மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

76. பஞ்ச பூதங்களைப் பயன்படுத்தும் முறை

இந்தப் பிரபஞ்சமும், இதனுள் இருக்கும் நீ வாழ்ந்து கொண்டிருக்கின்ற வீடும், அதாவது இந்த உடம்பும் ஐந்து பூதங்களால் ஆனவை. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பவையே அந்தப் பஞ்சபூதங்கள். இவை ஐந்தும், புலன்களில் சுவை (நா) ஒளி (கண்) ஊறு (தோல்) ஓசை (காது) நாற்றம் (மூக்கு) அக விளங்குகின்றன. இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் ‘தெய்வீக வெளிப்பாடுகள்’ ஆகும். இவை ஒவ்வொன்றையும் நாம் பயபக்தியுடனும், விழிப்பாகவும் கையாள வேண்டும். உதாரணத்திற்கு, ‘நிலம்’ என்ற பூதத்தை எடுத்துக் கொள்வோம். நீங்கள் விதைகளை நிலத்தின் மேல் - மண்ணின் மேல் - மேலாகத் து}வினால் அவ்விதைகள் முளைக்காது போகலாம்!



 அவற்றை மண்ணிற்குள் மிக ஆழத்தில் நட்டாலும், அவை மண்ணின் மேல் வெளிவந்து முளைக்காது போய்விடும். வெளியேவந்து ஒளியைக் காண்வேண்டும், என்ற போராட்டத்தைக் கூட அவைவ pட்டு விடலாம்! அதே போன்றுதான், ஒவ்வொரு பூதத்தினையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் நாம் பயன்படுத்த வேண்டும். தண்ணீரைத் தொண்டைக் குழிக்குள் நேரடியாக ஊற்றினால், அது சித்திரவதைதான், அதன் எல்லைதாண்டிப் போவதால். அவ்வாறே வெப்பத்திற்கும், பாதுகாப்பான அளவில் கேட்க முடிகின்ற ஓசைக்கும் ஓர் அளவு, எல்லை உண்டு. ஒரு கடும்புயல்காற்று வீசும் போது உங்களால் வசதியாக இயல்பாக மூச்சுவிட முடியாது: அதே போல் உங்கள் காதருகே ஒரு வெடி வெடித்தால் அந்த வெடிப்போசையினை உங்கள் காதின் சவ்வுகள் தாங்கிடுமா? பஞ்ச பூதங்களை, அதன் சரியான அளவுக்கும் மேல் எல்லையை மீறிப் பயன்படுத்தினால் அது அடாத செயல், அவச்செயல்! நீங்கள் படுத்திருந்த உங்கள் படுக்கையினைச் சுற்றி எடுத்துச் சிறிதும் குனியாமல் நேராக நின்று கொண்டு அதனைத் தரையில் ‘டம்’ என்ற ஓசை எழும்படியாகத் து}க்கி எறியாதீர்கள்: தவிர்க்கக்கூடிய இந்த ஓசையினை நீங்கள் எழுப்பியது கடவுளின் மேல் எழுப்பிய ‘அடாச்செயல்’ ஆகும்: அவர்தான் ஓசை (ஒலி) பயணம் செய்கின்ற இந்த ஊடகத்தை உனக்கு அளித்தார்!

77. சாயி கல்லூரிகள் - எதற்காக?

படித்தவன் அல்லது கல்வி கற்றவன் என்பவன் பிறர் பொருளைக் கைப்பற்றுவதிலும், பொருளைத் திரட்டிக் குவிப்பதிலும், சொத்துக்கள் உடைமைகள் போன்றவற்றைச் சேர்ப்பதிலும் களிப்ப (பெருமகிழ்ச்சி) கொள்ளக்கூடாது. சாயி உங்களுக்காகவேதான், உயர்ந்த குறிக்கோளை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கவேதான் ஒவ்வொன்றையும் செய்கின்றார். ஆனால், உங்களுடைய புரிந்து கொள்ளும் திறனானது, அச்செயலின் கீழ் அமிழ்ந்திருக்கும் காரணத்தை உணர்ந்து கொள்ள முடியாத வரையறைக்கு உட்பட்டது என்பதால், நீங்கள் தவறான முடிவுகளில் வீழ்ந்து விடலாம்! சாயி, இந்தக் கல்லு}ரிகளையும், இந்த மாணவர் விடுதிகளையும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் தன்னை முன்னிறுத்திக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கட்டவில்லை. இந்த உலகில் லட்சக்கணக்கான கல்லூரிகள் குறிக்கோள் வாழ்வு வாழும் ஓர் இளைஞர் பரம்பரையினை உருவாக்குவதைத் தங்களின் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. 
78. சுதந்திரப் பறவைகளாய்! 
இளைஞர்கள் கேட்கின்றார்கள், நாங்கள் ஏன் சுதந்திரமாக இருக்கக்கூடாது, மீன்கள் போல், பறவைகள் போல், விலங்குகள் போல் என! அவர்கள் ஒன்றைக் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அவை அவற்றிற்குரிய சுதந்திரத்தை, வாழும் நிலைமைக்கு ஏற்ப – தகுதிக்கு ஏற்ப – அனுபவிக்கின்றன. அதே போல் மனிதனும், மனிதன் என்ற தகுதிக்கேற்ற சுதந்திரத்தை அனுபவிக்கலாம். நீங்கள் உங்களை மனிதன் என்று கூறிக்கொண்டு விலங்குகள் போன்ற வாழ்வினை வாழக்கூடாது. மனிதனுக்குரிய சுதந்திரத்தினை நன்கு அனுபவியுங்கள் விலங்குகள் போன்று சுதந்திரமாய் இருப்பது என்றால் நீங்கள் விலங்கு வாழ்வு வாழ்கின்றீர்கள் என்றுதான் அதற்குப் பொருள். நீங்கள் விலங்காகவே ஆகி விடுகின்றீர்கள். மனிதன் அனுபவிக்க வேண்டிய அனுபவிக்கும் சுதந்திரம் என்ன?

அவன் ‘உண்மை’யின் பக்கமே நிற்க வேண்டும்:

அவன் ‘அறவழி’ யில் தான் நடக்க வேண்டும்:

அவன், ‘அன்பு’ என்பதனை வளர்க்க வேண்டும்:

அவன் ‘அமைதி’யில் வாழ வேண்டும்:

அவன் ‘அகிம்சை’யையே கடைப்பிடிக்க வேண்டும்!

79. ராம என்னும் இரண்டெழுத்து

கரும்பின் சாற்றைவிட இனிமையானது, எது? தேனைவிடத் தித்திப்பானது எது? அமிழ்தத்தைக் காட்டிலும் சுவையானது எது? அதுதான் ராம என்னும் திருநாமம்! நீங்கள் அந்தத் திருநாமத்தை ஓத, ஒத அதன் தெய்வீகச் சுவையினைச் சுவைப்பீர்கள்: ஏராளமான இனிமையினை நுகர்வீர்கள்!

தெய்வீக வடிவங்களே! வால்மீகி முனிவர் து}யவர், புனிதர், முழுதும் தன்னலம் அற்றவர்! அவர் நு}று கோடிச் செய்யுள்களில் (ஸ்லோகம் ) இந்த மனித சமூகம் உய்தி பெற இராமாயணத்தை எழுதினார். ஆனால் தேவர்களும் முனிவர்களும் இராமாயணத்தின் மிக உயர்ந்த பெருமையை நினைத்து அவருடைய மாபெரும் படைப்பில் தங்களுக்கும் ஒரு பங்கு வேண்டும் என உரிமையோடு வேண்டினார்கள்.

அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று வால்மீகி முனிவர் அந்தச் செய்யுள்களை எல்லாம் மூன்று உலகங்களிலும் உள்ளவர்களுக்கு (தேவர் – முனிவர் – மானுடர்) பகுத்துக் கொடுத்தார். எல்லாச் செய்யுள்களையும் மூவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்த பின் 32 அசைகள் ஃ எழுத்தக்கள் அடங்கிய ஒரு செய்யுள் எஞ்சி நின்றது. அதனையும் மூவருக்கும் சமமாகப் பங்கிட்டு முப்பது அசைகளை / எழுத்துக்களைக் கொடுத்த பின்னர் இரண்டு அசைகள் தாம் இரண்டு எழுத்துக்களால் ஆன ராம என்பதாம்: இதனை மூன்று உலகங்களில் வாழ்வோருக்குக் கொடுத்தார். அதே இரண்டு அசைகள் தாம் கிருஷ்ணா, ஹரி, ஜீசஸ், அல்லா, சாயி ஆகிய திருநாமங்களில் காணப்படுகின்றன. இவ்வாறாக வால்மீகி முனிவர் மூன்று உலகங்களிலும் வாழ்வோர் அனைவருக்கும் சமாமாக இரண்டு அசைகள்  / எழுத்துக்கள் கொண்ட திருநாமத்தினை வழங்கியருளினார்.

முற்றும்.

-----------------------------------------------------------------------------------------------------------
அடுத்த வாரத்திலிருந்து பகவான் ஸ்ரீ  சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள் தொடங்கும்.

No comments: