நீச்சல்வீரன் வல்வை ஆனந்தனின் மகன் கூகுளின் இந்தியப்பிரிவு உபதலைவர்.

.

பல கின்னஸ் சாதனைகளை படைத்து, இறுதியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க முற்பட்டவேளை அந்த சாதனையிலேயே வீரமரணத்தை தழுவிய நீச்சல் வீரன் வல்வை ஆனந்தனின் மகனான குமார் ஆனந்தன் தனது தந்தையைப்போல சாதனையான பதவி ஒன்றில் இடம்பெற்று இவ்வார செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.
கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய நாடாக இந்தியா கருதுகின்றது. இந்தியாவின் இணையப்பாவனையாளர்களின் விதம் வருடாந்தம் 50% ஆக வளர்ந்து வருகின்றது.
கூகுளில் இணைவதற்கு முன்னர் ராஜன் ஆனந்தன் மைக்ரோசொப்ட், டெல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய தந்தையாரின் சகோதரி ரங்கா குச்சுப்பிடி நடனத்தில் பெயர்பெற்ற கலைஞராக திகழ்பவர். தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு குச்சுப்பிடி நடனத்தை கற்பித்த சிறந்த நடனக் கலைஞராவார்.

No comments: