.
விடுதலைப்புலிகள் ஊடுருவுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதிக்கக் கூடாது - அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் தீவிரவாதப் போக்கு இயக்கங்களோ அல்லது இனப்பிரச்சினையைத் தூண்டும் அமைப்புகளோ இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து வருகின்றது.
எனினும் அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் வசிக்கின்ற தமிழர்களால் விடுதலைப் புலிகள் மீள எழுவதற்கான உதவிகள் வழங்கப்படுவதாகச் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக அகதி அந்தஸ்து கோரி வரும் இலங்கைத் தமிழர்கள் பலர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களாகக் காணப் படுவதாகச் சில தரப்பில் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் இல்லை என்றும் சிலர் கருத்து வெளியிட் டுள்ளனர். இந் நிலையில் அமெரிக்காவின் எப்.பி. ஐ. அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட் டுள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகளை ஊடுருவதற்கு அனுமதிக்க வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் உலகின் மிகவும் தீவிரமான இயக்கம் என எப்.பி.ஐயின் அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. உலகெங்கிலும் தமது வலையமைப்பினைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தற்கொலைப் படையினர் என்ற பிரிவை உருவாக்கி அதனை கிரமமாகக் கையாண்டதாக எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. அத்துடன் பெண்களைப் போருக்கு மிகவும் நேர்த்தியான முறையில் பயன்படுத்திய ஒரேயயாரு இயக்கம் இதுவே எனவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு உலகத் தலைவர்களைத் தமது தற்கொலைப் படையினரைப் பயன்படுத்தி கொலை செய்தமை உலகின் வேறெந்த அமைப்பிராலும் மேற்கொள்ள முடியாத செயல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.இதேவேளை எப்.பி.ஐயின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர் ந்தும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றது. குறிப்பாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment