அவுஸ்திரேலிய செய்திகள்

.
அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு; ஒருவர் பலி

குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக இடம்பெற்ற வெள்ளத்தில் குறைந்தது
ஒருவர் பலியானதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

மாநில தலைநகர் பிறிஸ்பேனின் மேற்கே யுள்ள தூவூம்பா நகரில் திடீரென பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந் நகரில் கார்களிலும் வீட்டுக் கூரைகளின் மீதும் வெளியேறமு டி யாத நிலையிலுள்ள மக்களை மீட்கும் பணி யில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவம்பரிலிருந்து அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாரிய  வெள்ளப் பெருக்கு சம்பவங்களில் இதுவரை 17 பேர் பலி யாகியுள்ளனர்.

குயீன்ஸ்லாந்திலும் அதன் அயலிலுள்ள நியூ சவுத் வேல்ஸிலும் இடம்பெற்ற வெள் ளப் பெருக்கால் சுமார் 200,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக் களிலிருந்து விடுபடுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெவித்தார்.

குயீன்ஸ்லாந்தில் புதிதாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பெண் பாத சாரி யொருவரே பலியாகியுள்ளார்.

எதுவித முன்னெச்சரிக்கையும் செய்யப்ப டாத நிலையில் தூவூம்பா நகருக்குள் வேகமாக பாய்ந்து வந்த வெள்ளத்தால் வீட்டுத் தளபாடங்களும் வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த வெள்ளத்தால் புகையிரத பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள வாகனங்களிலி ருந்தும் வீடுகளிலிருந்தும் தம்மை மீட்க வரும்படி பலரும் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திய வண்ணம் உள்ளதாக குயீன்ஸ் லாந்து பிரதி பொலிஸ் ஆணையாளர் அயன் ஸ்வார்ட் தெவித்தார்.

No comments: