இணைக்குறள் ஆசிரியப்பா!
(முதலும் ஈறும் அளவடிகளாகி இடையடிகள் குறளடிகளாகவும் சிந்தடிகளாகவும் அமைய ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிகிறது)
வெள்ளத் தனைய மலரின் நீட்டமாய்
உள்ளத் தனையவே உயர்வும்
அத்தகு உயர்வை உயிராய்
இத்தரை மீதி லடைந்திட
பண்பில் உயர்ந்து
கண்ணியம் மிகுந்து
நுண்ணறிவொடு திகழ
உள்ளுவதி லெல்லாம்மு யர்ந்து நிற்பீரே
பள்ளத்தில் கிடக்கும் தண்ணீர் போன்று
எள்ளினிலே யெண்ணையு மிருக்க
ஆற்றலு மிங்கி ருந்தாலே
ஏற்றிட வகையுமே யுண்டாம்
தக்க வழியினில்
மிக்க முயன்றால்
எக்காலமு மிங்கு
எள்ளளவு மிங்கு பிழையின்றி போகுமே
காற்றிலே கரையும் மேகத்தைப் போல
ஆற்றிலே குமிழியும் மறையுதே
உண்மை யுணர்ந்த மாந்தரும்
எண்ணிட மறந்து வாழ்வதை
நிலையென நினைத்து
கலையாக் கனவுடன்
அலையும் மனதொடு
வேற்று லகத்திலே மிதந்தி டுவாரே!
சொக்கத் தங்கம் சுட்டால் சிவக்கும்
எக்காலமும் அது மாறாது
பூக்களைத் தொடுக்கா பூமாலையா
பாக்களை இயற்றா பாமாலையா
பூக்களைத் தொடுத்து
பாக்களை இயற்றி
தக்கென அமைத்தால்
ஆக்கிய செயலும் அதன்வழி நிற்குமே!
No comments:
Post a Comment