அழகுக் குறிப்பு -

 .


பற்கள் பளபளப்பாக இருக்க: எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்

முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்க: கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். அதன் பின் காய்ந்ததும் கழுவவும்.

காது அல்லது மூக்கு துளைகளில் புண்: தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.

தலைமுடி பளபளப்பாக: தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

முகத்தில் வியற்குரு, கொப்பளங்கள் மறைய: பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவினால், வியற்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்

முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்ற: தோடம்பழச் சாற்றை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும்

No comments: