நட்சத்திர நடிகர்களை நாடாமல் புது நடிகர்களை கதாநாயகனாக அறிமுகப் படுத்தி படங்களை தயாரித்து வெற்றி கண்டவர் சிட்டாடல் ஸ்டுடியோஸ் அதிபர் ஜோசப் தாளியத் . 1966ம் வருடம் அவர் உருவாக்கிய படம் காதல் படுத்தும் பாடு.
ஆரம்பத்தில் ஜோசப் தாளியத் எடுத்த ஞான சௌந்தரி படம் டீ .ஆர் . மகாலிங்கம், டீ .ஆர் . ராஜகுமாரி நடிப்பில் வெளி வந்து பெரு வெற்றி கண்டது. தொடர்ந்து ஜெமினி, பத்மினி நடிப்பில் மல்லிகா படத்தையும் எடுத்த தாளியத் அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்த சி எல் ஆனந்தனை ஹீரோவாக்கி எடுத்த விஜயபுரி வீரன் பரபரப்பாக ஓடி ரசிகர்களின் ஆதரவை சுவீகரித்து கொண்டது. அதனை தொடர்ந்து ஜெய் சங்கரை தனது இரவும் பகலும் படத்தில் ஹீரோவாக அறிமுகப் படுத்தி தமிழ் திரைக்கு ஒரு வெற்றி நாயகனை அறிமுகப் படுத்திய பெருமையை பெற்றுக் கொண்டார் தாளியத். அதே வேகத்தில் விளக்கேற்றியவள் படத்தில் ஆதித்தனை கதாநாயகனாக அறிமுகப் படுத்தினார்.
இவ்வாறு படத்துக்கு படம் புது நடிகர்களை ஹீரோவாக
அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த தாளியத் காதல் படுத்தும் பாடுபடத்தின் மூலம் புது நடிகையை கதாநாயகியாக திரைக்கு கொண்டுவந்தார். அவர் தான் வாணிஸ்ரீ. துணை நடிகையாக நடிக்க வந்த அவருக்கு எதிர் பாராத விதமாக ஹீரோயின் ஆகும் அதிர்ஷ்டம் கிட்டியது.

பொன்னம்பலம் நடத்தும் வாஷிங் மெஷின் நிறுனவனத்தில் அவரின் உறவினனான ராஜு வேலை செய்கிறான். அதே சமயம் அவரின் மகள் சுகுணாவையும் காதலிக்கிறான். சுகுணாவுக்கும் ராஜு மேல் காதல்தான். ஆனால் ராஜுவுடன் வேலை செய்யும் மாயாவும் ராஜூவை ஒரு தலைப் பட்சமாக காதலிக்கிறாள். இதற்கு இடையில் சுகுணாவின் மாமனான பாஸ்கர் எப்படியாவது சுகுணாவை மணக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்க கொண்டு திட்டம் தீட்டுகிறான். எல்லாம் காதல் படுத்தும் பாடு! இந்த நிலையில் மாயா திடீரென்று கொலை செய்யப் பட அப் பழி ராஜு மீது விழுகிறது. அதன் பின் ராஜு, சுகுணா ஒன்று சேர்ந்தார்களா, கொலைகாரன் பிடிபட்டானா என்பது மீதி படம் .
படத்தில் ஜெய்சங்கருக்கு துடிப்பான வேடம். காதல், ஆடல், பாடல், சண்டை என்று ஒன்றிலும் குறை வைக்காமல் புகுந்து விளையாடுகிறார். முதல் படம் என்று சொல்ல முடியா வண்ணம் வாணிஸ்ரீ தன் நடிப்பின் மூலம் நிரூபிக்கிறார். ஜெயந்தி படம் முழுதும் வருவார் என நினைக்கையில் தீடிரென சாகடிக்கப் படுகிறார்.
படத்தில் தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி செய்யும் காமெடி சில நேரங்களில் சிரிப்பையும், சில நேரங்களில் அலுப்பையும் தருகின்றன. ஆனால் சுருளிராஜனின் நடிப்பு சூப்பர். அவருடன் எஸ். முத்துலெஷ்மியும் ஈடு கொடுக்கிறார். படத்தில் இரண்டு வில்லன்கள் , ஆதித்தன், குணாளன். சண்டை காட்சிகளில் ஜெய்யுடன் ஆவேசமாக மோதுகிறார்கள். பண்டரிபாய் சாந்தமாக வருகிறார். இவர்களுடன் சி . ஐ . டி. சகுந்தலா, ரமாப்ரபா, குமாரி ராதா லூஸ் மோகன், ஆகியோரும் நடித்தனர்.
படத்துக்கு இசையமைத்தவர் டி.ஆர் .ம்பாப்பா. இவளொரு அழகிய
பூன்சிட்டு பாடல் இனிமையாக ஒலித்தது. மாயவனாதன் பாடலை இயற்றியிருந்தார். இது தவிர ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம் இயற்றிய பாடல்களும் படத்தில் உண்டு. படத்தின் கதையை கலைஞானம் எழுத அவருடன் சேர்ந்து வசனங்களை பனசை மணி எழுதினார். லூக்கஸ் ஒளிப்பதிவு செய்தார். சுந்தரம் நடனங்களை அமைக்க, திருவாரூர் தாஸ் சண்டைக் காட்சிகளை அமைத்தார். ஜோசப் தாளியத் தன்னுடைய பாணியில் படத்தை டைரக்ட் செய்திருந்தார்.

படத்தின் ஆரம்பத்த்தில் ஜெய்சங்கர் அதில் நடிப்பதாக இருக்கவில்லை. ஆனால் தன்னை அறிமுகப் படுத்தியவர் எடுக்கும் படத்தில் தான் இல்லாமலா என்று தாளியத்திடம் சென்று ஜெய் உரிமையோடு கேட்க படத்துக்கு ஹீரோவானார் .
அவருக்கு ஏற்றாற் போல் படத்தின் கதையில் மாறுதல்களை செய்தார் கலைஞானம். அவருக்கும் இதுதான் முதல் படமாகும். பட வாய்ப்புகள் எதுவும் கிட்டாத நிலையில் ஊருக்கு திரும்பிப் போகும் நிலையில் இருந்த அவருக்கு எதிர்பாராத விதத்தில் தான் எடுக்கும் படத்துக்கு கதை எழுதும் வாய்ப்பை வழங்கினார் தாளியத் . ஆக இன்றும் சினிமாவுலகில் சம்பத்தப்பட்டிருக்கும் கலைஞானத்தை திரையுலகுக்கு அறிமுகப் படுத்திய பெருமையும் தாளியத்தை சாரும்.
படத்தின் கதாநாயகி வாணிஸ்ரீ, சுருளிராஜன், எஸ் எஸ் சந்திரன், பிற் காலத்தில் கவர்ச்சி நடிகையாக பிரபலமான விஜயலலிதா, படத் தொகுப்பாளர் வெள்ளைச்சாமி, எல்லோருக்கும் காதல் படுத்தும் பாடு தான் முதல் படம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜோசப் தாளியத்துக்கும், சிட்டாடல் ஸ்டுடியோஸுக்கும் இதுவே கடைசிப் படம் ஆனது. இந்தப் படத்துடன் சினிமாவை விட்டு முற்றாக அவர் ஒதுங்கி விட்டார்!
இந்த ஜோசப் தாளியத் தான் ஜெய்சங்கரை சென்னையில் உள்ள
அனாதை விடுதிகள், பார்வையற்றோர் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஜெய்சங்கருக்கு விதைத்தவர். அதனைத் தொடர்ந்தே ஜெய் அது போன்ற உபகாரங்கள், நன்கொடைகள் , வைபவங்களில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். இவற்றுக்கு அச்சாரம் போட்டவர் ஜோசப் தாளியத் . ஜென்டில்மென்ட் !

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment