பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்! பயணம் - 6….. சங்கர சுப்பிரமணியன்.

கவிதை:


வாழ்வும் தமிழ் நீயே
என் உயிரும் தமிழே
உன்னை விட மாட்டேன்
என் உயிர்போகும் வரையில்

வாழ்வும் தமிழ் நீயே
உயிரும் தமிழ் நீயே
உன்னை விட மாட்டேன்
என் உயிர்போகும் வரையில்

அழித்தாலும் அழியாத
அருந்தமிழே - உன்னை
இழிந்தோரையும் ஏற்றிவிடும்
எழுந்தமிழே

அழித்தாலும் அழியாத
அருந்தமிழே - உன்னை
இழிந்தோரையும் ஏற்றிவிடும்
எழுந்தமிழே

உன் பெருமை ஊரே அறியும்
உலகெல்லாம் என்றோ அறியும்
இன்னும் உன் பெருமை அறியா
எவரும் உளரோ நான் அறியேனே

வாழ்வும் தமிழ் நீயே
உயிரும் தமிழ் நீயே
உன்னை விட மாட்டேன்
என் உயிர்போகும் வரையில்

எழும் ஞாயிறு போலே நீயும்
எழுவதும் உண்மை - பாரில்
வழுவாது அறம் சொல்வதுவே
உந்தன் தன்மை

எழும் ஞாயிறு போலே நீயும்
எழுவதும் உண்மை - பாரில்
வழுவாது அறம் சொல்வதுவே
உந்தன் தன்மை

திருக்குறளும் சான்றாய் நிற்கும்
திரைகடலும் ஓடியே சொல்லும்
மறையாது அதன் புகழ் என்றும்
மறையாக நிற்பதனாலே

வாழ்வும் தமிழ் நீயே
உயிரும் தமிழ் நீயே
உன்னை விட மாட்டேன்
என் உயிர்போகும் வரையில்

வாழ்வும் தமிழ் நீயே
உயிரும் தமிழ் நீயே

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: