திருவெம்பாவை திருவிழா & ஆருத்ரா தரிசனம் வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025 முதல் சனிக்கிழமை, 3 ஜனவரி 2026 வரை

 






திருவெம்பாவை :

மாணிக்கவாசகரின் படைப்பான ‘திருவெம்பாவை’ என்பது இருபது பாடல்களின் தொகுப்பாகும். இதில், ‘பாவை நோன்பு’ அனுஷ்டிக்கின்ற ஒரு பெண்ணாக தம்மை கற்பனை செய்து, சிவபெருமானை போற்றிப் பாடியுள்ளார்.

திருவெம்பாவை பாடல்கள், திருமணமாகாத இளம் பெண்கள் மார்கழி மாதத்தின் அதிகாலை நேரங்களில் விளக்கேற்றி, சிவபெருமானை போற்றிப் பாடும் ஒரு பண்டைய மரபின் பகுதியாகும். திருவெம்பாவையின் 20 செய்யுள்களும் தினமும் பாராயணம் செய்யப்படுகின்றன. இவ்விதமான வழிபாடுகள் பெண்களுக்கு செழிப்பு, நல்வாழ்வு மற்றும் நல்ல கணவரை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

No comments: