இயல்பும் எண்ணிக்கையும்!


எண் சோதிடமென சோதிடம் சொல்கிறார்
எண் வாழ்க்கையை கணிக்கிறதென்கிறார்
வரும் எண்கள் வாழ்க்கையை கணிப்பதால்
பெரும் எண்கள் தரத்தை குறித்து நிற்குமா

வாக்கு இயந்திரங்களிலும் எண்கள் உள்ளன
அந்த எண்ணிக்கையே ஆட்சி அமைக்கிறது
உயர்ந்த நாடுகள் முற்றாகவே மறுக்கின்றன
உயரிய முறையல்ல எனவும் வெறுக்கின்றன

எண்ணிக்கையை ஏற்றலாம் குறைக்கலாம்
பெரும்பாலும் இதை எல்லோரும் செய்வதே
எண்ணிக்கையின் விளையாட்டு புரிகிறதா
எண்ணிக்கை மக்கள் எண்ணத்தை கூறுமா

நூறுபேர் இருந்தும் கௌரவர்கள் நல்லவரோ
ஐந்துபேர் என்பதால் பாண்டவர் கெட்டவரோ
எண்ணிக்கை எல்லாவற்றையும் காட்டிடாது
ஆயிரம் மின்மினிக்குள் ஆதவன் மிளர்கிறான்

புற்றீசல் பெருகிவந்து எண்ணிக்கை காட்டும்
மற்றொரு கணம் மாயமாய் எல்லாம் மறையும்
பெற்றது அத்தனையும் உண்மை என்றாகுமா
உற்றதை சொல்லாத எண்ணிக்கையும் ஏன்!


-சங்கர சுப்பிரமணியன்.

No comments: