அறுபது ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் பிரபலமாக விளங்கிய
நிறுவனங்களுள் ஒன்று ஏ எல் எஸ் புரடக்சன்ஸ் . இதன் அதிபரான ஏ எல் சீனிவாசன் தமிழிலும், ஹிந்தியிலும், தெலுங்கிலும் பல படங்களை தயாரித்தவர். கவிஞர் கண்ணதாசனின் அண்ணனான இவர் பலரை திரையுலகில் கை தூக்கி விட்டவர். கே எஸ் கோபாலகிருஷ்ணன், பி. மாதவன், ஆரூர்தாஸ் போன்றோறுக்கு முதன் முதலில் படம் இயக்க வாய்ப்பளித்தவர் இவராவார். இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை சிங்களத் திரையுலகிலும் இவருடைய ஈடுபாடு ஒரு காலத்தில் காணப்பட்டது. இலங்கை படத் தயாரிப்பாளரான ஜாபிர் ஏ காதர் இவரின் நெருங்கிய நண்பராகவும், இவரின் படங்களுக்கு இலங்கை வினியோகஸ்தராகவும் திகழ்ந்தார். 1965ம் வருடம் ஏ எல் சீனிவாசன் தயாரித்த படம் தான் ஆனந்தி.
இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் , விஜயகுமாரி இணைந்து
நடித்த இந்தப் படம் ப . நீலகண்டன் இயக்கத்தில் உருவானது. எம் ஜி ஆரின் ஆஸ்த்தான இயக்குனராக அறியப்பட்ட நீலகண்டன் அந் நிலையை அடையும் முன் எஸ் எஸ் ஆரின் படங்களையே தொடர்ந்து இயக்கி வந்தார். தேடி வந்த செல்வம், எதையும் தாங்கும் இதயம், பூம்புகார்,பூமாலை, அவன் பித்தனா , என்று அவர் டைரக்ட் செய்த பட வரிசையில் எஸ் எஸ் ஆர் நடிப்பில் அவர் இயக்கிய படமாக ஆனந்தி வெளிவந்தது. அதன் பின் நீலகண்டன் எம் ஜி ஆருடன் பிசியாகி விட்டார்.

குப்பத்தில் வேலை வெட்டியின்றி திரியும் சோமு சூதாடுவதை கடமையாக கொண்டு வாழ்ந்து வருகிறான். அவனின் தந்தை, தங்கை சொல்லியும் திருந்தாத அவனை எதிர்பாராமல் சந்திக்கும் ஆனந்தி மெல்ல மெல்ல திருத்தி விடுகிறாள். இருவர் இடையே காதலும் மலர்கிறது. ஆனந்தியின் தந்தை அம்பலவாணர் ஊரில் பெரிய கான்ட்ராக்ட்டர். ஆனால் மோசடிப் பேர்வழியாக அவரின் இச்சைக்கு பலியாகவிருந்த மரிக்கொழுந்தை சோமு காப்பாற்றுகிறான். ஆனால் வீண் பழி ஏற்று சிறை செல்கிறான். சிறையில் இருந்து வெளி வரும் சோமு , அம்பலம் தன் மகள் ஆனந்தியை நித்தியானந்தம் என்ற பணக்காரனுக்கு மணம் முடித்து வைக்க முடிவு செய்திருப்பதை அறிந்து அதனை தடுக்க முனைகிறான். இந்த விவகாரத்தில் நித்தியானந்தம் சுட்டு கொல்லப் பட அந்தப் பழி சோமு மீது விழுகிறது. ஆனந்தியும் அதனை நம்புகிறாள். இப் பழியில் இருந்து சோமு எவ்வாறு தப்புகிறான் என்பதே மீதிக் கதை.
படத்தின் முதுகெழும்பாய் நிற்பவர் நடிகவேள் எம் ஆர் ராதாதான். அம்பலவாணராக வரும் அவரின் நடிப்பு , அவர் பேசும் வசனம், எல்லாமே ஜோர். அவருக்கு பக்க பலம் வி .கே .
ராமசாமி. 'ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது பெரிசில்லை, மனசாட்சியை அடக்கி ஆளனும் அப்பத்தான் முதிர்ந்த ஞானின்னு டைடில் வரும், மனுஷன் கவலைப்படும் போது கடவுளை கூப்புடுவான், சந்தோஷப்படும் போது சம்சாரத்தை கூப்பிடுவான், ஆனால் பணத்தை எப்பவுமே கூப்பிட்டுக்கிட்டு ஓடிக்கிட்டே இருப்பான்" , இந்த வசனங்களை எம் ஆர் ராதா சொல்லும் போது தியட்டரே அதிரும்!
அண்ணன் தயாரித்த படத்தின் பாடல்களை தம்பி கண்ணதாசன்
இயற்றினார். கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பாடல் பிரபலமானது. வேடிக்கையாய் பொழுது போகணும், குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா பாடல்கள் கேட்கும்படி இருந்தன. இசை எம் எஸ் விசுவநாதன்.
இயற்றினார். கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பாடல் பிரபலமானது. வேடிக்கையாய் பொழுது போகணும், குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா பாடல்கள் கேட்கும்படி இருந்தன. இசை எம் எஸ் விசுவநாதன்.
படத்தில் சோமு வேடம் எஸ் எஸ் ஆருக்கு பொருந்தியது. அலட்சியம், உருக்கம், காதல் என்று அவரின் நடிப்பு மெச்சும்படி அமைந்தது. விஜயகுமாரி அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார். நாகேஷ் மனோரமா காமெடி எடுபட்டது. சுருளிராஜனும் ஒரு கட்சியில் தலையை காட்டுகிறார். எஸ் எஸ் ஆரும் , நம்பியாரும் சேர்ந்து நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தப் படமும் அவற்றில் ஒன்று. எஸ் வி சகஸ்ரநாமம், மணிமாலா, கரிக்கோல் ராஜு, ஆகியோரும் படத்தில் நடித்திருந்தனர்.
No comments:
Post a Comment