உலகச் செய்திகள்

.
*தெருவோரம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ.

* ஈரானுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர்.


ஈரானுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி இரவு 7.45 மணி) இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தில் 11 விமான பணியாளர்கள் இருந்தனர்.





பனி சூழ்ந்த விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க இந்த விமானம் முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக விமான நிலையத்தினர் தெரிவித்தனர். அருகிலுள்ள பண்ணையில் விமானம் விழுந்து நொறுங்கி பல துண்டுகளாக சிதறிக் கிடந்தது.

ஈரான் அரசுக்குச் சொந்தமான இந்த விமானம் தலைநகர் தெஹரானிலிருந்து புறப்பட்டு வடமேற்கு பகுதியில் உள்ள ஒரிமியோ நகருக்குச் சென்றது. ஒரிமியோ விமான நிலையத்தை நெருங்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமான பைலட் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குள்ளாகவே விமானம் கட்டுப்பாட்டு நிலைய ரேடாலிருந்து மறைந்து போனது. பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஈரான் போக்குவரத்துத் துறை அமைச்சர் அகமது மஜிதி தெரிவித்தார். விமானம் தீப்பற்றியதாகவோ அல்லது குண்டு வெடித்ததாகவோ தகவல் இல்லை என்றும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் 12 பெண்கள், 42 பேர் ஆண்கள். 23 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அவர் கூறினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார். காயமடைந்து சிகிச்சை பெறுவோரில் 3 விமான பணியாளர்களும் அடங்குவர். கடுமையான பனி மூட்டம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

போயிங் 727 ரக பயணிகள் விமானம் 1974-ல் தயாரிக்கப்பட்டவையாகும். அமெரிக்காவுடனான உறவு சுமுகமாக இருந்த காலத்தில் இவை வாங்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை சரிவர பராமரிக்காததால் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இவற்றுக்கு உரிய உதிரி பாகங்கள் கிடைக்காததும் இவற்றை நிர்வகிப்பது பெரும் பிரச்னையாக இருந்து வந்துள்ளது.

2009-ம் ஆண்டு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட டுபலோவ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 168 பேர் உயிரிழந்தனர். காஸ்பியன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் ஏரோவானிலிருந்து ஆர்மீனியா செல்லும் வழியில் விபத்தில் சிக்கியது.

2005-ம் ஆண்டு 108 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. தெஹரானில் உயரமான குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அதே ஆண்டு தெஹரானின் மொராதாபாத் ராணுவ படைத்தளத்திலிருந்து விமானம் புறப்படும்போதே விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். 2003-ம் ஆண்டு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட இலுஷின் 72 ரக விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 302 பேரும் உயிரிழந்தனர்.

ரஷியா சிதறுண்ட பிறகு, ரஷிய விமானங்களுக்கான உதிரி பாகங்கள் கிடைக்காததும் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. மேலும் ஈரான் விமான நிறுவனம் பெரும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. இதனாலேயே ஈரான் விமானங்கள் போதிய பராமரிப்பின்றி அடிக்கடி விபத்துக்குள்ளாவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Nanri thenee

வீடின்றி தெருவில் தவித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரன் கோடீஸ்வரனான கதை


[ சனிக்கிழமை, 08 சனவரி 2011, 03:57.07 பி.ப GMT ]

தெருவோரம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ.

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் டெட் வில்லியம்ஸ். இவர் முன்னர் அறிவிப்பாளராக இருந்தவர். மது,மாது என சீரழிந்து போனதால் 10 ஆண்டுகளாக தெருவில் பிச்சையெடுத்து வந்தார். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை 'குரல்' அவருடைய உள்மனதில் திடீரென ஒலிக்கத்தொடங்க, தெருவில் சென்று வரும் கார்காரர்களிடம், தனது குரலால் வானொலி அறிவிப்புக்கள் போன்றும், சில நேரங்களில் வேத வசனங்கள் கூறியும் வசீகரிக்க தொடங்கினார். இதற்காக ஒருவரிடம் ஒரு அமெரிக்க டாலருக்கு மேல் வசூலிப்பதில்லை எனவும் முடிவெடுத்தார்.

இறைவன் எப்படியும் உதவுவான். ஏதோ ஒரு வழியில் உதவுவான் என நம்பத்தொடங்கியவர் காண்பவர்களிடமும் அதையே கூறினார். அதை தான் கடவுளும் செய்யத்தொடங்கினார் செனேவெத் எனும் நபர் உருவத்தில்.

கொலம்பஸை சேர்ந்த, வெப் புரொடியூசரான டோரல் செனேவெத், தனது மனைவியுடன் அத்தெரு வழியாக ஒரு நாள் செல்கையில் டெட் வில்லியம்ஸின் அசாதாரண தங்க குரலை கேட்க முடிந்தது. 80,90 களில் வானொலி அறிவிப்புக்களில் ரசிகர்களை மூழ்கடிக்கும் திறன் பலருக்கு இருந்தது. வில்லியம்ஸிடம் இப்படி ஒரு திறமை இருப்பதாக நம்பிய செனேவெத் அவரை பற்றி விசாரிப்பதற்குள் சிக்னலில் பச்சை நிறம் காட்ட, தன்னிடமிருந்த ஒரு டாலரை வில்லியம்ஸின் கைகளுக்கு வீசிவிட்டு, புறப்பட்டு விட்டார். அப்போது தன் மனைவியிடம் 'எங்களுக்கு ஒரு நல்ல நேரம் கிடைத்தது. ஆனால் நீடிக்கவில்லை. வாழ்க்கை சென்று கொண்டே இருக்க வேண்டும் என மறுபடி உணர்த்துகிறது.சிக்னல் வீழ்ந்துவிட்டது பார்!' என கூறிவிட்டு காரை விர்ரென எடுத்துக்கொண்டு புறப்பட்டார் செனேவெத்.

ஆனால் அந்த குரல் மனதுக்குள் ஏதோ செய்துகொண்டே இருக்க அடுத்த முறை தன் கமெராவையும் கொண்டு சென்று, 'எங்கே உங்கள் 'தங்க' குரலால் இரு வார்த்தைகள் கூறுங்கள்' என வில்லியம்ஸை படம்பிடித்து யூடியூப்பில் அப்லோட் செய்ய, இரண்டு வாரம் தான், மூன்று மில்லியனை தொட்டு நிற்கிறது அந்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை. இவ்வளவு பேர் பார்த்த ஒருவர் என்றால் சும்மாவா?

அமெரிக்க் பிரபல க்ளிவ்லாண்ட் கவாலியர் விளையாட்டு குழுமம் உடனடியாக வில்லியம்ஸை அழைத்து, தனது வானொலிச்சேவையின் அறிவிப்பாளராக முழு நேர வேலை கொடுத்து, வீடும் கொடுத்தது. இதோ இன்றைய தேதிக்கு உலகின் பிரபல செய்தி தளங்களும், செய்தி அறிவிப்பாளர்களும் வில்லியமின் குரலை கேட்கவும், அவரை ஒரு முறையாவது நேரடியாக பேட்டி எடுக்கவேண்டுமெனவும் போட்டி போட்டு நிற்கின்றன.

No comments: