பிரமாண்ட பனிப்பாறை பிரிந்தது

.

கிறீன்லாந்து தீவிலிருந்து 260 சதுர கிலோமீற்றர் (100 சதுரமைல்) பரப்பளவுள்ள பனிப்பாறையொன்று உடைந்து பிரிந்துள்ளதாக அமெரிக்காவின் டெலாவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

கிறீன்லாந்தின் வடமேற்கு கரையிலிருந்து இந்த பனிப்பாறை பிரிந்துள்ளது. கிறீன்லாந்திலிருந்து வருடாந்தம் ஆயிரக்கணக்கான பனிப்பாறைகள் பிரிகின்றன. ஆனால் 1962 ஆம் ஆண்டின் பின்னர் அதிலிருந்து பிரிந்த மிகப்பெரிய பனிப்பாறை இதுவாகும்.

நாசா நிறுவனத்தின் செய்மதிப் படங்களின் உதவியுடன கனேடிய அதிகாரிகள் இந்த பனிப்பாறை உடைவை கடந்த வியானன்று கண்டுபிடித்தனர்.

இந்த பனிப்பாறை குளிர்காலத்தில் மேலும் உறைந்துவிடலாம். அல்லது கனடாவுக்கும் கிறீன்லாந்துக்கும் இடையில் மறைந்துவிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு நோக்கி நகரும் இந்த பனிப்பாறை கப்பல்களுக்கு இடைஞ்சலாகலாம் என பேராசிரியர் மியூன்சோவ கூறியுள்ளார்

இந்தப் பனிப்பாறை அமெரிக்க மக்கள் அனைவருக்கும் 120 நாட்களுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப் போதுமான அளவு நீரைக் கொண்டுள்ளது எனவும் அவர்கூறியுள்ளார்.
நன்றி தமிழ் மிரர்

No comments: