மட்டு. மாவட்டம் வெள்ளப்பெருக்கும்

.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத் தொகை 5 இலட்சத்து 96 ஆயிரத்து 317 ஆகும். இதில் 11ஆம் திகதி காலை தெவிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 5 இலட்சத்து 5358 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் நில மட்டத்துக்கு நீர் உயர்ந்துள்ளதால் எஞ்சியுள்ள 96 ஆயிரம் பேரையும் பாதிக்கப்பட்டவர்களாகவே கொள்ளல் வேண்டும். ஆனைப்பந்தி போன்ற ஓரு இடங்கள் இந்த நிலமட்ட நீர் உயர்வுக்கு விதிவிலக்காக இருக்கலாம்.



மட்டக்களப்பு மாவட்டம் வடக்கு தெற்காக நீண்டு கிடக்கிறது. கிழக்கே வங்காள விரிகுடா அமைந்துள்ளது. அதனை அடுத்து வடக்கே கதிரவெளி தொடக்கம் தெற்கே துறைநீலாவணை வரைக்குமான கிராமங்கள் உள்ளன. இவற்றுக்கு மேற்புறமாக மட் டக்களப்பு வாவி அமைந்துள்ளது. 73.5 கிலோமீற்றர் நீளமான இந்த வாவிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையே அமைந்துள்ள பகுதி எழுவான்கரை என அழைக்கப்படுகின்றது. வாவிக்கு மேற்கே அம்பாறை மாவட்ட எல்லை வரை அமை யப் பெற்றுள்ள பகுதிகள் படுவான்கரை பகுதி என அழைக்கப்படுகின்றன.

14 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய முழு மாவட்டம் 2633.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவை உள்ளடக்கி யுள்ளது. இதில் 229.19 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பாகும். இதில் 58374 ஹெக்டயர் நெல் வயலாகும். இம்மாவட்டத்தின் வரு டாந்த சராசரி  மழைவீழ்ச்சி 1651 மில்லி மீற்றராகும். 965 கிராமங்கள் இங்கு உள்ளன.

மகாவலியினால் ஊட்டப்படும் மாதுரு ஓயாவைத் தவிர வரட்சி வலயத்தில் உற்பத் தியாகும் 14 ஆறுகள் உள்ளன. இறுதியில் மட்டக்களப்பு வாவியிலும் வங்காள விரிகு டாவிலும் கலக்கும் எல்லா ஆறுகளும் வட கீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் பெருக் கெடுத்துப் பாய்கின்றன. தற்போது பெய்வது இப்பருவ மழையேயாகும்.

மகரச்சேனை ஆறு, மண்டன் ஆறு, பொ திகொட ஆறு, கிமிச்சை ஓடை, புளியன் பொட்ட ஆறு, மாதுருஓயா, மியங்கல் எல்ல றுத்தனை ஆறு, மகிழவெட்டு வான் ஆறு, வெட்டி ஆறு, மன்னம்பிட்டி யாறு, மணல்காடு ஆறு, தும்பன் கேணி யாறு, அம்டலி ஆறு என்பனவே மேற்படி ஆறுகளாகும்.

நீர்வளம் நில வளம் மீன் வளம் தேன்வளம் பால் வளம் தயிர் வளம் நிறைந்த நந்நாடு என்று புகழப்பட்ட மட்டு.

நந்நாட்டில் 293 சிறிய குளங்களும் 250 கிரா மக் குளங்களும் 22 பாய மற்றும் நடுத்தர குளங்களும் நீரேந்தும் நிலைகளாகவுள்ளன.

உன்னிச்சை (33 அடி), நவகிரி  (31 அடி), உறுகாமம், வாகனே, கட்டுறிவு, தும் பங்கேணி, புணாணை, புழுகுநாவி, கடுக்கானை, தரவை, வெலிக்காகண்டி, கித் துள்வெவ, வடனை, ஆனைசுட்ட காட்டு குளம், மதுரங்கேணி குளம், கி மிச்சை ஓடை, அடைச்சகல் குளம் ஆகிய பாய மற்றும் பெய குளங்களும் இவற்றிலடங்கும்.

இத்தனை குளங்களும் ஆறுகளும் மட்டக்களப்பு வாவிக்கு மேற்கே படு வான்கரைப் பகுதியிலேயே உள்ளன. இத்த னைக்கும் மேலாக அம்பாறை மாவட்டத்தி லுள்ள சேனாநாயக்க சத்திரத்தின் வடிச்சல் நீர் பாய்ந்து வரும் அண்டல் ஓயா வும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே வரு கின்றது.

இவ்வாறு இம்மாவட்டத்தில் உள்ள 575க்கும் மேற்பட்ட நீரேந்தும் நிலையங்க ளில் சேரும் மேலதிக மழைநீர், அண்டல் ஓயா நீர், பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டத்தில் இருந்து வரும் நீர் அத்துடன் மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் ஒன்று சேர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின் றது.

எவ்வளவு நீரையும் உள்வாங்க வங்காள விரிகுடா வாய்த்துள்ளது. அதற்கு நீரைக் கொண்டு செல்ல பாலமீன்மடு, கல்லாறு ஆகிய இடங்களில் 2 கத்துவாரத்துடன் மட்டக்களப்பு வாவியும் தயாராகவுள்ளது.

அப்படியாயின் வெள்ளப்பெருக்கு ஏற்ப டக் காரணம் என்ன? கடந்த கால வெள்ளப் பெருக்கை இலக்காகக் கொண்டு வடிகால் அமைக்கப்படாமையே இதற்கு காரண மாகும். கிராமப்புறங்களில் பொதுமக்கள் வீடுகளை அமைத்தும் உள்ளூராட்சி சபை கள் கவனிக்காமல்விட்டதாலும் இருக்கக்கூ டிய வடிகால்களை நாம் இங்கு சுட்டிக் காட் டவில்லை. மட்டக்களப்பு வாவிக்கு மழை நீரை கொண்டு செல்லக்கூடிய வகையில் வாய்க்கால் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1878, 1904, 1906, 1913 ஆகிய ஆண்டுகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டதாக பதிவுகளில் இருந்து அறிய வருகிறது. அதனை அடுத்து 1957ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதன்போது உன்னிச்சைக்குளம் உடைப்பெடுத்து பலரைப் பலி கொண் டது.

இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத் தைப் பொறுத்தவரையில் வருடாந்தம் ஒரு தடவையும் சில வருடங்களில் இரு தட வைகளும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகின் றது. ஆனால் வெள்ளப்பெருக்கை தடுப்ப தற்கு ஒரு வேலைத்திட்டமாவது இதுவரை ஏற்படுத்தப்பட்டதாக நாம் அறியவில்லை.

அனர்த்த காமைத்துவ மத்திய நிலையத் தினால் கூட இங்கு ஒரு வேலைத்திட்டமாவது செய்யப்படவில்லை.

பெருவெள்ளத்தை எதனாலும் கட்டுப்ப டுத்த டியாது என சிலர் வாதிடலாம்.
உண்மைதான். ஆனால் குறைக்க டியும் அல்லவா? வருடாந்தம் ஏற்படும் வெள்ளத்தை தடுத்திருக்கலாம் அல்லவா?

எனவே வெள்ளம் முடிந்தவுடன் உலர் உணவு விநியோகத்துடன் கண்களை மூடி மீண்டும் அடுத்த பருவ மழையின் போது திறக்கக்கூடாது. உடனடியாக ஒரு கூட்டத் தைக் கூட்டி வெள்ள தடுப்புத் திட்டங்கள் இனம் காணப்பட்டு அதற்கு நிதியுதவி களை தேட வேண்டும். இம்மாவட்டத்துக் குய பன்கப்படுத்தப்பட்ட 3 கோடி ரூபா நிதியை விளையாட்டு உபகரணம், ஒலிபெருக்கி தலியவற்றுக்கு இனிமே லும் நிதி ஒதுக்குவதை விடுத்து வெள்ளத்த டுப்பு வேலைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

வேறு வழிகளில் நிதியை பெற்றுக் கொடுப் பதற்கும் மாவட்ட பிரதிநிதிகள் ன்வர வேண்டும். அத்துடன் ஏனைய சம்பந்தப் பட்ட திணைக்கள அதிகாகளும் முன்வர வேண்டும்.

வெள்ளம் காரணமாக கடமைக்கு சகமளிக்காத உத்தியோகத்தர்களும் சம்பளம் பெறுவார்கள். சமூகமளித்ததாக அறிக்கை சமர்ப்பிப்போரும் பெறுவர். ஆனால் மழை தொடங்கிய காலம் முதல் தொழில் செய்ய முடியாமலும் தொழிலுக்கு போக முடியாமலும் முடங்கி கிடக்கும் நாளாந்தம் தொ ழில் செய்து பிழைக்கும் மீனவர், கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள், கட்டிட தச்சு தொழிலாளர்கள், பிச்சை எடுத்து பிழைப்போர் ஆகியோன் நிலை பரிதாபக ரமானது. இவர்கள் எதிர்நோக்கும் பட்டி னிச் சாவை யார் சிந்தித்திருப்பார்கள்.

150 ஆயிரம் ஏக்கரில் இம்றை பெரும் போகம் செய்கை பண்ணப்பட்டது. மேட்டு நிலப்பயிரும் பயிட்டனர். பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்றே விவசா யம் செய்வது வழக்கம். வேளாண்மையும் மேட்டு நிலப்பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது ஏட்டிக்கு போட் டியாக இவற்றின் பாதிப்பு குறித்து தரவுகள் வெளியிடப்படுகின்ற போதிலும் வெள்ளம் ற்றாக வடிந்து வயலை பார் வையிட ன்னர் அதிகாகளால் தரவு வழங்கப்படுவது எவ்வாறு என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

உதாரணமாக மழை காரணமாக 13 மாவட்டங்களில் 2 இலட்சம் ஏக்கர் வயல் நாசம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஆனால் கமநல அமைச்சோ கிழக்கு மற்றும் வடமத் திய மாகாணத்தில் மட்டும் 132000 ஏக்கர் நெற்செய்கை சீரற்ற காலநிலை காரணமாக சேதம் என்று அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு அனர்த்த காமைத்துவ பிரிவை பொறுத்தவரையில் பிரதேச செய லாளர்களிடம் தகவலை பெற்று மத்திய நிலையத்துக்கு வழங்கும் ஒரு முகவர் நிலையமாக மட்டுமே இயங்குகின்றது.

கடந்த 6 மாதத்துக்கும் மேலாக நிரந்தர மாவட்ட இணைப்பாளர் இல்லை. 2 உதவி இணைப்பாளர்களினால் அனர்த்தங்களை எதிர்கொள்ள எவ்வாறு முடியும். வரலாற் றில் பதிவு செய்ய வேண்டிய பெரு வெள்ளம் ஏற்பட்ட போதிலும் இன்றுவ ரையும் மத்திய நிலையத்திலிருந்து ஒரு அதி காயாவது இங்கு வெறுமனே பார்வை யாளராக கூட வரவில்லை.

இத்தகைய நிலையில் சமைத்த உணவு எவ்வாறு சென்றடைகிறது என்பது ஒருபு றம். உலர் உணவு எப்போது எவ்வாறு சென் றடையும் என்பது மறுபுறம். இலங்கை வரைபடத்தில் யாழ்ப்பாணம், திருகோண மலை, மட்டக்களப்பு, அம்பாறை ஒரு நேர் கோட்டில் அமைந்துள்ளன. சூறாவளி, சுனாமி, வெள்ளம் ஏற்பட வாய்ப்பான கிழக்கு நேர்கோடு அது. தமிழர்கள் பெரும் பான்மையாக வாழும் இம்மாவட்டங் களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வெள்ளம் வாட்டுகிறது.

வேதனைதான் வாழ்க்கை என்றால் போதுமடா சாமி என்ற சினிமாப் பாடல் தான் ஞாபகத்துக்கு வருகின்றது. இயற்கை எமது கைகளில் இல்லைதான். ஆனால் அதனை கட்டுப்படுத்தி மட்டுப்படுத்தும் அறிவை அந்த இயற்கை தந்துள்ளது.

2004ஆம் ஆண்டு கல்லடி பாலத்தின் கீழே பாம்புகள் படையெடுத்து சுனாமிக்கு கட்டி யம் (எதிர்வு) கூறின. இம்முறையும் பாம்புகள் படையெடுத்தன. ஆனால் எதிர்வுக்கு அப்பால் அவை பாம்பா மீனா என நாம் ஆராயப் புறப்பட்டோம். ஆனால் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருமு ன்னர் பெரு வெள்ளத்துக்கு கட்டியம் கூறவந்த பாம்புகளே அவை என்பதை இப்போது உணர்ந்து கொண்டோம்.

 இ. பாக்கியராஜா
நன்றி வீரகேசரி

No comments: