ஆண் என்ற அகங்காரம் - கவிதை

                                                         -செ.பாஸ்கரன்

நான் ஆண் என்ற
அகங்காரம்
உன்னில்மட்டுமல்ல ...
காலம் காலமாய் நீ
விரும்பியபடி
அவள் இருப்பதை எதிர்பார்த்தாய்
தலை குனிந்து தரை பார்த்தல்
அவளுக்கு அழகென்றாய்
நாற்குணம்களையும்
அவள் நம்பிக்கையின்
தூண்களாக்கினாய்
சிறை வைக்கிறாய் என்றவளுக்கு
பலப்படுத்தும் வேலி என்று
அழகான விளக்கம் கொடுத்தாய்
அத்தனை பாதுகாப்பையும்
நீயே எடுத்துக் கொண்டாய்
அவளுக்காக அல்ல
உனக்காக
உறங்கும் போது கூட
உன் அணைப்பில் இருத்தினாய்
கனவில் கூட அவள்
உன் கட்டுப்பாட்டில்
எல்லாவற்றிலும்
நீயே அவளுக்காய்
நெருங்கி வந்தாய்
அது அவள் குரல்வளையை
இறுக்குவது போல்
இருப்பதையும்
நீ உணராதிருந்தாய்
நான் ஆண் என்ற
அகங்காரம்
உன்னில்மட்டுமல்ல

1 comment:

Anonymous said...

Acham, Madam , Naanam, Payirppu Our tamiliyans allways carry this with them. Only for women not for Men.

Ramesh