தன்னம்பிக்கை சிந்தனைகள் -வித்தகக் கவிஞர் பா.விஜய்


.

                                      தொகுப்பு -கவிஞர் இரா.இரவி

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்து விட்டுப் போகாதே
நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்
உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே

நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்
காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே
ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்
உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்
இன்னும் சொன்னால் நம்பிக்கையில் மரணத்தை
ஜெயிக்க முடியும் ஏது உயிர்த்தெழுந்தது இப்படித்தான்
சிறந்த வியாபாரிகளை உருவாக்குவது அவர்கள் அடைந்த
நம்பிக்கைத் துரோக நஷ்டங்கள்
சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய
அசுரத்தமான தோல்விகள்
நம்பிக்கையே இல்லாமல் யார்? வாழக் கூடும்
நம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்
சந்தேகம்தான் தீயை வைக்கும்
நம்பிக்கைதான் தீபம் வைக்கும்
ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்
ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ
மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது
ஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்
கடல் போல் நம்பிக்கை இருந்தால்
நீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை
நீ உன் மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை
நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று அதில்
புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று
காந்தத்திலிருந்து மின்சக்தி வருவது மாதிரி
நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும்
போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி
நம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி
காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்
இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையும் காலியாகவிடாதே
ஒரு நாளும் சோர்ந்து விடாதே கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் பூக்கிறது
இழப்பு என்பது எதுவுமேயில்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை
கர்வம் வை கிராம் கணக்கில் நம்பிக்கை வை கிலோ கணக்கில்
நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை
தண்ணீருக்கு அடியில் சென்று
ஓவியம் வரைய முடியாது
தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்
உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது
நம்பிக்கை ஒன்று போதுமே
எதிர்காலம் ஒன்றைப் பூக்கச் செய்யலாம்
நம்பிக்கை இருக்கும் போதிலே
எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்
என்னமுடியும் எதைச் செய்ய முடியும்
என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை
எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்
என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை
ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்
மல்லிகைப்பூ மணம் மாறாது
நீ எங்கே பணி புரிந்தாலும்
உன் சுயம் கெடாது.

213 comments:

«Oldest   ‹Older   201 – 213 of 213
eraeravi said...

யானை மலை ! கவிஞர் இரா .இரவி !

யானையே மலை போல இருக்கும் !
இந்த மலையோ யானை போல இருக்கும் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
மதுரைக்கு வருவோரை வரவேற்கும் மலை !

பார்த்தால் யானை போல இருக்கும் !
நெருங்கினால் பிரமாண்டமாக இருக்கும் !

இப்படி ஒரு மலை நீங்கள் வேறு
எங்கும் காண முடியாது !

கல்லால் ஆன இமயம் கண்டதுண்டா !
காண்போர் உள்ளம் கவரும் காந்தம் !

இயற்கையின் இனிய அன்பளிப்பு !
ஈடு இணையில்லா பிரமிப்பு !

காணமல் கடக்க முடியாது !
கண்ணிற்கு இனிமை நல்குவது !

மதுரையை விட்டு வெளியேறும்
மக்களுக்கு பிரியாவிடை தரும் மலை !

மழை பெய்யும்போது இந்த
மலை ரசிக்க விழி இரண்டு போதாது !
.

eraeravi said...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

மேகங்களின் மோதல் மின்னல்
விழிகளின் மோதல்
காதல் !

புவி ஈர்ப்பு சக்தியை
வென்றது
விழி ஈர்ப்பு சக்தி !

பேசாவிட்டாலும்
பார்வையாலேயே
பசியாறி விடுகின்றனர் !

நடந்து செல்கையில்
திரும்பி ஒரு பார்வை
அதிர்வலைகள் !

இமைக்காமல் பார்ப்பதில்
அவளுக்கு நிகர்
அவளே !

காந்த அலை
வீசும்
கண்கள் வலை !

பரவச நிலை
மிதக்கும் கலை
காதல் !

பார்க்காததால்
வரையவில்லை
இரவிவர்மன் !

காதலன் விழிகளுக்கு
அவன் காதலி
பேரழகி !

அடிக்கடி
சந்திக்கின்றன
மனஅலைகள் !

சிலையே
சிலையை ரசித்தது
கோவிலில் அவள் !

eraeravi said...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

எண்ணை திரி நெருப்பு
கூட்டு முயற்சியே
ஒளி விளக்கு !


உளிக்குப் பயந்து
ஒளிந்து கொள்கின்றன
கற்கள் !

இயந்திரமயமான உலகில்
இன்று மனிதர்களும்
இயந்திரமாய் !

தேடுங்கள் கிடைக்கும் என்றார்கள்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
மனிதநேயம் !

தட்டுங்கள் திறக்கும் என்றார்கள்
தட்டினோம் திறக்கவில்லை
உடைத்தோம் உடன் திறந்தது !

eraeravi said...

உலக சுற்றுச்சுழல் நாள் ! கவிஞர் இரா .இரவி !

சுத்தம் சுகம் தரும் உணர்ந்திடுவோம் !
சுகாதாரம் நலம் தரும் உணர்த்திடுவோம் !

கண்ட இடங்களில் குப்பைக் கொட்டாதிருப்போம்
குப்பைத் தொட்டியில் மட்டும் கொட்டுவோம் !

அயல்நாடுகளில் பேணிடும் சுத்தத்தை நாம் !
நம் நாட்டிலும் பேணிட முன்வர வேண்டும் !

கண்ட இடங்களில் குப்பை போட்டால் !
தண்டத் தொகை வசூலிக்க வழி செய்வோம் !

ஒலி மாசும் தீங்குதான் அறிந்திடுவோம் !
ஒலியின் அளவை குறைத்து வைத்திடுவோம் !

காற்றை மாசு படுத்தும் புகை குறைத்திடுவோம் !
காற்றை சுத்தமாக வைத்திருக்க வகை செய்வோம் !

சீனா பட்டாசு மட்டுமல்ல சிவகாசி பட்டாசும் வேண்டாம் !
சீரான தென்றலை சிதைத்திடும் புகைமாசு வேண்டாம் !

மனிதர்களை மட்டுமல்ல பறவைகளையும் வரவேற்போம் !
மனிதநேயம் மட்டுமல்ல பறவை நேயமும் காப்போம் !

மரம் வளர்ப்பதைக் கடமையாகக் கொள்வோம் !
மழைநீர் சேகரிப்பைக் கட்டயமாக்கிடுவோம் !

நிலத்தை மலடாக்கும் செயற்கை உரங்கள் வேண்டாம் !
நிலத்தை செழிப்பாக்கும் இயற்கை உரங்கள் வேண்டும் !

காடுகளை அழிப்பதை உடன் நிறுத்த வேண்டும் !
காடுகளைக் காத்திட துணை நிற்க வேண்டும் !

நோய் பரப்பும் கிருமிகளை அழித்திடுவோம் !
நோயில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்திடுவோம் !

பாலீத்தின் பைகளுக்கு முடிவு கட்டுவோம் !
துணிப்பை கொண்டு செல்வதை வழக்கமாக்கிடுவோம் !

வெப்பமயமாதலை தடுத்திட திட்டம் வகுப்போம் !
உலகம்யமாதலை உடன் தடுத்து வைப்போம் !

வருங்கால சந்ததிகளுக்கு சொத்து வைக்காவிட்டாலும் !
வளம்மிக்க இயற்கை காடு பசுமை செழிப்பை விட்டு வைப்போம் !

eraeravi said...

வரம் ! கவிஞர் இரா .இரவி !

வரம் என்று
வாங்கியவை
சாபங்களாகி விடுகின்றன !

தவம் இருந்து
பெற்றதாகச் சொன்னார்கள் !
வரம் !

தவமின்றியும்
சிலருக்கு கிடைத்து விடுகின்றன !
வரம் !

பெற்ற வரத்தின்
மதிப்பு அறியாமல்
சாபமாக்கி விடுகின்றனர் !

.
எழுதும் பேச்சும்
சிலருக்கு வரமாகின்றது !
சிலருக்கு சாபமாகின்றது !

கடவுள்கள் தருவதில்லை
பக்தர்களே எடுத்துக் கொள்கின்றனர் !
வரம் !

உழைப்பால் உயர்ந்தவரை
வரத்தால் உயர்ந்தான்
என்பார்கள் !

சாதனை புரிந்தவர்களை
வரத்தால் வசமானது
என்பார்கள் !

கடவுள் நம்பிக்கை இல்லை
எனவே
வரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை !

உழைப்பு ! உழைப்பு ! உழைப்பு !
உயர்ந்த வரம் உழைப்பு !
வேண்டும் நினைப்பு !

eraeravi said...

என் உயிரினும் மேலான விடுதலையே!
கவிஞர் இரா. இரவி.

தொப்புள் கொடி உறவான ஈழத்து சகோதரர்கள் !
துய்க்க வேண்டும் விடுதலையின் சாரத்தை !

அடிமைப்பட்டு வாழும் வாழ்க்கை வாழ்க்கையன்று !
அடிமை விலங்கு அகற்றிய விடுதலை வாழ்வு நன்று !

சிங்களரின் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவோம் !
சிங்கத்தமிழரின் தனிக்கொடியை ஈழத்தில் ஏற்றுவோம் !

அய்நா மன்றத்தின் ஆதரவோடு உதயமானது !
அங்கே தெற்கு சூடான் என்ற தனி நாடு !

அய்நா மன்றத்தின் அங்கீகாரத்தோடு விரைவில் !
இலங்கையில் தனித்தமிழ்நாடு உதயமாக வேண்டும் !

போர்க்குற்றம் புரிந்திட்ட கொடூரன்கள் !
போர்க்கால அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும் !

இந்தியாவின் வெளிஉறவு கொள்கை மாற வேண்டும் !
இந்தியனாக தமிழக மீனவர்களை மதித்திட வேண்டும் !

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க முடியவில்லை !
தமிழர்களை சுடும் இலங்கை இராணுவத்தைச் சுட வேண்டும் !

பாகிஸ்தானிடம் காட்டும் இராணுவ வீரத்தில் !
பாதியாவது சுண்டைக்காய் இலங்கையிடம் காட்ட வேண்டும் !

இங்கிலாந்துக்காரனிடம் நாம் பட்ட இன்னலை !
இலங்கையில் சிங்களனிடம் தமிழர்கள் படுகிறார்கள்!

பேச்சுவழக்கில் இல்லாது வழக்கொழிந்த !
பழைய சமஸ்கிருதத்திற்கு தரும் முன்னுரிமையை !
உலகளாவிய பன்னாட்டு மொழியான !
ஒப்பற்ற தமிழுக்கு தந்திட வேண்டும் !

ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசிகளை !
இறக்கிட முன்வர வேண்டும் !

இறங்கிய விலைவாசிகளை திரும்பவும் !
ஏறாமல் கட்டுப்படுத்திட வேண்டும் !

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டு !
கஷ்டப்படும் மீனவர் துயர்களை களைய வேண்டும் !

இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான
இனிய காப்பீட்டு கழகத்தை காத்திட வேண்டும் !

அந்நிய முதலீட்டை ஒருபோதும் !
ஆயுள்காப்பீட்டில் அனுமதிக்காதிருக்க வேண்டும் !

பெட்ரோல் டீசல் விலையை இறக்கிட வேண்டும் !
எரிவாயுவின் விலையைக் குறைத்திட வேண்டும் !

அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிட வேண்டும் !
அனைவருக்கும் சமமான வாழ்க்கை வேண்டும் !

இந்தியாவின் தேசிய மொழியாக தமிழாக வேண்டும் !
இந்தியர் அனைவரும் தமிழ் படித்து இன்புற வேண்டும் !

விடுதலை கேட்ட ஈழத்தமிழர்களை !
வேலியில் அடைத்தான் வேதனை தந்தான் !

மருத்துவமனை என்றும் பாராமல் இரக்கமின்றி !
மடையன் குண்டுகள் போட்டுத் தகர்த்தான் !

முதியவர்கள் குழந்தைகள் என்றும் பாராமல் !
மூர்க்கத்தனமாக கொன்று குவித்து மகிழ்ந்தான் !

வெள்ளைக் கொடி ஏந்திவந்த வீரர்களையும் !
வீதியில் விட்டு சுட்டுக் கொன்றான் !

கொலைகாரனை வரவேற்கும் மடமை மாற வேண்டும் !
கொலைகாரனை தண்டிக்கும் கடமை உணர வேண்டும் !

ஆடு பகை, குட்டி உறவு என்ற நிலைமை மாற வேண்டும் !
அற்புதத் தமிழர்களின் உணர்வை உணர வேண்டும் !

என் உயிரினும் மேலான தமிழ் வாழ வேண்டும் !
இந்த உலகின் முதல் மொழி தமிழ் அறிந்திட வேண்டும் !

ஊடகங்களின் தமிழ்க்கொலை தடுத்திட வேண்டும் !
உதடுகளில் தமிழ் மட்டுமே ஒலித்திட வேண்டும் !

தமிங்கில உரையாடலை உடன் ஒழித்திட வேண்டும் !
தமிழின் இனிமையை எல்லோரும் உணர்ந்திட வேண்டும் !

எல்லா வளங்களும் நிறைந்தது நம் தமிழ்மொழி !
ஏன் கையை ஏந்த வேண்டும் பிற மொழிகளில் !

கச்சத்தீவு இந்தியா போட்ட பிச்சை !
கச்சைக்கட்டி வந்து சுடுகிறான் தமிழரை !

ஏன் என்று கேட்க நாதியில்லை இந்திய இராணுவம் !
என்றுமே இலங்கையை திருப்பி சுடுவதில்லை !

தமிழ்நாட்டுத் தமிழருக்குப் பகைவன் சிங்களன் !
இந்திய நாட்டுக்கு சிங்களன் நண்பன் என்பது முரண் !

தமிழ்நாட்டு தமிழர்கள் தயவு வேண்டுமா?
இலங்கைநாட்டு சிங்களன் தயவு வேண்டுமா?

விரைவில் முடிவு செய்து அறிவியுங்கள் !

வேகமான முடிவில் உள்ளது உங்கள் ஆட்சி !

தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் !
தயவால்தான் மசோதாக்கள் மேல்சபையில் நிறைவேறும் !

இலங்கை சிங்களனுக்கு ஒரு வாக்கும் இல்லை !
இந்திய பாராளுமன்றத்தில் சிந்தித்து செயல்படுங்கள் !

வெளிஉறவு கொள்கைகளை மாற்றுங்கள் அல்லது !
வெளிஉறவு அமைச்சரையே மாற்றுங்கள் !

தமிழர்களை பகைத்துக் கொண்டு இனி யாரும் !
தனி ஆவர்த்தனம் செய்ய முடியாது !

என் உயிரினும் மேலான விடுதலையை !
என் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழன் பெற வேண்டும் !

என் உயிரினும் மேலான தமிழ்மொழி !
எங்கும் எதிலும் என்றாக வேண்டும்.!

eraeravi said...

யானை ! கவிஞர் இரா .இரவி !

கரிய நிறம் கொண்ட வெள்ளை உள்ளம் !
கரும்பு தந்தால் விரும்பி நன்றாய் உண்ணும் !

உருவத்தில் பெரியது கண்கள் மட்டும் சிறியன !
உணவில் சைவம் மட்டுமே என்றும் உண்ணும் !

பூச்சிகள் செல்லாமலிருக்க காதுகளை ஆட்டும் !
பூவுலகில் அனைவரும் விரும்பிடும் அற்புத விலங்கு!

நின்றாலும் அழகு நடந்தாலும் அழகு !
நினைத்தாலும் அழகு பார்த்தாலும் அழகு !

மதம் பிடிக்காதவரை குழந்தையாக இருக்கும் !
மதம் பிடித்தாலோ மதம் பிடித்த மனிதனாகிவிடும் !

மிகப்பெரிய யானையை கோவில் பாகன்
மிக மோசமாக பிச்சை எடுக்க வைப்பான் !

வாங்கிய பணத்தை வாங்கிக் கொண்டு !
வாகனமாய் அமர்ந்து அங்குசத்தால் குத்துவான் !

பெரிய சங்கிலியை இழுத்து தோற்ற யானை !
சிறிய கயிற்றை இழுக்க முயற்சிக்கவில்லை !

காடுகளில் கூட்டமாக கூடி வாழும் !
கோவில்களில் தனியாக வாடி வாழும் !

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை !
குவளயத்தில் அனைவரும் அதிசயிக்கும் யானை !

மணி ஓசை வந்து விடும் முன்னே !
மணியாக நடந்து வரும் பின்னே !

நிலவும் யானையும் காதலியும் ஒன்று !
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை !
.

eraeravi said...

இருட்டு ! கவிஞர் இரா .இரவி !

இருட்டு என்பது இருட்டு அல்ல !
இருட்டு என்று ஒன்று இல்லை !

ஒளிக்கீற்று வந்ததும் ஒளி வரும் !
ஒளிக்கீற்று சென்றதும் ஒளி செல்லும் !

இருட்டு என்ற ஒன்று வருவதில்லை !
இருட்டு என்ற ஒன்று செல்வதில்லை !

இருட்டில் இருப்பதாய் வருந்தாதீர்கள் !
இருட்டு என்பதே கற்பனைதான் !

இருட்டு என்ற வருத்தம் தவிர்த்திடுங்கள் !
ஒளியை ஏற்றுங்கள் வழி கிடைக்கும் !

eraeravi said...

வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி !

மனிதஇனம் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா !
உயிரினங்கள் யாவையும் விரும்புவது விடுதலை !

எந்தப் பறவையும் கூண்டை விரும்புவதில்லை !
எந்த விலங்கும் கூண்டை விரும்புவதில்லை !

மனிதர்கள் பிறர் ஆதிக்கத்தை விரும்புவதில்லை !
.மனிதர்கள் பிறருக்கு அடிமையாக விரும்புவதில்லை !

விட்டு விடுதலையாகிடவே விரும்புகின்றனர் !
கட்டுண்டு துன்பத்தால் வாடுவதில் உடன்பாடில்லை !

விடுதலை போராட்டத்திற்கு வரலாறு உண்டு !
விடுதலைக்கு அறவழி ஆயுதவழி இரண்டுமுண்டு !

அறவழியில் போராடி சாத்தியமாகாத போது !
ஆயுதவழிக்கு ஆயத்தமாகின்றனர் சிலர் !

தன்னைப் போலவே பிறரை நேசித்தால் !
தரணியில் ஆண்டான் அடிமை இருக்காது !

உயர்ந்தவன் என்று எண்ணி பிறரைத் தாழ்த்துவதால் !
உயரம் இழந்து கீழே வீழ்ந்து விடுகின்றனர் !

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் !
உணர்ந்திட்டால் சண்டைகள் இல்லை !

உனக்குள்ள உரிமைகள் அனைத்தும் பிறருக்கும் !
உண்டு என்பதை புரிந்தால் நடத்தல் நன்று !

வானிலிருந்து வந்தவர் எவருமில்லை !
மண்ணிலிருந்து வந்தவர்தான் எவரும் உணர்க !

.

eraeravi said...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

நகைக்கடை விளம்பரம்
சுத்தத் தங்கம்
சுத்தப் பொய் !

எல்லா வண்ணங்களும்
ஒரே வண்ணம்தான்
பார்வையற்றோர்களுக்கு !

சேலை சுடிதார் மிடி
எதுவும் அழகு
அவளுக்கு !

விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள்
பாவையர் பார்வையில்
உள்ளது மின்சாரம் !

அன்றும் இன்றும்
உயிர் பலி வாங்குகின்றது
காதல் !

உணர்ந்திடுக
காட்டுமிராண்டித்தனம்
கௌரவக்கொலை !

வசதிகள் இருந்தால்
வழிமொழிகின்றனர்
காதல் !

முக்காலமும் தொடரும்
மூன்று எழுத்து
காதல் !

சாதியை மாற
சாதிக்க நினை
சிகரம் உனது !

பித்தலாட்டம் ஏமாற்று
மூலதனம்
அரசியல் !

சின்ன மீன்கள் இட்டு
சுறா மீன்கள் பிடிப்பு
அரசியல் !

விளக்கு எரியவும்
வீடு எரியவும்
ஒரே தீக்குச்சி !
.

eraeravi said...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


பறவைகளில் சிறியது
பரவசம் தருவது
குருவி !

சிலப்பதிகாரம் நற்றிணை குறுந்தொகை
இலக்கியங்களில் இடம் பிடித்த
குருவி !

தன்னுயிருக்கு மேலாக
தன் குஞ்சுகள் உயிர் காக்கும்
குருவி !

இரை ஊட்டி காக்கும்
இனிய குஞ்சுகளை
குருவி !

மிக இனிமை
எழுப்பும் ஒலி
குருவி !

கூடு கட்டி வாழும்
கூடி வாழும்
குருவி !

சிட்டுகளை
நினைவூட்டும்
குருவி !

குழந்தைகள் பார்த்தால்
குதூகலம் பெறும்
குருவி !

பறப்பது அழகு
நடப்பது அழகு
குருவி !

மெல்லிய தேகம்
பறக்கும் வானம்
குருவி !

மூன்றெலுத்து முத்தாய்ப்பு
முத்தமிட்டுக் கொள்ளும்
குருவி !

உழைப்பால் உருவாக்கும்
உன்னத கூடு
குருவி !

அருகே வாழ்ந்தது
தூரம் சென்றது
குருவி !

வண்ண சிறகு
ரசிக்க அழகு
குருவி !

உலகமயத்தால்
விவசாயியோடு பாதித்தது
குருவி !

அலைபேசி கோபுரங்களால்
அழிந்து வருகின்றது
குருவி !
.

eraeravi said...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வண்ணம் கருப்பு
எண்ணம் இனிப்பு
காகம் !

அழகு கருப்பு
அனைவரின் விருப்பு
காகம் !

கூர்மை அலகு
கூர்ந்து பார்த்தால் அழகு
காகம் !
.
கரைந்து உண்ணும்
இரக்க உள்ளம்
காகம் !

கூடி வாழும்
கோடி இனம்
காகம் !

ஒன்றுக்கு இடர் எனில்
அனைத்தும் கூடி விடும்
காகம் !

அழைத்தால் வரும்
அன்புப் பறவை
காகம் !

பாட்டி கதையில்
பகையாளி
காகம் !

பானையில் கற்கள் இட்டு
தாகம் தனித்த அறிவாளி
காகம் !

குயிலிடம்
வாடகை வாங்காத தாய்
காகம் !

இரண்டும் உண்ணும்
சைவம் அசைவம்
காகம் !

பறக்காமல் நடக்காமல் பயணிக்கும்
பசுவின் மீது அமர்ந்து
காகம் !

பார்க்கின்றனர் பலர்
கடவுளாக முன்னோராக
காகம் !

Unknown said...

ஐயா பா விஜய் அவர்களை தொடர்பு கொள்ள உதவி செய்யுங்கள். தொடர்பு எண் தேவை

«Oldest ‹Older   201 – 213 of 213   Newer› Newest»