடுகின்றனர் !
ஆறு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
ஒரு ஓட்டம் எடுத்து முடிகின்றனர் !
நான்கு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
நன்றாக விலகி குச்சியில் விழ வைக்கின்றனர் !
எதிரணி வெளியேற்றும் முன்பே திட்டமிட்டு !
இவர்களாகவே வெளியேறி விடுகின்றனர் !
கேப்பையில் நெய் வடியுது என்றால்
கேப்போரின் மதி எங்கே போனது ?
வாட்டும் வருமையிலும் ஏழைகள் !
நாட்டில் செம்மையாக வாழ்கிறார்கள் !
வளமையில் வாழும் பணக்கார்கள் !
விளையாட்டில் சூதாடி கொள்ளை அடிக்கிறார்கள் !
வென்றாலும் தொற்றாலும் பரிசுப்பணம் !
விளம்பரத்தில் நடித்து கோடிப்பணம் !
சூதாட்டிகளிடமிருந்து மறைமுகமாக
சூதுப் பணம் இவர்களா வீரர்கள் ?
விளையாட்டு வீரர்கள் என்ற சொல் வேண்டாம்
விளையாட்டுத் திருடர்கள் என்பதே சரி !
பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றி
பார்வையாளர்களை ஏமாற்றும் சூதை அறிந்திடு !
நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து !
நேர்மையான விளையாட்டென நம்பி !
ஏமாறும் தமிழா இனியாவது விழி !
ஏமாந்தது போதும் !விழித்திடு !
.மகா மட்டமானது மட்டை விளையாட்டு !
ஹைக்கூ (சென்றியு ) கவிஞர் இரா .இரவி
நூற்றால்
நூல் வராத பருத்தி
செம்பருத்தி !
பேசிக்கொண்டன
புரியவில்லை நமக்கு
எறும்புகள் !
நினைவூட்டியது
அவளை
வானவில் !
காயம்பட்ட
சோகம் இசைத்தது
புல்லாங்குழல் !
மீனவரின்
அட்சயப்பாத்திரம்
கடல் !
நம்ப முடியவில்லை
கண்ணால் கண்டும்
ஆட்டை விழுங்கும் பாம்பு !
அரசியல்வாதிகளின் பொய்
நூலாடையை
பொன்னாடை !
சுடுகாட்டிலும்
சிரித்தன
மலர்கள் !
கிளைகளை விட
நெடியது
வேரின் பயணம் !
உருவம் மட்டுமல்ல
சுவையும் பெரிது
பலா !
வருத்தத்தில் குழந்தை
குட்டிபோடவில்லை
மயிலிறகு !
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மெய்ப்பித்தன
அயல் நாட்டுப் பறவைகள் !
புதிய பொருளாதாரம்
மலட்டு விதைகள்
மலடாக்கியது நிலத்தை !
சிறுவனின்
வண்டிச்சக்கரம்
நுங்கு மட்டை !
பறித்த போதும்
சிரித்தன
மலர்கள் !
காணவில்லை கண்மாய்
ஊரில் இல்லை ஊரணி
உலகமயம் !
வருங்கால சந்ததிகளின்
வளம் அழிக்கும் பகைவன்
நெகிழி !
மரத்தை வெட்ட வெட்ட
பொய்த்தது
மழை !
ஆக்கிரமித்தது
உலகனேரி
மதுரை உயர்நீதிமன்றம் !
அன்னையர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
அன்னையர் தினம் மட்டுமல்ல தினமும் !
அன்னையை நினைப்போம் போற்றுவோம் !
பத்து மாதங்கள் சுமந்துப் பெற்றவள் அன்னை !
பத்துப் போட்டு வளர்த்து எடுத்தவள் உன்னை !
'அ ' வில் தொடங்கும் அற்புதம் அன்னை !
அம்மா அப்பா சொல்லி வளர்த்தாள் உன்னை !
உறவுகளிகளில் ஒப்பற்ற சிகரம் அன்னை !
உலகம் போற்றிட வளர்த்தாள் உன்னை !
உலகை அறிமுகம் செய்தவள் அன்னை !
உணர்வை ஊட்டி வளர்த்தாள் உன்னை !
வேதனை சோதனை ஏற்றாள் அன்னை !
வேண்டி விரும்பி பெற்றாள் உன்னை !
முப்பொழுதும் போற்றும் உறவு அன்னை !
எப்பொழுதும் உயிராய் காப்பாள் உன்னை !
மாதர் குலத்தின் மாணிக்கம் அன்னை !
மாண்பு மிக்க மனிதனாக்கினாள் உன்னை !
கருவறையில் சுமந்த கடவுள் அன்னை !
கருத்தாக வளர்த்து எடுத்தாள் உன்னை !
பாசத்தை மழையெனப் பொழிந்தாள் அன்னை !
பண்போடு வளர்த்து மகிழ்ந்தாள் உன்னை !
உயிர் தந்துப் பெற்றாள் அன்னை !
உயிராகப் போற்றி வளர்த்தாள் உன்னை !
மனைவி வந்ததும் மறக்காதே அன்னை !
மடியில் வைத்து வளர்த்தாள் உன்னை !
குழந்தை மறந்தாலும் மறக்காதவள் அன்னை !
குழந்தையை என்றுமே வெறுக்காதவள் அன்னை !
அகில உலகம் போற்றும் அன்னை !
அகல் விளக்காய் ஒளிர்ந்தாள் அன்னை !
தன்னலம் கருதாத உறவு அன்னை !
தன்குழந்தை நலம் கருதும் அன்னை !
அன்னையின்றி நீயுமில்லை நானுமில்லை !
அகிலம் இல்லை அன்பு இல்லை !
அன்னைக்கு இணையான உறவு உலகில் இல்லை
அன்னைக்கு இணை அன்னை மட்டுமே !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
தோரண மாவிலை
தோராயமாக பார்த்தது
மாங்காய் !
குளத்தில்
படகானது
உதிர்ந்த இலை !
உழுது உதவியது
உழவனுக்கு
மண் புழு !
மலர் மீது
வண்ண மலரா ?
ஓ வண்ணத்துப் பூச்சி !
ஆயிரம் தேனீக்களின்
வாழ்க்கையை முடித்து
ஒரு தீக்குச்சி !
சேற்றில் நட்ட நாற்று
கதிர்களாய் விளைந்து சிரித்தது
உவகையில் உழவன் !
அறுவடைக்குப் பின்னும்
தந்து உணவு பசுவுக்கு
பூமி !
புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !
கவிஞர் இரா .இரவி !
புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் !
புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் !
புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு !
புகைத்துத் திரிவது உயிருக்குக் கேடு !
பகை உடல் நலத்திற்கு உணர்ந்திடு !
புகை பிடிக்கும் பழக்கம் உயிர்க்கொல்லி !
தனக்குத்தானே வைக்கும் சுய கொள்ளி !
தானாக முடிவெடுத்து வைத்திடு தள்ளி !
தீமை என்று தெரிந்திருந்து போதும் !
தீய புகையிலை புகைப்பது முறையோ !
பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்தால் !
பயன்படுத்த மாட்டார்கள் புகையிலை !
வாழை இலையில் உணவு உண்பது நல்லது !
புகையிலைப் புகைப்பது மிகவும் கெட்டது !
உடலை உருக்கும் கொடிய புகையிலை !
உயிரைக் குடிக்கும் கொடிய புகையிலை !
நுரையீரலை புண்ணாக்கும் நச்சு புகையிலை !
நூதனமாய் உயிர் பறிக்கும் புகையிலை !
நடிகரைப் பார்த்து புகைப்பதை நிறுத்து !
நல்லதை மட்டும் நெஞ்சில் நிறுத்து !
உடல் நலத்திற்குக் கேடு புகையிலை !
உயிருக்குப் பகை கொடிய புகையிலை !
நண்பனைப் பார்த்து நல்லத்தைப் பழகு !
நண்பனைப் பார்த்து கெட்டதை விலக்கு !
புகையாய் உள் நுழையும் புகையிலை !
புற்றுநோயைப் பரிசாகத் தரும் புகையிலை !
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் !
என்பது அன்று சொன்ன பழமொழி !
புகையிலைப் பழக்கம் விரைவில் உன்னை
சுடுகாட்டுக்கு அனுப்பும் இது புது மொழி !
கையால் தொடாதே புகையிலை !
உதட்டில் வைக்காதே புகையிலை !
முயன்றால் முடியாதது எதுவுமில்லை !
முயன்று வைத்திடு முற்றுப்புள்ளி !
.
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
மழையில் நனைந்தும்
வண்ணம் போகவில்லை
வண்ணத்துப்பூச்சி !
வானவில் பறந்தது
மண்ணில்
வண்ணத்துப்பூச்சி !
அம்புகள் இன்றி
வானில் தனியாக
வானவில் !
ஓட்டுனர் இன்றி
பயணமானது
ரயில்பூச்சி !
கட்டியது வீடு
சிறு துரும்பில்
குருவி !
பறவையின் எச்சம்
விழுந்த மிச்சம்
விருட்சம் !
தடம் மாறவில்லை
சென்றன வரிசையாக
எறும்புகள் !
வரும் முன்னே
வந்தது வாசம்
என்னவள் !
கவனிக்கவில்லை உச்சரிப்பை
கவனித்தான் உதட்டசவை
காதலன் !
உதட்டு முத்தத்தை விட
வலிமையானது
நெற்றியில் முத்தம் !
அழகான சேலை
குறைந்தது அழகு
அவள் அணிந்ததும் !
உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி !
தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி !
தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும்
உன்னத தினம் உழைப்பாளர் தினம் !
வியர்வையை மதிக்கும் விவேக்மான தினம் !
உழைப்பைப் போற்றும் ஒப்பற்ற தினம் !
ஆண்டு முழுவதும் தினங்கள் வந்தாலும்
ஆண்டாண்டாக மதிக்கும் தினம் உழைப்பாளர் தினம் !
இவ்வுலகின் வளர்ச்சி உழைப்பாளியின் முயற்சி !
இப்பூவுலகின் மலர்ச்சி உழைப்பாளியின் முயற்சி !
உலகில் உழைப்பவன் மட்டுமே மனிதன் !
உலகில் உழைக்காதவன் மனிதன் அன்று !
உழைக்காமல் உண்பவன் திருடன் என்று அன்றே !
உரைத்தார் உயர்ந்த தேசப்பிதா காந்தியடிகள் !
மரத்திற்கு அழகு பூக்கள் பூப்பது !
மனிதனுக்கு அழகு உழைத்து வாழ்வது !
உலகில் மேன்மையானது உடல் உழைப்பு !
உலகில் மென்மையானது மூளை உழைப்பு !
உடையில் இருக்கும் ! உள்ளத்தில் இருக்காது கறை !
உடல் நிறம் கருப்பு உள்ளமோ வெள்ளை !
கள்ளம் கபடம் அறியாதவர்கள் உழைப்பாளிகள் !
கற்கா விட்டாலும் பண்பாளர்கள் உழைப்பாளிகள் !
பிறந்ததன் பயன் உழைப்பில் உள்ளது !
பிறந்தோம் இறந்தோம் என்பதில் என்ன உள்ளது !
உண்ண உணவு தந்தவன் உழைப்பாளி !
உடுக்க உடை தந்தவன் உழைப்பாளி !
வசிக்க வீடு தந்தவன் உழைப்பாளி !
ரசிக்க மலர் தந்தவன் உழைப்பாளி !
மண்ணை சிலையாக்கியவன் உழைப்பாளி !
பொன்னை சிலையாக்கியவன் உழைப்பாளி !
கல்லை சிலையாக்கியவன் உழைப்பாளி !
மரத்தை சிலையாக்கியவன் உழைப்பாளி !
வண்ணத்தை ஓவியம் ஆக்கியவன் உழைப்பாளி !
எண்ணத்தை விதையாக்கிவன் உழைப்பாளி !
உழைப்பாளி இன்றி உலகம் இல்லை !
உழைப்பாளி இன்றி உயர்வு இல்லை !
உழைப்பாளி இன்றி வாழ்க்கை இல்லை !
உழைப்பாளி இன்றி வசந்தம் இல்லை !
வெயில் மழை பாராது உழைப்பவன் !
வெந்தசோற்றைத் தின்று வாழ்பவன் !
தொழுவதை விடச் சிறந்தது உழைப்பு !
பூசாரியை விடச் சிறந்தவன் உழைப்பாளி !
வியர்வை காயும் முன் கூலியைக் கொடு !
வேதனை வராமல் உழைப்பாளியை காத்திடு !
வியாபாரியிடம் பேரம் பேசினால் தவறு அன்று !
உழைப்பாளியிடம் பேரம் பேசினால் தவறு !
போற்றுவோம் !. உழைப்பைப் போற்றுவோம் !
போற்றுவோம் ! உழைப்பாளிகளைப் போற்றுவோம் !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
தந்தது இன்பம்
உள்ளத்திற்கும் உடலுக்கும்
கோடை மழை !
விலங்கிலிருந்து வந்த மனிதன்
விலங்காகிறான்
பாலியல் குற்றம் !
மனிதாபிமானமற்றது
மனிதனை மனிதன் சுமப்பது
பல்லக்கில் அர்ச்சகர் !
முரண்பாடு
பெருகியது பக்தர்கள் கூட்டம்
பெருகவில்லை நல்லவர்கள் !
நண்பன் எதிரி நிரந்தரமன்று
அரசியல்
நிரந்தரம் பிதல்லாட்டம் !
விரும்பினர் ரசிகர்கள்
ஓட்டம் நான்கு ,ஆறு
அழகிகளின் ஆட்டம் !
ரொட்டித்திருடன் சிறையில்
கோடிகள் திருடன் குளு குளு அறையில்
மக்களாட்சி !
விலை இறங்க மகிழ்ச்சி
குறையும் குற்றங்கள்
தங்கம் !
சங்கம் வைத்துத் தமிழ்
வளர்த்த மதுரையில்
சங்கம் இல்லா சாதி இல்லை !
நோக்கம் விபத்துத் தடுக்க
நடந்தது விபத்து
வேகத்தடை !
நம்பினோர்
கைவிடப் பட்டார்
யாத்திரை விபத்து !
--
புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !
அகம் புதிதாக உதவுவது புத்தகம் !
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் !
அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !
அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் !
ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் !
அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் !
இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் !
உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் !
எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் !
ஏணியென உயர்த்துவது புத்தகம் !
மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் !
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் !
மனதில் மாற்றம் தருவது புத்தகம் !
மனங்களைக் கொள்ளையடிப்பது புத்தகம் !
கொடிய கோபம் தணிக்க உதவும் புத்தகம் !
கொள்கைகள் அறிந்திட உதவும் புத்தகம் !
இலக்கிய ஈடுபாடு வளர்க்கும் புத்தகம் !
இலக்கியதாகம் தணிக்கும் புத்தகம் !
விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !
விஞ்ஞானிகள் வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !
நேர்முகத்தேர்வில் தேர்வாகக் காரணம் புத்தகம் !
நேரில் பார்க்காதவரையும் நேசிக்க வைக்கும் புத்தகம் !
.
மனக்கவலை நீக்கும் மருந்து புத்தகம் !
மனக்குறைப் போக்கும் காரணி புத்தகம் !
மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் !
மனிதனைக் கண்டுபிடித்துத் தந்தது புத்தகம் !
குற்றவாளியையும் திருத்தி விடும் புத்தகம் !
குற்றங்களைக் களைந்து விடும் புத்தகம் !
நேரத்தை பயனுள்ளதாக்கும் புத்தகம் !
நேர நிர்வாகம் கற்பிக்கும் புத்தகம் !
புத்தரைப் புரிய வைக்கும் புத்தகம் !
சித்தரைச் சிந்திக்க வைக்கும் புத்தகம் !
பெரியாரின் சிந்தனை உணர்த்தும் புத்தகம் !
பெரியோரை மதிக்க வைக்கும் புத்தகம் !
அண்ணாவை அறிய வைக்கும் புத்தகம் !
அறிவைத் தெளிய வைக்கும் புத்தகம் !
திருக்குறளை தெரிய வைக்கும் புத்தகம் !
திருவை வாழ்வில் வழங்கும் புத்தகம் !
வாழ்வியல் உணர்த்துவது புத்தகம் !
வசந்தம் வர வைக்கும் புத்தகம் !
சோதனைகளைச் சாதனைகளாக்கும் புத்தகம் !
வேதனைகளை நீக்கி விவேகம் தரும் புத்தகம் !
வெற்றிகளை நமது வசமாக்கும் புத்தகம் !
தோல்விகளைத் தவிர்த்திட உதவிடும் புத்தகம் !
பலர் புகழ் பெற்றிடக் காரண்ம் புத்தகம் !
பாமரனையும் பாருக்குக் காட்டுவது புத்தகம் !
படித்திட சுகம் தரும் புத்தகம் !
படித்திட சோகம் நீக்கும் புத்தகம் !
படிக்கப் படிக்க உயர்த்திடும் புத்தகம் !
படிக்கல்லாக இருந்து உயர்த்திடும் புத்தகம் !
இரண்டு கால் மிருகத்தை மனிதனாக்கியது புத்தகம் !
இன்னல் நீக்கி இன்பம் தரும் புத்தகம் !
காட்டு மிரண்டிகளை மனிதனாக்கியது புத்தகம் !
காட்டுவாசியையும் அறிஞனாக்கியது புத்தகம் !
கரக்கக் கரக்க பால் தருமாம் காமதேனு !
படிக்கப் படிக்க பரவசம் தரும் புத்தகம் !
இரைக்க இரைக்க தண்ணீர் சுரக்கும் கிணறு !
படிக்கப் படிக்க அறிவு சுரக்கும் புத்தகம் !
உணருங்கள் மிகவும் உன்னதமானது புத்தகம் !
உடலையும் உள்ளத்தையும் செம்மையாக்கும் புத்தகம் !
தினமும் சில மணி நேரம் படியுங்கள் புத்தகம் !
தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம் !
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சிற்பி இல்லை
சிலை உண்டு
அழியாத கலை !
வீழ்ந்த பின்னும்
நடந்தது நதியாக
நீர் வீழ்ச்சி !
வளர்ந்துகொண்டே செல்கிறது
புவி வெப்பமயம்
கொளுத்தும் கோடை !
நடந்தது கொலை
சகஜம் என்றனர்
அரசியல் !
விரித்தது தோகை
மேகம் பார்த்து
ஆண் மயில் !
ஆடி அடங்கியவர்
இறுதி ஊர்வலத்தில்
ஆட்டம் போட்டனர் !
இறந்தும் விடவில்லை
காசு ஆசை
நெற்றியில் நாணயம் !
கோடீஷ்வரருக்கு
இறுதில் எஞ்சியது
ஒரு ரூபாய் நாணயம் !
.
வெற்றி ! கவிஞர் இரா .இரவி !
வெற்றி பெற வேண்டும் என்று வேண்டும் வெறி !
வெற்றி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி !
வெற்றி எட்டும் கனி என்றே நீ நினைத்திடு !
வெற்றி எட்டாக்கனி என்று நீ நினைக்காதே !
விவேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படு !
வேறு சிந்தனை விடுத்து ஒரே சிந்தனை செய்திடு !
தோல்வி நேருமோ ? பயத்தை விட்டுவிடு !
தோல்வியைத் துரத்துவேன் துணிவுடன் முடிவெடு !
பயிற்சி முயற்சி தளர்ச்சியின்றித் தொடர்ந்திடு !
அயற்சி இன்றி ஆர்வத்துடன் நடந்திடு !
என்றும் இஸ்டப்பட்டு செயலில் இறங்கு !
என்றும் கஷ்டப்பட்டு செயலில் இறங்காதே !
எனக்கு வரும் என்றே நீ நினைத்திடு !
எனக்கு வராது என்று நீ நினைக்காதே !
என்னால் முடியும் என்றே நீ நினைத்திடு !
என்னால் முடியாது என்று நீ நினைக்காதே !
முடியாது என்று எடிசன் நினைத்து இருந்தால் !
முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம் !
முடியாது என்று காந்தியடிகள் நினைத்து இருந்தால் !
முழுசுதந்திரம் இன்றி அடிமையாகவே இருந்திருக்கும்!
முடியாது என்று பெரியார் நினைத்து இருந்தால் !
மூட நம்பிக்கையில் நாடு மூழ்கியே இருந்திருக்கும்!
முடியாது என்று ஆம்ஷ்டிராங் நினைத்து இருந்தால் !
முழு நிலவு மனிதன் கால் படாமலே இருந்திருக்கும்!
முடியும் என்று முயன்றதால்தான் எல்லோருக்கும்
முடிந்தது சாதனைகள் எளிதாக சாத்தியமானது !
முடியும் என்று நீயும் உடன் முயன்றால்தான் !
முடியும் உன்னால் உலகில் சாதிக்க முடியும் !
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறி !
தன்னிகரில்லாதவன் நீ என்பதை அறி!
தன்னம்பிக்கை மலையளவு இருக்கட்டும் !
நன் நம்பிக்கை கடலளவு இருக்கட்டும் !
இறுதி செய்யப்பட்ட வெற்றி உனக்கு உறுதி !
பரிதியாகப் பயணம் தொடரு சிகரம் உனது !
.
இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !
திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில்
திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் !
இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை !
இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு !
பூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் !
பூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு !
இயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும்
செயற்கை உரம் வேண்டவே வேண்டாம் என்றார் !
உலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் !
உலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் !
விவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி
வேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் !
.
விவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் !
விபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் !
தீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் !
தேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் !
விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை !
வீ ணாக்கும் என்றார் பலரும் கேட்க வில்லை !
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை !
நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார் !
மண்ணை நேசித்த மனிததருள் மாணிக்கம் அவர் !
மரத்தையும் நேசித்த மட்டற்ற மாமனிதர் அவர் !
இறுதி மூச்சு உள்ளவரை இறுதி வரும் வரை !
இயற்கையைக் காக்கப் போராடினார் !
இறுதியாக இருக்கும் இயற்கையிலும் !
உறுதியாக இருக்கும் அவர் முகம் !
அவருடைய உடலுக்குத்தான் மறைவு வந்தது !
அவருடைய உள்ளத்திற்கு மறைவு வரவில்லை !
இயற்கையை நேசிப்போம் நம்மாழ்வரை நினைப்போம் !
செயற்கையைக் குறைப்போம் நம்மாழ்வரை மதிப்போம் !
தவிக்கும் தமிழக மீனவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
தானம் தந்த கச்சத்தீவில்
தாவி வந்து தாக்குகிறான்
சிங்களன் !
வலையை அறுக்கிறான்
நிலை குலைய வைக்கிறான்
சிங்களன் !
மீனவர் பயணம்
வந்தது மரணம்
காரணம் சிங்களன் !
கண்டபடிசுடுகிறான்
கண்முடித்தனமாய் தாக்குகிறான்
காட்டுமிராண்டி சிங்களன் !
எல்லைதாண்டி வந்ததாய்ச் சொல்லி
எல்லைதாண்டி வந்து தாக்குகிறான்
சிங்களன் !
மட்டை விளையாட்டில் தோற்றால்
மடையன் தாக்குகிறான்
முட்டாள் சிங்களன் !
தரையில் தவிக்கும் மீனாக
தமிழக மீனவர்கள்
சிரிக்கும் சிங்களன் !
வீரம் காட்டுகிறான்
நிராயுதபாணிகளிடம்
நரிப்பயல் சிங்களன் !
அப்பாவி மீனவர்களிடம்
தப்பாக நடக்கிறான்
அடப்பாவி சிங்களன் !
சேதாரமானது வாழ்வாதாரம்
தமிழக மீனவர்கள் !
காரணம் சிங்களன் !
தவிக்கின்றனர்
தட்டிக் கேட்க நாதியின்றி
மீனவர்கள் !
சுண்டிப்பார்க்கிறது சுண்டைக்காய் நாடு
சொரணையற்று
பேராயக்கட்சி !
வல்லரசிடம் காட்டும் வீரம்
கொடிய அரசிடம் காட்ட மறுப்பதேன்
பேராயக்கட்சி !
ஆயிரக்கணக்கில் கைது
நூற்றுக்கணக்கில் கொலை
வேடிக்கைப்பார்க்கும் பேராயக்கட்சி !
தேவயானிக்கு ஒரு நியாயம்
தமிழக மீனவருக்கு அநியாயம்
பேராயக்கட்சி !
வடவருக்கு துன்பமென்றால் துடிப்பு
தென்னவற்கு துன்பமென்றால் நடிப்பு
பேராயக்கட்சி !
.
காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !
காதல் !
மூன்றெழுத்து உணர்வு
மூச்சு உள்ளவரை நினைவிருக்கும் !
கர்வம் கொள்ள வைக்கும் !
கனவுகளை வளர்க்கும் !
உடல் இங்கும் எண்ணம் அங்கும் !
அடிக்கடி அலைபாயும் !
அழகு கொஞ்சம் கூடும் !
அறிவு கொஞ்சம் குறையும் !
---------------------------------------------
விழிகளில் நுழைந்து
மூளையில் அவள்
சிம்மாசனம் இட்டு
அமர்ந்து விடுகிறாள் !
காதல் ரசவாதம்
தொடர்கின்றது !
கற்பனைக் காவியம்
வளர்கின்றது !
----------------------------------------------------
முன்பு தேநீரை சூடாகக்
குடிக்காதவன் !
அவள் இருக்குமிடம்
இதயமல்ல மூளை
என்று தெரிந்ததும்
இப்போது தேநீரை
சூடாகவே குடிக்கிறேன் !
-----------------------------------------------
காதலர்களின் கண்கள்
கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன !
யார் அதிகம் கொடுத்தது
யார் அதிகம் பெற்றது
கண்டுபிடிப்பது கடினம் !
-----------------------------------------------
அவள் பேசும் சொற்களை
காதுகள் கேட்பதை விட
அவள் பேச்சால்
அசையும் உதடுகளை
கண்கள் இமைக்காமல்
கண்காணிப்பதால்
என்ன சொன்னாள்
என்பது புரியாமலே
தலை ஆட்டி விடுகிறேன் .
-------------------------------------------------
காதலை அவள் உதட்டால்
உச்சரிக்காவிட்டாலும்
கண்களால் உச்சரிப்பதை
கண்கள் உணர்ந்து விடுகின்றன !
-----------------------------------------------
மறந்து விட்டேன் அவளை என்று
உதடுகள் உச்சரித்தாலும்
மூளையின் ஒரு மூலையில்
அவள் நிரந்தரமாக !
--------------
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை
ஈழத் தமிழர் விடுதலை !
விதைத்தால் வளரும்
விருட்சம்
அன்பு !
நம் முதுகு
நமக்குத் தெரியும்
கண்ணாடியில் !
துன்பம் இன்பம்
இரவு பகல்
உண்டு மாற்றம் !
சொல்வதை விட
நடந்துகாட்டுவது நன்று
அறிவுரை !
பொறி தட்டும்போது
பிடித்துக்கொள்
அறிவு !
சிக்கலைத் தீர்க்கும்
சிந்தனை
சிந்தி !
கல்வியே சிறந்த செல்வம்
சரி
கல்விக்கு வேண்டும் செல்வம் !
மயங்காதவர்
உலகில் இல்லை
பாராட்டு !
.
வீட்டில் எலி
வெளியில் புலி
அரசியல்வாதிகள் !
தேர்தலுக்கு முன் ஒன்று
தேர்தலுக்குப் பின் மற்றொன்று
மாறும் கூட்டணி !
முட்டாள்கள் உள்ளவரை
அரசியல்வாதிகள் காட்டில்
என்றும் மழை !
பொய்யர்களின்
எதிரி
மறதி !
ஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு ! கவிஞர் இரா .இரவி !
ஒரு சிறிய விதை
கீழும் மேலும் பயணித்தது !
கீழே வேர் விட்டு
சத்து ஈட்டியது !
மேலே முளை விட்டு
இலைகள் விட்டு கிளைகள் விட்டு
பூக்கள் பூத்து காய்கள் காய்த்து
கனிகள் வழங்கியது !
நிற்க நிழல் தந்தது !
சுவாசிக்க காற்றும் தந்தது !
உயர் திணையான மனிதனோ !
நன்றி மறந்து பரிசளித்தான் !
கோடாரி !
நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை !
கவிஞர் இரா .இரவி !
ஆரம்பப்பள்ளி ஆசிரியரால் நெல்சன் என்று
அன்பாகப் பெயரிட்டு அழைக்கப் பட்டவரே !
கருப்பு இனத்தின் விடுதலையின் வீர நெருப்பே !
கருப்பு இருளன்று ஒளியென்று உணர்த்தியவரே !
வெள்ளை இனத்தின் ஆதிக்க வெறியை !
வேரடி மண்ணோடு அறுத்த வீரக் கோடாரியே !
அமைதி வழியில் போராடியது புரியாதபோது !
ஆயுத வழியில் போராடிப் புரிய வைத்தவரே !
எனது எதிரியே எனது ஆயுதத்தைத் தீர்மானிக்கிறான் !
என்று ஆயுதத்தால் பாடம் புகட்டியவ்ரே !
விடுதலைப் போராளிகளின் மானசீக குருவே !
விடுதலையின் விளைவை உலகிற்கு உணர்த்தியவரே !
தடை செய்தபோதும் மனதளவில் என்றும் !
தளராமல் விடுதலை இயக்கம் நடத்தி வென்றவரே !
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலே !
ஓரணியில் மக்களைத் திரட்டிய ஆற்றலே !
நிறத்தால் ஆணவம் பிடித்து அலைந்தவர்களின் !
நிறவெறி ஆணவத்தை அப்புறப் படுத்தியவரே !
கருப்பு வைரங்களைப் பட்டைத் தீட்டி !
கண்டவர் போற்றிட ஒளிர வைத்தவரே !
கருப்பினம் கோழை இனமன்று என்று !
குவளயதிற்குப் பறை சாற்றிய வீரரே !
மன்னிப்பு கேட்டால் விடுதலை என்றபோதும் !
மன்னிப்பு கேட்காத தன்மானமிகு வீரரே !
இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் வாடியபோதும் !
இனிய கொள்கையில் என்றும் மாறாதவரே !
ஆதிக்க சக்திகளை ஆட்டம் காண வைத்தவரே !
அகில உலகமும் விடுதலைக்குக் குரல் தர வைத்தவர் !
மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் !
மண்ணுலகில் சமம் என்று உணர்த்தியவரே !
ஆதிக்கத்தின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியவரே !
அன்புப் புன்னகையை முகத்தில் என்றும் அணிந்தவரே !
தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சியை மலர்வித்தவரே !
தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரே !
தொண்டுகள் செய்து மக்கள் மனங்களில் நின்றவரே !
தொன்னூற்றி அய்ந்து அகவை வாழ்ந்து சிறந்தவரே !
.
உந்தன் மறைவு உந்தன் உடலுக்குத்தான் !
ஒருபோதும் மறைவு இல்லை உந்தன் புகழுக்கு !
--
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
வேண்டாம் கொலுசு
கூடலில்
வண்டுகள் !
எட்டுப்பொருத்தம் இருந்த
இணையருக்குள்
ஏழாம்பொருத்தம் !
தேவையற்ற சொற்கள்
நீக்கிடப் பிறக்கும்
ஹைக்கூ !
சமாதானமாகிவிடுங்கள்
உணர்த்தியது
நரை !
ஒளி தருவதாகச் சொல்லி
இருளையே தருகின்றனர்
அரசியல்வாதிகள் !
நிரந்தரமில்லை
முகவரி
வாடகைக்கு குடியிருப்போருக்கு !
வளர் பிறையாக தனியார் பள்ளிகள்
தேய் பிறையாக அரசுப் பள்ளிகள்
வேண்டாம் அமாவசை !
உணவு உடை உறைவிடம்
இலவசம்
நடிகர் !
ஓய்வே இல்லை
தினமும் வேலை
சுடுகாடு !
கவலை நீக்கி
களிப்பைத் தரும்
மழலையின் சிரிப்பு !
மனிதனுக்கு அழகு
மூன்று எழுத்து முத்தாய்ப்பு
அன்பு !
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
வாயுள்ள பிள்ளை
வழிதேடிக் காணும்
அவசர ஊர்தி !
நம்பினோர்
கைவிடப்பட்டார்
நிதி நிறுவனம் !
முடிவு என்பது
தொடக்கம் ஆகும்
போர் !
உள்ளங்கை
நெல்லிக்கனி போல
இந்தியா சிங்களன் உறவு !
கெட்ட வேலி
பயிரை மேயும்
காவலர் !
சட்டியிலிருந்தால்தானே
அகப்பையில் வரும்
முட்டாள் !
பிறரை நேசிப்பது சரி
முதலில் நேசி
உன்னை !
புறங்கூறுவோனிடம்
எச்சரிக்கை
அரசியல்வாதி !
தவிப்பில் மகன்
இறந்ததும் தெரிந்தது
அப்பன் அருமை !
இயல்பாய் இரு
இனிக்கும்
வாழ்க்கை !
அழகு வந்துவிடாது
அரிதாரம் பூசினால்
நடிகை !
குறைத்துக் காட்டும்
அழகு வயதை
நடிகர் !
.
அழகும்
ஒரு மலரே
வாடும் !
பயனற்றது
கருணை இல்லா அழகு
பாம்பு !
நொறுங்கள் தின்றால்
நூறு வயதல்ல
குறையும் வாழ்நாள் !
குறைவற்ற செல்வம் வேண்டும்
நோயற்ற வாழ்க்கைக்கு
மருத்துவக் கட்டணம் !
இதயத்தை இயக்கிடும்
எரிபொருள்
நம்பிக்கை !
வேண்டும் விளம்பரம்
பூக்கடைக்கும்
நவீன உலகம் !
தேருக்கு அச்சாணி
இல்லத்திற்கு
இல்லாள் !
வரும்முன் அறிபவன் அறிவாளி
வந்தும் அறியாதவன்
முட்டாள் !
முட்டாளின் உணவு
முகத்துதியே
அரசியல் வியாதி !
அதிக பணத்தை விட
மேலானவர்கள்
அதிக நண்பர்கள் !
பணத்தால் முடியாததும்
முடியும்
நண்பனால் !
இல்லை தீக்காயம்
நெருப்போடு விளையாடியும்
நடனக் கலைஞன் !
கொடுத்துப் பெறுவது
நல்லது
மரியாதை !
தீங்கு
மது போதை மட்டுமல்ல
புகழ் போதையும் !
எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !
இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
' கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ' திருவள்ளுவர்
கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் !
கனியாக நல்ல தமிழ் எழுத்துக்கள் இருக்கையில் !
காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு ?
பாலோடு நஞ்சு கலந்தால் பாலும் நஞ்சாகும் !
பழந்தமிழ் எழுத்தோடு வேறு கலத்தல் தீங்கு !
நம் மொழி தமிழ் எழுத்துக்கள் இருக்க !
வடமொழி எழுத்துக்கள் நமக்கு எதற்கு ?
அழகுத்ததமிழ்ச் சொற்களில் திட்டமிட்டு !
அவர்கள் வடமொழிச் சொற்கள் கலக்கின்றனர் !
வடமொழி எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவதை !
வேண்டுமென்றே வழக்கமாக கொள்கின்றனர் சிலர் !
என்ன வளம் இல்லை நம் தமிழ்ச் சொற்களில் !
ஏன் கையை ஏந்த வேண்டும் பிற சொற்களிடம் !
உணவில் கலப்படம் உடல் நலத்திற்குக் கேடு !
மொழியில் கலப்படம் மொழி வளத்திற்குக் கேடு !
அமுதமொழி உலகின் முதல்மொழி தமிழ் இருக்க !
அந்நிய மொழிச் சொற்கள் தமிழில் எதற்கு ?
தமிழ் எழுத்தால் மட்டுமே எழுதுவோம் !
தமிழ் அல்லாத எழுத்துக்களை மறப்போம் !
மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
இசை பிரியா என்னும் குயிலை !
இம்சைப் படுத்திக் கொன்ற கயவர்கள் !
காட்டுமிராண்டிகள் கூட மாறி விட்டார்கள் !
காடையர்களோ மிருகமாகவே மாறி விட்டார்கள் !
போர் விதிகளை மதிக்காத மடையர்கள் !
பெண்ணிடம் வீரம் காட்டிய வீணர்கள் !
காண நெஞ்சம் கொதிக்குதடா உமது !
கதை முடிக்க கரங்கள் துடிக்கதடா !
சிங்களைப்படை ஓநாய்கள் கூடி !
சின்னப் பெண்ணைச் சிதைத்து விட்டார்கள் !
எந்த நாட்டிலாவது கேள்வி பட்டதுண்டா ?
சொந்த மக்களை சூரையாடும் ராணுவம் !
ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லும் !
வேறுபட்ட மனநிலையில் பேசுவோரே சொல்க !
இனியும் இந்த ஓநாய்களோடு தமிழர்கள் !
இணைத்து வாழ முடியுமா கூறுங்கள் !
.
வாழ வேண்டிய பெண்ணை வீழ்த்தி விட்டனர் !
வடஇந்தியப் பெண் என்றால் துடிக்கிறீர்கள் !
பிரபாகரன் மகளா என்று கேட்டு !
பித்தர்கள் சின்னாபின்னப் படுத்துகின்றனர் !
இல்லை என்கிறார் இசை பிரியா !
இன்னும் சிதைக்கின்றனர் கொடியோர் !
கல் நெஞ்சமும் கரையும் காட்சி !
கயவர்களின் கொடூரக் காட்சி !
தமிழச்சி என்றால் பாராமுகம் ஏனோ !
தட்டிக் கேட்க நாதி இல்லைஉலகில் !
ஐக்கிய நாடுகள் சபையோ அந்த !
அயோக்க