ஆத்மாவின் சாட்சி தன்மை மற்றும் மனித வாழ்வு

 

மனிதன் செய்யும் அனைத்து செயல்களும் சூரிய ஒளியினால் நடைபெறுகின்றன. ஆனால் அந்த செயல்களுக்கும் சூரியனுக்கும் நேரடியான தொடர்பு இல்லை. அதைப் போலவே, மனமும் புத்தியும் ஆத்மாவின் ஒளியினாலே செயல்படுகின்றன. ஆத்மாவின் ஒளி இல்லையெனில் மனமும் புத்தியும் இயங்க முடியாது. சூரியனைப் போல ஆத்மாவுக்கும் கடமைகளிலும் செயல்களிலும் பற்றுதல் எதுவும் இல்லை.

எப்படி மனிதன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகிறானோ, அதைப் போலவே ஆத்மாவிடமிருந்து சக்தியைப் பெறுகிறான். ஆத்மா ஒரு சாட்சி மட்டுமே. நல்வினை, தீவினை ஆகியவற்றின் பலன்கள் ஆத்மாவை பாதிக்காது.

நீர் ஓடிக்கொண்டிருக்கும்போது அதில் பிரதிபலிக்கும் நிலவின் உருவம் நகர்வது போலத் தோன்றும். ஆனால் நிலவு உண்மையில் நகர்வதில்லை. அதுபோலவே மனிதனின் துன்பம், துயரம், கவலை ஆகியவற்றிற்குக் காரணம் என்ன? அகங்காரமும் பற்றுதலும் தான் காரணம்.

பற்றுதல், மகிழ்ச்சி, துக்கம் ஆகிய அனைத்தும் மனத்திலேயே உருவாகின்றன. மனமும் புத்தியும் கருவிகள் ஆகும். இந்த கருவிகள் மூலமாகத்தான் நாம் அனைத்தையும் அனுபவிக்கிறோம். இக்கருவிகளே நம்முடைய பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன. இந்த கருவிகளை நீக்கினால், நாம் ஆத்மாவின் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

No comments: