.
ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகள்; தீர்மானம் எடுக்கப்படும்- ஜூலியா கில்லார்ட்
அரசியல் புகலிடம் கோரிச் செல்கின்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக பதிவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் தெரிவித்தார்.
இதற்கான தீர்மானம் அடுத்த மாதம் 8ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
நேர்மையான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னுரிமையளிக்கும் என்பதுடன், புகலிடக் கொள்கைகளினால் சிறுவர்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும் ஜூலியா கில்லார்ட் வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியாவில், முன்னர் பிரதமராக பதவி வகித்திருந்த கெவின் ரூட் அரசியல் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் சென்ற இலங்கையர்கள் மற்றும் ஆப்கானிஸ்தர்கள் தொடர்பில் கடும்போக்கை கடைப்பிடித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment