உலகச் செய்திகள்

.
*கடைசித் தொலைக்காட்சி நிகழ்ச்சி
*போர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது
*அமெரிக்க ஜொப்லின் நகரில் சூறாவளி: 116 பேர் பலி 
*ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது: எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து
*பாகிஸ்தானில் கடற் படைத்தளத்தின் மீது பாரிய தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிரிட்டிஷ் விஜயம் _

 5/24/2011
அமெரிக்க - பிரிட்டிஷ் உறவு எமது நாட்டிற்கும் உலகிற்கும் முக்கித்துவம் வாய்ந்ததொன்றாகும் என இருநாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

3 நாள் விஜயமாக இங்கிலாந்து சென்றுள்ள பராக் ஒபாமா எலிஸபெத் மகாராணியாரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திக்கவுள்ளார். அத்துடன் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோனையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

புதன்கிழமை நடைபெறும் இச்சந்திப்பில் லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.



அத்துடன் இளவரசர் வில்லியம்ஸ் - கேட் மிடில்டன் தம்பதியினரையும் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்து திருமண வாழ்த்துக்களை ஒபாமா தம்பதியினர் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


 
அமெரிக்க ஜொப்லின் நகரில் சூறாவளி: 89 பேர் பலி _

5/23/2011

அமெரிக்க மிஸோரி மாநிலத்திலுள்ள ஜொப்லின் நகரைத் தாக்கிய சூறாவளியில் சுமார் 89 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பலர் காயமடைந்துள்ளதோடு இன்னும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

சூறாவளியின் பின்னர் மிஸோர, ஆளுனர் ஜே.நிக்ஸன் அம்மாநிலத்தில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார். ___ E-mail to
நன்றி வீரகேசரி இணையம்

பாகிஸ்தானில் கடற் படைத்தளத்தின் மீது பாரிய தாக்குதல்! _

5/23/2011

பாகிஸ்தானின் காராச்சி நகரத்தில் கடற் படைத்தளத்தின் மீது தீவிரவாதிகள் நேற்றிரவு பாரிய தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். சுமார் 20 தீவிரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும், குண்டுகளை வீசியும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடற்படை வீரர்கள் பலர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, அமெரிக்கா வழங்கிய தீவிர கண்காணிப்பு விமானமொன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முழுமையான சேதவிபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலே இது எனவும் இத்தகைய தாக்குதல்கள் தொடரும் எனவும் அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நன்றி வீரகேசரி இணையம்


ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது: எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து


ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால், அதன் சாம்பல் காற்றில் பரவியதில் ஸ்காட்லாந்து வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பறக்கும் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.ஐஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஒரு எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் காற்றில் பரவியதில் விமான என்ஜினுக்குள் சாம்பல் புகுந்து விமான விபத்து ஏற்படும் என்பதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு கோடி விமானப்பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். இதனால் விமானபோக்குவரத்து தொழில் பெரும் பாதிப்பை அடைந்தது. விமான கம்பெனிகளுக்கு 170 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது.

அதே போன்ற எரிமலை வெடிப்பு இப்போதும் ஏற்பட்டு உள்ளது. ஐஸ்லாந்தில் உள்ள கிரிம்ஸ்வோட்டின் எரிமலை வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியது என்று அந்த நாட்டின் அதிபர் ஓலாபர் கிரிம்சன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஐஸ்லாந்து நாட்டு எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு பரவியது. இதனால் விமானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த தகவலை ஐரோப்பிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் பிரையன் பிளைன் தெரிவித்தார்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எரிமலை சாம்பல் காற்றில் கலந்ததால் தன் பயணத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எரிமலை சாம்பல் காற்றில் கலந்து அந்த காற்று பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால் அந்த நாடுகளிலும் விமானப்போக்குவரத்து பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஜெர்மனி, டென்மார்க், ஸ்கான்டிநேவியா ஆகிய நாடுகளிலும் இந்த காற்று பரவும் என்று தெரிகிறது.

ஐஸ்லாந்து நாட்டின் முக்கிய சர்வசேத விமான நிலையமான கெப்ளாவிக் விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. ஐஸ்லாந்து முழுவதும் எரிமலை சாம்பல்கள் பரவி உள்ளன.

நன்றி தேனீ


அமெரிக்க ஜொப்லின் நகரில் சூறாவளி: 116 பேர் பலி _

5/25/2011

அமெரிக்காவில் தென்கிழக்குப் பகுதியில் வீசிய பலமான சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் தென்பகுதி மாநிலம் மிசூரியில் ஜொப்லின் நகர்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலமான சுழற்காற்று (டொர்னேடோ) வீசியது. இதன் வேகம் மணிக்கு 300 கி.மீ. வரை இருந்தது என வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இந்தக் கடும் சுழற்காற்றின் பாதையில் சிக்கிய எல்லாவற்றையும் சுருட்டியெடுத்து, தரைமட்டமாக்கியது.

வீடுகள், கடைகள், அடியோடு பெயர்க்கப்பட்டன. வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. ஒரு பள்ளிக் கூடம் இந்தச் சுழற்காற்றில் சிக்கித் தகர்ந்தது. ஜொப்லின் நகரின் இரு மருத்துவமனைகளில் ஒன்று மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்தவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

மாநில ஆளுனர் ஜே நிக்ஸன் நேரடியாக மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இதனிடையே, டெக்ஸஸ், ஓக்லஹோமா, மிசூரி, நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சுழற்காற்று வீசக்கூடும் என தேசிய வானிலை சேவை நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த மாநிலங்களின் பல முக்கிய நகரங்களில் சுழற்காற்று வீசும் ஆபத்துள்ளதாக புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. ___ E-mail

நன்றி வீரகேசரி

போர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது

- பி.பி.சி

tradkeனப் படுகொலை தொடர்பான குற்றச்ச்சாட்டுக்களுக்குள்ளாகி 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கே மிலடிச் கைது செய்யப்பட்டுள்ளார். செர்பியாவின் வடக்கேயுள்ள ஒரு கிராமத்திலிருந்து வியாழக்கிழமை காலை அவர் கைதுசெய்யப்பட்டதாக செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் தெரிவித்துள்ளார். போலி அடையாள ஆவணங்களுடன் அவர் தனது உறவினருக்கு சொந்தமான சிதிலமடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் கைது செய்யப்படும் போது எதிர்ப்புக் காட்டவில்லை என்று செர்பிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை அவர் பொதுமக்கள் மத்தியில் தென்பட்டபோது இருந்த தோற்றத்துடன் ஒப்பிடுகையில் இப்போது அவர் மிகவும் வயதானவராக தோன்றுகிறார். இந்த கைதானது செர்பிய வரலாற்றின் ஒரு அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர் டாடிக் அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து புதிய அத்தியாயத்தை துவக்க இந்த கைது வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். சிரபெரநிட்சா இனப்படுகொலை உள்ளிட்ட போஸ்னிய போர் குற்றம் தொடர்பாக ஜெனரல் மிலாடிச் குற்றத்தை எதிர்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் மிலாடிச் பெல்கிரேடில் உள்ள ஒரு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார். அதே நேரம் அவரை தி ஹேக்கில் இருக்கும் சர்வதேச போர் குற்ற தீர்பாயத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ஜெனரல் மிலடிச் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்ரநிட்சா என்ற இடத்தில் இவரின் தலைமையின் கீழ் செயல்பட்ட படையினர் 8500 முஸ்லீம்களை கொன்றனர் என்பதுதான் இவர் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு. செர்பியத் தலைவர் ஸ்லோபோதான் மிலாசவிச் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட 2000 மாவது ஆண்டு வரை மிலாடிச் பெல்கிரேடில் வெளிப்படையாகவே வாழ்ந்து வந்தார். இவரின் கைதை பல உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.



கடைசித் தொலைக்காட்சி நிகழ்ச்சி


உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியின் நாயகியான ஒபரா வின்பரேஸ் தனது 25 ஆண்டுகால நிகழ்ச்சியில் இருந்து நேற்று விடைபெற்றார். அமெரிக்காவின் தொலைக்காட்சி உலகில் கடந்த 25 வருடங்களாக த ஒபரா வின்பரேஸ் ஷோ என்ற நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்று வந்தது. இதன் மூலம் உலகம் அறிந்த ஒருவராகவும் இவர் வலம் வந்தார். கடந்த ஆண்டு உலகத்தின் 100 சக்தி மிக்க பெண்மணிகளில் ஒருவராக இவர் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கடைசி நிகழ்ச்சியை நேற்று நடாத்தி கண்ணீர்மல்ல ரசிகரிடமிருந்து அவர் விடைபெற்றார். நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய அவர் இன்று இங்கே விசேட விருந்தினர் இல்லை, கார் பரிசாக வழங்கப்படவில்லை. ஆனால் நான் தனியாக நிற்கிறேன். கடந்த 25 வருடங்களாக செய்த நிகழ்சிகளின் நினைவு மீட்டலாக இது அமைகிறது என்றும் குறிப்பிட்டார். சிறுவயது வாழ்வில் தாங்க முடியாத இம்சைகளை சந்தித்த இவர் உலகப் புகழ் பெற்ற ஒருவராக வெற்றிபெற்ற கதை உலகில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகும். இவருடைய நிகழ்ச்சி முடிவடைந்தாலும் கூட தனது சொந்தத் தொலைக்காட்சியான ஒபரா வின்பரி நெற்வேர்க் என்ற தொலைக்காட்சியை ஆரம்பிக்கவுள்ளார்.


Nantri :Alaikal

No comments: