வாழ்க்கைதனின் ஓட்டமதில் வளமதுவும் வந்துபோகும்,
வழக்கமிதை உணர்ந்துநீயும் வாழ்வாய் – அன்றேல்
வளம்குன்றி வாழ்வினிலே தாழ்வாய்!
தாழ்ந்தவரும்
வாழ்விலோர்நாள் தன்னிறைவும் பெறுவர்தான்,
தவறாமல் அதற்கெனவே உழைப்பாய் – அந்நாள்
தகுதியுள்ள வாழ்வுபெற்றே தழைப்பாய்! (1)
வாழ்க்கையதோ
பேரலையில் தடுமாறும் ஓடம்போல்
வழியொன்றும் தெரியாமல் நோக்கும் – துணிவே
வழியொன்றைக் கண்டெடுத்துக் காக்கும்!
தாழ்வான
இடம்நோக்கிப் பாயுமந்த ஆறுபோல
தத்தளிக்கும் உன்னையுமே காக்கும் – மாந்தம்
தளிர்விட்டே வாழ்வுதனை நோக்கும்! (2)
1 comment:
அருமையா கவிதை ,
மனம் தளராது ஊக்கமளிக்கும்
Post a Comment