தமிழர்களின் புராதன பாரம்பரியத்தை பாதுகாக்கும் மலேசிய நிபுணர்


தமிழர்களின் புராதன பாரம்பரியத்தை பாதுகாக்கும் மலேசிய நிபுணர்தமிழர்களின் புராதன பாரம்பரியங்களை இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மூலம்பேணிப் பாதுகாக்கும் முன்முயற்சியை மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டதகவல் தொழில்நுட்ப ஆலோசகர் மேற்கொண்டுள்ளார். சுபாஷினி றிம்னல் என்றஇப்பெண்மணி தற்போது ஜேர்மனியில் வசித்து வருகிறார். உலகளாவிய ரீதியில்விலைமதிக்க முடியாத இந்தப் புராதன தொல்பொருள் சின்னங்களுக்கான ஆதாரங்களைஅவர் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

 "தமிழ்ப் பாரம்பரியத்தை டிஜிட்டல் ஊடாகப் பாதுகாக்க நான் விரும்புகிறேன்.புராதன தமிழ்விதானங்கள், ஆலயங்களின் தூண்களிலுள்ள எழுத்துகள்,குகைகள்என்பவற்றில் காணப்படுகின்றன. அத்துடன், செப்புத்தகடுகள்,ஓலைச்சுவடிகள்,காகிதங்களில் காணப்படுகின்றன. எமது தமிழ் பாரம்பரிய மன்றமானது இந்தவிடயங்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் டிஜிட்டலில்இவற்றைப் பேணிப்பாதுகாக்க விரும்புகின்றது என்று பேர்னாமா செய்திச்சேவைக்கு அவர் கோயம்புத்தூரிலிருந்தவாறு தெரிவித்தார். அங்கு இடம்பெறும்உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவர் பங்கேற்றிருக்கிறார். இந்ததமிழ்ப் பாரம்பரியம் என்ற இந்த அமைப்புக்கு உலகளாவிய பல நாடுகளைச்சேர்ந்த உறுப்பினர்கள் பங்களிப்பை வழங்குகின்றனர்.பிரிட்டன்,ஜேர்மனி,சுவிற்ஸர்லாந்து,இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளைச்சேர்ந்த உறுப்பினர்கள் இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பைமேம்படுத்துவதற்குப் பங்களிப்பைச் செலுத்துகின்றனர். அத்துடன், உலகளாவியரீதியில் பரந்து காணப்படும் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் தமிழ் வரலாறுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த அமைப்பு நோக்கமாகக்கொண்டுள்ளது. 2002 இல் இங்கிலாந்தில் இவை ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ்நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வமான 13 புராதன தமிழ் நூல்களைவைத்துக்கொண்டு இந்த இலத்திரனியல் மூலமான நடவடிக்கை ஆரம்பமானது. இப்போது சுமார் 7 ஆயிரம் ஓலைச்சுவடிகளைக் கடந்த ஆறு வருடங்களில்சுபாஷினியும் அவரின் குழுவினரும் வைத்திருக்கின்றனர். இவை 150 200வருடங்களுக்கு முற்பட்டவையாகும். அவை கணினிமயப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன், இந்துமத முனிவர்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்சிகிச்சையளித்த சித்த மருத்துவக் குறிப்புகளையும் அவர்கள் சேகரித்துவைத்துள்ளனர். அவை ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவையாகும். இந்த ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டதில் 60 வீதமானவை கப்பல் நிர்மாணம்,கட்டிடக்கலை, ரொக்கற் சார்ந்த அறிவியல் என்பன பற்றியதாகும். பெறுமதிவாய்ந்த பண்டையகால இந்த விபரங்களை நாம் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது.விசேடமாக இணையத்தில் இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். இதனால் சர்வதேசரீதியாக இது தொடர்பான அறிவு விரிவடையும் என்று பினாங்கில் பிறந்தசுபாஷினி கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள ஆர்வம் எல்லைகடந்ததாகும். தகவல் தொழில்நுட்ப நிபுணரான இவர் சர்வதேச கணினி நிறுவனத்தில்பணியாற்றுகிறார். தனது பணியின் போது செக்.குடியரசினால் 13 ஆம் நூற்றாண்டுகால பைபிள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுகொண்ட பின் தமிழ்ப்பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற தனது செயற்திட்டத்தை அவர்ஆரம்பித்திருக்கிறார்.

No comments: