சத்யராஜ் நடிக்கும் ' பேபி & பேபி ' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

 

23 Dec, 2024 | 04:36 PM
image

த்யராஜ் -யோகி பாபு- ஜெய் -ஆகிய மூன்று நட்சத்திர நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'பேபி & பேபி ' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேபி & பேபி 'எனும் திரைப்படத்தில் சத்யராஜ் ,யோகி பாபு, ஜெய், கீர்த்தனா, சாய் தன்யா,  பிரக்யா நாக்ரா , இளவரசு, ஸ்ரீமன், ஆனந்தராஜ் ,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி. பி. சாரதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை மன்னன்' டி. இமான் இசையமைத்திருக்கிறார். 

நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யுவராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. யுவராஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் திரைக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறிய குழந்தையை காண்பித்து.. இது யார் குழந்தை? என கேட்க வைத்து... படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடத்தில் படக்குழுவினர் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  நன்றி வீரகேசரி 

No comments: