நடிகை சுனைனா
காதலில் விழுந்தேன் படத்தின்மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை சுனைனா. இவரது அண்மைய படம் வம்சம். பாவாடை தாவணியில் அசத்தியிருக்கிறார் என வம்சம் பார்த்தவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். வம்சத்தின் வெற்றியில் சொக்கிப்போயிருக்கும் சுனைனாவின் அடுத்தபடம் பற்றி அவரிடம் கேட்டபோது…
தமிழ் சினிமா பாரம்பரியம் மிக்கது. இப்போதைக்கு எனக்கு தமிழ் சினிமா மட்டுமே போதும். வேறு எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்திய
வம்சம் எனக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அதற்குக் காரணம் நல்ல கதையம்சமுள்ள படம். அதனால்தான் நான் முடிவுசெய்திருக்கிறேன் இனிமேல் நல்ல கதையம்சமுள்ள படங்களில் மட்டுமே நடிப்பதென்று.
'கதிர்வேல்' படத்தின் பாடல்கள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. அதுவும் மிகவிரைவில் வெளிவரவிருக்கிறது. அதற்குப் பின்னர் இன்னமும் புதிய படம் பற்றி சிந்திக்கவில்லை. நிச்சயமாக நல்ல கதையம்சமுள்ள படங்களையே இனிமேல் தேர்ந்தெடுப்பேன்.
1 comment:
ok good
Post a Comment