மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்…. அவுஸ்திரேலியா
உலகில் பல மொழிகள் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பினை உடை யதாய் விளங்குகின்றன என்பதுதான் பொதுமையான கருத்தாகும். இவற்றுள் எங்கள் தாய் மொழியான தமிழ் ஒன்றேதான் பக்தியைப் பாடிக் கொண் டாடிய மொழி என்பதும் மிக மிகச் சிறப்புடையதாகும். தமிழ் என்றால் பக்தியின் மொழி என்று துணிந்து கூற லாம். அந்தளவுக்கு பக்தியை இலக்கியம் ஆக்கிய பெருமை எங்கள் தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான தாகும் என்று உரத்தே உரைக்கலாம். பக்தியை இலக்கியம் ஆக்கியமையால் பண்கசிந்த தமி ழும் , பக்குவத் தமிழும் , பாடிப் பரவிடும் தமிழும் , இன்னிசைத் தமிழும் , இயைய வைக்கும் இங்கிதத் தமிழும் எமக்கு பெரும் பொக்கிஷமாகக் கிடைத்தன என்பதை மனமிருத்துவது மிகவும் முக்கியமாகும்.சைவமும் , வைணவமு
மணிவாசகப் பெருமான் தமிழ் மனத்தை உருக்கிட வைக்கும் தமிழ் .சினத்தை அகற்றிட வைக்கும் தமிழ். சிந் தனையைத் தூண்டுந் தமிழ். சிவனை நினைந்து நெக்குருக வைக்குந் தமிழ். தாழ்வாய் உரைத்து தலை வணங் குந் தமிழ். இத்தகு தமிழால் எட்டா நிலையில் இருக்கும் எம்பொருமானை இயம்பிடும் வகை யில் எட்டாந் திரு முறையாய் அமைந்து ஏற்றிப் போற்றப்பட்டுக் கொண்டிருக்குந் தமிழ். திருவாசகம் என்னும் தேன்தான் அந்தத் திருமுறைத் தமிழ்.அந்தத் திருவாசகத்தில் ஒன்றாய் அமைந்திருப்பதுதான் மார்கழியில் மனமமரும் வாசகரின் திருவெம்பாவை என்னும் திவ்விய தமிழாகும். திருவண்ணாமலையில் மணிவாசகரால் மனமுருகிப் பக்திப் பெருவெளியில் உற்ற துணையாக வந்தமைந்த தமிழ்தான் திருவெம்பாவை என்னும் சிறப்புடைத் தமிழ் என லாம்.
" ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி " - என்றுதான் மணிவாசகர் திருவெம்பாவையினைத் தொட ங்குகிறார். " போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே " என்று நிறைவு செய்கின்றார். இருபது பாடல்கள் இறையினைப் பற்றியும் , அவரின் இயல்பினைப் பற்றியும் , இறையினைத் தொழுதிடும் அடியவர் மனநிலை பற்றியும் , இறையடியார்கள் எப்படி இருக்க வேண்டும் , எப்படி இருக்கக் கூடாது , என்பதைப் பற்றியும் பக்குவ மாய் காட்டுகின்றார். அதற்காக அவர் பாவைப்பாட்டு என்னும் சங்கத்தமிழ் வழியில் பயணப்படுவதையும் காண்கின்றோம்.
திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும்.தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் " ஏலோர் எம்பா வாய் " என்றே முடிகின்றதைக் காண்கின்றோம் இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள். இளம் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக் கருதி மார்கழி மாதத் தில் நோன்பு நோற்பது வழக்கம். இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல் லும் போது " திருவெம்பாவை " பாடல்களைப் பாடிச் சென்றுள்ளனர் என்பதை யே இங்கு நாம் எடுத்துக் கொள் ள வேண்டியுள்ளது.
முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக , அதற்கு அப் பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது. ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரை விட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன. ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.
மார்கழியில் அதிகாலை நீராடப் போகும் பெண்கள் , ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாய் கூடி நீராடும் காட்சியை உள்ளடக்கி , அவர்கள் வாயிலாக இறை புகழை , இறை தத்துவத்தை , இயம்பும் வகையில் திருவெம்பாவையினை மணிவாசகப் பெருமான் பக்திப் பாமாலை ஆக்கி இருக்கிறார். காலைப் பொழு து அற்புதமாய் காட்டப்படுகிறது. பெண்களின் இயல்பான உரையாடல் பக்தியுடன் இணைந்து பயணிக்கிறது.
பெண்கள் ஒருவரை ஒருவர் விழிக்கும் வார்த்தைகள் எம்மை யெல்லாம் விழிக்கவும் வைக்கின்றன. நீராடுதல் , நித்திரை விட்டெழுமாறு செய்தல் , யாவும் சாதரணமாய் தெரிந்தாலும் அதற்குள் ஆத்ம தத் துவம் , ஆத்ம ஈடேற்றம் , அனைத்தும் அணைந்தே இருக்கிறது என்பதை அனைவரும் அகம் இருத்துவது அவசிய மாகும்.
சமயத்தை , தத்துவத்தை , ஆன்ம ஈடேற்றத்தை , மக்கள் மனத்தில் பதியச் செய்வது என்பது இலகுவான செயல் அன்று. ஞானவான் ஆகிய மணிவாசகப் பெருமான் இவற்றை மனத்தில் நன்றாய் பதித்த காரண த்தால்த்தால் யாவருக்கும் பயனை நல்கும் வண்ணம் தேர்ந்தெடுத்த நல் வழியாகவே திருவெம்பாவை யினை அணுகுதல் பொருத்தமாகும். பெண்கள் மார்கழியில் அதிகாலையில் நீராடச் செல்வதை மனமேற் றினார் மணிவாசகர். பாவை நோன்பினை பெண்கள் நோற்பதையும் மனமிருத்தினார். இவையனைத்தை யும் தன் சிந்தனைக்குள் இருத்தியே திருவெம்பாவையினைப் பாடினார் என்பது தான் பொருத்தமுடையதாகும்.
மார்கழி நீராடப் போகும் இளம் பெண்களை இறைவன் புகழினை எடுத்தியம்பிட வைக்கிறார். நீராடச் செல்பவர்கள் தங்கள் தோழிகளை அவரவர் வீட்டு வாசலில் நின்று துயில் எழுப்புவதாய் திருவெம்பாவை யினை எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறார் மணிவாசகப் பெருமான்.
" ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி "
" அத்தன் ஆனந்தன் "
" தேவன் சிவலோகன் "
" மாலறியா நான் முகனும் காணா மலையினை "
" ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான் "
" என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள் "
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை"
" முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே - பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே "
" விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப் பொருளை "
"இவ்வானும் குவலயமும் எல்லோரும் - காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி"
" வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து "
" விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் - கண்ணார் அமுதமுமாய் நின்றான் "
" போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே "
என்று நீராடப் போகும் பெண்கள் வாயிலாக பரம்பொருளின் நிலையினை , பரம்பொருளின் வியாபகத் தன்மையை , பரம் பொருளின் பேராற்றலை , பரம் பொருளின் கருணையின் விசாலத்தை எல்லாம் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவைப் பாடல்கள் வாயிலாய் எமக்கெல்லாம் உணர்த்தி நிற்கிறார்.
ஆதியும் அந்தமும் இல்லா அந்த அருப்பெருஞ்சோதியை பாடுவோம், பரவுவோம், பக்குவமாய் மனத் தில் பதிப்போம் என்று நீராடச் செல்லும் மகிளிர் வாயிலாக நல்ல தொரு நற்சிந்தனைப் பாடத்தைப் பக்தியுடன் பதிக்க விடுகிறார் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை வாயிலாக எனலாம்.
திருவெம்பாவைப் பாடல்களை மார்கழியில் ஆலயங்களில் அதி காலை பாடுவதை நாம் அனைவரும் அதாவது சைவர்கள் கேட்டிருக்கிறோம். நாமும் கூடப் பாடியும் இருக்கிறோம். பாடும் வேளை அதன் பொருள் தெரிந்து பாடுவார் ஒரு சிலரே. மற்றவர்கள் இசையுடனோ அல்லது இசையின்றியோ பாடிவிடு வார்கள். பொருளை விளங்கிப் பாடினால் கிடைக்கும் பயனோ மிகப் பெரிது. இதனால்த்தான் " பொருள் உணர்ந்து சொல்வர் செல்வார் சிவனடிக் கீழ் " என மொழிந்ததை இனியாவது மனமிருத்துவது யாவருக் கும் பயனே.
துயில் கொள்ளும் தோழியரைத் துயிலெழுப்பி நீராட அழைக்கும் பெண்கள் இறைபுகழைப் பலவாறு பாடுவதாய் திருவெம்பா அமைந்திருக்கிறது. அப்படி அழைக்கும் பெண்கள் கிண்டலாயும் , கேலியாயும் , தமக்குள் பேசுவதையும் திருவெம்பாவையில் காணலாம். சிரிக்கிறார்கள் , சீறுகிறார்
" மாதே வளருதியோ " , " வன் செவியோ நின் செவிதான் " , மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலிகள் வீதியெங்குமே ஒலிக்கிறதே இன்னுமா உனக்குக் கேட்கவில்லை என்னும் நிலை மிகவும் முக்கிய நிலையாகும். கேட்காத காது , விழிக்காத விழிப்பு இருந்தும் என்ன பயன் ? உலக மாயையில் உழலுவதால் உயர் பொருளான அந்தப் பரம்பொருள் பற்றிய வார்த்தைகளை உன் காது ஏற்க மறுக்கிறது. உலக மாயை உன்னை இறுகப் பற்றிக் கொண்டுள்ளதால் உன்னால் விழிப்படைந்திட முடியாமலே இருக்கிறது. என்னும் உயரிய தத்துவமே இங்கு உணர்த்தப்படுகிறது. நித்திரை எழும்பாத தோழியரை எழுப்பிட முயலுகிறார்கள் மற்றையப் பெண்கள் என்பதுதான் மேலோட்டமாய் நாமனைவரும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஓர்ந்து உணர்ந்தால் உயர் பொருள் உள்ளம் அமரும்.
ஆண்டாள் திருப்பாவையில் தன்னைக் காட்டும் பாங்கு வேறு. மணிவாசகர் திருவெம்பாவையில் தன் னைக் காட்டும் பாங்கு வேறு. ஆண்டாள் திருமாலை தன் கணவனாக்க முயலுகின்றாள்.தான் எப்படியும் திருமாலின் அருகமர்ந்து மனைவியாய் இருக்கவே மன்றாடி நிற்கிறாள். அதுவே அவளின் உள்ளடக்கிடக்கையாகி திருப் பாவையாய் மலர்கிறது. ஆனால் மணிவாசகர் காட்டும் பாங்கு சிவனடியாரே தங்களுக்குக் கணவராய் வாழ்வு க்குத் துணையாய் ஆகிட வேண்டும் என்று - பெண்கள் பாடிப் பரவுதாகக் காட்டுவ தேயாகும். மணிவாசகர் இல்லறைத்தைத் துறந்த பெருஞானி.
உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும்
கூத்தா உன் குரை கழற்கே
கற்று ஆவின் மனம்போலக்
கசிந்து உருகி வேண்டுவனே !
இதுதான் அவரின் நிலை. அதனால் அவர் ஆண்டாள் மனநிலைக்கு எப்பொழுதுமே வரமாட்டார். அதனா ல்த்தான் திருவெம்பாவையினை தானாய் நிற்காமல் இளம்பெண்கள் மூலம் இறையின் நிலையினை , ஆன்ம தத்துவத்தை சொல்ல விளைந்தார் என்றுதான் எண்ண முடிகிறது. ஆண்டாள் முப்பது பாடினார். மணிவாசகர் இருபது பாடல்களே பாடினார். அதற்குள்ளும் ஒரு தத்துவம் உலகியலோடு இணைகிறது. பெண்களின் உடற்கூறு இங்கு மணிவாசகருக்கு விளங்கி இருக்கிறது. ஆனால் பெண்ணாய் இருந்தும் ஆண்டாள் ஏன் முப்பது பாடல்கள் பாடினார் என்பது அந்தத் திருமாலுக்கு மட்டுமே தெரியும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
திருவெம்பாவையில் சக்தியின் தத்துவமும் வெளிப்பட்டு நிற்கிறது. பாவை நோன்பின் அடிப்படையே சக்தியை முன்னிறுத்துவதேயாகும். சக்தியே " பின்ன மிலான் எங்கள் பிரானாய் " , " பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை " , ஆதியும் அந்தமும் இல்லா அந்த அரும் பெருஞ்சோதிக்குள் அப்பனும் அம்மையுமாய் அந்தப் பரம் பொருள் இருக்கிறது என்பதை மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை வாயிலாக எமக்கெல்லாம் உணர்த்தி நிற்கிறார்.
திருவெம்பாவையை மார்கழியில் பாடுவதற்காய் மணிவாசகப் பெருமான் வழங்கி இருந்தாலும் அதனூடாய் - ஆன்மீக வெளிப்படுகிறது. ஆத்மஞானம் வெளிப்படுகிறது. இறைவனை மனதிருத்திப் பாடினால் மாநிலம் செழிக்கும் , மழைவளம் மிகும் , மழைவளம் மிகுந்தால் மக்கள் மனவளம் சிறக்கும். மனவளம் சிறந்தால் மாதேவன் மனமதில் அமர்வான். மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி வையகம் எங்கும் பரவிடும் அல்லவா. திருவெம்பாவையினைப் படிப்போம் எம் சிந்தையில் இருத்துவோம் !

.jpeg)


.jpeg)
No comments:
Post a Comment