.
உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 800 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். காலியில் நடைபெறும் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஓஜாவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தனது 800 ஆவது விக்கெட்டை முரளி வீழ்த்தினார்.
உலகில் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது வீரர் முரளி ஆவார். இப்போட்டியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
800 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் முத்தையா முரளிதரனுக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன. இந்நிலையில் தனது குடும்பத்தினரோடு சந்தோஷத்தில் குதூகலிப்பதையும் சக வீரர்களின் மகிழ்ச்சி மழையில் முரளி நனைவதையும் படங்களில் காணலாம்.
- நன்றி தமிழ் மிரர்
4 comments:
Well done proud to be srilankan Tamil
சிறிலங்கன் டமிழ் என்று சொல்லி ஏன் பிரிவினையை வளர்ப்பான்......
Well done proud to be srilankan
என்று சொல்லி மகிழ்சியடைய வேண்டியது
well done kirukkan. I think I am one of your fans
Ramesh
fine...we will form a club...kirrukan fan club(KFB)...I am the president and you are secretary for it,,,, ha...ha,...
Post a Comment