தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி – தவத்திரு மறைமலை அடிகள்
(சூலை 15, 1876 -
செப்டம்பர் 15, 1950)
தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி – தவத்திரு மறைமலை அடிகள்
சிவஞானச் சுடர்
பல்மருத்துவ கலாநிதி
பாரதி இளமுருகனார்
துங்கமுக ஐங்கரனின் பாத பங்கயம்
துணையெனவே மெய்யான துய்யனாய் நித்தம்
எங்குந்தமிழ் எதிலுந்தமிழ் என்று முழங்கி
இயற்கைதனை எய்தும்வரை அயர்ச்சி இன்றி
தங்கத்தமிழ்
மொழிதனிலே பிறமொழிக் கலப்போ
தகாதென்று போராடி வெற்றி கண்டு
மங்காத
புகழுடனே வாழ்ந்த பெரியார்
மறைமலையெனும் பெயர்கொண்ட அடிகளார் அன்றோ?
இயற்பெயராய்ப்
பெற்றோர்கள் வேதா சலமென
இட்டதையே தமிழாக்கி மறைமலை எனவே
தயக்கமின்றி
மாற்றியதொடு தனித்தமிழ் இயக்கம்
தாயகத்தில் மலர்வதற்கு வித்தும் இட்டார்
மயக்கமுற்றோர்
இந்திமொழிக்(கு) ஆதர வளிக்க
மதயானை போலெதிர்த்துச் சிறைக்குஞ் சென்றார்!
வியக்கவைக்குஞ்
செயலெனவே இயற்கை உணவை
வேகமாகப் பரப்புவதில் தாகங் கொண்டார்!.
தனித்தமிழே அவர்வாழ்வின் மூச்சாய்ப் பேச்சாய்த்
தாரகமந் திரமாகித் தனித்தமிழி
யக்கமாய்
மனித்தப்பி
றவியெடுத்துப் பிறந்த தற்கு
மகத்தான பணியிதெனத் தூய தமிழதன்
புனிதமென்றும்
மங்காதிருக்க வழிச மைத்தார்!
புதல்வர்க்குக் கலப்பில்லாப் பெயர்கள் சூட்டி
குனித்தபிறை
சூடியேதனித் தெய்வ மென்று
குவலயத்தோர் கும்பிடவும் வேண்டி நின்றார்!
கைப்பிடித்த கயல்விழியாள்
சவுந்திர வல்லியைக்
கலந்தாறு
பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தார்!
செப்பமுடன்
சித்தாந்தத் தீபிகை என்னும்
செந்தமிழிதழ் ஆசிரியராய்த் தொடர்ந்(து) அதிலே
ஒப்பரிய
சித்தாந்தக் கருத்தை யெல்லாம்
ஓரைந்து கட்டுரையில் எழுதி வைத்தார்
செப்பமுடன்
சமரசசன் மார்க்க மென்னும்
சீரியநற் சங்கமொன்றைச் சிறப்புற அமைத்தார்!.
பொதுநிலைக் கழகமென்றதற்குத் தனித் தமிழில்
புதியதொரு பெயரிட்டு வளர்த்து வந்தார்
எதுசிறந்த
தெனவகுத்து நூல்க ளாக்க
எற்றம்மிகு ஆக்கங்களைச் சேக ரித்து
விதுப்புடனே
திருமுருகன் அச்ச கத்தை
வேகமாகத் தாபித்து நூல்கள் பதித்த
சதுரராகத்
திகழ்ந்ததுடன் மணிமொழி என்னும்
சகலநூலகம் நிறுவிச்சா தனையும் புரிந்தார்!
திருநெறிய
தேன்தமிழின் தேசுடன் வனப்பும்
திரிபடைந்து குன்றாது என்றும் மாறாப்
பருவமொடு
கன்னியென் றிலங்கப் பாவலர்
பாங்கறிந்து பாடிமகிழ் வெய்த வெண்ணி
அருவருக்குஞ்
செயலெனவே பிறமொழி கலக்கும்
அற்பர்செயல் தடுத்திடவே தனித்தமிழ் இயக்கம்
பெருமனத்தோன்
மறைமலையார் பிறக்கச் செய்தார்.
பேறெனவே தமிழுலகம் போற்று தம்மா!
தன்மானங்
குன்றிடாத ஆசிரி யராகித்
தனித்தமிழ் இயக்கத்தை மாணவர் மனதில்
வன்னிப்பாய்ப்
பதியவைத்து வாகர னாகி
வாஞ்சையொடு மலரவிட்டார்! வளமான பேச்சால்
தென்னரசர்
வளர்த்தமைபோற் சீர்மை செய்து
செந்தமிழுக்(கு) அரணம்போல் விளங்கிய தோடு
மன்னுசைவ
நெறியெங்கும் மிகுந்தே ஓங்க
மாதவத்து அடிகளாகி விளங்கிப் போந்தார்!
வேதாசலம்
= வேதம்-மறை அசலம்-மலை= மறைமலை
சீர்மை
- செம்மை
தென்னரசர்
- பாண்டிய மன்னர்கள்
அரணம்
– காவல் வேலி
குனித்தபிறை
சூடி – சிவபெருமான்
விதுப்பு - ஆசை
சதுரர்
– அறிஞர்
வன்னிப்பாய்
- சிறப்பாக்
வாகர
னாகி - வீரனாகி
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
25-10-2025 Sat: சிட்னி துர்கா கோவிலில் நிதி திரட்டும் இரவு விருந்து
26-10-2025 Sun: சிட்னி துர்கா கோவில் மண்டபத்தில் தமிழர் விழா - துர்கா போட்டிகள் மற்றும் திருக்குறள் போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்
26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville
09-11-2025 Sun: மாத்தளைசோமுவின் 100 சிறுகதைகள் நூல் வெளியீடு ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.
29-11- 2025 Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை
பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - சினிமாப் பைத்தியம் - ச. சுந்தரதாஸ்
.
தமிழ்த் திரையுலகில் முன்ணணி பட நிறுவனங்களில் ஒன்று ஏ எல் எஸ் புரொடக்க்ஷன்ஸ் . இதன் அதிபரான ஏ. எல் . சீனிவாசன் தமிழில் மட்டுமன்றி பல மொழிகளில் படங்களை தயாரித்தவர். அதோடு திரையுலகில் பல சங்கங்களுக்கு தலைவராகவும் விளங்கியவர். இவர் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டால் அதற்குரிய கலைஞர்கள் , தொழிநுட்பவியலாளார்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடுவார். படம் அவரின் சாரதா ஸ்டுடியோவில் உருவாகி திரைக்கு வந்து விடும்.
பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான் !
.
இலங்கைச் செய்திகள்
.
கார் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்
பொலிஸ் நாயின் உதவியுடன் 'குஷ்' போதைப்பொருள் மீட்பு - வெளிநாட்டு பயணி கைது!
வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த மோசடியில் வத்தேகம நகரசபை முன்னாள் தலைவர் கைது!
கார் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார்.
அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியமட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
உலகத்திற்கு உப்பாய் இரு - குட்டிக் கதை
.
ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு
மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள்
செய்து, சிறப்பாக
அரசாண்டு, நேரே
சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த
அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை'
கூப்பிடுவதாக தேவதூதன் வந்து
சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது.
பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'.
ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில்
வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத்
தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன்
பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்'
என்று சொன்னது.
மன்னனும்
கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த
இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு
பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத்
தேடி, இருப்பதிலேயே
வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப்
பற்றித் தெரியுமா?' என்று
ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால்
அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை
ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின்
அதனிடம் போய்க் கேள்' என்று
சொல்லி விட்டார்.
வேறு
வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப்
பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த
ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில்
ஆந்தை 'எனக்குத்
தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால்
அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று
சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.
காலையில்
அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து
ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.
மன்னன்
ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப்
பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக்
கேட்டான். ஆமை உடனே 'ஆமாம்.
அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்!
எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்'
என்று நம்பிக்கை இழந்து போய்
ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது
மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள்
அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள்
தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி
நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக
மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி
விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன்
வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன'
என்றது.
தூரத்தில்
சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத்
தெரிந்தது.
நீதி:
நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும்
நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது
நன்றி:
எகனாமிக் டைம்ஸ், இந்தியா