இலங்கைச் செய்திகள்

மலையக ரயில் மார்க்கத்திற்கு பாரிய சேதம் - வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும்!

திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவை இல்லாததால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பாதிப்பு!

கண்டியின் வத்தேகம – கபரகல பிரதான வீதி மீண்டும் மூடப்பட்டது!

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!

யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் - மத தலைவர்கள் , அரசியல்வாதிகள் கைது ; தொடரும் அராஜகம்


மலையக ரயில் மார்க்கத்திற்கு பாரிய சேதம் - வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும்!

16 Dec, 2025 | 05:01 PM

நாட்டில் இடம்பெற்ற புயல் மற்றும் மண்சரிவு, வெள்ள அனர்த்தம் காரணமாக கொட்டகலையிலிருந்து அம்பேவெல இடையில் புகையிரதங்களை  இயக்குவது மிகவும் கடினம் எனவும் புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும் என ரயில்வே வீதி பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவிக்கிறனர்.

இதில் கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கி உள்ளதால் கொட்டகலையிலிருந்து அம்பேவெல வரையிலான ரயில் பாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனவும் நாட்டில் ஏனைய இடங்களில்  பாலங்கள் மற்றும் வீதிகள்  புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன எனினும் அவை தற்காலிக புனரமைப்புக்களுக்கே உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது மண்சரிவால்  பாதிக்கப்பட்ட மலையக ரயில் வீதிகளை


புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நானுஓயா , ஹட்டன் ரயில் நிலையத்தில் உள்ள புகையிரத வீதி  பராமரிப்பு பிரிவின் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் மலைய புகையிரத சேவையின் பாதைகள், பாலங்கள், புகையிரத நிலையங்கள், மற்றும் சமிஞ்சை கட்டமைப்புக்கள் மற்றும் பிரதான கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.


இதில் கொட்டகலை, கிரேட் வெஸ்டர்ன், நானுஓயா, பெரக்கும்புர மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு அருகில் உயரமான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ள இடங்களில் 50 முதல் 100 மீட்டருக்கு இடைக்கிடையே வீதியில் பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கல் போன்றவை ஏற்பட்டுள்ளது.

இதனால் முழுமையான பயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடியவாறு புனரைமைப்பதற்கு சற்று காலம் செல்லும் என தெரிவிக்கின்றன.

குறிப்பாக கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த இடத்தை நிரப்பவோ அல்லது புதிய இடத்திலிருந்து ரயில் பாதையை புதுபிக்கவே முடியாது என்றும், தற்போதைய சூழ்நிலையில் கொட்டகலையிலிருந்து நானுஓயா வரையிலான ரயில் பாதையை மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும் என்றும் மண்சரிவு காரணமாக ரயில்  பாதை ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஸ்லீப்பர் கட்டைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது.




































நன்றி வீரகேசரி 





திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவை இல்லாததால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பாதிப்பு!

Published By: Digital Desk 2

19 Dec, 2025 | 12:48 PM

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படாமையினால் உள்ளுர் பயணிகள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்திற்கான ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டிருந்தமையினால் திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 

இருப்பினும் குறித்த பாதைகள் சீரமைக்கப்பட்டு சரக்கு ரயில் சேவை கடந்த 16.12.2025 அன்றில் இருந்து இடம்பெற்று வருகின்போதும் பயணிகளுக்கான ரயில் சேவை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இதனால் ஒவ்வொரு நாளும் பெருமளவான பயணிகள் ரயில் நிலையத்திற்கு சென்று திரும்பி வருவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருகோணமலை – கொழும்பு இரவு நேர ரயில் சேவையானது சுமார் 100 தொடக்கம் 150 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒருசில இடங்களில் ரயிலுடன் யானைகள் மோதுண்டு இறக்கின்றமையினால் ரயில் சாரதிகளின்மீது வனஜீவராசிகள் திணைக்களம் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இதனால் சாரதிகள் சங்கத்தினரும் தம்மீதான சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிய வருகின்றது. 

இதனால் இரவு நேர சேவையினை நிரந்தரமாக நிறுத்தி பகல் நேர ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் யானைகள் குறுக்கிடுகின்ற பகுதிகளில் மெதுவாக செலுத்துவதற்கான ஆலோசனையும் ரயில் சாரதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

பெருமளவான பயணிகள் கொழும்பில் தங்களுடைய வேலைகளை நிறைவேற்றிவிட்டு அன்றைய தினம் திரும்புவதற்காக இரவு நேர ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். 

நாளாந்தம் 800 தொடக்கம் 1000 வரையிலான பயணிகள் பயணம் செய்வதாகவும் இதன்மூலம் 8 இலட்சம் தொடக்கம் ஒரு மில்லியன் வரை வருமானம் கிடைப்பதாகவும் தெரிய வருகிறது. 

இதனால் இரவுநேர ரயில் சேவை நிறுத்தப்படுமானால் பெருமளவான பயணிகள் பாதிக்கப்படுவதோடு ரயில் நிலையத்தின் வருவாயும் பாதிக்கப்படும்.  எனவே இரவு நேர ரயில் சேவையை விரைவில் ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   நன்றி வீரகேசரி 





கண்டியின் வத்தேகம – கபரகல பிரதான வீதி மீண்டும் மூடப்பட்டது!

19 Dec, 2025 | 12:41 PM

நில வெடிப்பு காரணமாக மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட  கண்டி மாவட்டத்திலுள்ள  வத்தேகம - கபரகல பிரதான வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.

மேற்படி வீதி  போக்குவரத்திற்காக கடந்த புதன்கிழமை (17) அன்று திறக்க பட்டிருந்த போதும் கடும் மழை காரணமாக   மீண்டும் மூடப்பட்டது.

'கெவும் போக்குவ'  எனப்படும் இடத்தில்  வீதி மீண்டும் தாழிறங்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே  வீதியை  மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக வத்தேகம - கபரகல மற்றும் வத்தேகம ஊடாக மடுல்கலை,  - கோமரை,பம்பரல்லை,பெத்தேகம போன்ற பல  பிரதேசங்களுக்கான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழிப்பாதைகளை போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

























நன்றி வீரகேசரி 






யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!

Published By: Digital Desk 2

19 Dec, 2025 | 10:37 AM

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது. 

குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பவுதவி உயர்க்காக எதிர்ப்பை தெரிவித்தும், தீர்மான பிரேரணை ஒன்று சபையில் முன்மொழியப்பட்டது. 

குறித்த பிரேரணையையும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!

18 Dec, 2025 | 05:44 PM

யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்பதால் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக் கல்லின் அளவிற்கு


குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அனுமதி எடுத்த பின்னரே இவ்வாறு எல்லைக் கல் நாட்டுவதாக கூறினர்.


வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியில் நாங்கள் நினைவேந்தல் செய்வது வழமை. அந்த வளாகத்திற்கு உள்ளே சென்று நாங்கள் நினைவேந்தல் செய்ய வேண்டும். ஆகையால் அந்த பகுதியை விட்டு எல்லை இடுமாறு கோரினோம்.

அதன்படி வாயிலின் சிறிய பகுதியை விட்டுவிட்டு, எல்லைக்கல் நாட்டப்படுகிறது. வாயிலுக்கு கதவு போடுமாறு அவர்கள் கூறினர்.   நன்றி வீரகேசரி 





தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் - மத தலைவர்கள் , அரசியல்வாதிகள் கைது ; தொடரும் அராஜகம்

21 Dec, 2025 | 11:44 AM

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். 

தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. 

குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை


பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்று உள்ளனர். 

இந்நிலையில் போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட வேளை , விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான பொலிஸார் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு , போராட்டக்காரர்களுடன் முரண்பட்டமையால் , அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தினார். 


குறித்த போராட்டம் ஒரு அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை. விகாரைக்கு சேதம் விளைவிக்கவில்லை. விகாரைக்கு செல்லும் வீதியில் நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருப்பீர்கள் என பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர். 

அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி.கிழக்கு பிரதேச


சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் , வேலன் சுவாமிகள் , வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதனால் போராட்ட களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் , போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.    






























நன்றி வீரகேசரி 







No comments: