அவுஸ்திரேலிய சமூக வானொலி

.

வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் நான்காவது ஆண்டின் நிறைவையொட்டி

மெல்போர்ண் மணி எழுதிய
கவிதைத் துளிகள்

வானமுதம் அது மேன்மையுறு சிறப்பை
பெயரிலே கொண்டுளது.
வானுயர்ந்த தேன் போன்ற அமுதம் தனை
ஊனும் உயிரும் உவக்கும் வண்ணம்,
ஊட்டும் வானமுதமே ! நீடூழி வாழ்கவே!
நான்காவது ஆண்டு பூர்த்தியாகி
வெற்றி நடை போடும் வானொலியே ! நீ வளர்கவே
பற்றிப் பிடித்தோம் வானமுதமே!
அற்றைப் பொழுதிலும் செவ்வாய் மாலை
இற்றைவரை உனது சேவை கேட்க
உற்றார் உறவினருடன் சேர்ந்து
கற்றோர் மற்றோர் புகழும்
நற்றவத்தால் கிடைத்த வானமுதமே!
நிற்கின்றோம் வானொலிப் பெட்டியருகே
பற்றுக் கொண்டோம் உன்மேலே
பெற்று மகிழ்கின்றோம் உந்தன் பயனதனை
மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கூற்றை
சொல்லத் தேவையில்லை இனிமேல்
நல்ல சேவை செய்யும் வானமுதம்
இல்லம் தோறும் மழலைகள்
கல்வியில் தமிழையும் பயின்று
பல்லினக் கலாச்சாரம் பேணும் அவுஸ்திரேலியாவில்
வல்லோரினும் வல்லவராய் திகழும் - நம் பிள்ளைகளை
பல்லோர் போற்ற இவ் ஊடகம்
உறுதுணை ஆகின்றது மிகவே
பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகமென
அரங்கேற்றும் நல்ல கருவி வானமுதம்
இன்பத் தமிழ் ஒலியிலும் கேட்டு மகிழலாம்
இன்னும் பெரியோரின் சங்கத் தமிழ் ஆய்வுகள்
செய்திகள் எனப் பலவாகும்.
தென்புறு விசேட நிகழ்ச்சிகள்.
மாண்புடன் மலர்ந்து கீர்த்தி பெருகி
ஆண்டு பலவாயிடினும் புகழுடன்
ஈண்டு சிறந்து மிளிர்கவே!
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!!

No comments: