“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன்

.
ஒரு காலத்தில கண்ணதாசன் ஒரு பாடல் எழுத வருகிறார் என்றால் இசையமைப்பாளர், படத்தின் இயக்குநர் எல்லாம் எழுந்து நிற்பார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இணையாக தனக்கென்று ஒரு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார் கவியரசர் கண்ணதாசன். ஒரு நாள் கண்ணதாசனை பாத காணிக்கை படத்தில் ஒரு பாடல் ரெக்கார்டிங்குக்கு கூப்பிட்டார்கள். கண்ணதாசன் வந்து உட்கார்ந்து பாடல் எழுத வேண்டிய சூழலைக் கேட்டார். அந்தக் காலத்தில் பாடல் எழுதிய பிறகுதான் ட்யூனை இசையமைப்பாளர் போடுவார். ஆகவே பொறுமையாக  பாடலின் சூழலைக்  கேட்டுவிட்டு கவிஞர் சொன்னார் :


   எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன் விட்டுவிட்டுப் சென்றானடிஎன்று தொடங்கி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார். பாடலை எழுதி முடித்ததும் இயக்குநர் ஷங்கர் ஏதோ கேட்க நினைத்தார். பிறகு விட்டுவிட்டார். படம் வெளியானது. எட்டடுக்கு பாடல் சூப்பர் ஹிட். சுசீலா தேன்குரலில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது பாட்டு. படத்தின் வெற்றியைக் கொண்டாட ஒரு பார்ட்டி வைப்பதென முடிவாயிற்று. பார்ட்டிக்கு நம்ம கவியரசரும் வந்தார். இயக்குநர் ஷங்கர்  பக்கத்தில் உட்கார்ந்தார். பார்ட்டியின் இடையே  படத்தின் பாடல்களைப் பற்றிய பேச்சு வந்தது. ஏதோ ஒரு தைரியத்தில் இயக்குநர் மெல்ல கேட்டார் , ஏண்ணே, நம்ம படத்துல வீடு வரை உறவு, அத்தை மகனே, பூஜைக்கு வந்த மல்ரே, எட்டடுக்கு மாளிகை பாட்டு எல்லாமே  சூப்பர் ஹிட்டாயிடுச்சு!”


 ஆமாம்பா!” கண்ணதாசன். ஏண்ணே நம்ம படத்துல ஹீரோ கேரக்டரும் ஏழை. ஹீரோயினும் ஏழை! ஏண்ணே எட்டடுக்கு மாளிகைன்னு எழுதுன்னீங்க?” கண்ணதாசன் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அதுவும் படம் ரிலீசாகி வெற்றி விழா பார்ட்டியில் வந்து இந்தக் கேள்வி கேட்கப்படும் என்று நினைக்கவில்லை. அந்தக் காலங்களில் கண்ணதாசனுக்கு உதவியாளராகபஞ்சுஇருந்தார். ஆமாம், பிற்காலத்தில் அன்னக்கிளியில் இளையராஜாவை அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளரும்கல்யாணராமன்போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய பஞ்சு அருணாசலம்தான் அது. கண்ணதாசன் சொல்ல சொல்ல பாடல் வரிகளை காகிதத்தில் எழுதுவது நம்ம பஞ்சு அருணாசலம்தான். கண்ணதாசன் இயக்குநர் இந்தக் கேள்வி கேட்டவுடன் பஞ்சுவைப்பார்த்த கவிஞர் ,

  டேய் , இவன் என்னடா இப்ப வந்து இப்படி கேட்கிறான்இவனுக்கு நீயே விளக்கம் சொல்லுடா!” என்றார். பஞ்சு அருணாசலமும் இந்தப் பாடலை எழுதியது முதலே இந்தக் கேள்விக்கு விடை தெரியாததால், அவராய் குத்து மதிப்பாய், டைரக்டரண்ணே! எட்டடுக்குன்னா எட்டடுக்காண்ணேன்? அதெல்லாம் சீரும் சிறப்புமா வச்சதா ஒரு அர்த்தம் தாண்ணே? கவிதை நடை! அவ்வளவுதான்!” என்று விளக்கமளிக்க கண்ணதாசனுக்கு அப்போதுதான் தன்னைத்தவிர யாருக்குமே பாடலின் உண்மையான அர்த்தம் புரியவில்லை என்பதே புரிந்த்து. அவரே  விளக்கினார் ஏம்பா.. எட்டடுக்கு மாளிகைன்னா அவள் புருஷனோட எட்டு ஜான் உடம்பு. உடம்புக்கு மேல என்ன இருக்கு? தலைதான? “எம்புருஷன் என்னைத் தலையில தூக்கி வச்சி ஆடுறார்னு பொண்ணுங்க சந்தோஷப்படுறதில்ல, அதமாதிரிதான் எட்டு ஜான் உடம்புங்கற மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன்புரியுதா ? “ என்றார். இந்தப் பாட்டில் இப்படி ஒரு மெல்லிய இலக்கிய உவமையை கவிஞர் புகுத்தியது எல்லாருக்குமே அப்போதுதான் தெரிந்தது! கவியரசர் கவியரசர்தான்!

Nanri: Kaviyarasar email

No comments: