தமிழ் சினிமா -

.
*எந்திரனும் ரஜனி மகளின் கல்யாணமும்
*கொமரப் புலிக்கு ஆசைப்படும் விஜய்
*எந்திரன் மீது பொறாமைப்படும் சிரஞ்சீவி

*வருகிறது சிக்கு…புக்கு…

மதராசப்பட்டினம் என்றும் அழகான படத்தினில் நடித்திருந்த ஆர்யாவின் அடுத்த படமான 'சிக்கு புக்கு' தயாராகிவிட்டது. செப்டெம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வரவிருக்கும் இந்திரைப்படத்தின் இசை வெளியீடு 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளராக இருந்த மணிகண்டன் இந்தப் படத்தினை இயக்குகிறார். மீடியா வன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சிக்குபுக்கு படத்தினை தயாரிக்கிறது. ஆர்யாவுடன் சேர்ந்து ஸ்ரேயா நடிக்கிறார். ‘க்ளோனியல் கஸின்ஸ்’ குழுவின் ஹரிஹரன், லெஸ்லி ஆகியோர் இசையமைக்கிறார்கள். மொத்தமாக 7 பாடல்கள் இப்படத்தில் இடம்பிடித்திருக்கின்றன. அதில் இரண்டு பாடல்களையும் பின்னணி இசையினையும் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளராக இருந்த பிரவின்மணி உருவாக்கியிருக்கிறார்.

எந்திரன் படத்தின் இசை விற்பனையில் சாதனை படைத்த திங் மியூசிக் நிறுவனமே சிக்கு புக்கு படத்தின் பாடல்களையும் வெளியிடுகின்றமை சிறப்பானதாகும்.
======================================================================

எந்திரன் மீது பொறாமைப்படும் சிரஞ்சீவி

அரசியல் வாழ்வினை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துவிடலாம் போலிருக்கிறது. இந்த வயதிலும் ரஜனி டூயட் பாடுவதை பார்க்கின்றபோது எனக்கு பொறாமையாக இருக்கிறது என முன்னணி நடிகர் சிரஞ்சீவி எந்திரன் இசை வெளியீட்டில் கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் 3000 திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள எந்திரன் திரைப்படம் பல மொழிகளிலும் உருவாகியிருக்கிறது. எந்திரனின் தெலுங்கு பாடல்கள் வெளியீடு அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து பேசுகையில்…

நான் மோகன்பாபு மற்றும் ரஜனி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். மூவருமே அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தோம். ஒவ்வொருவராக அரசியலில் நுழைய முடிவுசெய்தோம். மோகப்பாபு முன்னதாக அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் நான் நுழைந்தேன். அரசியலில் நுழைந்ததும் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் ரஜனியை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராயுடன் எந்திரனின் டூயட் பாடுகிறார். பார்க்கின்றபோது எனக்கு பொறாமையாக இருக்கிறது. மீண்டும் நடிக்க வந்துவிடலாம் போலிருக்கிறது.

பொறாமை என்று சொன்னது சக கலைஞனாகவே. ஆனால் அண்ணன் ரஜனி எது செய்தாலும் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தும் சகோதரன் நான் என மேலும் குறிப்பிட்டார் சிரஞ்சீவி.

========================================================================

கொமரப் புலிக்கு ஆசைப்படும் விஜய்

திங்கட்கிழமை, 09 ஓகஸ்ட் 2010 11:47 தமிழில் சர்ச்சைக்குரிய இயக்குநர் என பெயர்பெற்ற எஸ்.ஜே.சூர்யா நீண்ட நாட்களாக தமிழ் திரைப்படங்களை இயக்கவில்லை. நடிகர் விஜய், புலியாக உருவெடுப்கப்போகிறார் என எஸ்.ஜே.சூர்யாவின் படத்திற்கு முதலில் விளம்பரங்கள் வெளியாகின. அதன்பின்னர் சூர்யாவுக்கும் விஜய்க்கும் பிரச்சினை வந்ததால் அந்த 'புலி' படத்தினை கைவிட்டுவிட்டு, தெலுங்கு படத்தினை இயக்கச் சென்றுவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.

புலி படத்தின் கதையினை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து 'கொமரப் புலி' எனும் பெயரில் இயக்கிவந்தார் சூர்யா. கொமரப் புலி திரைப்படம் அடுத்த வாரம் தெலுங்கில் வெளியாகிறது. கொமரப் புலி கம்பீரமாக வந்திருப்பதை அறிந்த விநியோகஸ்தர்கள் அதன் தமிழ் உரிமைக்காக போட்டி போடுகிறார்கள். தமிழில் வெளிவரவேண்டிய படம் தெலுங்கில் வெளியாவதால் சூர்யாவும் மிகவும் கஷ்டப்பட்டு படத்தினை முடித்திருக்கிறார்.

புலி படத்தினை வேண்டாம் என ஒதுக்கிய விஜய் இப்பொழுது தெலுங்கில் வெளியாகும் கொமரப் புலியினை பிடிப்பதற்காக காத்திருக்கிறாராம். அநேகமாக கொமரப் புலியின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பார் எனவும் நம்பப்படுகிறது.

நாயகன் பவான் கல்யாண், நாயகி நிகேஷா பட்டேல், இயக்குநர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'கொமரப் புலி', பலரது வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதென்னமோ உண்மைதான்.

====================================================================

எந்திரனும் ரஜனி மகளின் கல்யாணமும்

தினம் தினம் ரசிகர்களினால் எதிர்பார்க்கப்படுகின்ற 'எந்திரன்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி சரித்திரம் படைத்திருக்கிறது. இணைய தரவிறக்கத்தில் உலகில் முதலிடத்தில் இருந்து இப்பொழுது குறைந்துள்ளது. அப்படி இருப்பினும் உலக சரித்திரத்தில் இணைய தரவிறக்கத்தில் முதலிடம் பிடித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை எந்திரன் பெற்றுக்கொண்டது.

இப்பொழுது எந்திரனின் வெளியீட்டு திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜனி-லதா தம்பதிகளின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் கட்டுமானத் தொழிலதிபரின் மகன் அஸ்வினுக்கும் செப்டெம்பர் 3ஆம் திகதி சென்னையில் திருமணம் நடைபெறுகிறது. அந்த நாளிலேயே எந்திரனையும் வெளியிடுவதென்று ஏகமனதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

உலகளாவிய ரீதியில் எந்திரன் திரைப்படம் 3000 திரையரங்குகளில் வெளியிடுகின்றமையும் ஒரு சாதனைதான். ஆகையினால் எந்திரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அள்ளித்தரும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் காத்திருக்கிறார்கள். தனது மூத்த மகளின் கல்யாணத்திற்கு ரசிகர் மன்ற உறுப்பினர்களை அழைக்காத ரஜனி, இளைய மகளின் திருமணத்திற்கு அனைவரையும் அழைத்திருக்கிறார். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள் திக்குமுக்காடிப்போயுள்ளனர்.

இசையில் சாதனை படைத்ததுபோலவே திரைப்படமும் பாரிய வெற்றியடையுமென உலகளாவிய ரீதியிலுள்ள ரசிகர்கள் செப்டெம்பர் 3ஆம் திகதியிற்காக காத்திருக்கிறார்கள்.

நன்றி தமிழ் மிரர்

No comments: