மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா

.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகரமண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணிவரையில் நடைபெறவுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்த வருடாந்த நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள்ää கலைஞர்கள்ää ஊடகவியலாளர்கள்   சந்தித்து கலந்துரையாடுவர்.
இம்முறை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தற்போதைய தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள பதினொராவது விழா பல்சுவை அரங்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இங்கு பிறந்த தமிழ்க்குழந்தைகளின் தமிழ் ஆற்றலை வளர்க்கும் ;அனுபவப்பகிர்வு’ நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன. இளம்தலைமுறை தமிழ் மாணவர்களின் சுயவிருத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை இயல்பாகவே பேசவைக்கும் பாடவைக்கும் பல்சுவை அரங்கு , மற்றும் கவியரங்கு, இலக்கிய கருத்தரங்கு,  தாளலய நாடகம் என்பனவும் இடம்பெறவுள்ளன.சிட்னியிலிருந்து பிரபல எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன், மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலிருந்து கோபிநாத்,  கன்பராவிலிருந்து கவிஞர் ஆழியாள் மதுபாஷினி சிட்னியிலிருந்து திருநந்தகுமார் ஆகியோர் இலக்கிய கருத்தரங்கில் உரையாற்றுவர்.
இணையத்தில் நூலக அபிவிருத்தி தொடர்பாக எழுத்தாளர்கள் மத்தியில் கருத்துப்பரிமாறும் நிகழ்ச்சியில் இந்தத்துறையில் அனுபவமுள்ள கோபிநாத் உரையாற்றுவார்.
மாணவர் அரங்கில் சிட்னியிலிருந்து வருகைதரும் திரு. திருநந்தகுமார் உரையாற்றுவார்
புலம் பெயர் புகலிட வாழ்வை சித்திரிக்கும்,  டென்மார்க் ஜீவகுமாரன் தொகுத்துள்ள ‘முகங்கள்’ கதைத்தொகுதியை ரேணுகா தனஸ்கந்தாவும் கோகிலா மகேந்திரனின் ‘உள்ளத்துள் உறைதல்’ நூலை உஷா கௌரி சந்திரனும் அறிமுகப்படுத்தி உரையாற்றுவர்.
கலை, இலக்கியவாதிகளின் கலந்துரையாடலும் இராப்போசன விருந்தும் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
மேலதிக விபரங்களுக்கு:
கௌசல்யா அன்ரனிப்பிள்ளை செயலாளர்0449831799  சிசு. நாகேந்திரன்   தலைவர் 0425773120   நவரத்தினம் அல்லமதேவன் நிதிச்செயலாளர் 0413528342
             


No comments: