தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2010

Australian Society of Graduate Tamils (ASOGT) அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்

16 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ், கன்பரா மாநிலங்களில் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. 10 வது ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் ஊக்குவிப்புப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பதாகும். தாயகங்களிலும் புலம் பெயர் தேசங்களிலும் எம்மவர் இன்னல்கள் நீங்க நம்பிக்கை தரும் வகையில் புதியதோர் உலகம் செய்யவண்டிய தேவை உள்ளது என்ற கருத்தை மையமாக வைத்தே இந்த ஆண்டிற்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.

சில முக்கியமான மாற்றங்களை இங்கு தருகின்றோம்:

1) போட்டியாளர்கள் தங்கள் பிரிவில் எல்லாப் போட்டிகளிலும் பங்குபற்றலாம். குறித்த ஒரு போட்டி போட்டியாளரின் பிரிவில் நடைபெறாதவிடத்து போட்டியாளர் மேற் பிரிவில் நடைபெறும் அப் போட்டியில் பங்குபற்றலாம்.

2) மேற் பிரிவு: 10-11 வயது, அதிமேற் பிரிவிற்கான வயது எல்லை 12 - 14 வயது ஆகும். இளைஞர் பிரிவிற்கான வயது எல்லை 15 - 17 வயது ஆகும்.

3) போட்டிகளிற்கான விண்ணப்பக் கட்டணமான $5 உடன் ஒவ்வொரு போட்டிக்கான கட்டணமாக தலா $5 அறவிடப்படும்.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் சம்பந்தமான முக்கிய திகதிகள்:

12 ஜுலை மாதம் 2010 – விண்ணப்ப முடிவு திகதி
14, 15, 21, 22 ஆகஸ்ட் 2010 – நியூசவுத் வேல்ஸ் மாநிலப் போட்டிகள்
2 ஓக்டோபர் 2010 – சிட்னியில் தேசிய போட்டிகள் நடைபெறும்.
3 ஓக்டோபர் 2010 – சிட்னியில் பரிசளிப்பு விழா (சிடனி 10 தேசிய போட்டிகள்)
COORDINATORS:
National Coordinator: Mr. K. Narenthiranathan (07) 3122-1847 or 0402 026 922
Sydney: Mr. A. Nimalendran (02) 8824-3051 or 0419 255 625
Melbourne: Mrs. A. Yaso (03) 9449-7887
Canberra: Dr. K. Jeyasingham (02) 6293-1469 or 0411 106 944
Adelaide: Mr. Raj Srithar (08) 8337 4706 or 0406 628 634
Queensland: Dr. J. Senthilvasan (07) 3300 0848 or 0401 370 572
 Auckland (NZ) Mr. A. Yogakumar (649) 271-4508
Wellington (NZ) Mr. M. Ramesh (644) 568-4235

No comments: