அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், விக்றோறிய மாநிலத்தில், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வாகிய, விக்றோரிய கல்விச் சான்றிதழ் ( VCE ) பரீட்சையில், தமிழ் மொழிப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களப் பாராட்டும் ஒரு விழாவைக் கடந்த சில வருடங்களாக நடத்தி வருகின்றது.
கடந்த வருடம் (2025) நடைபெற்ற அந்தப் பரீட்சையில் அவ்வாறு சாதனை நிகழ்த்திய மாணவர்களைப் பாராட்டும் விழா எதிவரும் 09.03.2026 - திங்கட்கிழமை, பி.ப. 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சாதனைபடைத்த மாணவர்கள் மட்டுமன்றி அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள். பல்சுவைக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ள இந்த விழாவுக்கு அனுமதி இலவசம். அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், அன்புடன் அழைக்கிறது.
விழா நடைபெறும் இடம்: Clayton Hall, 264, Clayton Road, Clayton Vic 3168.
.jpg)
No comments:
Post a Comment