சித்தி என்பவள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருப்பாள், மூத்த தாரத்தின் குழந்தைகளை கொடுமைப் படுத்துவாள் என்ற கருத்தை மறுதலிப்பது போல் பிரபல நாவலாசிரியை வை .மு . கோதைநாயகி பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கதையை எழுதியிருந்தார். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆண்களின் கைகளில் இருந்த எழுத்தாட்சியை தன் பக்கம் திருப்பிக் கொண்டவர் இந்த கோதைநாயகி. தமிழின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியை என்ற பெருமையும் இவரையே சேரும். இவர் எழுதிய கதை 1966ம் வருடம் சித்தி என்ற பேரில் படமானது.
குடும்பப் படங்களுக்கு கதை வசனம் எழுதி இயக்குவதில் வெற்றி
கண்ட கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் சித்தி படத்தை உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மங்கையர் திலகம் படத்தில் சித்தியாக நடித்து ரசிகர்களின் மனதை கட்டிப் போட்ட பத்மினி இந்தப் படத்திலும் சித்தியாக பாத்திரம் ஏற்றார். அப்படி சொல்வதை விட பாத்திரமாகவே மாறி விட்டார் எனலாம். இது படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது. தன்னைக் கண்டு நடுங்கும் குழந்தைகளிடம் அன்பு காட்டுவது , மாமியார் மனதை மாற்றுவது, கணவனை அனுசரித்து போவது என்று காட்சிக்கு காட்சி தன் நடிப்பு திறனை நிருபித்துக் கொண்டிருந்தார் பதமினி. போதாக் குறைக்கு இளமையாகவும் காட்சியளிக்கிறார்!

இவரின் கணவராக வருபவர் எம் .ஆர் . ராதா. நடிப்பில் புதுமை ஏதும் இல்லாவிட்டாலும் ரசிக்கும் படி நடித்திருந்தார். ஆரம்பத்தில் ஏனோதானோ என்று காட்டப்பட்ட நாகேஷின் பாத்திரம் பின்னர் அழுத்தமாக பதியப்படுகிறது. நாகேஷ் நடிப்பு, ஆட்டம், பாட்டம் எல்லாம் பிரமாதம். ஜெமினிக்கு அளவான காட்சிகள். அளவான நடிப்பு. படத்தில் காதல் காட்சிக்கு குறை வைக்க கூடாது என்பதற்காக முத்துராமன், விஜய நிர்மலா டூயட்டும் உண்டு. படத்தில் பாட்டியாக வரும் சுந்தரிபாயின் நடிப்புக்கு சபாஷ் போடலாம். இவர்களுடன் வி . கே . ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், சாமிக்கண்ணு, விஜயஸ்ரீ, சதன் ஆகியோரும் நடித்தனர்.
ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தின் மூத்த மகள்
மீனாட்சி. உரிய வயது வந்தும் கல்யாணமும் செய்யாமல் குடும்பத்துக்காகப் பாடுபடுகிறாள். காதலன் ஒருவன் இருந்தும் அவனையும் மணக்க முடியாமல் செல்வந்தர் ஒருவருக்கு இரண்டாம் தரமாக வாழ்க்கைப் படுகிறாள். அங்கும் மூத்த தரத்தின் எட்டு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை அவளே விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் கணவனோ அவளை நேரம் காலம் பாராமல் சரசத்தில் ஈடுபட வற்புறுத்துகிறான். அவளோ சித்தியாக இருந்தும் குழந்தைகள் மீது அன்பை பொழிகிறாள். இடையில் அவளுக்கு பல சோதனைகள் அவற்றில் இருந்து அவள் மீள்வதே மீதி படம்.

படத்துக்கு பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். பெண்ணாக
பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை பாடலில் பெண்ணின் வரலாற்றையே சொல்லி விட்டார் கவிஞர். ஶ்ரீனிவாஸ் , எல். ஆர். ஈஸ்வரி குரலில் சந்திப்போமோ இன்று சந்திப்போமோ பாடல் சுகமானது. படமாக்கிய விதமும் ரசனைக்குரியது. எம் .எஸ் .விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

ஆர். சம்பத் படத்தை ஒளிப்பதிவு செய்தார். கே .எஸ் .ஜி . படம் என்பதால் கமெராவை விட வசனங்களே படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தின . ஆனாலும் வசனங்களில் கே .எஸ் .ஜி. யின் திறமை வெளிப்பட்டது. இலட்சாதிபதி மகன் கடன் தான் வைக்கக் கூடாது , கடை வைக்கலாம் தப்பில்லை , சித்தி நம்மை பெறாத தாய் மட்டுமல்ல பெற முடியாத தாயும் கூட ! உலகத்தில் பணத்தால் சாதிப்பதை விட மனத்தால் சாதிப்பது தான் நிலைத்து நிற்கும் , நாங்க உலகம் தெரியாமத்தான் பேசுறோம் நீங்க எங்க உள்ளத்தை தெரியாம பேசுறீங்களே போன்ற வசனங்கள் மூலம் கே .எஸ் .ஜி . காட்சிகளை அழுத்தமாக பதிய வைத்திருந்தார்.
படத்தின் கதை வை .மு . கோதைநாயகி எழுதிய போதிலும் பட
டைட்டிலில் கதை வி .எம் .கே . என்று காட்டப்பட்டு எழுத்தாளரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. பின்னர் இந்த படம் ஹிந்தியில் அவ்ரத் என்ற பெயரில் எஸ் .எஸ் . வாசனால் பத்மினி, ராஜேஷ் கண்ணா , பிரான் நடிப்பில் உருவானது. பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படமானது. சித்தியை எல்லா மொழியினரும் ஏற்றுக் கொண்டார்கள்!

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment